-
31st August 2015, 12:07 PM
#1191
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
31st August 2015 12:07 PM
# ADS
Circuit advertisement
-
31st August 2015, 12:15 PM
#1192
Senior Member
Seasoned Hubber
நேற்று 30.08.2015 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில், நாம் தேர்ந்தெடுத்த பாடல்களும் பின்னணி இசையும் பல்வேறு பங்களிப்பாளர்களை அதில் கொண்டு வரவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே அமைந்தன. இதனால் பல பாடல்களை நம்மால் இதில் சேர்க்க முடியவில்லை. இவர்கள் இருவரின் இணையில் வெளிவந்த படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அவற்றிலிருந்து ஒரு மாலை நேர நிகழ்ச்சிக்காக நம்மால் எவ்வளவு இடம் பெறச் செய்ய முடியுமோ அதைக் கருத்தில் கொண்டே நிகழ்ச்சி நிரலை அமைத்தோம்.
இதில் இடம் பெற்ற பாடல்களாவன -
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே - புதையல்
தாழையாம் பூ முடிச்சு - பாகப் பிரிவினை
பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு
மயங்குகிறாள் ஒரு மாது - பாச மலர்
நான் பேச நினைப்பதெல்லாம் - பாவ மன்னிப்பு
புதிய பறவை - முகப்பிசை
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை - படித்தால் மட்டும் போதுமா
இது வேறுலகம் - நிச்சய தாம்பூலம்
பந்தல் இருந்தால் கொடி படரும் - பந்தபாசம்
ஆறோடும் மண்ணில் - பழநி
ஓ..லிட்டில் ஃப்ளவர் - நீலவானம்
தெய்வ மகன் - சிதார் இசை
மகராஜா ஒரு மகராணி - இரு மலர்கள்
பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
ஆகாயப் பந்தலிலே - பொன்னூஞ்சல்
சிவந்த மண் - பார்வை யுவராணி பாடலுக்கு முந்தைய வெளிநாட்டுச் சுற்றுலாக் காட்சி
சொர்க்கம் பக்கத்தில் - எங்க மாமா
பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் - பாதுகாப்பு
ஐ வில் சிங் ஃபார் யூ - மனிதரில் மாணிக்கம்
இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன்
ராஜா - ரந்தாவா வுடனான சண்டைக் காட்சி
அலங்காரம் கலையாத - ரோஜாவின் ராஜா
கங்கை யமுனை - இமயம்
தலைவன் தலைவி - மோகன புன்னகை
சுமதி என் சுந்தரி - இறுதிக் காட்சி
ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன்தான் மனிதன்
மெல்லிசை மன்னரின் பேட்டி - தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி
தேவனே என்னைப் பாருங்கள் - ஞான ஒளி
தெய்வத்தின் தேரெடுத்து - பாட்டும் பரதமும்
கௌரவம் - கேஸ்கட்டுக் காட்சி
ஞான ஒளி - கருவிசை - மூன்று காட்சிகள்
தங்கப் பதக்கம் - கருவிசை - இரு காட்சிகள்
ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை
மெல்லிசை மன்னரின் பேட்டி - எங்கே நிம்மதி பாடலைப் பற்றி
எங்கே நிம்மதி - புதிய பறவை
உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்
நிகழ்ச்சியில் முரளியின் சூப்பரான தொகுப்புரை (வழக்கம் போல) மக்களிடம் பெருத்த கரகோஷத்தைப் பெற்றது.
பாடல்களைத் தொகுக்கின்ற வேலையே முந்தைய நாள் தான் முடிவடைந்தது. நேற்று காலையும் இருவரும் வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே தொகுப்புரை எவ்வாறு இருக்க வேண்டும் என்ன சொல்ல வேண்டும் என்கின்ற திட்டமிடலை மேற்கொள்ள இயலவில்லை. ஆதலினால் இருவருமே அந்நேரத்தில் பாடல்களைப் பற்றிய விவரங்களை மக்களிடம் Extemporeயாக எடுத்துரைத்தோம். படங்களின் வெளியீடு மற்றும் அதன் தொடர்பான விவரங்கள், பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களை முரளி தன்னுடைய அபார நினைவாற்றலால் எடுத்துக் கூற, அவ்வப்போது அந்தப் பாடல் அல்லது அந்தப் பின்னணி இசைக் கோப்புகளில் உள்ள சிறப்பம்சங்களை அடியேனும் எடுத்துக் கூறினோம். லோசான டென்ஷனோடு தான் நாங்கள் நிகழ்ச்சியைத் துவக்கினோம், இருந்தாலும் ஒவ்வொரு பாடல் அல்லது இசை முடிந்த பின்னும் பலத்த கரகோஷத்துடன் ஆடியன்ஸ் வரவேற்றது மகிழ்ச்சியைத் தந்தது. அது மட்டுமல்ல, தொகுப்புரைகளும் பல இடங்களில் கரவொலியைப் பெற்றது, எங்களுக்கு ஊக்கமளித்தது.
பந்த பாசம் படத்தில் இடம் பெற்ற பந்தல் இருந்தால் கொடி படரும் பாடலையும் பாதுகாப்பு படத்தில் இடம் பெற்ற ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் பாடலையும் பலர் நேற்றுத் தான் முதன் முதலில் பார்தததாகக் கூறினார்கள். இது எங்களுடைய தேர்விற்குக் கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.
பின்னணி இசைக் கோப்புகள் தேர்வும் மிகவும் சிரமமான காரியமாகவும் சவாலாகவும் விளங்கியது. மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவருடைய முழுத்திறமையையும் காட்டுவதற்கு அதிக வாய்ப்பளித்தவை நடிகர் திலகத்தின் படங்களே என நான் சொல்லுவேன்.
பல்வேறு விதமான உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த காட்சிகளை நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் மட்டுமே அதிகம் காண முடியும் என்ற கோணத்தில் பார்த்தால் அத்தனையிலும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையமைப்பின் பல்வேறு பரிமாணங்களை நாம் காண முடியும். இது மற்ற படங்களில் அந்த அளவிற்குக் கிட்டியதா என்பது கேள்விக்குறியே. எனவே இந்த அடிப்படையில் அவருடைய பின்னணி இசைக்காட்சித் தேர்வும் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
முகப்பிசையைப் பொறுத்த மட்டில் எடுத்த வுடனேயே எங்கள் இருவருக்குமே ஒரு சேரத் தோன்றியது புதிய பறவை டைட்டில் இசையே. எனவே அதனைத் தேர்ந்தெடுத்தோம். அதில் இடம் பெற்றிருந்த இசைக்கருவிகள், குறிப்பாக பாங்கோஸ் ஒலி, ஒரு விதமான திகிலை பார்வையாளரிடம் உண்டாக்கி படத்திற்கு அங்கேயே ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து விட்டது.
ராஜா படத்தின் சண்டைக்காட்சியைப் பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். எதார்த்தம், இயற்கை என்றெல்லாம் கூறப்படுவது சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்திற்கே உரியது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்த காட்சி என்பதால் ரந்தாவாவுடனான சண்டைக்காட்சியை எடுத்துக்கொண்டோம். எதிரி அடிக்கிறானா, முகத்தில் குத்துகிறானா, உதைக்கிறானா என்பது எதுவும் தெரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரே டிஷ்யூம் டிஷ்யூம் என ஒலி எழுப்பப் பட்ட காலத்தில் மெல்லிசை மன்னர் சண்டைக் காட்சிகளில் மிகவும் அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்தி ஒலியமைப்பைக் கொண்டு வருவார். பஞ்ச் விழும் போது மட்டுமே அந்த பஞ்சுக்கான ஒலியினை ஒலிப்பதிவாளரின் உதவியுடன் இணைப்பார். அதே போல் பலசாலியான எதிரியுடன் மோதும் போது நடிகர் திலகம் இரண்டு மூன்று முறை அடி வாங்குவதும், எதிரி காலால் உதைக்கும் பொழுது அதனை எதிர்க்க முடியாமல் விழுவதும் மிகவும் யதார்த்தமானதாகும். அதன் பிறகு வாலிபன் என்கிற முறையில் உள்ள சுறுசுறுப்பின் காரணமாக எதிரியை அநாயாசமாக எதிர்கொண்டு சமாளிப்பதும் இயல்பான சண்டைக் காட்சிக்குஉதாரணங்கள்.
எனவே இதற்கேற்ப மெல்லிசை மன்னர் சண்டைக்காட்சிக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாக அமைத்திருப்பார். குறிப்பாக மான் கொம்பினை எடுத்துக்கொம்டு ரந்தாவா குத்த வரும் போது பாங்கோஸின் ஒலியில் தாளம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.
இறுதியில் கதாநாயகன் தோல்வியும் அடையாமல் வெற்றியும் அடையாமல் தன் முதலாளியால் காப்பாற்றப்படுவது போன்ற காட்சியமைப்பு, நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு இயல்பான பாத்திரப்படைப்புகளைக் கொண்டவை என்பதற்கு மற்றோர் சான்று.
சிவந்த மண் திரைக்காவியத்தின் பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தவிர்க்க இயலாததாகும். இந்தக் காலத்தில் கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பாடல் கம்போஸிங்கிற்கே இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறார்கள். கடைசியில் அங்கிருந்து அவர்கள் கம்போஸ் செய்வது ஏதேனும் ஒரு குத்துப்பாட்டாக இருக்கும் அல்லது வெளிநாட்டு இசைத்தட்டுகளில் இருந்து உருவிய மெட்டாக இருக்கும். ஆனால் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் மெல்லிசை மன்னர் இங்கிருந்தவாறே பல வெளிநாட்டு இசையமைப்புகளைத் தன் இசையமைப்பில் அபாரமாக கொண்டு வந்திருப்பார். அதிலும் இந்தப் பின்னணி இசை, நாயகன் நாயகி இருவரும் ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுலா செல்வது போல வரும் கனவுக் காட்சியாகும். கனவுக்காட்சி தானே யார் கேட்கப்போகிறார்கள் என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று உரிமை எடுத்துக்கொள்ளாமல் அதிலும் முழு ஈடுபாட்டுடன் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டு வந்தது மெல்லிசை மன்னரின் தன்னம்பிக்கைக்கும் அபார திறமைக்கும் எடுத்துக்காட்டு.
இந்தக் காட்சி 7 நிமிடங்களுக்குப் படத்தில் இடம் பெறுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நெடுந்தகடுகளில் இக்காட்சியில் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டி இடம் பெறவில்லை. இந்த இரண்டு நிமிட ஸ்பெயின் புல் ஃபைட் காட்சியில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன. அதை மேற்கோள் காட்டுவதற்காகவே இது தேர்வு செய்யப்பட்டது.இதுவும் பலருக்கும் காணக் கிடைக்காத அரிய பொக்கிஷமாகும்.
இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட் காட்சியில் பின்னணியில் ட்ரம்பெட், சாக்ஸஃபோன், ட்ராம்போன் போன்ற மேல்நாட்டு இசைக்கருவிகளை மெல்லிசை மன்னர் மிக அற்புதமாகக் கையாண்டிருப்பார். அந்தப் பின்னணி இசையின் மெட்டு, இந்த நிகழ்ச்சியை நடிகர் திலகம் பார்ப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட லைவாக ஒளிப்பதிவு செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். அதில் நடிகர் திலகத்தை நாம் கவனித்தோமானால் அவருடைய அப்சர்வேஷன் பவர் புரியும், இதையெல்லாம் எடுத்துக் கூறத்தான் இந்தக் காட்சி.
சரி இப்போது இந்தக் காட்சியின் முக்கியத்துவத்திற்கு வருவோம். புல்ஃபைட்டில் காளை மாட்டை அடக்கும் மேடடார் என்கின்ற அந்த வீரனின் உடல் மொழி நடிகர் திலகத்தை மிகவும் பாதித்திருக்கிறது போலும். மற்றவர்கள் எல்லோரும் சண்டைக்காட்சியில் லயித்திருக்க, இவரோ அந்த வீரனின் உடல் மொழியை கவனித்திருக்கிறார்.
இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட்டில் வரும் அந்த வீரனின் உடல் மொழியைத் தான் நடிகர் திலகம் பொன் மகள் வந்தாள் பாடலில் தனக்கே உரிய பாணியில் அநாயாசமாக பிரயோகித்து உலகிலேயே ஸ்டைல் சக்கரவர்த்தி என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் என்று நாமெல்லோரும் தோள் தட்டும் அளவிற்கு புகுந்து விளையாடியிருப்பார்.
இதே போன்று இந்த காட்சியில் ஒலித்த பின்னணி இசையின் மெட்டும் பொன் மகள் வந்தாள் பாடலின் சரணத்தின் மெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவும் குறிப்பிடக்காரணம், ஒவ்வொரு பாடலுக்கும் காட்சிக்கும் தேர்விடலில் எங்களுக்கு எந்த அளவிற்கு சிரமம் இருந்தது என்பதைக் கூறவே.
நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, நம்மையெல்லாம் பாராட்டிய அன்புச் சகோதரர் ராம்குமார், மெல்லிசை மன்னரின் புதல்வர் கோபி, மற்றும் மெல்லிசை மன்னரின் புதல்வியரான லதா, சாந்தி, மற்றும் ஏராளமான ரசிகர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் முரளி சார்பிலும் என் உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 10 Likes
-
31st August 2015, 12:49 PM
#1193
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது -50
டாக்டர் சிவா :
1975 ல் அவன் தான் மனிதன் , மன்னவன் வந்தானடி என்று இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு அன்பே ஆருயிரே , வைரநெஞ்சம் படங்களை தொடர்ந்து வந்த படம் தான் டாக்டர் சிவா.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு லட்சியம் இருக்கும் . அதை அடைந்தாள் தான் அவன் வாழ்வில் வெற்றி அடைந்ததாக அவன் மனதில் ஒரு self satisfaction கிடைக்கும் . அதற்க்கு முக்கியமான அடித்தளம் அவன் சின்ன வயசில் நடந்த ஒரு சம்பவம் அவன் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்து அவன் கவனத்தை அந்த சம்பவம் ஏற்படுத்தி இருக்கும் ,அப்படி பட்ட உயர்ந்த லட்சியம் கொண்ட நபர் தான் நம் நாயகன் டாக்டர் சிவா
தொழுநோய் நோயாளிகளை குண படுத்துவதில் தன் மருத்துவ அறிவை , பயன்படுத்தும் சிவா தன் நண்பன் நாகேஷ் குடும்பத்தை சந்திக்க நேர்கிறது , நண்பனின் அண்ணியின் ரூபத்தில் தன் அன்னையை காணும் சிவா சீக்கிரமே அவர் குடுமபத்தில் ஒருவர் ஆகி விட , கீதா(மஞ்சுளா ) மனசிலும் இடம் பிடிக்கிறார் , இதை எதிர்க்கும் கீதாவின் சகோதரர்கள் (மேஜர் & MRR வாசு ) இருவரும் , கீதாவின் பிடிவாதத்தினால் சம்மதிக்க , சிவா ,கீதா திருமணம் இனிதே நடக்கிறது
முதலில் இனிமையாக தொடங்கும் அவர்கள் வாழ்வு சிவாவின் வளர்ப்பு தங்கை அமுதாவின் செய்கையாலும் , சிவாவின் வேலைபளுவினாலும் கீதாவுக்கு வெறுப்பு ஏற்பட காரணமாகிறது
அமுதா கர்ப்பம் அடைய ,அந்த பழி சிவாவின் மேல் விழ , கீதாவின்
சகோதரர்கள் விவாகரத்து வழக்கை நடத்த , இருவரும் பிரிந்து விடுகிறார்கள் ,சுரேஷ்(பிரேம் ஆனந்த் ) சிவாவின் மருத்துவமனியில் வேலைபார்க்கும் டாக்டர் ,அவன் தான் அமுதாவின் இந்த நிலைக்கு காரணம் .சுரேஷ் அமுதாவை திருமணம் செய்ய மறுக்க அமுதா தற்கொலை செய்து கொள்ளுகிறார் ,
எல்லாவற்றையும் எழந்து சிவா நிற்கும் பொது சுரேஷ் தொழுநோய் உள்ளவராக வர சிவா அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் .
விவாகரத்து கிடைத்த பிறகு கீதாவை இந்த சமுகம் illtreat செய்ய அப்போது தான் கீதாவுக்கு ஆன் பாதுகாப்பு தேவை என்ற உணர்வு ஏற்படுகிறது , இதற்க்கு இடையில் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் கீதாவின் சின்ன அண்ணியின் சகோதரன் VKR கீதாவிடம் தப்பாக நடக்க முயற்சிக்க , கீதா வெறுத்து போய் விடுகிறார் .
சிவாவை சந்திக்கும் கீதாவின் அண்ணியிடம் (பண்டரி பாய் ) சிவா தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி விவரிக்கிறார்
சிவாவின் தந்தையை தொழு நோயாளிகள் காப்பாற்றி வந்ததையும் , கொலை செய்ய போன இடத்தில தற்செயலாக ஒரு குழந்தை கிடைத்ததும் (அந்த குழந்தை தான் அமுதா) , தன் வாழ்க்கையில் தொழுநோய் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் படி தன் தந்தை சத்தியம் வங்கியதை பற்றியும் சொல்ல , கீதாவிடம் இந்த உண்மைகள் சொல்ல படுகிறது
ஊருக்கு செல்ல முடிவெடுக்கும் கீதா , ஒரு கணவன் மனைவி இருவரும் பேசி கொண்டு இருக்கும் உரையாடலை கேட்க மனம் மாறி மீண்டும் சிவா உடன் சேர
முடிவில் சுபம்
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
31st August 2015, 12:50 PM
#1194
Junior Member
Seasoned Hubber
இனி டாக்டர் சிவா பற்றி
சின்ன வயதில் தன் தந்தையிடம் தான் கொடுத்த வாக்குக்காக தொழுநோய் உள்ளவர்களை சிறிதும் அருவெறுப்பு இன்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தர்மகுனம் உள்ள டாக்டர் . அவர் ஏங்குவது அன்புக்காக . அது பண்டரிபாய் ரூபத்தில் கிடைக்கும் பொது அவர் கண்ணில் தெரியும் கண்ணீர் அனந்த கண்ணீர் நம் மனமும் நெகிழ்கிறது .
அதவும் பண்டரிபாய் காலுக்கு சிகிச்சைக்கு அளிக்கும் பொது அவர் பேசும் வசனமும் , தன்னை தானே அன்புக்கு எங்கும் பிச்சைகாரன் என்று self depreciate செய்து கொள்ளும் காட்சியும் நன்றாக அமைந்து இருந்தது
மஞ்சுளா நெருங்கி வரும் பொது தன் கடமையை நினைத்து விலகி நிற்பதும் , பிறகு காதலிக்கும் பொது ஒரு பெண் வந்து தன் குழந்தைக்கு தொழுநோய் வந்து விட்டதாக சொல்லி அழும் பொது இவர் காதலை நிராகரித்து விலகி ஓடுவதும் தன் படிப்பு சரியாக உபயோக படுத்த படவில்லை என்று சொல்லி குமுறுவதும் என்று தன் ஏற்று கொண்ட பாத்திரத்தை அறிந்து நடித்து இருப்பார் நடிகர் திலகம்
திருமணத்துக்கு பிறகு வேலை காரணமாக தன் மனைவிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் , மனைவியை தாஜா செய்யும் பொது வரும் பாடலில் அவர் expressions க்கு once more கேட்க தூண்டும்
அதே போல் அவர் கையில் இருக்கும் bracelet / chain இப்போது லேட்டஸ்ட் trend . அதை அணிந்து கொண்டு அவர் pipe smoke பண்ணும் பொது அவர் ஸ்டைல் - டாப்
அதுவும் மஞ்சுளா உடன் நடக்கும் முதுஅல் சந்திப்பில் மஞ்சுளா ச்வீட் உடன் இருக்க , இரண்டு கைகளிலும் அதை வாங்கும் சிவாஜி சார் , விழிக்கும் காட்சியும் , மஞ்சுளா pipe யை விட்டு சென்ற சிவாஜிடம் மீண்டும் அதை கொடுக்க , அதை மறந்து விட்டு அவர் செல்லும் பொது அவர் செல்லமாக அலுத்து கொள்ளுவதும் அழகு
நல்லவன் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே பாடல் தொடக்கத்தில் அவர் கேமரா வை நோக்கி கண் அடித்து விட்டு , பிறகு நடந்து வரும் பொது ஒளிபதிவாளர் விஸ்வநாத் ராய் அதை ஒரு கோணத்தில் இருந்து படம் பிடித்து , பிறகு மெதுவாக அவர் நடையை மட்டும் focus செய்து ரசிக்க செய்து இருப்பார் .
தன் மனைவி தன்னிடம் கோபித்து கொண்டு இருக்கும் பொது அவரை சமாதானம் செய்து சமாளித்து விடுவதும் , அதுவே எல்லை மீறி போகும் பொது மனைவியை அவள் வீட்டில் சந்திக்கும் பொது மஞ்சுளாவின் அண்ணன் மேஜர் கோபத்துடன் ஆங்கிலத்தில் கத்தும் பொது இவர் ஆத்திரத்தை அடக்கி கொண்டு , அதே பாணியில் பதில் கூறும் காட்சி -TIT FOR TAT
கடைசியில் மனைவி வீடு திரும்பும் பொது சகஜமாக பேசி கொண்டு இருந்து விட்டு மனைவி கேட்ட உடன் - இவர் சொல்லும் காரணம் - அதை ஆங்கிலத்தில் உச்சரிக்கும் பாங்கு கடைசியில் அவர் கணவன் மனைவி ஒற்றுமை பற்றி பேசும் வசனம் அனைத்தும் படத்தின் பலம்
தன் மனைவிக்கு abortion என்ற செய்தி கேட்ட உடன் தன்னை வாழ்தியவரை பார்த்து dead pan expression உடன் பேசுவதும் , பிரேம் ஆனந்த் உடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் - typical சிவாஜி ஸ்டைல்
கீதாவாக மஞ்சுளா கொஞ்சம் glamour கலந்த பாத்திரம் . முதலில் சிவாவின் தியாகம் கண்டு அவரை காதலிக்கும் அவர் ,அதுவே அவளுக்கு பிரச்சனை என்ற பொது அவர் சராசரி பெண்ணாக நடந்து கொண்டு அவசரப்பட்டு விவாகரத்து , பின் வாழ்கை கசக்கும் பொது தெளிவு பிறந்து கணவர் உடன் சேர்வதும் என்று பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்
பண்டரி பாய் - ஸ்டார் mother
சவுத் இந்தியாவில் பல ஹீரோக்களின் அம்மா ,அண்ணி பாத்திரத்தில் முத்திரை பதித்தவர் - இந்த படத்திலும் அவர் தனித்து தெரிகிறார் , ஹீரோ அவரிடத்தில் கொண்டு உள்ள மரியாதை நம்மளுக்கும் வருகிறது
பிளாஷ் back காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம்
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகம் படங்களில் இதுவும் ஒன்று
-
Post Thanks / Like - 0 Thanks, 8 Likes
-
31st August 2015, 01:21 PM
#1195
Senior Member
Devoted Hubber
Dear sivajisenthil sir,
wish u a very happy and peaceful retired life
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st August 2015, 02:17 PM
#1196
ஆதவன் ரவி அவர்களே,
தவறுதலாக துவக்கப்பட்ட திரிகள் நிறைவு பெற்றன. உங்களுக்கு வேண்டுமென்றால் அந்த திரிகளில் நீங்கள் பதிவிட்ட அந்த நடிகர் திலகத்தின் புகைப்படம் அடங்கிய உங்கள் இரு வரி கவிதையை இங்கே மெயின் திரியில் பதியலாம்.,
அன்புடன்
-
31st August 2015, 03:29 PM
#1197
Junior Member
Seasoned Hubber
Dear sivaji Senthil sir,
Wish u a very happy , healthy and peaceful retired life
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st August 2015, 03:32 PM
#1198
Senior Member
Diamond Hubber
http://www.behindwoods.com/tamil-mov...ce-aug-30.html
Week :2
Total collections in Chennai :Rs. 8,46,213
No. Shows in Chennai (Weekend): 15
Collection in Chennai (Weekend): Rs. 73,836
No. Shows in Chennai (Weekdays): 40
Collection in Chennai (Weekdays): Rs. 2,18,472
Last edited by joe; 31st August 2015 at 03:34 PM.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
31st August 2015, 03:48 PM
#1199
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st August 2015, 04:35 PM
#1200
சிவாஜி செந்தில் சார்,
பணி ஒய்வு என்பது வாழ்க்கையில் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் ஒரு நிகழ்வே! உங்கள் பணி ஒய்வு தொடர்பான அனைத்து அலுவல்களையும் செவ்வனே முடித்த பிறகு திரும்பி வாருங்கள்!
உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்!
நடிகர் திலகத்தின் திரி மேன் மேலும் வளரட்டும்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks