மதுரையில் ஒரு அதிசயம்

1972

நியூ சினிமா தியேட்டர்- வசந்த மாளிகை வெளி வந்தது. காதலை மையமாக வைத்து வெளி வந்தபடம். பணக்கார ஹீரோ ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிப்பார்.கடைசியில் குடிக்கு அடிமை ஆவார். 175 நாட்கள் ஓடியது.
சென்ட்ரல் தியேட்டர் - பட்டிக்காடா பட்டணமா - கிராமத்து ஹீரோ திமிறு பிடித்த ஹீரோயினை கல்யாணம் பண்ணி அவளது திமிறை அடக்குவார். 175 நாட்கள் ஓடியது.

பத்து வருடங்கள் கழித்து 1982

நியூ சினிமா தியேட்டர்- வாழ்வே மாயம் வெளிவந்தது -காதலை மையமாக வைத்து வெளி வந்தபடம். பணக்கார ஹீரோ ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிப்பார்.கடைசியில் குடிக்கு அடிமை ஆவார். 175 நாட்கள் ஓடியது.
சென்ட்ரல் தியேட்டர் - சகலகலாவல்லவன் - கிராமத்து ஹீரோ திமிறு பிடித்த ஹீரோயினை கல்யாணம் பண்ணி அவளது திமிறை அடக்குவார். 175 நாட்கள் ஓடியது.

மற்றுமோர் ஒற்றுமை.
1979 -திரிசூலம்- சிவாஜியின் சொந்த படம் -3 வேடங்களில் நடித்தார். படம் புதிய சாதனை படைத்தது.
1989-அபூர்வ சகோதரர்கள் - கமலின் சொந்த படம்- 3 வேடங்களில் நடித்தார். படம் புதிய சாதனை படைத்தது.