Page 246 of 402 FirstFirst ... 146196236244245246247248256296346 ... LastLast
Results 2,451 to 2,460 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #2451
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    டைரக்டர் கே.பாக்யராஜ் அமெரிக்கா பறந்தார்; எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்

    திரைப்படங்களுக்கு கதை_வசனம் எழுதி டைரக்ஷனும் செய்து அதில் கதாநாயகனாகவும் நடித்து தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். ஏராளமான வெற்றிப்படங்களை தந்தவர். எம்.ஜி.ஆரின் மீது தீவிர பற்று கொண்டிருந்த அவர், "நான் எம்.ஜி.ஆரின் ரசிகன்" என்று பெருமையுடன் கூறி வந்தார். தனது படங்களில் சில காட்சிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை காட்டினார்.

    இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசும்போது, "பாக்யராஜ் எனது கலை வாரிசு" என்று அறிவித்தார். எம்.ஜி.ஆர். இப்படி அறிவித்தது பாக்யராஜூக்கு சற்றும் எதிர்பாராததாக இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

    இந்த நிலையில் 7_2_1984 அன்று பாக்யராஜூக்கும், நடிகை பூர்ணிமாவுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடை பெற்றது. எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 1984_ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அப்போது எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை நினைத்து பாக்யராஜ் மிகவும் கவலை கொண்டார். எம்.ஜி. ஆர். தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் சட்டசபைக்கு தேர்தல் வந்தது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் சில சந்தேகங்களை கிளப்பிவிட்டன. எம்.ஜி.ஆர். குணம் அடைந்து திரும்பினாலும் அவரால் முன்போல் செயல் பட முடியுமா என்று கேள்விகள் எழுப்பின.

    நடிகர் பாக்யராஜை அவரது நண்பர்கள், ரசிகர்கள் "எம்.ஜி. ஆர். உங்களை கலை வாரிசு என்று அறிவித்து இருக்கிறார். கட்சிக்கு இந்த நேரத்தில் நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாதா?" என்று கேட்டனர்.இதனால், அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆரை நேரில் பார்ப்பது என்றும், தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அவரிடம் ஆசி பெறுவது என்றும் பாக்யராஜ் தீர்மானித்தார்.

    பிறகு உதவியாளர், பட தயாரிப்பாளர் பாபுஜி, டாக்டர் தம்பு ஆகியோரை அழைத்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார். டிசம்பர் 14_ந்தேதி அமெரிக்கா சென்றடைந்த பாக்யராஜ் எம்.ஜி.ஆரை சந்தித்து விட்டு 19_ந்தேதி சென்னை திரும்பினார். பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பாக்யராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:_

    "15_ந்தேதி காலை ஆஸ்பத்திரிக்கு சென்றேன். ஆனால் அங்குள்ள காவலர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் "தங்கும் விடுதி"யில் தங்கி இருந்த ஜானகி அம்மாளை சந்தித்து பேசினேன். அவர் மறுநாள் அனுமதி பெற்று தருவதாக கூறினார்கள். மறுநாள் காலை 11 மணிக்கு அனுமதி கிடைத்தது.

    அதற்கான `பாட்ஜ்' அணிந்து கொண்டு சென்றேன். நான் மட்டும் தனியாக சென்றேன். நான் கதவை திறந்து கொண்டு சென்றதும் என் கண்ணில் படுக்கை தென்பட்டது. ஆனால் அதில் எம்.ஜி.ஆர். இல்லை. அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஜன்னல் ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து வெளியே தெரியும் இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தார்.

    என்னைக் கண்டதும் சிரித்த முகத்துடன் நாற்காலியில் இருந்து எழுந்து எனது இரு கைகளையும் பிடித்தார். எதிரே இருக்கும் நாற்காலியில் உட்காரும்படி சுட்டிக்காட்டினார். "நான் உங்களை சந்தித்து ஆசி பெறவே வந்திருக்கிறேன்" என்றேன். எனக்கு மகள் பிறந்ததையும், அவளுக்கு `சரண்யா' என்று பெயர் சூட்டப்பட்டு இருந்ததையும் கூறினேன்.

    அதை முகம் மலர கேட்டுக் கொண்டார். தேர்தல் நிலவரம் பற்றி நான் சொன்னபோது அதை கூர்ந்து கவனித்துக் கேட்டார். தேர்தல் நேரத்தில் தான் தமிழ்நாட்டில் இல்லையே என்ற உணர்ச்சி மேலிடுவதை அவர் முகத்தில் கண்டு எனக்கு கண்கள் கலங்கின.

    "நான் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறேன். அதற்கு முன் உங்கள் ஆசி பெற வந்தேன்" என்று காலை தொட்டு வணங்கினேன். என்னை தனது இரு கைகளாலும் தூக்கி நிறுத்தி தனது வலது கையை என் தலை மீது வைத்து ஆசி வழங்கினார். நான் விடை பெறும்போது தனது இரு கைகளையும் குவித்து வணங்கி வழி அனுப்பினார்.

    இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.





    http://www.maalaimalar.com/2011/08/2...nt-to-ame.html
    Last edited by saileshbasu; 21st August 2015 at 09:47 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2452
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. Likes ainefal liked this post
  5. #2453
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    TOMORROW ON JAYA TV @ 12:00 [IST] NOON FOR THE UMPTEENTH NUMBER OF TIME:



  6. #2454
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ ராகவேந்திரா அவர்களுக்கு,

    உங்களது பரந்த உள்ளம் மற்றும் நடிகர் திலகத்தில் மேல் வைத்திருக்கும் மதிப்பு நிலைத்து நிற்பது. அதற்க்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றல் திரு. நாகேஷ் அளித்த இந்த ஒரு பேட்டியே பொருத்தம்:

    வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
    நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
    கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
    அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

    ( சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் ' தமிழ் முழக்கம்
    வானொலிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து )

    What Thalaivar said is also to be considered as what NT said:



    நன்றி
    Last edited by saileshbasu; 21st August 2015 at 11:21 PM.

  7. Likes siqutacelufuw liked this post
  8. #2455
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை சரவணாவில் இன்று முதல் (21/08/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டில் சரவணாவில் இணைந்த 19 வது வாரம்.

    இந்த ஆண்டில் சரவணாவில் வெளியாகும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் 19 வது படம்.

    Last edited by puratchi nadigar mgr; 21st August 2015 at 11:19 PM.

  9. #2456
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2457
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2458
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (21/08/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

  12. #2459
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  13. #2460
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •