Page 336 of 402 FirstFirst ... 236286326334335336337338346386 ... LastLast
Results 3,351 to 3,360 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3351
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    9.9.2015
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவரான திரு இராம வீரப்பன் அவர்களின் இனிய பிறந்த நாள்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக திரு ஆர் .எம் வீரப்பன் அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

    மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றிலும் , அரசியல் பயணத்திலும் முக்கிய பங்காற்றியவர் .
    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் , மக்கள் திலகத்திற்கும் இணைப்பு பாலமாக விளங்கியவர் .
    பேரறிஞர் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் மக்கள் திலகத்தின் திரை உலக நிர்வாகியாக பணி யாற்றியவர்

    நாடோடி மன்னன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றியவர் சத்யா மூவிஸ் நிறுவனத்தை துவக்கி தெய்வத்தாய் .முதல் இதயக்கனி வரை 6 வெற்றி படங்களை தயாரித்தவர்
    மக்கள் திலகம் அதிமுகவை தொடங்கிய போது முக்கிய பங்காற்றி 1977 முதல் 1987 வரை தமிழக அமைச்சரவையில்
    இடம் பெற்று சிறப்பாக பணி புரிந்தவர்.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தை திறம்பட இயக்கி பல விழாக்கள் , மாநாடுகள் , பட விழாக்கள் நடத்தி வெற்றி கண்டவர் . மக்கள் திலகத்தின் எண்ணங்களை குறிப்பறிந்து செயலாற்றியவர் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றங்களை
    சிறப்பாக வழி நடத்தியவர் . சிறந்த பண்பாளர் . சிறந்த பேச்சாளர் . மக்கள் திலகத்திற்கு சோதனைகள் ஏற்பட்ட நேரங்களில் உறுதுணையாக நின்றவர் . அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் .

    உண்மை தான் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களே !

    இப்படிப்பட்ட ஒருவர் ( நம் மக்கள் திலகத்த்தின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான அற்புதமான மனிதர்) நமக்கு வாய்க்கவில்லையே என்று கலைஞர் கருணாநிதி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை ஏங்க வைத்த அருமை பெரியவர் திரு. ஆர். எம். வி. அவர்கள் மேலும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, பொன்மனசெம்மலின் நூற்ற்றாண்டு விழாவிலும் கலந்து கொண்டு அவரின் பெருமைகளை இப்பூவுலகிற்கு பறை சாற்றிட வேண்டும் என்று, புரட்சிததலைவரின் இலட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் விரும்பி வாழ்த்துகிறேன்.

    காலத்தின் கட்டாயத்தால், செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான கழகத்துக்கு சென்று, உரிய அங்கீகாரம் கிடைக்காமையால், (முதலில் இணை பொது செயலாளர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டு) பின்னர் மனம் வெதும்பி, வேறு வழியில்லாமல் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் தஞ்சமடைந்தார். அருமை பெரியவர் ஆர். எம். வி. உட்பட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மீது மாறாத அன்பு கொண்ட களப்பணியாளர்கள் திருவாளர்கள் முத்துசாமி, கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், எச். வி. ஹண்டே, க. லியாகத் அலி கான் போன்ற பலருக்கும் இவ்வாறு அங்கீகாரம் மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டமே !

    என் போன்ற அக்காலத்து எம். ஜி. ஆர். மன்ற அன்பர்களுக்குத்தான் தெரியும், அருமைப் பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் ஆற்றல். உலகிலேயே, அந்த காலத்திலேயே அதிக அளவுக்கு, ரசிகர் மன்றங்கள் (சுமார் 20,000க்கும் மேல்) கொண்டவர் நம் கலைச்சுடர், பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. அவ்வளவு மன்றங்களையும் ஒருங்கிணைத்து, நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களையே மலைக்க வைத்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் திரு. ஆர். எம். வி. அவர்கள். திராவிட இயக்கத்தில் பெரும் பங்காற்றி பின் நம் தமிழகத்து தங்கம், ஆண்டிப்பட்டி சிங்கம் எம். ஜி. ஆர். அவர்களிடம் இணைந்தார். அவரது ஆற்றல் அளப்பரியது. சாதனைகளின் சிகரம் நம் மன்னவன் அடைந்த வெற்றிகளுக்கு பின்னணியாய் திகழ்ந்தவர் அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்கள்.



    1984ல். புரட்சித்தலைவர் அமெரிக்காவில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த வேளையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் கழகம் பெற்ற வெற்றிக்கு அடிகோலியது அவரது ராஜ தந்திரமே என்று சொன்னால், அது மிகையாகாது. ஆர். எம். வி. அவர்கள், "என் கண் போன்றவர், எனது நிழல்" என நம் ஒப்பற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களால் பாராட்டப்பட்டவர்.

    புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளில், அருமை பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பங்கு மகத்தானது. இதை மறுப்பவர்கள், மனசாட்சி இல்லாதவர்கள், என்று இந்த உலகம் பழிக்கும்.

    மொத்தத்தில், திரு. ஆர். எம். வி. அவர்கள் நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

    அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, செய்திகளை பதிவிட்ட திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !



    27-05-2010 அன்று பெரியவர் ஆர். எம். வி. அவர்கள் இல்லத்திருமண விழா, (ஆர். எம். வி. அவர்கள் புதல்வன் - மணமகன் வி. தங்கராஜ் மணமகள் எம். தாரிணி) அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றாலும், விழா மேடை பின்னணியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் பிரம்மாண்டமான பதாகை தோற்றமளிக்கும் காட்சி இதற்கு பெயர் தான், உண்மையான எஜமான விசுவாசம்.
    Last edited by makkal thilagam mgr; 8th September 2015 at 11:43 PM.

  2. Thanks Russellzlc thanked for this post
    Likes Russellzlc liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3352
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3353
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    பொன்மனசெம்மலின் புகழ் பரப்பி வந்த ஈடு இணையற்ற "திரை உலகம்" இதழ்களிலிருந்து பதிவுகள் மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி !

  6. #3354
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3355
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3356
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy : Facebook

  9. #3357
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3358
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகத்தின் "நாளை நமதே " தெலுங்கு மொழி மாற்ற பட விழாவில் - நம் பொன்மனச்செம்மல்.

    Courtesy : Facebook

  11. #3359
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  12. #3360
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy : Facebook

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •