Page 239 of 401 FirstFirst ... 139189229237238239240241249289339 ... LastLast
Results 2,381 to 2,390 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2381
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Today 10.00pm Watch Jmovie


  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2382
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள் !

    இன்று முதியோர் பாதுகாப்பு தினமும் கூட!!

    ஆலமரம் போல விழுதுகளுடன் வேரூன்றி நிலைத்து நிற்க எடுத்துக்காட்டான கூட்டுக்குடும்ப வாழ்வியலை வாழ்ந்தே காட்டியவர் நடிகர்திலகம் !!
    பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்பதை வியட்நாம் வீடு விளங்கவைத்தது !
    முதுமைப் பருவத்திலும் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது என்பதை எங்க ஊர் ராஜாவாக எடுத்துரைத்தார்!
    சிறகு முளைக்கும் பறப்பது இயல்பாயினும் முதுமையிலும் கௌரவத்தை நிலைநாட்டினார் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாக!!


    நான் பெற்ற செல்வம் நலமான செல்வமே ..நான் அவனுக்காக உழைத்து சம்பாதித்து படிப்பித்து அவனை உயர்த்தும் வரை.....



    வயதாகி விட்டால் ...அவனும் தனிக்குடும்பஸ்தனாகி விட்டால்....
    தென்னையைப் பெத்தா இளநீரு ..பிள்ளையைப் பெத்தா கண்ணீரே!
    முதியோரை இல்லத்தில் வைத்திராது முதியோரில்லத்திற்கு அனுப்பி வைக்கிறதே கல்மனம் !!

    Last edited by sivajisenthil; 1st October 2015 at 06:01 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #2383
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    திரு வாசு , மிக பழைய அறிய தகவல் அருமை
    Vazga Sivaji pugaz

  7. #2384
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    வாழ்க சிவாஜி புகழ்
    Vazga Sivaji pugaz

  8. #2385
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    செந்தில்வேல் சார்,

    மிக மிக அற்புதமான, அபூர்வமான ஆவணங்கள். திகட்ட திகட்ட தந்துகொண்டிருக்கிறீர்கள். (நடிகர்திலகத்தின் ஆவணங்கள் என்றைக்கு திகட்டியது?).

    மிக்க நன்றி.

    (ஒரு வேண்டுகோள்: உங்கள் அபூர்வ ஆவணங்களில் உங்கள் பெயரை 'வாட்டர்மார்க்' செய்து பதியுங்கள்)

  9. Likes Russellbzy liked this post
  10. #2386
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Writter Akilan son Mr. Akilan Kannan Face book,

    நடிகர்திலகம் நமக்குக் கூறாமல் கூறியதென்ன ?
    சாதாரணக் குடும்பத்தில் பிறந்து நாடக நடிகராகப் பெரும் பாடு பட்டுப் பின்னர் திரையுலகப் பிரவேசத்தில் முதலில் மறுதலிக்கப் பெற்றுப் பின் உலகம் போற்றும் நடிகராக உயர்ந்து நின்றார் சிவாஜி கணேசன் .
    அவரது பாதிப்பில்லாத தமிழ்க் கலைஞர்களே இல்லை எனலாம் . ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிக் கலைஞர்கள் இவரது திறமையைக் கண்டு வியந்தது பல நேரங்களில் நிகழ்ந்தது .
    அவரைப் பார்த்துப் பிறர் கற்கும் ஆசை கொண்டிருப்பினும் , கற்கும் ஆசை இறுதிவரை இருந்தது அவரிடம் !
    அர்ப்பணிப்பு , அக்கறை , ஈடுபாடு , அயரா உழைப்பு , நம்பிக்கை , இவற்றின் விளக்கமே சிவாஜியின் வாழ்க்கை நமக்குக் கூறாமல் கூறும் செய்தியாகும் !
    எந்த வேடமேற்றாலும் அதன் அடி முதல் நுனிவரை பயணிக்கும் திறன் கொண்ட மகா கலைஞனாகத் திகழ்ந்தவர் சிவாஜி .
    அவரும் அரசியல் நாட்டம் கொண்டார் . தனது அரசியல் ஈடுபாடு அங்கே முழுமையாக அங்கீகரிக்கப் படாதது கண்டு இயல்பாய் ஒதுங்கினார் . மக்கள் மீதும் தேசத்தின் மீதும் அக்கறை கொண்டிருந்தார் .
    வந்த வழியையும் உதவிய உள்ளங்களையும் மறவாது போற்றினார் .
    காமரஜர் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்தார் .
    அவர் ஒரு நல்ல வாசகரும் கூட .
    நாவல்களை விரும்பிப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தார் சிவாஜி .
    " அகிலனின் எழுத்தில் காதல் கொண்ட கூட்டத்தில் நானும் ஒருவன் . ' பாவை விளக்'கைத் திரைப்படமாக்கி அதில் நடித்தேன். அவருக்குக் கிடைத்த பெருமையில் மகிழ்ச்சி கொள்கிறேன் " என்று கூறினார் சிவாஜி !
    அவரது படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வழக்கத்தில் பள்ளிக்கு மட்டம் போட்டது பலமுறை நிகழ்ந்தது !
    நாங்கள் பள்ளி , கல்லூரி முடித்து சி.ஏ ( கணக்காயர் பயிற்சி - )பயிலும் போது கிட்டத்தட்ட அப்ரெண்டீஸ்கள் நாங்கள் ஏழெட்டுப் பேர் பிளாசாவில் " பாசமலர் " இறுதிக்காட்சியில் அழாமல் இருப்பவர் , மற்ற அனைவருக்கும் எஸ்.கே.சி வாங்கித் தரப் பந்தயம் போட்டுப் பார்த்த படம் - பல்லாண்டுகளுக்குப் பிறகும் பல பக்குவங்கள் வாழ்வில் பெற்ற பின்பும் அனைவருமே தோற்றோம் !
    அவரை நான் நான்கைந்து முறை நேரில் கண்டிருக்கிறேன் ; குலமகள் ராதை படப்பிடிப்பு , வேங்கையின்மைந்தன் நாடக அரங்கேற்றம் , எங்கள் இல்லத்திற்கு அவர் வருகை தந்தது , எனது திருமண வரவேற்பிற்கு வந்து நிறைய நேரம் இருந்து வாழ்த்திச் சென்றது எல்லாம் மறக்க இயலா நிஜ நிகழ்வுகள்.

  11. Likes Russellbzy liked this post
  12. #2387
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Bala Sivaji's Photos, from Vikatan.




  13. Likes J.Radhakrishnan liked this post
  14. #2388
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Today's Dinamalar,

    திரைப்பட வாழ்க்கையில், 'சக்சஸ்' என்ற வார்த்தையை பேசி, தடம் பதித்து, தன் வாழ்நாள் முழுவதும் வெற்றிப்பயணம் மேற்கொண்டு, தமிழகம் தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டுக் குள் வைத்திருந்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
    வி.சி.கணேசமூர்த்தி என்ற சிவாஜி கணேசன் 1.10.1928ல் பிறந்தார். 73 ஆண்டுகள் வாழ்ந்ததில், சினிமாவும், ரசிகர்களும் தான் அவர் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த விஷயங்கள். 1952ல் பராசக்தி திரைப்படத்தில் துவங்கி காதல், வீரம், சோகம் என அனைத்து வகை முகபாவங்களிலும் தனி முத்திரை பதித்த முன்னோடி."தன்னுடைய கைவிரல் அசைவு மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத என்னையும் பார்க்கத் துாண்டிவிட்டவர் சிவாஜி," என ராஜாஜியும், "சிவாஜியை மிஞ்சிய ஒருவரை பார்ப்பது அரிது," என நேருவும், "சிவாஜி போன்ற கலைஞர்கள் பிறந்திருப்பது இந்நாடு செய்த தவப்பயன்," என இந்திராவும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.

    நவரச திலகம், கலைகுரிசில், பத்மஸ்ரீ, சிம்மக்குரல் என்ற பட்டங்களை பெற்ற ஒரே நடிகர் இவராக தான் இருக்க முடியும். 'பராசக்தி' முதல் 'பூப்பறிக்க வருகிறோம்' வரையான படங்களில், 100க்கும் மேல் வெள்ளி விழாவை கண்டன.1959ல் வெளிவந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம், ஓர் வரலாற்று காவியம். 1962ல் உலக திரைப்பட விழாவிற்கு எகிப்து தலைநகர் கெய்ரோவில் வெளியிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'திருவிளையாடல்'.இதுதவிர, திருமால் பெருமை, திருவருட்செல்வர், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன், ஆலயமணி, பாலும் பழமும், நவராத்திரி, பாசமலர், சிவந்தமண், புதிய பறவை ஆகிய திரைப்படங்கள் அவரது நடிப்பை உலக அரங்கிற்கு எடுத்து சென்றன.1967ல் நடந்த பொதுத் தேர்தலில், காங்., கடும் தோல்வியடைந்தது. காமராஜரும் விருதுநகரில் தோல்வியை தழுவினார். அப்போது, கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டியவர் சிவாஜி. தமிழகத்தின் அனைத்து தெருக்களிலும் கூட்டங்கள் நடத்தி கட்சிக்காக அரும்பாடு பட்டதை காங்கிரஸ்காரர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

    2001 ஜூலை 21ல் மறைந்தார். அப்போது, லட்சக்கணக்கான ரசிகர்கள் அடைந்த வேதனையை அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது. நீண்ட நெடிய வரலாறு படைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ், தமிழகம் தாண்டி உலக திரைப்பட வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.(இன்று நடிகர் சிவாஜி பிறந்த நாள்) - சிவசுந்தரம், மதுரை

  15. Likes Russellbzy, Russellmai liked this post
  16. #2389
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From today's Tamil The Hindu,



    இன்று சிவாஜிகணேசன் 87-வது பிறந்த நாள்

    நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித் துள்ளார்.

    சிவாஜியின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இவ் வேளையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது தித்திக்கும் செய்தி!

    ஒருநாள் எனக்கு சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை அவர் அருகில் உட்கார சொன்னவர், “ என்டிடிவி என்னைப் பேட்டி காணப் போகி றது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நான் தமிழில் பதில் சொல்லப் போகிறேன்” என்றார். “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே பின் ஏன் தமிழில்?” என்றேன். “அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியான பதில் தர விரும்புகிறேன். அதற்கு என் தாய்மொழிதான் சிறந்தது. உனக்குத்தான் ஆங்கிலமும் தமி ழும் தெரியுமே, நான் சரியாக பதில் சொல்கிறேனா… என்று நீதான் பார்க்கவேண்டும்” என்றார். கச்சித மாக இருந்தன அவரது பதில்கள்.

    கற்பனையில்

    ஒரு கதாபாத் திரத்தை உள்வாங்கிக் கொண்டு, அதை இயக்குநர் விரும்பும் வகையில் நடிப்பது எவ்வளவு பெரிய விஷயம்! இதை அவரிடமே ஒருமுறை கேட்டேன். அப்போது அந்த அறையில் நானும் அவரும் மட்டுமே இருந்தோம். உடனேயே ஒரு கதாபாத்திரத்தை சொல்லி, அந்தப் பாத்திரம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் எப்படி நடிக்கும் என்று எனக்கு நடித்துக் காட்டினார். அவரது விஸ்வரூப தரிசனத்தை அங்கே நேரில் பார்த்தேன்... ரசித்தேன்... பிரமித்தேன். தான் ஒரு உலகப் புகழ்பெற்ற கலைஞன் என்பதையெல்லாம் மறந்துவிட்டு என்னை மதித்து எனக்காக மட்டுமே நடித்து காண்பித்தார்.

    ஒருமுறை

    ஒரு இயக்குநர் சிவாஜியின் ஒரு பக்க (side - profile) முகத் தைப் படம் பிடிக்க விரும்பினர். படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்த சிவாஜி. கேமரா எங்கு வைக்கப்பட்டுள்ளது என்று பார்த் தார். பின் இயக்குநரை அழைத்து காட்சியைப் பற்றிக் கேட்டறிந்தார். பின் இயக்குநரிடம் கேமராவை எதிர்பக்கமாக வைக்கச் சொன் னார். “நீங்கள் விரும்பும் சைடு புரோஃபைலும் கிடைக்கும். எனக் குக் கொடுக்கப்பட்ட வசனத்தில் முக்கியமான பகுதியை கேமரா வைப் பார்த்துச் சொன்னால் இன் னும் பவர்ஃபுல்லாக இருக்கும்” என்றார்.

    அதுமட்டுமல்லாமல் அவரது வலது பக்க முகத்தை விட, இடது பக்க முகம் சரியாக இருக்கும் என்றும் சொன்னார்.

    ஆனால், இந்த மாதிரி ஆலோ சனைகளை எல்லோரிடமும் இவர் சொல்ல மாட்டார். பெரிய இயக்குநர்களான ஏ.பி.நாகராஜன், பீம்சிங் போன்றவர் களின் படங்களில் நடிக்கும்போது, அவர்கள் கையில் இவர் ஒரு பொம் மையைப் போல், அவர்கள் சொல் வதை செய்துவிட்டு வந்துவிடுவார்.

    நடிகர் திலகத்தின் நினைவாற் றல் அபாரமானது. ‘வியட்நாம் வீடு’ கதையை மேடை நாடகமாக போட முடிவு செய்து தேதியும் அறி வித்துவிட்டார். நாளை மறுநாள் நாடகம் நடக்க வேண்டும். தொடர்ந்து சிவாஜிக்குப் படப் பிடிப்பு.

    அதனால் படப்பிடிப்புத் தளத் துக்கே வந்து நாடக வசனத்தை நாடக கதாசிரியர் சுந்தரம் (இவர் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரம்' என்றழைக்கப்பட்டார்) சிவாஜிக்கு படித்துக் காட்டுவது என்று முடிவானது.

    படப்பிடிப்புக்கு இடை யிடையே சுந்தரம் நாடக ஸ்கிரிப்டைப் படிக்கப் படிக்க அதனை சிவாஜி உள்வாங்கிக் கொண்டார்.

    ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் ‘பிரிஸ்டீஜ் பத்மநாபன்’ஆகவே மாறியிருந்தார் சிவாஜி. எப்படி இவரால் ஒரு நாளைக்குள் அவ் வளவு வசனத்தையும் மனப்பாடம் செய்ய முடிந்தது என்று வியந்து போனார்கள் அந்தக் குழுவினர்.

  17. Likes Russellbzy, Russellmai liked this post
  18. #2390
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    செந்தில்வேல் சார்,

    மிக மிக அற்புதமான, அபூர்வமான ஆவணங்கள். திகட்ட திகட்ட தந்துகொண்டிருக்கிறீர்கள். (நடிகர்திலகத்தின் ஆவணங்கள் என்றைக்கு திகட்டியது?).

    மிக்க நன்றி.

    (ஒரு வேண்டுகோள்: உங்கள் அபூர்வ ஆவணங்களில் உங்கள் பெயரை 'வாட்டர்மார்க்' செய்து பதியுங்கள்)
    "உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி."


    வாட்டர்மார்க் இட்டால் அதை பார்ப்பதில் சற்று தெளிவின்மையும்,மேலும் எல்லோரும் பயன்படுத்த யோசிப்பர். நடிகர்திலகத்தின் போட்டோவை பேனரிலோ.,நோட்டீஸிலோ,
    சிறப்புமலர் புத்தகம் அல்லது வேறு ஏதாவது பப்ளிசிட்டிக்கோ பயன்படுத்த உபயோகமாகாது.அப்படி உபயோகமாகாத ஒன்றில் வாட்டர்மாக் பயன்படுத்துவதில் என்ன பெருமை?
    நடிகர்திலகத்தின் புகழ் பரவ வேண்டும்.அது ஒன்றுதான் இப்போது உள்ள பெரும்பான்மையான சிவாஜி ரசிகர்களின் விருப்பம்.எனதும் அது போல்தான்.
    எல்லோரும் பார்க்க மட்டுமல்ல தேவைப்படும்போது பயன்பட
    வேண்டும்.அப்போதுதான் ஆவணங்களுக்கு மதிப்பு.
    "நடிகர்திலகத்தின் கொடையை
    நமதாக்கலாகாது."

  19. Likes Russellbzy, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •