-
14th September 2015, 08:51 PM
#3841
Junior Member
Veteran Hubber
Gap filler / Page filler / Monotony breaker!!
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !
ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !
part 2
இதில் என்ன பிரச்சினைன்னா கேள்வி கேட்கும் குரூப் சிவாஜியா எம்ஜியாரான்னு தெரியாது எந்தப் பக்கம் சாய்ஞ்சாலும் மற்ற குரூப் வேட்டையாடி விளையாண்டு விடும்!!
இப்ப நான் போட்ட போட்டிலே வாழ்நாள் வைரிகளான ரெண்டு க்ரூப்பும் ஒண்ணா சேர்ந்ததுதான் சாதனை எனக்கு சோதனை தலை வேதனை !!
எனக்கும் சாம்பார் என்றே செல்லப் பெயரை டிக்ளேர் பண்ணி படுத்தியெடுத்து விட்டார்கள்! சாம்பாரில் எத்தனைவகை என்று ஆரம்பித்து.....
ஏன் சிவாஜி எம்ஜியார் பிடிக்கவில்லை ...
ஒருவழியாக நான் மூர்ச்சையாகும் நிலை வந்ததும்தான் க்ளைமாக்ஸ்..அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் காஞ்சனா தொட்டதற்கே உங்க ஆள் மழையிலே குதியாட்டம் போட்டாரே .இப்ப நீ அதேமாதிரி ஆடணும்னு எனக்கு ஜெமினி மீசை மாதிரி பென்சில் மீசை போட்டுவிட்டார்கள்!
பேண்ட் ஷர்ட் இல்லாமே ஜட்டியோடு ஹாஸ்டல் போர்டிகோ பக்கத்தில் நிற்க வைத்து பூவாளிகளில் நீர் நிரப்பி என்மேல் மழையாக தெளித்து ஆட விட்டார்கள்
கையை இடுப்பிலே வைடா.... அந்தப் பூவைப் பறித்து சுண்டி விடுடா ...கமேண்டுகளோடு ஒருவழியாக நானும் குதித்து குளித்து முடித்தேன்!
ஆனாலும் எமகாதகர்களுக்கு என் மேல் அவ நம்பிக்கையே ! கள்ளனை நம்பினாலும் உன் மாதிரி குள்ளனை நம்ப முடியாதுடா... ஜெமினி மாதிரி பாடு என்று அடுத்த லெவல் டெஸ்டுக்கு தள்ளினார்கள் ...பாட்டுப் பாடவா பாடலை ஸ்கூல் மணம் மாறாமல் அட்டென்ஷனில் கைகட்டிக்கொண்டு ஜெமினியை நினைத்துக் கொண்டு பிசிறில்லாமல் பாடியதை நம்ப முடியாமல் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து என் முதுகில் வீங்குமளவுக்கு தட்டியெடுத்து விட்டார்கள் ! அப்புறம்தான் தெரிந்தது காலேஜ் ஆர்கெஸ்ட்ராவுக்கு ஆள் பொறுக்க இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று!
அப்புறமென்ன ...நீங்க நினைக்கிறமாதிரி என்னை உடனே ரிலீஸ் செய்யாமல் விடியவிடிய சாம்பார் வைக்க வைத்துவிட்டார்கள்! தொண்டை கட்டிக் கொண்டாலும் அடுத்த நாள் முதல் ஆர்கெஸ்ட்ரா பிராக்டிஸ்தான் ஓரியண்டேஷன் டே வரை! ஜெமினிதான் மறுபடியும் உடம்பு வீங்காமல் என்னைக் காப்பாற்றினார் ! அடுத்த ஐந்து வருடமும் ஐயாதான் கேம்பசின் சாம்பார் பாடகர்!!
அடுத்த சோதனை எனக்கு ஆடிட்டோரியத்தில் ஜெமினி படக் கிளிப்பிங்குகள் இடைவேளையில் போடும்போது வந்தது ...
தொடரும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th September 2015 08:51 PM
# ADS
Circuit advertisement
-
14th September 2015, 08:55 PM
#3842
Junior Member
Veteran Hubber
Nostalgia / Gap filler / Monotony breaker!
The song sequence that catapulted GG to the status of the unreigned King of Romance in Indian films!! Missiammaa's moonlight melody with his lucky charm pair Saaviththiri! This film always remains a crowd puller for its neat story line, enchanting music and captivating songs, subtle acting of all charachters making us feel that we also move with them in the screen proceedings, GG's handsome personality....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 08:58 PM
#3843
Junior Member
Veteran Hubber
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !
ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !
Part 3
எங்கள் பலகலைக் கழகத்தின் அறிஞர் அண்ணா ஆடிடோரியம் நகரிலேயே அனைத்துக் கல்லூரிகளின் அரங்கங்களை விட சிறப்பாக ப்ரொஜெக்டர் வசதியுடன் ஒரு மினி தியேட்டரைப் போலவே வடிவமைக்கப் பட்டதாகும். எங்கள் பலகலைகழக நாடக மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் (தேர்வுகாலங்கள் நீங்கலாக) கோவை திரைப்பட விநியோகஸ்தர்களுடன் பேசி நல்ல திரைப்படங்களை மாணவர்களுக்கான குறைந்த ரேட்டில் பெற்று திரையிடுவோம். பெரும்பாலும் சிவாஜி எம்ஜியார் படங்கள் பிறகு அத்தி பூத்தாற்போல ஜெமினி ஜெய் ரவி பிற இயக்குனர்கள் படங்கள் நல்ல இந்தி ஆங்கில திரைப்படங்களும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திரையிடப்படும் ! இடைவேளையில் Enjoy the Trailers/songs என்று பிற படங்களின் தேர்வு செய்யப்பட்ட காட்சிகளும் பாடல்களும் ஒரு அரைமணி நேரம் திரையிடப்ப்படும்போதுதான் ரசிககண் மணிகளின் குத்தாட்ட அலப்பறைகள் அதிரவைக்கும்!! (அந்த காலகட்டத்தில் கோ எஜுகேஷன் கிடையாது என்பது கொஞ்சம் ஆதங்கமான விஷயமே!!) சனிக்கிழமை மட்டுமே விளையாட்டு மைதானத்தில், ஜிம்மில் சாயந்திரம் கூட்டம் அலைமோதும்....நல்ல பசியெடுத்து கீரைஸ் சிக்கன் ஆனியன் பச்சடியுடன் சிப்ஸ் சேர்த்து ஒரு கட்டு கட்டுவார்கள்!
அந்த எனர்ஜி எல்லாம் ஆடிடோரியத்தில் ஆட்டபாட்டத்தில் கரைக்கத்தான் !!
பெரும்பாலும் நடிகதிலகத்தின் பாடல் காட்சிகளும் மக்கள்திலகத்தின் பாடல் காட்சிகளும் போட்டிபோட்டு ஆட்ட பாட்டத்துடன் ரசிக்கப்படும். ஜெமினி பாடல் காட்சிகளில் அரங்கம் அமைதியாகி விடும்! இருந்தாலும் சீனியர் நண்பர்கள் புன்னகையுடன் என் ரியாக்ஷனை கவனிப்பார்கள்!! திடீரென்று நாடகமன்ற செயலர் ஒரு சிலைடு போட்டார்....இந்தப் பல்கலைக் கழகத்தின் ஒரே ஒரு ஜெமினி ரசிகனுக்காக...என்று..மறுபடியும் எனக்கு 7.5 ஆரம்பித்தது!'
இனிய அதிர்ச்சியாக சாந்திநிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் ஓட்டப்பட்டது! அப்போது அமைதிதான்!! அடுத்தது அவளுக்கென்று ஓர் மனம் ஜெமினி மழையில் நனையும் ஆயிரம் நினவு பாடல் போட்டவுடன் ஒரு கும்பல் கடுப்பாகி டக்கென்று என்னை தூக்கி திரையின் மேடையில் இறக்கி விட்டு கானா மூனாவென்று ஆட வைத்துவிட்டார்கள் !! கொஞ்சநேரம் களேபரம்தான்....அதற்கடுத்த வாரம் ஓரிஎண்டேஷன் டே ! வழக்கமாக இந்த நாளில் சீனியர் ஜூனியர் எல்லோரும் ராகிங் முடிந்து விட்டதை அறிவிக்க கலந்து நிறைய ஆடல் பாடல் நாடக நிகழ்ச்சிகளைத் தருவார்கள்!! எனக்கும் ஆர்கெஸ்ட்ராவில் "பாட்டு பாடவா''ஒரு பாடல் மட்டும் வாய்ப்பளித்தார்கள்!!
contd.,
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th September 2015, 09:04 PM
#3844
Junior Member
Veteran Hubber
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !
ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !
Part 4
இந்த ஓரிஎண்டெஷன்டே வரும் வரை ஒவ்வொரு இரவும் சுடுகாட்டில் விட்டலாச்சாரியாரின் வெள்ளை லெக்கிங்க்ஸ் போட்ட அடுப்புக்குள் கால் வைத்து விறகாக எரிக்கும் ஜெகன்மோகினி பேய்களுக்கு நடுவில் கும்மியடிப்பது போலத்தான்!
ராகிங் கடமையில் கொஞ்சம் கண்ணியமும் கட்டுப்பாடும் உண்டு!! எப்படி என்றால் இரண்டாமாண்டு மாணவர்கள் உச்ச கட்ட வெறியில் எங்களைப் பந்தாடும்போது மூன்றாமாண்டு சீனியர் அந்த வழியே வந்தால் இரண்டாமாண்டு மாணவர் எழுந்து நின்று தனது மரியாதையை தெரிவிப்பார். அது கட்டுப்பாடாம்! மூன்றாமாண்டு பெருசு உடனே எங்களைப் பரிதாபமாக ஒரு லுக் விட்டுவிட்டு 'ம்ம் நடத்துடா மாப்பிள்ளே'என்று விடை பெற்றுக் கொள்வார். அதுதான் கண்ணியமாம் !! இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்ப் போல இப்போதைய பாலா படங்களின் கேரக்டர்களின் மேக்கப்பில்தான் மீசையில்லாமல் அறை குறைக் கரண்டல் கிராப்புடன் ஷர்ட் இன் பண்ணாமல் ஷூ போடாமல் வெறும் பாத்ரூம் செப்பலுடன் ஒரு மார்க்கமான அடையாளத்துடன் திரிந்து கொண்டிருந்தோம்! விடியல் வந்தது!! எங்கள் வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது ஒரிஎண்டேஷன்டே வடிவில்!!
பெண்வாசமே இல்லாத கேம்பஸ் ! அதனால் நிகழ்ச்சிகளின் மங்களம் கருதி ஒல்லிப்பிச்சான் வெண்ணை தேக முதலாமாண்டு மாணவர்களுக்கு டிராமாவுக்கு ஆளேடுக்கிறோம் என்ற சாக்கில் பெண்ணாக அரிதாரம் பூசி விடுவார்கள்!! இந்தநாள் எங்கள் கல்லூரி வளாக வாழ்க்கையில் மறக்க முடியாத 'நாங்கள் வயசுக்கு வந்த' டே ! ஆடிடோரியத்தில் விழா ஆரம்பிக்கும் முன்னர் கெட் டுகெதர் Buffet பீஸ்ட் புல்வெளியில்!!
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் ஆசிரியப் பெருந்தகைகளும் எனக்கு ஜெமினி முத்திரை குத்தி அடுத்த நான்கு வருடங்களிலும் முக்கியமான கலை நிகழ்ச்சிகளில் ஏ எம் ராஜா / பிபி ஸ்ரீனிவாஸ் பாடல்களை பாடச்சொல்லி .........ஒரே அன்புத் தொல்லைதான் போங்கள்!!
இன்னொரு நிகழ்ச்சியில் எனது சக நண்பர் ராமசாமி டிஎமெஸ் வாய்சில் என்னுடன் அவள் பறந்து போனாளே பாடும்போது ...ஒரே பேப்பர் அம்பாகப் பறந்து வந்து விழுந்து மேடை நிறைந்தது குப்பையால் .தனிக்கதை! எப்படியோ இந்தக் குட்டித் தீவு வாழ்க்கையில் நான் ஜெமினி வாய்ஸாக செட்டாகி விட்டேன் !!
1977ல் எங்கள் பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் விழாவில் காதல் மன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விவசாயம் பற்றி அசத்தியடித்த
கதை ..அவருக்கே நான் பாட்டுப்பாடவா பாடிக் காண்பித்தது....வரும் பகுதிகளில்...
Bye Friends for a short break till Vinaayakar Chadhurththi the day on which I presume we pass on to the new Part 5 of this thread!!Sorry for dumping my postings in haste...I join you all for Part 5 scheduled to be inaugurated by our beloved Madhuji!!
Last edited by sivajisenthil; 14th September 2015 at 09:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th September 2015, 09:23 PM
#3845
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
சின்னா! பாடல் உங்களுக்கு பழசு. ஆனால் என்றும் எங்களுக்கு புதுசு.
[eo]
ஆஹா வாசு.. நன்றி.. இதான் கேட்டதும் கொடுப்பவர்ங்கறது..
*
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th September 2015, 09:30 PM
#3846
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
ஜெய், ஜெயசுதா, மலையாளக் கரை ஜெயபாரதி நடித்தது. ஆனால் இப்படம் நான் பார்த்ததில்லை. பாடலோ அருமை. பாலாவின் ஏராளமான முத்திரைகளில் இதுவும் ஒன்று. பெண்மையின் கடமையையும், உயர்வினையும் பெருமை பேசும் பாடல். ஜெய், மற்றும் ஜெயபாரதி பங்கு கொண்டிருப்பார்கள்.
கடற்கரையில் இயல்பாக இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். எங்கோயோ பிறந்த ஒன்று வேறு எங்கேயோ சேர்ந்து சொந்தங்கள் ஆகிவிடுவதை உதாரணங்களுடன் கவிஞர் வெகு அற்புதமாக எடுத்துரைக்கிறார்.
பாருங்கள்.
'கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
மறுவீடு தேடுவதென்ன'
பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு[/COLOR][/B]
வாசு..வெகு அழகான நான் ரசித்துக் கேட்கின்ற பாடல்.. இப்போ தான் வீடியோ பார்க்கிறேன்..புதிய வாழ்க்கை என்று தெரியாது..ஏதோ ரவி படமோ என எண்ணிவிட்டேன்.. தாங்க்ஸ் ஃபார் த படம் அண்ட் பதிவு..
தீஸ்ரி மன்சிலில் எனக்கு இந்தப் ப் பாட்டும் பிடிக்கும்.. ஆஜா..ஆஜா.. பாட்டு ரொம்பப் பிடிக்குமாக்கும்..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th September 2015, 09:33 PM
#3847
Senior Member
Senior Hubber
//Bye Friends for a short break till Vinaayakar Chadhurththi the day on which I presume we pass on to the new Part 5 of this thread!!Sorry for dumping my postings in haste...I join you all for Part 5 scheduled to be inaugurated by our beloved Madhuj// ஹச்சோ சி.செ.. என்னாச்சு நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது..
ரொம்ப நல்லா இருக்கு.. அடுத்த எபிசோட்க்குக் காத்திருக்கணுமா.. ம்ம் தேவனின் கோவில் மூடிய நேரம்..
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
வெகு அழகான வாணி ஜெயராமின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th September 2015, 09:40 PM
#3848
Junior Member
Veteran Hubber
Pension formalities and farewell functions from my old students and present colleagues Si Ka! I will be back on 17th to participate our new part 5 inauguration postings and then I can be back only during the second week of October, after deciding my new assignments!!
with regards to all our friends,
senthil
-
14th September 2015, 09:54 PM
#3849
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 10:02 PM
#3850
Senior Member
Senior Hubber
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் ஆசிரியப் பெருந்தகைகளும் எனக்கு ஜெமினி முத்திரை குத்தி அடுத்த நான்கு வருடங்களிலும் முக்கியமான கலை நிகழ்ச்சிகளில் ஏ எம் ராஜா / பிபி ஸ்ரீனிவாஸ் பாடல்களை பாடச்சொல்லி .........ஒரே அன்புத் தொல்லைதான் போங்கள்!!// இப்போதும் பாடுகிறீர்களா.சி.செ...ஒரு ஆடியோஃபைல் எடுத்து விடுமேன்..
Bookmarks