Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என்னை பொறுத்தவரையில் உண்மை விஷயங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...மற்றவர்களை போல நான் உண்மை விஷயங்களை எழுதவதர்க்கோ பதிவு செய்வதற்கோ தயங்கி பழமொழி மட்டும் உதிர்த்துகொண்டிருக்கமாட்டேன்.

    பிறகு இன்னொருவர் கருத்தை பதிவு செய்தவுடன்....மிகவும் சரியாக சொன்னீர்கள்....நானும் இதையே தான் சொல்லவந்தேன்...நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்று (அதுவரை சும்மா இருந்துவிட்டு....) நாலுபக்க விளக்கமும் கொடுக்கமாட்டேன் ! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கிறதல்லவா.
    ஆர்கேஎஸ்,
    பழமொழி, தத்துவம் இவையெல்லாம் மேம்போக்கான வாக்கியங்கள் அல்ல, அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதில் உண்மை புதைந்திருக்கிறது. நான் பலமுறை கூறியிருக்கிறேன். அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கும் மின்னணு ஊடகத்தில் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. என்ன எழுதுவதாக இருந்தாலும் ஆவணங்களின் அடிப்படையில் தான் நாம் இங்கு பேச வேண்டும், அதுவும் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர் வசூல் விவரங்களோடு விளம்பரம் கொடுத்திருந்து அது நம்மிடம் பிரதி இருந்தால் நம்மால் ஆணித்தரமாகக் கூற முடியும். அது இருந்தால் வாதம் எதற்கு என்று ஒரு குதர்க்கமான கேள்வியும் உங்களிடமிருந்து வரலாம். ஆனால் அது தேவையற்ற கேள்வி.

    விவரம் தெரிந்த நாளிலிருந்து சிவாஜி ரசிகனானவன். அப்போதிலிருந்து பத்திரிகை விளம்பரங்களை சேகரித்தவன். பல நாட்களில் உணவு உண்ணக் கிடைத்த காசைக் கூட பத்திரிகை விளம்பரத்திற்காக வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தவன். காலப்போக்கில் என்னை மீறிய காரணங்களால் அவற்றில் பெரும்பகுதியை என்னால் பராமரிக்க முடியவில்லை.

    லாஜிக் என்பது ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டும் தான் பேச முடியும். அதை ஏற்க மாட்டேன் என்பவர்களிடம் ஆதாரம் மட்டுமே தான் பதிலாகத் தந்து பேச முடியும்.

    ஏனோ தானோ என்று உணர்ச்சி வசத்தில் ஆவேசப்பட்டு வசூல் விவரம் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. உங்களுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் திலகத்தின் படங்கள் மக்களிடம் சென்று சேருவதற்கு அயராது உழைத்தவர்கள் நாங்கள். எனவே தங்களுடைய சான்றிதழுக்காகவோ அல்லது இங்கே என்னைக் குறை கூறும் மற்ற நண்பர்களுக்காகவோ நான் சிவாஜியை ரசிக்கவில்லை. உங்களையெல்லாம் இங்கு வந்த பின் தான் எனக்குத் தெரியும். இணையம் என்ற ஒன்று கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அவர் புகழைப் பாட அவருக்காக உழைத்த என்னைத் தாங்கள் குறை கூறுவதால் எனக்கு எந்த இழிவும் ஏற்பட்டு விடாது. அதனால் நான் குறைந்து விடவும் மாட்டேன்.

    வாசு சார் போட்ட பதிவில் இருந்த விஷயம் எனக்கு உடன்பாடாக இருந்ததால் நான் அவர் கூறுவதை ஆமோதித்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. அது மட்டுமின்றி தர்த்தி படத்தைப் பற்றி நஷ்டம் என்று விவாதம் வந்த பின்னரே நான் அது பற்றிய என் விளக்கத்தை அளித்தேன். இந்த தர்த்தி ஹிந்தி வெற்றிப் படம் என்பதை நானும் வாசுவும் முன்னரே மய்யத்தில் கூறியுள்ளோம். இது ஒன்றும் புதிய விஷயமில்லை.

    தயவு செய்து என்னைக் குறை கூறுவதில் தங்களுடைய பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

    அதே போல தங்களிடமிருந்து பாராட்டை எதிர்பார்த்தும் நான் பதிவுகள் இடவில்லை.
    Last edited by RAGHAVENDRA; 14th September 2015 at 06:36 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •