Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

    அறிஞர் பட்டம் கிடைத்த நிகழ்வு :

    தமிழ் இலக்கியத்துறையில் முதன் முதல் வரலாற்று புதினங்கள் படைத்த வழிகாட்டி கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்தில், அண்ணா அவர்களும், வேறு பலரும் அழைக்கப்படிருந்தனர்.
    குறிப்பிட்ட நேரம் கடந்தும், அண்ணா அவர்களை தவிர வேறு பேச்சாளர்கள் எவரும் வரவில்லை. அதனால், கூடியிருந்த கூட்டத்தினருக்கு சலிப்பு தட்டியது. அதனை குறிப்பால் உணர்ந்த அண்ணா அவர்கள், ஓர் உத்தியை கையாண்டார். அக்கூட்டத்தில், பிறர் பேச வேண்டிய தலைப்புக்களை தாம் எடுத்துக் கொண்டு, முன் குறிப்பு ஏதுமின்றி, சிறிதும், பிசிறில்லாமல், ஒவ்வொரு தலைப்பையுமொட்டி மிக அற்புதமாகவும், அழகாகவும் பேசிக் கொண்டிருந்தார். அது சமயம் வந்த கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, எவ்வித முன் தயாரிப்பின்றி பல்வேறு தலைப்புக்களை மிக சரளமாக பேசிய இவரல்லவா அறிஞர் என்று எண்ணினார்.

    தமது எண்ணத்தினை அவ்விழாவில், பொது மக்கள் மற்றும் பெரியோர்களின் முன்னிலையில், 'அறிஞர்" என்னும் பட்டத்தினை சூட்டி மகிழ்ந்தார்.

    கூடியிருந்த மக்களின் கர கோஷத்துக்குக் கேட்கவா வேண்டும் !


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •