விக்ரமின் அடுத்தபடத்தை விஜய்மில்டன் இயக்குவது உறுதியானது

விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் பத்துஎண்றதுக்குள்ள படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து விக்ரம், ஆனந்த்சங்கர் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார்.
அதன் படப்பிடிப்பு இந்நேரம் தொடங்கியிருக்கவேண்டும், சிற்சில காரணங்களால் அது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. விரைவில் அதன் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனந்த்சங்கர் விக்ரம் கூட்டணியில் உருவாகும் இந்தப்படத்தை முதலில் வெறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. கடைசிநேரத்தில் இந்தப்படம் ஐங்கரன் நிறுவனத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் இந்தப்படத்தைத் தயாரிக்கவேண்டிய தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லியிருந்தாராம் விக்ரம்.
அந்தப்படத்தை விஜய்மில்டன் இயக்கப்போகிறாராம். பத்துஎண்றதுக்குள்ள படம் வெளியானதும் ஆனந்த்சங்கர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் அதைத்தொடர்ந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கிவிடுவார்களாம். இரண்டும் மாறி மாறி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.