Page 141 of 401 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1401
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Pattukottai's lyrics and MGR


    MADURAI: At a time when all prominent political leaders would have completed their whirlwind election campaign tour by Monday evening, the focus automatically shifts to April 13. The day carries so much significance as it is going to decide the fortunes of major political parties of Tamil Nadu.

    One really wonders how many would remember that April 13 was the birthday of one of Tamil Nadu's leading poet and lyricist, the inimitable people's poet Pattukkottai Kalyanasundaram, who had penned some wonderful philosophy-tinged, radical lyrics and helped former Chief Minister M. G. Ramachandran's charisma transcend across time space conundrums.

    MGR once referred ‘Pattukottai' as the most crucial person in catapulting his iconicity and took him to the masses. In fact, in one of MGR's iconic films in the late 50s, Nadodi Mannan, which was produced and directed by MGR himself under the banner Emgeeyar Pictures, ‘Pattukottai' had penned a song (Summa Kedandha Nilathai Kothi) which not only speaks about everyday travails of the peasantry and working classes, but also gives hope to them through the protagonist himself singing Naane Poda Poaren Sattam Podhuvil Nanmai Purindhidum Thittam Nadu Nalam Perum Thittam (I am going to draft laws that will bring welfare in general and also for the nation).

    Songs like these, with their reproducibility and wider reach, gave the most important fillip to his popularity and “ideals.”These songs became the most effective form of communication with the masses and gave hope to his fans and followers.

    Robert L. Hardgrave, the American scholar who studied his films and iconicity, has said, “What I believe is the most important aspect, is that MGR provided hope to a section of very poor and powerless people. Through his films, and various other advertising means, he appeared as somebody they felt they could trust and rely on, somebody that stood on their side.”

    The songs of ‘Pattukottai' like Thayaththu Thayaththu from Mahadevi and Seermevum Gurupadham from Chakravarthi Thirumagal were rendered in dialogue mode and had so much of philosophical overtones with radical and atheistic tinges.

    More songs of ‘Pattukottai' like Kuruku Vazhiyil Vazhvu Thedidum Kuruttu Ulagamada, Yetramunna Yetram Idhile Irukkudhu Munnetram, Chinna Payale Chinna Payale from Arasilangkumari and Thirudathe Papa from Thirudathe stood the test of time and made him to be identified as a revolutionary actor.

    Not only MGR, Chief Minister M. Karunanidhi said that if death had not conquered him early, he would have rendered even more number of honey-sweet songs.

    “His heart was a Tamil garden, where both self-respect theories and communist ideals bloomed.” It was Mr. Karunanidhi who built a memorial for the radical poet who died young.

    MGR's charisma has always been a burning topic for social scientists who have tried to analyse the various ways and forms that were involved in the “construction” of his iconicity. Political Scientist Atul Kohli, for example, describes a scene from Madurai in 1984.

    The AIADMK in Madurai was virtually indistinguishable from the name and image of MGR. City streets were dominated by larger-than-life posters of MGR, clad in his Tamil ‘lungi' and wearing the dark sunglasses that became his political trademark.

    Gaudy posters, garlanded pictures, loud music from MGR's old films, and tapes of MGR's voice on loudspeakers were encountered throughout the city.

    At meetings, he addressed the audience as “my blood brothers and sisters”, and managed to create an atmosphere of trust and friendship; his film image transcended various boundaries and still is ruling the roost among the masses.

    courtesy - the hindu

  2. Thanks Russellrqe thanked for this post
    Likes ujeetotei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1402
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    9.10.1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் எங்கள் தங்கம் - மிகப்பெரிய வெற்றி படம் .

    மக்கள் திலகம் வித்தியாசமான வேடத்தில் நடித்த படம் .

    மக்கள் திலகம் அவர்களின் இரண்டு மாறுவேட நடிப்பு அருமை

    1. ஒரு நாள் கூத்துக்கு மீசை யை .........

    2. விண்வெளி பயணம் பற்றிய பாடல் ....


    இனிமையான பாடல்கள் .

    தங்க பதக்கத்தில் மேலே ......

    நான் அளவோடு ரசிப்பவன் ....

    டோன்ட் டச் மீ மேடம் எக்ஸ் .....

    நான் செத்து பிழைச்சவண்டா ....

    மக்கள் திலகம் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் வெளிநாட்டில் இருந்தபோது வந்த படம் .

    மேகலா நிறுவனத்தை வாழவைத்த படம் . இன்றும் அமுதசுரபியாக திகழும் எங்கள் தங்கம் .

  5. Likes ujeetotei, Russellrqe liked this post
  6. #1403
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1972 - அக்டோபர் புரட்சி - மக்கள் திலகத்தின் புகழின் இமாலய வெற்றி


    புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கிய செய்தி அறிந்ததும் அரசியல் - திரை உலக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் . ரசிகர்கள் மிகவும் கொதித்து எழுந்தார்கள் . சாதாரண பொது மக்களும் அடிமட்ட ஏழைகளும் அதிர்ந்து போனார்கள் .
    மக்கள் திலகம் அவர்கள் எந்தவித ஆத்திரம் இல்லாமல் மக்களையும் தன்னுடைய ரசிகர்களையும் நம்பி அடுத்த கட்ட நடவடிக்கைகக்கு தயாரானார் . மக்கள் திலகத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய வலிமையான ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் - சட்ட மன்ற - பாராளுமன்ற
    உறுப்பினர்கள் ஒருவர் கூட மக்கள் திலகத்திற்கு ஆதரவாக கட்சியை விட்டு வெளியே வரவில்லை

    மக்கள் திலகத்திற்கு ஆதரவாக தமிழ் நாடே பொங்கி எழுந்தது . சாலையில் சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டு சென்றதை நாடு முழுவதும் ஆதரவு அலை வீசியதை அன்றைய நாளேடுகள் - வார ஏடுகள் இந்திய - மற்றும் வெளிநாடுகளில் செய்தியாகவும் எம்ஜிஆரின் மாஸ் பற்றிய கட்டுரையாகவும் வந்தது .
    ஒரு நடிகருக்கு ஒரு மாநிலத்தில் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு - ரசிகர்கள் செல்வாக்கு உள்ளதை வைத்து எம்ஜிஆர் - விரைவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போகிறார் என்று
    நாடே உணர்ந்து கொண்டது .

    மக்கள் திலகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகுவதை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை . சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .

    எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் மிரட்டப்பட்டார்கள் . விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டார்கள் . ரசிக மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் - பொய் வழக்குகள் போடப்பட்டது .

    மக்கள் திலகம் எதற்கும் அஞ்சவில்லை . நம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டார் .
    மக்கள் திலகத்தின் இதய வீணை படம் வெளிவருவதில் [6.10.1972 வரவேண்டிய படம் ] தள்ளி போடப்பட்டது .
    அன்றைய சூழ் நிலையில் இதயவீணை படத்திற்கு மேலும் ஒரு பாடல் படமாக்கப்பட்டது .
    ஒரு வாலுமில்லே .. நாலு காலுமில்லே என்ற பாடல் படமாக்கப்பட்டு 20.10.1972 அன்று வருவதாக
    விளம்பரம் வந்தது .
    9.10 -1972 முதல் 16-10 1972 அரசியல் உலகிலும் திரை உலகிலும் ஒரு வித பரப்பரப்பான சூழ் நிலை
    நிலவியது . ஒரே கேள்வி ..... எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார் ......

  7. Likes Russellrqe liked this post
  8. #1404
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அக்டோபர் 10 – ஆம் நாள்!- 1972

    இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

    ”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

    கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்ப்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாய் இருக்கும்.

    அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

    கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?

    எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

    உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைஞருக்குக் கட்டுபட்டவர்கள்தாம் . இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

    தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

    ”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

    அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

    ”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

    அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

    கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

  9. Thanks Russellrqe thanked for this post
    Likes ujeetotei liked this post
  10. #1405
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்
    ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.

    ஐம்பது,அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.

    இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும்.கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறிவிடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும்,போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
    தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகன் வேடம் போட்டவர்.பொருத்தமாயிருக்கும். காதல் வாகனம் படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண் வேடம்!

    Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.
    தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமா?ஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா? அவர்சினிமா நடிப்பைக் கைவிட்டபிறகுகூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?
    COURTESY - RP RAJANAYAHAM

  11. Thanks Russellrqe thanked for this post
    Likes ujeetotei liked this post
  12. #1406
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes ujeetotei, Russellrqe liked this post
  14. #1407
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத்

    எங்கள் தங்கம் 45 வருடங்கள் நிறைவு
    1972 - அக்டோபர் எம்ஜிஆர் புரட்சி நினைவலைகள்
    எம்ஜிஆரின் பேரழகு பற்றிய கட்டுரை
    பட்டு கோட்டையார் நினைவு தினம்
    மிகவும் அருமையான பதிவுகள் . குறிப்பாக 1972ல் மக்கள் திலகம் கட்சியை விட்டு நீக்கிய பின் மக்கள் வெள்ளம் அவரை அரணாக நின்று ஆதரவு தந்த அந்த இனிய நாட்கள் மறக்க முடியாது .

  15. #1408
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    CHENNAI - CHITHRA - 1970

  16. Likes ujeetotei liked this post
  17. #1409
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    It is discomfort to see that our thread is moving slowly as many had withdrawn from posting. On behalf of others I also request the admins to reconsider the ban imposed on Mayil Raj.

  18. #1410
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •