பட்டிக்காடா பட்டணமா?
அவன்
வேட்டி கட்டிய சிங்கம்
குணத்திலோ தங்கம்.
பிறந்தது ஒரு சிற்றூரு
சோழவந்தான் என்பதே அதன் பேரு
அந்த மண்
அவனுக்கு கண்.
ஏரை மதிப்பவன்
ஊரை காப்பவன்
ஊருசனம்
அவன் நடந்தால் நிற்கும்
பேசினால் கை கட்டும்.
மூக்கையாத் தேவன் அவன் பேரு
அவன் சொல்லை மதிக்கும் ஊரு.
தேவனுக்கு ஒரு மாமன் உண்டு
மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு
அவருக்கு ஓர் மகள் உண்டு.
மாமன் மகள் மெத்தப்படித்தவள்
மேலை நாகரீகத்தில் திளைத்தவள்
ஆனால்
தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள்.
கல்பனா என்பது அவள் நாமம்
அம்மாவே அவளுக்கு வேதம்.
மகளின் மணம்
மூக்கையாவே வேண்டும்
இதுவே மாமனின் குணம்.
முறைமாமன் தானிருக்க
வேறொருவன் தாலியெடுக்க
மாமன் மூலம்வருகிறது சேதி
மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி
முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி
ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை
எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை
கேட்கிறான் நியாயம்
செய்கின்றனர் வாதம்.
இனியும் ஆகாது தாமதம்
முடிவெடுக்கிறான் அக்கணம்.
தூக்கி வருகிறான் முறைப்பெண்ணை மாட்டுவண்டியில்
துரத்தி வருகின்றனர் எதிரிகள் பின்னால்
மூக்கையாவின் வீரம்
எதிரிகளுக்கு காரம்
அவனது கோபம் மிகவும் காட்டம்
ஆடி விடுகிறது எதிரிகள் கூட்டம்.
கல்பனாவுடன் வந்து சேர்கிறான் கிராமத்துக்கு...
சிந்தனை செய்கிறது அவள் மனம்
புரிகிறது தேவனின் குணம்
செய்து கொள்கிறாள் திருமணம்.
அவர்களின் வாழ்க்கை
ஆட்டமும் பாடமுமாய் சில காலம்
பின் ஆரம்பிக்கிறது கலி காலம்.
நகரங்களுக்கே ஆகாது சில மேல்தட்டு நாகரீகங்கள்
கிராமங்கள் தாங்குமா?
பிறந்த நாள் கொண்டாட கேட்கிறாள் சம்மதம்
விருப்புடன் இசைகிறான் அக்கணம்.
உற்சாக பானங்களுடன் ஆடல்,பாடல்கள்
தோழன்.,தோழிகளோடு கல்பனாவின்
கும்மாளங்கள்.
திகைக்கிறது மூக்கையாவின் வீடு
இதை ஏற்குமா அவன் கூடு.
தேவன் வருகிறான்
பார்த்ததும் கொதிக்கிறான்.
பின் வெடிக்கிறான்.
கல்பனாவை சாடுகிறான்
சாட்டையை சுழற்றுகிறான்.
மூக்கையாவின் சினம்
அவள் மேனியில் ரணம்.
தாய்வீடு ஓடுகிறாள்!
தனக்கு நேர்ந்ததை
தாயிடம் கூறுகிறாள்.
நல்ல தாய் தவறை எதிர்ப்பாள்.
நாகரீக தாய் அதை ஆமோதிப்பாள்.
கல்பனாவின் தாய்
நாகரீக தாய்.
கடிதம் மூலமாக கேட்கப்படுகிறது பிரிவினை
மூக்கையாவிற்கு ஏற்படுகிறது வேதனை
அவன் மறத்தமிழன் மரபு
மானமுள்ள பிரிவு
முயற்சி செய்கிறான் சேர
கல்பனாவிடம் செல்கிறான் பிரச்சினை தீர
கீதா உபதேசம் அர்ச்சுனனுக்கு
தாயின் உபதேசம் கல்பனாவுக்கு
அந்த உபதேசம் தேசத்துக்கும் ஆனது
இந்த உபதேசம் நாசத்துக்கு ஆவது
மூக்கையாவோ போராடினான் இணை சேர
அவள் தாயோ சதியாடினாள்
இணையை பிரிக்க
விதி யோசித்தது
நீதி யாசித்தது
சதி ஜெயித்தது.
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
சோடை போன மனிதன் மரணம் அடைந்த மனிதன்.
இதுவே தமிழ் கலாச்சார மாண்பு
இதை ஏற்பதில்லை மேலை பண்பு
ஊருக்கு திரும்பினான் வெறுங்கையோடு
மானம்போனதாய் நினைத்தான் அந்த
இரவோடு
ஊர் பார்த்தது
உள்ளுக்குள் சிரித்தது.
"வெட்டிவிடு மனையாளை" பஞ்சாயத்தில்கேட்டான் ஒருவன்
பெண்டாள வக்கில்லையோ என்றான் மூக்கையாத்தேவன்
கேட்டான் அவன்
"உமக்கு என்ன அருகதை"
மானமே போனது தேவன் கதை
மாமனுக்கு கொடுக்கிறான் பத்திரிக்கை
அதிலே இருக்குது
வேடிக்கை
"மூக்கையாவுக்கு கல்யாணம்"
இடையில்,
கல்பனா ஆகிறாள் தாய்
அது மூக்கையாவின் சேய்
மாமியாருக்குஅது வேப்பங்காய்
கல்பனா ஈன்றெடுக்கிறாள் மகவை
மூக்கையா எடுத்து வருகிறான் தன் சிசுவை
கன்று பிரிந்தது பசுவை
உணராவிட்டாலும் கல்பனா தமிழச்சி
உணர்த்தி விட்டது தாயின் சூழ்ச்சி
பத்துமாத பந்தம்
மறக்க முடியுமா ஒரு தாய்
சுடுமே அது தீயாய்
தாய் சேய் பிரிவு அது சொல்லொணாத் துயரம்
எழுத்தில் வடிப்பது கடினம்
உதிரம் கொதிக்கின்றது
தாய்மையை உணர்கின்றது
பாலூட்ட துடிக்கின்றது
உண்மையை அறிகின்றது
சேய் அதன் தகப்பனிடம்
கல்பனா அறிகிறாள் சேதி
புரிந்து கொண்டாள் மீதி
விரைகிறாள்தாய்மையடைந்த ஜோதி
சோழவந்தான் மூக்கையா வீடு
--------------------------------------------------------
அங்கே கல்யாண கொண்டாட்டம்
அவளுக்கு இது திண்டாட்டம்
பார்க்கிறாள் மூக்கையாச் சேர்வையை
புரிகிறான் தாய்மையடைந்த பார்வையை
பாலூட்டத் துடிக்குது அவள் நெஞ்சம்
உரிமையை தடுக்கவில்லை தமிழ்ச் சிங்கம்
கொடுக்கிறாள் சேய்க்குப் பாலை
அடைகிறாள் நிம்மதியின் எல்லை
புது மாப்பிள்ளையாய்
முக்கையா
பார்க்கிறாள் சேர்வையை
வீசுகிறாள் பார்வையை
கேட்கிறாள் தனக்கொரு தீர்வை
மாறிவிட்டது அவள் மனம்
தெளிந்துவிட்டது அவள் குணம்
ஊரார் மெச்சுகின்றனர் மறுகணம்
மூக்கையாவிற்கோ மகிழ்ச்சி இக்கணம்
இதுவே தமிழ்மண்ணின் மணம்.
கல்யாணம் ஒரு நாடகம்
அவளுக்கு புகட்டுமே பாடம்
அது
மூக்கையா போட்ட வேடம்
தாலிதான் மகத்துவம்
தாய்மைக்கு அதுதான் சிறப்பிடம்
இனிமேல் எல்லாமே புகுந்தஇடம்
கல்பனாவுக்கு மகிழ்ச்சி
எல்லோருக்கும் நெகிழ்ச்சி
*************சு ப ம்*************************
Bookmarks