Page 390 of 402 FirstFirst ... 290340380388389390391392400 ... LastLast
Results 3,891 to 3,900 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3891
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்கள் அலங்கரித்த பதவிகள் :

    1931-32 ..... கல்லூரி பேரவைத்தலைவர்
    1932-33 கல்லூரி பொருளியல் பேரவைத்தலைவர்
    1939 நீதிக்கட்சி அமைப்பாளர்
    1940 திராவிட கழக பொது செயலாளர்
    1949 திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்
    1957-62 காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
    1962-67 மாநிலங்களவை உறுப்பினர்
    06-03-1967 முதல் 02-02-1969 வரை .... தமிழக முதல்வர் !.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3892
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

    பேரறிஞர் அண்ணா அவர்களின் சமூக நாடகங்கள் :

    1.. ஒர் இரவு
    2. வேலைக்காரி
    3. நல்ல தம்பி
    4. காதல் ஜோதி
    5. சொர்க்க வாசல்
    6. பாவையின் பயணம்
    7. இரக்கம் எங்கே ?
    8. நீதி தேவன் மயக்கம்
    9. சந்திரோதயம்
    10. இன்ப ஒளி

  4. #3893
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்களின் வரலாற்று நாடகங்கள் :

    1. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்
    2. சந்திரமோகன்
    3. நீதி தேவன் மயக்கம்

  5. #3894
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

    பேரறிஞர் அண்ணா அவர்களின் ஓரங்க நாடகங்கள் :

    1. அவன் பித்தனா ?
    2. இரக்கம் ஒரு பயணம்
    3. இளங்கோவின் சபதம்
    4. இன்ப நாளில் இதயம்
    5. எத்தகை திருவிளையாடல்
    6. கடவுளர் உலகில்
    7. கண்ணாயிரத்தின் உலகம்
    8. கண்ணீர் துளி
    9. கல் சுமந்த கசடர்
    10. களத்தின் வென்றான்
    11. கறை போக வில்லை
    12. காசூரார் கருணை
    13. சன்மானம்
    14. சுயேட்சையாகி விடுவேன்
    15. செலும் இடந்தோறும்
    16. செல்லப்பிள்ளை
    17. சோணாசலம்
    18. நன்கொடை
    19. நீதிபதி
    20. தங்கத்துளிகள்
    21. தர்மம் தலை காக்கும்
    22. துரோகி கப்ளான்
    23. தேவ லோகத்தில்
    24. பாகிரதியின் பந்தயம்
    25. பக்தியின் பேரால்
    26. பாங்கர் பணம் பேருத்தான்
    27. பாங்காங் பங்கஜா
    28. பாரதம்
    29. புதிய மடாதிபதி
    30. ராகவாயணம்
    31. ரோம் எரிகிறது
    32. வழக்கு வாபஸ்
    33. விலை ஏறி விட்டது

  6. #3895
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புக்கள் :

    1. தம்பிக்கு மடல்கள் .... 315
    2. கட்டுரைகள் .... 560
    3. நாடகங்கள் 13
    4. குறு நாடங்கங்கள் 19
    5. புதினங்கள் 6
    6. சிறு கதைகள் 118
    7. கவிதைகள் 77
    8. பத்திரிகை உரைகள் 1000க்கும் மேல்

  7. #3896
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், அமெரிக்காவின் அறிஞர் ஆபிரகாம் லிங்கனுக்கும் உள்ள ஒற்றுமைகள் :

    1. 1809ம் ஆண்டில் பிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். 1909ல் பிறந்தவர் பேரறிஞர்
    2. இருவரும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்கள்
    3. இருவரும் இரவு முழுவதும், கண் விழித்து புத்தங்கள் படிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள்.
    4. இருவரும் ஆடம்பரம் இல்லாதவர்கள்.
    5. இருவரும், சினம், ஆத்திரம் சிறிதளவும் கொள்ளாதவர்கள்.
    6. நகைச்சுவை சொட்ட பேசி எதிரியின் வாயை மூட வைப்பதில் வல்லவர் லிங்கன்.
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அவரது தத்துவத்தின் அடிப்படையில், மாற்றுக்க்கட்சியினரும் போற்றும் அளவுக்கு மேடைப்பேச்சுக்களில் இலக்கணம் வகுத்தவர் அறிஞர் அண்ணா
    7. எல்லோருடனும் நன்கு பழகுபவர் லிங்கன். தனிமையில் நாட்டம் கொள்ளாமல், எப்போதும் தம்மைச் சுற்றிலும் நண்பர் குழாம் சூழ்ந்திருக்க உரையாடல்களை கவனித்து வந்தவர் பேரறிஞர் அண்ணா
    8. ஒடுக்கபட்ட நீக்ரோ இன மக்களின் விடுதலைக்காக பாடு பட்டவர் லிங்கன். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட திராவிட இன மக்களின் எழுச்சிக்காக உரக்க குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
    9. இருவரும் முதன் முதலில் சந்தித்த தேர்தல்களில் வெற்றி பெற முடியாதவர்கள் ஆயினர்.
    10. எல்லாவற்றுக்கும் மேலாக, இருவருமே மக்களாட்சி மரத்தின் ஆணி வேறாக வாக்குச்சீட்டின் வலிமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர்.

  8. #3897
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மை :

    சம்பவம் 1

    ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவரை சூழ்ந்து கொண்ட மக்கள், "நீங்கள் எம். ஜி. ஆர். கட்சியை சார்ந்தவரா" என்று கேட்டனராம். அதற்கு, நமது இத்யக்கனியின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள், புன்முறுவலுடன், "ஆம்" என்று சொன்னாராம். மக்கள் பெரும் மரியாதை செய்தனராம். தன கட்சியில் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர் கட்சியை சார்ந்தவரா என்று கேட்ட அந்த மக்கள் மீது கோபம் கொள்ளாமல், அந்த புன்னகை மன்னன் ஆம் என்று பதிலளித்தாரே இந்த பெருந்தன்மை எவருக்கு வரும் வே று எந்த தலைவராவது, இது போன்ற கேள்விகள் எதிர் கொண்டிருந்தால், மூட் அவுட்டாகி, ஓரங்கட்டும் முயற்சியில் தான் இறங்கியிருப்பர்.


    சம்பவம் 2

    மற்றொரு சந்தர்ப்பத்தில், மாநாடு ஒன்றில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது, கூட்டத்தில் சல சலப்பு. மக்கள் திலகம் உள் ளே நுழைகிறார். உடனே, பேரறிஞர் அண்ணா அவர்களிடம், நம் மக்கள் திலகம் வேண்டும் என்றே, கூடத்தின் கவனத்தை திசை திருப்ப, அவ்வாறு தாமதமாக வந்தாதாக கலகம் மூட்டினர். அதற்கு, நம் இதய தெய்வம், பேரறிஞர் அண்ணா அவர்களிடம், தம்பி ராமச்சந்திரன் பற்றி நான் நன்கறிவேன். அவர் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவரல்ல. மேலும், தம்பி ராமச்சந்திரன் ஒரு சினிமா நடிகர். தம்பியின் தொழில் அப்படி. அவருக்கென்று ஒரு மாபெரும் ரசிக கூட்டம் ஒன்று உண்டு. அது மட்டுமல்லாது, நம் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு வாக்களிக்கும் கூட்டமும் கூட. அவரது பணி நம் கழகத்துக்கு தேவை. அவர் முகத்தை காட்டினால் போதும், பல லட்சம் வாக்குகள் நம் கழகத்துக்கு கிட்டும். ,எனவே, கழகத்தின் ஒற்றுமையை பேணிக்காக்கும் முயற்சியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி, அவர்களின் வாயை அடைத்தார்.


    சம்பவம் 3

    தேர்தல் நிதி திரட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களிடம்,, நம் மக்கள் திலகம் தேர்தல் நிதியாக பெருந்தொகை (இலட்சக்கணக்கில்) அளிக்க முற்பட்ட போது, " தம்பி இராமச்சந்திரா ! நீ அளிக்கும் இந்த லட்சங்கள் பெரிதல்ல, உன் திரு முகத்தை காட்டினாலே போதும், பல லட்ச வாக்குகள் கிடைக்கும், நம் கழகத்துக்கு " என்று வெளிப்படையாக கூறி, பொன்மனசெம்மலின் பலத்தை தமிழ் நாட்டிற்கு உணர்த்தினார்.


    இவ்வாறு சம்பவங்கன் பல கூறிக்கொண்டே போகலாம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மைக்கு !

  9. #3898
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

    அறிஞர் பட்டம் கிடைத்த நிகழ்வு :

    தமிழ் இலக்கியத்துறையில் முதன் முதல் வரலாற்று புதினங்கள் படைத்த வழிகாட்டி கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்தில், அண்ணா அவர்களும், வேறு பலரும் அழைக்கப்படிருந்தனர்.
    குறிப்பிட்ட நேரம் கடந்தும், அண்ணா அவர்களை தவிர வேறு பேச்சாளர்கள் எவரும் வரவில்லை. அதனால், கூடியிருந்த கூட்டத்தினருக்கு சலிப்பு தட்டியது. அதனை குறிப்பால் உணர்ந்த அண்ணா அவர்கள், ஓர் உத்தியை கையாண்டார். அக்கூட்டத்தில், பிறர் பேச வேண்டிய தலைப்புக்களை தாம் எடுத்துக் கொண்டு, முன் குறிப்பு ஏதுமின்றி, சிறிதும், பிசிறில்லாமல், ஒவ்வொரு தலைப்பையுமொட்டி மிக அற்புதமாகவும், அழகாகவும் பேசிக் கொண்டிருந்தார். அது சமயம் வந்த கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, எவ்வித முன் தயாரிப்பின்றி பல்வேறு தலைப்புக்களை மிக சரளமாக பேசிய இவரல்லவா அறிஞர் என்று எண்ணினார்.

    தமது எண்ணத்தினை அவ்விழாவில், பொது மக்கள் மற்றும் பெரியோர்களின் முன்னிலையில், 'அறிஞர்" என்னும் பட்டத்தினை சூட்டி மகிழ்ந்தார்.

    கூடியிருந்த மக்களின் கர கோஷத்துக்குக் கேட்கவா வேண்டும் !


  10. #3899
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நாவலர் - பேராசிரியர் சந்திப்பு :

    நீதிக்கட்சியோடு, தொடர்பு கொண்டிருந்த காலத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை , சிதம்பரத்தில் உள்ள "அண்ணாமலை பல்கலை கழகம் " சென்றார். "ஆற்றோரம்" என்ற தலைப்பில் அழகுத்தமிழில் அற்புதமாக பேசினார். "உலகம் பழையதும், புதியதும்" ( the world old and new) என்னும் தலைப்பில், ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அவருடைய சொற்பொழிவு திறனை கண்டு எங்கு குழுமியிருந்த மாணவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    சொற்போழிவுகள் முடிந்த பின்னர், இரு மாணவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களை தனிமையில் சந்தித்து, தங்கள் பாராட்டினை தெரிவித்தனர். அதே சமயத்தில், ஒரு ஐயப்பாட்டினையும் எழுப்பினர். ",உங்கள் சொற்பொழிவில் சமதர்மம் காணப்படுகிறது. ஆனால், நீங்கள் ஏன், அந்த பதவி வேட்டையாடும் பிற்போக்கான பணக்கார கட்சியாகிய "நீதிக்கட்சியில்" இருக்க வேண்டும்" என்று கேட்டனர். .

    அதற்கு பேரறிஞர் அண்ணா, அவர்களிடம், "அந்தக்கட்சியில் நான் ஏன் இருக்கிறேன் என்றால், அந்தப் பணக்கார கட்சியை ஜனநாயக, சமதர்ம கட்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்" என்று வேடிக்கையாக பதிலளித்தார்.

    பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பேச்சினால் கவரப்பட்ட அந்த இரு மாணவர்கள் தான், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், பேராசிரியர் அன்பழகன் அவர்களும்.

  11. #3900
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மீண்டும், புகைப்பட அணிவகுப்பு தொடர்கிறது :


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •