-
14th September 2015, 06:48 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
balaajee
தயாரிப்பாளரை அழவைத்த ரஜினி!
ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், 'கிருமி' படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அனுசரண் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள், மியூசிக் வீடியோக்கள் இயக்கியுள்ளார்.
'கிருமி' வரும் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது. தயாரிப்பாளரான அனுபவம் பற்றி 'ரஜினி' ஜெயராமன் கூறும் போது. "இது எங்கள் முதல் முயற்சி. கதை பிடித்திருந்தது. இந்தக் காலத்துக்கும் ஏற்றமாதிரி இருந்தது. படம் தயாரிப்பது பற்றி ரஜினி சாரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவர் இல்லாமல் எனக்கு எதுவும் இல்லை. இந்தப் பெயர், முகவரி அவர் கொடுத்ததுதான். நல்லா பண்ணு இந்தக்காலத்துக்கு ஏற்றமாதிரி படம் இருக்கட்டும் செலவு செய்வதில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி. வாழ்த்தினார்.
"நான் அவருடன் 24 ஆண்டுகள் கூடவே இருந்திருக்கிறேன். அது மறக்க முடியாத காலங்கள். அவர் சிங்கப்பூரிலிருந்து உடல் நிலைசரியாகி வந்த போது இடையில் எனக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததைக் கேள்விப்பட்டு அங்கிருந்து வந்ததும் முதலில் கூப்பிட்டது என்னைத்தான்.
அவர் வந்தவுடன் என்னைக் கூப்பிட்டதும் எனக்கும் அழுகை வந்து விட்டது. எதுவும் பேசத் தோன்ற வில்லை. என்னைப் பார்த்ததும் அவரும் கண் கலங்கி விட்டார்.அவர் ஆசியும் அன்பும் எனக்கு என்றும் உண்டு." என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
தலைப்பு கொஞ்சம் மிஸ்லீடிங்கா இருக்கு!
This is a very big world!
-
14th September 2015 06:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks