Page 25 of 28 FirstFirst ... 152324252627 ... LastLast
Results 241 to 250 of 274

Thread: வாலு - சிலம்பரசன் - சந்தானம் - s தமன் - நிக் ஆர்

  1. #241
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இறுதி கட்டத்தில் 'வாலு'க்கு கை கொடுத்த சந்தானம்- Tamil HINDU

    'வாலு' படத்துக்கு சம்பள பிரச்சினைக்காக சந்தானம் கடிதம் ஒன்று நிலுவையில் இருந்தது. ஆனால் ஒன்றும் பிரச்சினையில்லை வெளியிடுங்கள் என்று சந்தானம் தெரிவித்தார்.
    விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு தடைகள், வழக்குகளை கடந்து 'வாலு' வெளியாகி இருக்கிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று காலை 'வாலு' தாமதமாக தான் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் 11 மணி காட்சி தான் திரையிட்டார்கள்.

    அதற்கான காரணம் என்ன என்று விசாரித்த போது, "'வாலு' படத்துக்கு இறுதியாக சந்தானத்தின் லேப் லெட்டர் இருந்தது. அதில் சந்தானத்துக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை படம் வெளியாகும் போது கொடுத்துவிடுவேன் என்று தயாரிப்பாளர் மற்றும் சந்தானம் இருவரும் கையொப்பமிட்டு இருந்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கவில்லை.

    லேப்பில் இருந்து சந்தானம் சொன்னால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அச்சமயத்தில் சிம்பு, சந்தானத்துக்கு போன் பேசியிருக்கிறார். உடனே சந்தானம் "எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. படத்தை வெளியிடுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதற்கு பிறகு தான் படம் வெளியானது" என்று தெரிவித்தார்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #242
    Junior Member Regular Hubber George Thomas's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    The movie was good in bits.. unnecessary buildups and fights were only negative for me ... eventough I'm an Ajith fan,thala reference seemed annoying after certain point ...loved your my darling song,in fact I'm addicted to it now... this guy Simbu has very cute expressions ...Simbu and Santhanam combination was thoroughly enjoyable.. Santhanam and the bike guy dashing him comedy made me rofl for hours
    Last edited by George Thomas; 17th August 2015 at 06:08 PM.

  4. #243
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மீடியாக்கள் பற்றிய சிம்புவின் பதில் சரியா?

    வாலு வெளியானதையொட்டி பிரபல டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பேசியபோது சிம்பு. பத்திரிகைகள் தன்னைப்பற்றித் தவறாக எழுதுவதாகக் கூறினார். இந்த பதில் மீடியாக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் ஒரு படம் வெளியாவது தள்ளிப்போனால் அதன் மீதுள்ள எதிர்பார்ப்புகள் குறையும் ஆனால் ‘வாலு’ படத்தைப் பொருத்தமட்டில் எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போனதே எனக் கேட்க. அது எனக்கு பிரச்னைதான். எப்படியாவது படம் வருவதை தடுத்து காலி செய்ய வேண்டும் என நினைத்தால் இன்னும் அதே இடத்தைக் கொடுக்கிறார்களேங்கறனாலதான் இன்னும் பிரச்னை.
    நாங்கள்லாம் யாரும் ‘வாலு’ படம் பாக்கவில்லை என நீங்கள் எல்லாம் சொல்லியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வெளியாகியிருக்கும் என்றார். அதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தனக்கு சிம்புவை பிடிக்காது எனவும், ஏன் பிடிக்காது எனவும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
    அதற்கு விளக்கம் கொடுத்த சிம்பு எனக்கு காதலிக்கிறது பிடிக்கும், அத நான் என் படங்களில் செய்கிறேன். குடும்ப படமா சிம்பு படம் இல்லை என சொன்னீர்கள், அப்படியெனில் ‘வானம்’ என்ன மாதிரியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ன மாதிரியான படம். சரி மற்றவர்கள் என்ன நாட்டையா காப்பாற்றுகிறார்கள் எனவும் சிம்பு பதில் கேள்விகள் கேட்டார்.
    ஒரு படம் ஆரம்பித்து ,புது இயக்குநர், தயாரிப்பாளர் என அவர்கள் நலனில் அக்கறையுடன் நான் மூன்று வருடங்கள் காத்திருந்து அந்த படத்தை வெளியிட்டுவிட்டுதான் வருவேன் என் நினைத்த எனக்கு இப்படி ஒரு பெயரா எனக் கேட்டார். மேலும் பார்வையாளர்களான உங்களுக்கே இவ்வளவு வருத்தம் என்றால் என் படம் எனக்கு எவ்ளோ கஷ்டம், வருத்தம் இருக்கும் என்றார். ‘
    மீடியாக்கள் உங்களை பரபரப்பாக வைத்திருக்க எது வேண்டுமானாலும் எழுதுவார்கள். அதற்காக நீங்களே உண்மை நிலையைப் புரிந்துகொள்ளமாட்டீர்களா. சிம்பு இன்று படப்பிடிப்புக்கு வந்தார், படப்பிடிப்பு நன்றாக நடந்தது என செய்தி கொடுத்தால் நீங்கள் படிப்பீர்களா? . மீடியாக்கள் பரபரப்பிற்காக, சிம்பு படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதில்லை என எழுதினால் தான் அது செய்தி. அப்பதான் அத நீங்க படிப்பீங்க. அத ஏன் நீங்க நம்பறீங்க என் கேட்டார்.
    என்னதான் அவர் தைரியமாக தன்னைப் பிடிக்கவே பிடிக்காது என கூறிய பெண்ணுக்கு மதிப்பளித்து சில பதில்களை கூறினாலும், மீடியாக்களை பொத்தாம் பொதுவாக தவறாக எழுதுவார்கள், பரபரப்பிற்காக செய்தி கொடுப்பார்கள் என்பது சரியான பதிலா என்ற கேள்வியே எழுகிறது.

  5. #244
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Independence Day Special | Vaalu Movie Sirappu Kannottam | Dt 15-08-15 | SunTV



  6. #245
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Kollywood Cinema ‏@KollywudCinema 12h12 hours ago #Vaalu No 1 in Chennai Box office. Huge Opening. @iam_str Best opening collection. #WelcomeBackSTR on Style. Great


  7. #246
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    STR retweeted Pradeep raj ‏@pradeepraj33359 12h12 hours ago
    Chennai Box Office -Aug 14 to 16
    1. #Vaalu
    2. #VSOP
    3. #Baahubali
    4. #SKV
    5. #Papanasam No Release in 3 Years. Still @iam_str Retain No 1

  8. #247
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    FoxtelMovieBox ‏@FoxtelMovieBox 12h12 hours ago #Vaalu - " Opening Weekend " Very Strong And Archives First Place second VSOP & this is Strongest Opening for @iam_str After 3 Years
    126 retweets 153 favorites

  9. #248
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாலு- Tamil Hindu

    பாசமான குடும்பம், நேசமான நண்பர்கள், வேலை வெட்டி இல்லாத சுகவாழ்வு.. இப் படிச் சுற்றும் சிம்பு, ஹன்சிகாவைப் பார்த்த தும் காதலில் விழுகிறார். காதலைச் சொல்லும்போது, அவர் ஏற்கெனவே முறைமாமனுக்கு நிச்சயிக்கப்பட்ட வர் என்பது தெரியவருகிறது. முறைமாமனோ ரவுடி களை வைத்துக்கொண்டு வட்டித் தொழில், கறாரான பண வசூல், கட்டப் பஞ்சாயத்து என வாழ்ந்து வரும் வணிக தாதா. இருந்தாலும் ஹன்சிகாவைப் பத்து நாட்களுக்குள் காதலில் விழவைக்கிறேன் என்று சபதம் எடுத்து சிம்பு செய்யும் ரவுசுகள்தான் வாலு.
    படத்தில் சிம்புவை எல்லோரும் ஷார்ப் என்கிறார் கள். சின்ன வயசிலிருந்தே துறுதுறுவென்று ஏதாவது செய்வாராம். அதை கேள்விப் படும் ஹன்ஸிகா வாலு என்று செல்லமாகச் சொல்கிறார்.
    சிம்புவை எப்படிக் காட்டினால் அவரது ரசிகர்களுக் குப் பிடிக்கும் என்பது இயக்குநர் விஜய்சந்தருக்குத் தெரிந்திருக்கிறது. சிம்புவின் நாயக பிம்பத்தைப் பெருக்கிக் காட்டும் மிகையான இடங்களிலும் சந்தானத்தால் கலாய்க்கப்படும் யதார்த்தமான இடங்களிலும் சிம்புவின் இமேஜ் எல்லைக்குள் இம்மி பிசகாமல் நடந்திருக்கிறார் இயக்குநர். ஆனாலும் சண்டைக் காட்சிகள் ரொம்பவே ஓவர். சிம்பு அடித்தால் யாரும் உடனே கீழே விழுவதில்லை. குறைந்தது 100 மீட்டர் தொலைவு பறந்து சென்றுதான் விழுகிறார்கள். சிம்பு ஓட்டும் பைக்கின் மீது கார் மோதி, பைக் சிம்புவுடன் அங்கப் பிரதட்சிணம் செய்கிறது. துளி சேதாரமில்லாமல் உடனே எழுந்து மீண்டும் பைக் ஓட்டுகிறார்!

    கலகலப்புக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், கதை நகரும் விதம் அத்தனை விறுவிறுப்பாக இல்லை. காட்சிகளில் புதுமை இல்லை. ஹன்சிகாவைக் காதலிக்கவைக்கப் பல காட்சிகளை உருவாக்குகிறார். சில காட்சிகளே ரசிக்கும்படி இருக்கின்றன. உதாரணம் சிம்பு வின் வீட்டுக்கு ஹன்ஸிகா வருவது.

    பாசமுள்ள குடும்பத்தின் சித்திரம் வழக்கமான அச்சிலேயே வார்க்கப்பட்டிருக்கிறது. அம்மா பையன், அண்ணன் தங்கை உறவுகள் அசல் டெம்ப்ளேட். இப்படிப்பட்ட படங்களில் அப்பா பையனைத் திட்டிக்கொண்டே இருப்பார். இதில் அது மட்டும் இல்லை. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அன்பாக அறிவுரை கூறும் அளவுக்கு பாசக்கார அப்பா. ஸ்ஸ்ஸ் அப்பா!

    முறை மாப்பிள்ளையாக வரும் ஆதித்யாவுக்கு எக்கச்சக்க பில்டப். ஆனால், பின்னால் அதற்கேற்ற காட்சி எதுவும் இல்லை. ஹன்சிகாவை சிம்பு தன் வலையில் விழவைத்ததும் படம் சூடுபிடிக் கும் என்று பார்த்தால், சிம்புவிடம் வில்லன், உன்னை எனக்கே பிடிக்கிறது. அவளுக்கு ஏன் பிடிக்காது என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்.
    சிம்பு ஃப்ரெஷ்ஷாக, அதே நேரம் கொஞ்சம் பூசியதுபோல இருக்கிறார். தத்துவங்களை காமெடி யாகப் பேசுகிறார். சண்டைக் காட்சி, நடனத்தில் முழு வேகம். மற்ற காட்சிகளில் சற்றே சாவகாசம்.

    அழகுப் பதுமையாக படம் முழுக்க ஆக்கிரமிக் கிறார் ஹன்சிகா. சின்னச் சின்ன முகபாவனைகளில் அழகாக அசத்துகிறார். சிம்பு, சந்தானம் செய்யும் சேட்டைகள், பேச்சுகள் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கின்றன. இருந்தாலும் சந்தானத்தின் நடிப்பு மெருகு ஏறியிருப்பதைச் சொல்ல வேண்டும்.

    சிம்புவின் தங்கையாக வரும் சஞ்சனா கவனம் ஈர்க்கிறார். விடிவி கணேஷ், சிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ரஞ்சனி தங்களது கதாபாத்திரத்தைச் செவ்வனே செய்திருக்கின்றனர்.
    தமன் இசையில் ஓ மை டார்லிங் பாடல் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பின்னணி இசை சில நேரம் இரைச்சலாக இருந்தாலும் சிம்புவுக்கு மாஸ் காட்ட உதவுகிறது. தாறுமாறு பாடலில் சிம்பு பல கெட்டப் பில் வருவது ரசிகர்களுக்கு விருந்து. எம்ஜிஆராக வரும் தோற்றத்தில் கலக்கல். ஷக்தி யின் ஒளிப்பதிவில் காட்சிகள் புத்துணர்வுடன் உள்ளன.

    வாலு செய்யும் சேட்டைகள் பெரிதாக ஈர்க்கவில்லை. மொத்தமாகச் சோடைபோகவும் இல்லை

  10. #249
    Senior Member Devoted Hubber ArulprakasH's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Thalainagaram
    Posts
    424
    Post Thanks / Like
    Quote Originally Posted by George Thomas View Post
    The movie was good in bits.. unnecessary buildups and fights were only negative for me ... eventough I'm an Ajith fan,thala reference seemed annoying after certain point ...loved your my darling song,in fact I'm addicted to it now... this guy Simbu has very cute expressions ...Simbu and Santhanam combination was thoroughly enjoyable.. Santhanam and the bike guy dashing him comedy made me rofl for hours
    +1 Simbu pecha korachirukkalam... 2nd half romba lengthy..
    முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி!!!

  11. #250
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மலேசியாவில் வசூலை அள்ளும் வாலு!

    மூன்று வருடங்கள் அரும்பாடு பட்டு ஒரு வழியாக சிம்புவின் வாலு படம் வெளியாகிவிட்டது. கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் வசூலில் சோடை இல்லாமல் இருக்கிறது. இதில் சிறப்புச் செய்தி கமர்ஷியல் காதல் படமான வாலு மலேசிய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    கடந்த வாரம் வெளியான படங்களில் விஎஸ்ஓபி படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் இல்லாத நிலையில் வாலு படம் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் நீண்ட நாட்கள் கழித்து சிம்பு படம் என்ற சிறப்பு வேறு படத்திற்கு இன்னும் எதிர்ப்பார்ப்புகளை அதிகமாக்கிவிட்டது.
    இந்நிலையில் மலேசியாவில் 24 திரைகளில் வெளியான வாலு 33 லட்சங்களை வசூலித்துள்ளது. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் 15 திரைகளில் முறையே 15 லட்சம் வசூலித்துள்ளது. அதே போல் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு, அக்*ஷய் குமாரின் பிரதர்ஸ் படங்களை இவ்விரு படங்களும் வசூலில் பின்னுக்குத் தள்ளியுள்ளன.

    அமெரிக்க மார்கெட்டிலும் வாலு 18 லட்சத்தை சர்வ சாதரணமாக வசூலித்துள்ளது. சிம்புவின் படங்களிலேயே அமெரிக்க மலேசிய திரைகளில் வசூல் அதிகம் பெற்ற படம் வாலு தான். காரணம் சிம்புவின் படத்திற்கு மக்களின் காத்திருப்பும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும்.

Page 25 of 28 FirstFirst ... 152324252627 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •