- 
	
			
				
					24th September 2015, 05:18 PM
				
			
			
				
					#231
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							நன்றி சுந்தர பாண்டியன் சார்..
 
 யெஸ்..ஆடுகள் நனைகின்றன மதுரை ஸ்ரீதேவியில் 3 நாட்கள் ஓடி அதில் ஒரு நாள் பார்த்து மறு நாள் படத்தையே மாற்றி வேறு ஒரு பழைய படம் போட்டிருந்தார்கள்..கதானாயகி ரூபா என நினைவு.. வளர்த்த கடா என்றவுடன் வாகை சூடவா வில் வரும் ஒரு கடா நினைவுக்கு வருகிறது.. ஹீரோ அதனிடம் நீஎன்ன புலியா எனக் கேட்டு முட்டு வாங்குவார்..
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							24th September 2015 05:18 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					24th September 2015, 07:28 PM
				
			
			
				
					#232
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு
 
 
 
 பச்சைப்பசேல் என்று எங்கும் மரம் செடிகள் நிறைந்த பகுதி.கண்களுக்கு ரம்மியமான காட்சி. கூட்ஸ் ரயில் வண்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அதிக பெட்டிகளை கொண்டதாய் நீளமாய் அந்த ரயில் வண்டி  வளைந்து செல்லும் அழகு எல்லோரையும் கவரும்.மேலே இந்தப் பிரபஞ்சத்தை நினைக்க வைக்கும் நீல நிற ஆகாயம்.ரயில் வண்டி செல்லும் இருபுறமும் பசுமை நிறைந்த காட்டுப்பகுதி.இப்போது கூரையில்லாத அந்த திறந்த நிலைப்பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பாத மனமும் உண்டோ இப்பூவுலகில்?ஒரு ஆணும் பெண்ணும்ஆடிக்கொண்டு அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.அது மேலும் உற்சாகத்தை கூட்டுகிறதே. இப்போது அவர்கள் பாடத்தொடங்குவார்கள் போல் தெரிகிறது.அவர்கள் பாடும் அந்த பாட்டை சற்று கேட்போமா?
 இப்போது அந்த மங்கைஹம்மிங் செய்கிறாள்.
 
 ஹாஹாஹாஹாஆகாகாகாகேகேகே
 குரலிலே குயில் போலும்.இவ்வளவு நேரம் அதிசயித்த அந்த இயற்கையையே மறக்கசெய்த விட்டதே.சில நேரங்களில் இயற்கையையும் மீறிரசிக்க வைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கும் இருப்பதும் இயற்கைதானோ?
 
 இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
 மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
 ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
 செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.
 காட்டுப்பகுதியை பிளப்பது போல் வந்து கொண்டிருக்கிறதுஅந்த நீள ரயில் வண்டி.
 அவர்களே இந்தக் காட்சியின் பிரதானம்என்பதால் இனி மங்கை, மன்னவன் என்று அழைப்போம்.
 
 மங்கை தொடங்குகிறாள்:
 வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
 மெல்லத்தொடுகையில்பூவாகி,
 காயாகி,கனியாகி வண்ணம் பெறவோ
 மங்கை முடித்ததும் மன்னவர் தொடர்கிறார்...
 ஹஹாஹாஹாஹாக ஹேஹேகாஹஹாஹாஹாஹா
 அடேங்கப்பா என்ன ஒரு வசீகரமான குரலய்யா.இந்த ஹஹஹாஹாஹாஹஹாவுக்கு கே இப்படி ஒரு ஈர்ப்பு சக்தி என்றால் பாடலைக் கேட்டால்....
 பக்கம் வரவோ பத்து விரல்களில்
 பந்தல் இடவோ
 வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
 நூலாடைபோலாடஎண்ணம்
 இல்லையோ
 
 "மேலாடை மேலாட
 நூலாடை போலாட"
 என்று பாடுவதை கேட்கத்தான் எத்தனை இன்பம்.
 மறுபடியும் அந்த ஹம்மிங்.
 ஹஹஹஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாகஹஹஹஹஹஹாகாகஹா
 'இந்த ஹம்மிங்கில் இன்னும்இனிமை.
 இனிமை மென்மை
 அந்த
 மென்மை பெண்மையின் குரலில்
 வெளிப்படும்போது கூடுதல் இனிமை.
 ஆகாயப் பார்வையில் ரயில் நின்று கொண்டு இருப்பதை பார்ப்பதே அழகு.அது மலைப்பாதையில் ஊர்ந்து செல்வதை பார்ப்பது அழகிலும் அழகு.அப்படித்தான் இந்தக்காட்சிசெல்கிறது.
 இருட்டான ஆகாயத்தில் முழுநிலவு
 இருக்கும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அது போல மலையை குகைபோல பாதையாக்கி.,அந்த குகைக்குள்ளிலிருந்து பார்த்தால் இருட்டு குகை வெளிப்பிரதேச வான் வெளிச்சத்தில் வான் +முழு நிலவுகாட்சியைப் போல் இருக்குமல்லவா?அதே போன்ற இடத்தை நோக்கித்தான் இந்த ரயில் பயணம் இப்போது ஆரம்பிக்கிறது.மன்னவனும்,
 மங்கையும் இணைந்தபடி இருக்க
 அந்தநீள் தொடர் ஊர்தி குகைக்குள்
 செல்ல ஆரம்பிக்கிறது.ஊர்தி குகைக்குள் நுழைய நுழைய பக்கவாட்டு காட்சிகள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வர,கண்ணில் ஏற்படும்" க்ளாக்கோமா"நோய் போல்
 அந்தக்காட்சி கண்கள் காணும் பேரின்ப கவிதை.மன்னவனும்,மங்கையும் குகையை நெருங்கும் சமயம் அவர்களின் மேல் மட்டும் வெளிச்சம் பட்டு அவர்கள் அந்தரத்திலே நிற்பது போல காட்சி அளிக்கும் அந்தக்
 காட்சி க்கு மனம் மயங்கும். விழிகள் விரியும்.இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று யார்தான் யோசித்திருப்பார்கள்?
 அந்த தண்டவாள ஊர்தி வட்டமான குகைப்பாதையில் நுழைந்ததும்
 அந்த வட்டம் சிறிதாகி,மறைந்து இருள் சூழ்ந்து.,பின் சிறிது சிறிதாகபிறை போலஆரம்பித்து  அந்த வட்டப்பாதை வெளிச்சம் பெறுவது,
 கண்ணுக்கு கிடைத்த விருந்து.
 மன்னவன் கீழே அமர்ந்திருக்க மங்கை நாணத்துடன்எழுந்து பொய்க்கோபத்துடன் நடக்கிறாள்.
 
 மன்னவன் பாடுகிறான்:
 
 நான் புஷ்பாஞ்சலிஒன்று செய்ய
 நீ  பொன்னோவியம் என்று மாற
 
 மன்னவன் இடது புறமாக லேசாக சாய்ந்து வலது கையால்பாடல் வரிகளுக்கு காற்றில் அபிநயம் செய்வது வித்தைதெரிந்தவனின் ஜால வித்தை இது என்பது புரிகிறது.அவருடைய கை அசைவுகள் இவர் சாதாரண மனிதரில்லைஎன்பதை காட்டுகிறது."நான்ன்ன்ன் புஷ்பாஞ்சலி"என்று தொடங்குவது சுகமான ராகம்."நீ பொன்னோவியம் என்று மாற"என்பதை ஓவியம் வரைவது போல் காட்டும் விரல் அசைவுகள்
 அதிக அலட்டல்கள் இல்லாமலும்
 உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.
 
 நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
 நீ பொன்னோவியம் என்று மாற
 அந்த ரசனைகளின் இந்த ரசிகையது
 தேர்தேர்தேர் என்று ஆட
 இன்பக் கவிதைகளின்வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
 
 வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
 மெல்லத் தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகி
 வண்ணம் பெறவோ...
 
 சில பாடல்களை கேட்கும்போது நம்மையறியாமலேயே தாளம் போட வைக்கும். அதற்கு அந்தப்பாடல் உற்சாகமான மெட்டிலும் ,குஷியான இசையிலும் அமைந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு மெட்டிலும் இசையிலும் அமைந்த பாடல்தான் இது.இப்படி ஒருமெட்டு,இசைக் கலவையில் ,தேன் மதுர குரல்களும் சேர்ந்து கொண்டால் பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம்தானே!
 
 ரயில்
 மலை
 அலுக்காது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் .இப்போது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இன்பம் இன்னும் மேல்.உயர்ந்த அந்த பாலத்தில் ரயில் செல்லும் அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் அப்போதைய பிரமாண்டம்.அதிரடி பாட்டுக்கள் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே இது போன்றரயில்காட்சிகளை படம் பிடித்து வந்த தமிழ்திரையுலகில் ஒரு மென்மையான காதல் பாட்டுக்கு
 இந்த ரயில் பயண காட்சி படம் பிடிக்க பட்டிருப்பது புதுமையும் கூட.
 யானைகள் நின்று கொண்டிருக்க மரம் செடி கொடிகளுக்கு இடையில் ரயில் செல்வது போல் படம் பிடிக்கப்பட்டிருப்பது காட்சிக்கு கூடுதல் சிறப்பு.
 
 மங்கை பாடுகிறாள்:
 நான் புல்லாங்குழல் என்று ஆக
 நீ கண்ணன் விரல் என்று சேர
 
 புல்லாங்குழல்  இசை கேட்பது ஒரு சுகம் என்றால்,இங்கே புல்லாங்குழல் என்று பாடுவதைக் கேட்பதே அதனினும் சுகம்.
 ரயில் செல்லும் விளைவால் பின்புல காட்சிகளும் மாயையால் நகர, அதனுடன் இருவரின் ஆடலும்,பாடலுமாயும் அந்தக் காட்சி
 இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.
 
 நான் புல்லாங்குழல் என்று ஆக
 நீ கண்ணன் விரல் என்று சேர
 என்று அவள் முடிக்க,
 சின்னக்கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
 மன்னவனின் காந்தமும் சாந்தமும் இணைந்த குரல் நம்மை மென்மையாக மயக்க,
 
 தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
 என பெண் முடிக்க.,
 முடிப்பது மேலும் தொடராதோ
 என நாம் ஏங்க...
 ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.
 
 பாடல்:
 பெண்:வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
 மெல்லத்தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகிவண்ணம் பெறவோ
 ஆண்: பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தலிடவோ
 வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
 நூலாடை போலாட எண்ணம் இல்லையோ
 (வெட்கப்படவோ...
 ஆண்:நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
 நீ பொன்னொவியம் போன்று மாற
 பெண்:அந்த ரசனைகளின் இந்த ரசிகையது தேர்தேர்தேர் என்று ஆட
 ஆண்:இன்பக்கவிதைகளின் வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
 (வெட்கப்படவோ.,
 பெண்:நான் புல்லாங்குழல் என்று ஆக
 நீ கண்ணன் விரல் என்று சேர
 ஆண்:சின்னஞ்சிறு கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
 பெண்:தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
 (வெட்கப்படவோ...
 
 
 Vetka Padavo - Lorry Driver Rajakannu:
 
 
 
 
				
				
				
					
						Last edited by senthilvel; 24th September 2015 at 07:59 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
	 
- 
	
			
				
					24th September 2015, 10:07 PM
				
			
			
				
					#233
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							செந்தில்ல்ல்ல்வேஏஏஎல்...........செந்தில்வேல்.  ....
 
 இது உற்சாகக் கூக்குரல்.. என் கரவொலி உங்களுக்குக் கேட்கிறதா.... 
 
 //ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு// இந்தப் பாட்டு இதுவரை நான் கேட்காத, பார்க்காத பாடல்.. (படமும் நான் பார்த்ததிலலை)
 
 //இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
 மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
 ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
 செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.//  என் மனமும் இப்போது பிரமிப்பில் இருக்கிறது செந்தில்வேல்.. இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்..
 
 //உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.// எஸ்.. அண்ட் நைஸ்...
 
 //ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.// யெஸ்.. உங்கள் நீரோட்டமான எழுத்தில் தெளிவான ரசனையில் காட்சிப்படுத்தியிருந்ததில்... என்று முன்னால் போட்டுக் கொள்ளுங்கள்..
 
 ஒரே ஒரு குறை தான்.. ‘மன்னவன்’ காஸ்ட்யூம் கொஞ்சம் கோட் இல்லாமல் கேஸுவலாக விட்டிருக்கலாம்..
 
 செந்தில்வேல் வெரிகுட்..கீப் இட் அப்... ப்
 
 இன்னொரு சின்ன ரெக்வஸ்ட் ... ‘மன்னவன்’, பிரபு பாடல்களைத் தவிரவும் மற்ற  நாங்கள் அறியாத கானங்களை தங்கள் எழுத்துக்கள் மூலம் காட்சிப் படுத்த வேண்டும் என ஆசைப் படுகிறேன்.. சரியா..
 
 நன்றி நல்ல பாடல் அண்ட் ரசனை கலந்து தந்ததற்கு...
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					24th September 2015, 11:17 PM
				
			
			
				
					#234
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							செந்தில்வேல்,
 தங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து வன்மை எவ்வாறு வெளிப்படுகிறது பார்த்தீர்களா.. நடிகர் திலகம் உள்ளே புகுந்து விட்டால் அது தனி உதிர வகையாகி விடுகிறது. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஏற்படும் உத்வேகம் ஏதாவது ஒரு கலையில் அவனை அல்லது அவரை அல்லது அவளை மிகச் சிறந்த வகையில் பரிமளிக்க வைக்கிறது. அவ்வாறுள்ள போது தாங்களோ பல்துறை வித்தகராக பரிமாணம் எடுத்து வருகிறீர்கள்.
 
 தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
 
 லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் தலைவர் மிக அழகாக் தோற்றமளித்திருப்பார். சி.க. சார் சொன்னது போல், கோட் அணியாமல் இருந்திருந்தால் இன்னும் அழகாய் காட்சி தந்திருப்பார். எந்த பிரகஸ்பதியோ அவரை இந்த மாதிரி காட்சிகளில் சில படங்களில் கோட்டுப் போடவைத்து, கவனத்தை சிதறடிக்க வைத்து விட்டார்.
 
 என்றாலும் இப்பாடல் காட்சியில் தலைவரின் ஸ்டைலே தனி.
 
 தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					24th September 2015, 11:28 PM
				
			
			
				
					#235
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Half Ticket / Half Saree songs!
 தாவணி லாவணியும் அரை நிஜார் பேஜாரும் !!
 
 
	
		
			
			
				குழந்தைப் பருவத்தில் என்ன டிரஸ் போட்டாலும் (போடாவிட்டாலும்?!) ஆணோ பெண்ணோ அழகுதான் ! 
அதே ரெண்டுங்கெட்டான் பருவத்தில் ஆடையமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே அரை டிரவுசராகவும் தாவணியாகவும் மாறும்போது பெண்ணுக்கு அழகு ஏறுகிறது .....பையனுக்கு ?!
 
நிச்சயதாம்பூலம் படத்தில் நடிகர்திலகம் ஜமுனாவின் இளமைப் பருவத்தை மனதில் கொணர்ந்து பாடும் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா  ....முதல்.. 
அட்டகத்தியில் வரும் ஆடி போனா ஆவணி.... 
தாவணி வரை பருவப் பெண்டிரின் உடையழகு வர்ணிக்கப்படுகிறது..என்ன செய்ய...?! 
கால நாகரிக மாற்றங்கள் பாவாடை தாவணியை முற்றிலும் ஒழித்து சூரிதார் பக்கம் திரும்பியதும் ஒரு பாதுகாப்பு வசதி நன்மை கருதியே !
 
அரை டிக்கட்டுகளின் அரை டிரவுசரும் மாற்றங்களை அடைந்து அறுபது வயது பெருசுகளும் வெளிநாட்டுக்காரர் போல ஸ்டைலாக போடுமளவு இருக்கிறது நாகரிக முன்னேற்றம் !!
 
ராமன் எத்தனை  ராமனடி, தங்கப்  பதக்கம், வசந்த மாளிகை படங்களில் நடிகர்திலகம் துணிந்து அரை டிரவுசர் போட்டு    வருவார் !! காதல் மன்னரும் தனது 
பங்குக்கு தேன் நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படங்களில் களத்தூர் கண்ணம்மா கமலஹாசன் ரேஞ்சில் அரைடிரவுசர் போட்டு கலக்குவார்!!
 
நான் படத்தில் ரவிச்சந்திரன் ரோசாப்பூ ரவிக்'கிக்'காரியில்  சிவகுமார்.....
			
		 
 
 
 
 
 Part 1 : Half Trouser songs!!
 காதல் மன்னர் Vs காதல் இளவரசர் !
 
 காதல் மன்னரின் lake water surfing சாகசம் எழில் கொஞ்சும்   மச்சகன்னி  வைஜயந்தியுடன்!
 
 
 காதல் இளவரசரின் அரைடிக்கட் பாலபருவம் !
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 25th September 2015 at 12:18 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					25th September 2015, 01:36 AM
				
			
			
				
					#236
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							செந்தில் ஜி,
 
 அருமை அருமை. உங்கள் எழுத்து வளம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
 
 போற போக்கை பார்த்தா வாசுஜியையே மிஞ்சி விடுவீர்கள் போல
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
	 
- 
	
			
				
					25th September 2015, 02:49 AM
				
			
			
				
					#237
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!
 
 
	
		
			
			
				திரிகளின் இரும்புக்கை எழுத்து மாயாவி திரைப்பாடல்களின்  அக்குவேறு ஆணிவேரிஸ்ட் திரித்துவத்தின் வாஸ்து வாசு சாருடன்(அவரது தம்பியுடன்)  அவர் வருகையால் குளிர்ந்த கோவை மாநகரில் எழுத்துக்களின் இளம்துருக்கியர் அரிமா செந்தில்வேல் மற்றும் நடிகர்திலகத்தின் பற்றுமிகு மருத்துவர் கனவான் டாக்டர் ரமேஷ் பாபுவுடன் அளவளாவிய இனிய பொன்மாலைப் பொழுது!! 
 
 உள்ளங்களையும் குளிர்வித்து  நடிகர் திலகம் புகழ் பாடும்  உணர்வுகளையும் ஒளிர்வித்தமைக்கு நன்றிகள் நன்றிகள்....நண்பர் வாசுஜி! Unforgetable moment with ever lingering memories!!
 
 with regards,
 
 senthil
 
 
 இப்போது இப்படிப் பாடத் தோன்றுகிறது !
 
 
 
 இன்னும் பத்து வருடங்கள் கழித்து  இப்படிப் பாடுவோமோ?!
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 25th September 2015 at 03:18 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					25th September 2015, 04:47 AM
				
			
			
				
					#238
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  sivajisenthil  
 24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!! 
 
 
 Just talk. No dinner ? Tamilnadu is changing ! Tamilnadu is changing !  
 
 
 
 
				
				
				
				
					" I think there is a world market for may be  five computers".  IBM Chairman Thomas Watson in 1943. 
 
 
 
 
 
- 
	
			
				
					25th September 2015, 05:41 AM
				
			
			
				
					#239
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							செந்தில்வேல் ஜி..
 
 கலக்கோ கலக்ஸ்...  இது போன்ற மனம் மயக்கும் திறனாய்வுகளை கொண்டு வந்து கொட்டுங்க என்று வேண்டுகிறோம்.
 
 கோவையில் நடந்த கோலாகல சந்திப்பில் அலசப்பட்டு வெளிவந்த பாடல்கள் பற்றிய தொகுப்பை எதிர்பார்க்கிறோம்.
 
 வாத்தியாரையா... தமிழகத்தில் ஏழரை போன பிறகுதான் டின்னர்.. ( நான் ஏழரைனு சொன்னது  நேரத்தைத்தான் )
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					25th September 2015, 07:25 AM
				
			
			
				
					#240
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							மதுஜி/ராஜ்ராஜ்ஜி 
 டின்னெர் என்று சொல்ல முடியாது    இரண்டுங்கெட்டான் நேரம்...அன்னபூர்ணாவில் சுவீட் காரம் காபிதான்! வாசுவுக்கு அதிக நேரமில்லை....பிளாஷ் விசிட்....!
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
Bookmarks