Page 160 of 274 FirstFirst ... 60110150158159160161162170210260 ... LastLast
Results 1,591 to 1,600 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #1591
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    முதல் மரியாதையில் மலைச்சாமிதான் எல்லாம். மேலும் அதன் தரமே வேற. ஹாலிவுட் பட தழுவல் இல்லாத தமிழ் கலாச்சாரத்தை பறை சாற்றும் உலகத்தரம் வாய்ந்த படம் அது. தேவர்மகனை அப்படியெல்லாம் சொல்லிட முடியாது. சும்மா ரெண்டையும் கலந்து விட்டால் ரெண்டும் ஒண்ணாகிவிடாது. தேவர் மகனில் சிவாஜி நடிக்காமல் இருந்து இருந்தாலும் சிவாஜிக்கு ஒரு இழப்பும் இல்லை. முதல் மரியாதையை அப்படி எல்லாம் சொல்ல முடியாது!
    தமிழ்த் திரையுலகில் "தேவர் மகன்" சிறந்ததொரு காவியப் படைப்பாக இருப்பதனால்தான் நமது P _ R இந்த அளவுக்கு பகுப்பாய்வு செய்திருக்கிறார். complicateur உட்பட. சிவாஜிக்கான திரிகளில் இதை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்கள். வாசிக்கணும்னு தோனுச்சின்னா வாசிக்கலாம். அதுகூட Optionதான் தமிழ். இந்த பதில் கூட உங்களுக்கு மட்டுமே அல்ல. இப்பதிவுகளை இதுவரை வாசிக்காதவர்களுக்கு வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற முனைப்பில்.

    ** பெரிய தேவர் - நடிப்புக்கலையின் உச்சம் ...ஒரு அலசல் ** - பிரபுராம்

    பெரிய தேவர் - 1
    பெரிய தேவர் - 2
    பெரிய தேவர் - 3
    பெரிய தேவர் - 4
    பெரிய தேவர் - 5
    பெரிய தேவர் - 6
    பெரிய தேவர் - 7
    பெரிய தேவர் - 8
    பெரிய தேவர் - 9

    என்னை வென்ற நடிகர்திலகம் - complicateur
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Thanks Russellbba, avavh3 thanked for this post
    Likes vidyasakaran, joe liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1592
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    -deleted with warning-

  5. #1593
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ragu Raj View Post
    கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #1 (http://www.vikatan.com/news/article.php?aid=53355)

    எப்போது பார்த்தாலும் கண் விலகாமல் ஆச்சர்யம் தரும் யானை, ரயில், அருவி, குழந்தை போல எனக்கு ஆச்சர்யம் தரும் இன்னொரு விஷயம் கமல். பார்வையற்றவன் யானையின் உருவத்தை சொல்ல முயற்சித்தது போல முயற்சி செய்திருக்கிறேன்.

    தமிழ் சினிமா 75-ல் இருந்து 80-களின் பெரும்பகுதி வரை 'கரகர' கரம் மசாலாவாகவே இருந்தது. இதில் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள் நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சினிமா சீனியர்களின் ஓய்வுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மசாலா மணத்தை குறைக்க முற்பட்டதில் முதலிடம் கமலுக்கு கொடுக்கலாம். ரஜினிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த 'முள்ளும் மலரும்' மூலமாக பாலுமகேந்திராவை தமிழுக்கு கொண்டு வந்தது கமல் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுவரை டாக்கியாக இருந்த சினிமாவை மூவியாக மாற்ற முயற்சித்தவர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா. அவர்களை ஒத்த அலைவரிசையில் இருந்தவர் கமல். "கமல் மலையாள படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே தமிழ் சினிமாவின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருந்தது. இத்தனைக்கும் அப்போது அவர் வயது 25க்குள் இருந்தது" என எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

    கமல் ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும், பின்பு ஆக்சனுக்கும் மாறியவர்தான். நிறைய மசாலா படங்கள் மூலம் வெற்றியை சுவைத்தவர்தான். 'குரு', 'சகலகலா வல்லவன்' அதில் சிகரம் என சொல்லலாம். தன்னுடைய 100வது படமான 'ராஜபார்வை'யில் நடித்தபோது கமலின் வயது 25. தன்னுடைய 100வது படம் என்பது ரிஸ்க் இல்லாமல் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள். (இதில் விதிவிலக்காக ஜெயித்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகாந்த் ஆகியோர்தான். ரஜினி, சத்யராஜ், பிரபு எல்லோருக்கும் 100வது படம் தோல்விப்படங்களே). கமல் சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே 'ராஜபார்வை' என்ற தீயில் கையை வைத்தார். "ராஜபார்வைக்காக விருது வாங்கியபோது மட்டும்தான் கை 'ஜில்' என்று இருந்தது" என கமல் குறிப்பிட்டார்.

    கமலும் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே மூலம் உச்சபட்ச வெற்றியை சுவைத்தார். ஆனால், அதில் சிக்கிக்கொள்ளாமல் எழுத்தாளரை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில், சுஜாதாவுடன் இணைந்து எடுத்த படம்தான் 'விக்ரம்'. எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர் முதன்முதலில் காண்பிக்கப்பட்டது விக்ரமில்தான். ஏவுகணையின் ஆபத்தை தமிழர்கள் அறிய செய்த படம். 'ப்ளூ மேட்' டெக்னாலஜியில் உருவான முதல் தமிழ்ப்படம். ராஜஸ்தானுக்கு தமிழர்கள் சுற்றுலா சென்றுவந்தது போல் அழகாக படம் பிடிக்கபட்ட படம். சத்யராஜ் வில்லனாக நடித்த கடைசி படம் என பல விஷயங்கள் இதில் உண்டு. இயக்குனர் ராஜசேகர் இடையில் மாவீரனை இயக்க போய்விட சந்தானபாரதியும், கமலும் செய்த 'பேட்ச் ஒர்க்' படத்துக்கு செட்டாகவில்லை. இதனால் விக்ரம் தோல்விப்படமாக அமைந்தது. அதுவரை நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் போட்டிருந்தார் கமல் என்ற தகவலும் உண்டு. 'மன்னாதி மன்னன்' தோல்வி அடைந்திருந்தால் என்னவாகியிருக்குமோ, அது கமலுக்கு நடந்தது எனத்தகவல். ஆனாலும், வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை.


    தொடர்ந்து பிசியாக நடிக்க வேண்டிய சூழல், இல்லையென்றால் 'பேர் சொல்லும் பிள்ளை'யும், 'மங்கம்மா சபதமும்' வந்திருக்காது. கமலின் பேனா கமர்சியல் வெற்றி பெற்றது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்தான். மூன்று வேடங்கள், மூன்று பாடி லாங்குவேஜகள் என கமல் தன்னை வருத்தி ரசிகனை குதூகலப்படுத்திய படம். கிரேசி மோகன், கமலுக்கு 'பக்கா'பலம் ஆனார். அப்பு கேரக்டருக்கு கமல் பட்ட சிரமங்கள் ஏராளம். அதில் பின்புறமாக கால்களை கட்டிக்கொண்டு நடித்ததும் ஒன்று. அதில் அப்பு கேரக்டரை சற்று மனநிலை பாதித்தவனாக காட்டியிருந்தாலும் கூட (வில்லன் படம் மாதிரி) இந்த படம் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் திரைக்கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இப்படி மெனகெட்டிருக்க தேவையில்லை. ஆனால், ரசிகனுக்கு புதிய விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கமல் அவ்வளவு மெனக்கெட்டார் என்பதுதான் நிதர்சனம். கமல், அபூர்வ சகோதர்கள் வரையிலும், ரஜினி, பாட்ஷா வரையிலும் ரசிகர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள் என்பது தகவல். சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்.

  6. #1594
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ragu Raj View Post
    கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #2 (http://www.vikatan.com/news/article.php?aid=53355)

    கமல் 90க்கு பிறகு தன் பாதையை மாற்ற எடுத்த முதல் முயற்சிதான் 'குணா'. குணா மனநிலை பாதிக்கபட்டவன், அவனது தாய் தப்பான தொழில் செய்பவள். இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய பின்புலத்தை இவ்வளவு மோசமாக அமைத்து கொண்டதில்லை. கமல் - இளையராஜா - சந்தானபாரதி என்ற கூட்டணி வெற்றி தராமல் போனாலும், தமிழுக்கு மற்றொரு வாசல் திறந்த படம் குணா. கமல் பேனா பிடித்த படங்களின் திரைக்கதையில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதில் இரண்டாம் படம் தான் குணா. இவ்வளவு மெனக்கெடல் ஒரு படத்துக்கு வேண்டுமா என ரசிகனை பேசவைத்தது. அதுவரை வெறும் 'பைத்தியம்' என்ற உச்சரித்த தமிழ் சினிமா 'மனநிலை பாதிக்கப்பட்டவன்' என்ற சொல்லை உபயோகிக்க காரணமாயிருந்தது குணாதான்.

    அது செல்வராகவன் காதல் கொண்டேன் செய்யுமளவுக்கு வந்து நின்றது. கமல் குணாவாகவே மாறி உலவினார். ஒரு அறைக்குள்ளேயே கமல் சுற்றி சுற்றி வசனம் பேசும்போது தமிழ்சினிமாவும் சுற்றியது. அதுவரை இருந்த ஸ்டேண்டிங் காமிராக்களுக்கு விடுதலை. குணா குகைக்கு (முன்பு டெவில்ஸ் கிச்சன்) போகும் வழி மிகவும் ஆபத்தானது. ஒவ்வொருவராக பாலத்தில் சென்று அந்த இடத்தை அடைவார்களாம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கமல் அதில் சென்று நடித்தார். ஆனாலும், அது அப்படியொரு இடத்தில் படமாக்கபட்டது ரசிகனுக்கு தெரியாது. கடைசி ரசிகனுக்கும் நியாயம் செய்யவே அப்படி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சிரமத்துடன் நடித்தார். அதனால்தான் ராஜாவின் 'கண்மனி அன்போடு காதலன்'க்கு நியாயம் செய்ய முடிந்தது. இதுதான் எல்லா இளையராஜா ரசிகனின் ப்ளே லிஸ்ட்டிலும் கண்மனி இடம் பிடிக்க காரணம்.

    கமலின் பேனாவுக்கு வைரைக்கல் வைத்த படமென்றால் 'தேவர் மகன்' தான். அன்னை இல்லத்து ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அரிதாரம் பூசியதற்கு அதுவரை அவர் பெறாத சம்பளத்தை கொடுத்தார் கமல். (படையப்பாவில் ரஜினி அதை முறியடித்தார்.) பொதுவாக கமல், ரஜினி நடிக்கும் படங்களில்தான் மற்ற நடிகர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கும் என்ற தகவலும் உண்டு. குருதிப்புனலில் இயக்குனர் விஸ்வநாத்துக்கு சம்பளம் ரூ.85 லட்சதுக்கு மேல் கொடுத்தார் என்பது தகவல். கமல் தன்னை சிறந்த தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். தேவர் மகன் மூலம் 'ஃபங்க்' ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து நாயகர்களின் ரசிகர்களும் கூட பேதமின்றி 'ஃபங்க்' வைத்துக்கொண்டார்கள். பொதுவாக கமல் ஸ்டைல் செய்யமாட்டார். செய்தால் அது வெகுநாளைக்கு இருக்கும். உதாரணம், 'சத்யா' பட ரிங் இப்போது வரை காலேஜ் பசங்ககிட்ட கூட டிரெண்ட்.

    தமிழ்சினிமாவின் சிறந்த பத்து படங்களை சொன்னால் அதில் தேவர் மகனை சேர்க்காமல் முடியாது. தேவர்மகனில் சிவாஜி இருக்கும் காட்சிகளில் கமல் அடக்கியே வாசித்தார். சிவாஜி என்ற பிதாமகனை வேறொரு கோணத்தில் காட்டி ரசிக்க வைத்தார். தேவர்மகனின் வசனங்கள் இன்றும் பாடமாக படிக்க வேண்டியவை. தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களை உள்ளடக்கிய படங்களில் ஒன்று. திரைக்கதை என்ற இலக்கணத்துக்கு சரியான உதாரணம். தெற்கில் இருக்கும் ஜாதி வெறியை, பெரியவர், சின்னவர் என்ற பேதத்தை, சொத்து பிரச்சனையை, அந்த பகுதி மக்களின் வெள்ளந்திதனத்தை கண்ணாடிபோல் காட்டியது திரைக்கதை. சங்கிலி முருகன் அதற்கு உதவினார். சிவாஜியின் 'இன்னைக்கு நான் விதை போடுறேன்' வசனம் மனித வாழ்வில் பாடமாக படிக்க வேண்டிய ஒன்று. 'போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா' என்று சொல்லி தமிழர்களை விழிக்க செய்தார். தலைவாசல் விஜய், வடிவேல் போன்ற திறமையாளர்களை அடையாளம் காட்டினார். எனக்கு பிடித்த கமலின் 'எவர் கிரீன் மூவி' என்றால் அது 'தேவர்மகன்'தான்.

    தேவர் மகனுக்கு பிறகு கமல் மீதான மரியாதை கூடிய படம் 'மகாநதி'. கிருஷ்ணசாமியாக கமல் வாழ்ந்தார். பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களை, அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டிய படம். 'சோனாகாஞ்சி' என்ற வார்த்தையை கடைசி தாய்மாருக்கும் கொண்டு போய் சேர்த்தார். ஒரு தவறான தொழில் செய்யும் பெண்ணின் காலில் விழுந்து அழுது தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை உடைத்து 'தான் ஒரு நடிகன் மட்டுமே' என்று கமல் ஊருக்கு உணர்த்தினார். சகமனிதனின் கோபம் என்ன செய்யும் என காட்டினார். எனக்கு தெரிந்து பெண்களோடு சேர்ந்து, ஆண்களும் கண்ணீர் சிந்தியபடி பார்த்தபடம் 'மகாநதி' தான். அதில் முதன்முதலில் 'ஆவிட்' எனும் கம்ப்யூட்டர் எடிட்டிங்கை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். புதுமையை தமிழ் சினிமாவில் புகுத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என விரும்பினார். இந்த யானையை பற்றி எழுதும்போது அன்பே சிவம், ஹேராம் இரண்டையும் எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் அதை தொட்டால் இந்த கட்டுரைக்குள் அடக்க முடியாது. அதற்கென ஒரு பதிவு எழுதனும்.

  7. #1595
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    தேவர் மகன் படமே என் மானசீக குருவுக்கு நான் போட்ட சல்யூட் -ன்னு நம்ம தல சொன்னாரு ..அது நூத்துக்கு நூறு உண்மை .. அது நம்ம திலகத்துக்கு மட்டும் போட்ட சல்யூட் அல்ல , தமிழ் திரையுலகுக்கே போட்ட சல்யூட்!

    எத்தனை சிண்டு முடிஞ்சாலும் சிவாஜி - கமல் என்பது பிரிக்க முடியாதது .

    சிவாஜியை மதிக்காத கமல் ரசிகனும் , கமலை தங்கள் ஆளாக உணர முடியாத சிவாஜி ரசிகனும் போலி என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. Likes NOV liked this post
  9. #1596
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post

    சிவாஜியை மதிக்காத கமல் ரசிகனும் , கமலை தங்கள் ஆளாக உணர முடியாத சிவாஜி ரசிகனும் போலி என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து.
    உங்க தாழ்மையான கருத்துப்படி..எம்ஜிஆர்-கமல் விசிறிகள், சிவாஜி-ரஜினி விசிறிகள் எல்லாம் போலியா? சரி இருந்துட்டுப் போகட்டும்!
    This is a very big world!

  10. #1597
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    உங்க தாழ்மையான கருத்துப்படி..எம்ஜிஆர்-கமல் விசிறிகள், சிவாஜி-ரஜினி விசிறிகள் எல்லாம் போலியா? சரி இருந்துட்டுப் போகட்டும்!
    உங்கள் லாஜிக் படி சிவாஜியை மதிப்பதென்றால் எம்.ஜி.ஆரை மதிக்கக்கூடாது , கமல் நம்மவர் என்றால் ரஜினி நம் எதிரி ? சரி ..இருந்துட்டு போகட்டும்
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. Likes vidyasakaran liked this post
  12. #1598
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜியை மதிக்காத கமல் ரசிகனும் , கமலை தங்கள் ஆளாக உணர முடியாத சிவாஜி ரசிகனும் போலி என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து.
    நண்பர் ஜோ அவர்களுடன் பல விஷயங்களில் எனக்கு கருத்தொற்றுமை இருப்பதில்லை, இந்த ஒரு விஷயத்தைத் தவிர.

    இன்றைக்கு சீனியராக இருக்கும் பல கமல் ரசிகர்கள் முன்னாள் சிவாஜி ரசிகர்களே. நடிகர் திலகத்திற்குப் பிறகு அவருடைய வெற்றிடத்தின் அருகில் வரக்கூடிய தகுதி கமலுக்கு மட்டுமே உண்டு என்று ஆழமாக நம்புபவர்கள். நம்பிக்கையை உண்மையாய் உணர்ந்தவர்கள். கமலின் அடுத்த தலைமுறை ரசிகர்களை வழிப்படுத்த கமலுக்கு உதவியவர்களில் பலர் நடிகர் திலகத்தின் ரசிகர்கள். இதை நான் அறிவேன். ரசனை மாற்றம் காலத்தின் கட்டாயம் என்பதற்கு இவர்கள் உதாரணம்.

    எங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்கள் நடிகர் திலகம் வகுத்த பாதையில் கமல் செல்வதைப் பார்த்து பெருமை கொள்பவர்கள். வாழ்த்து சொல்பவர்கள்.
    Last edited by RAGHAVENDRA; 9th October 2015 at 11:55 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes joe, NOV, vidyasakaran liked this post
  14. #1599
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜி-கமல் பெரிய - சிறிய வாழை மாதிரி.

    பெரிய வாழை தான் இருக்கும் வரை, குலை தள்ளி தன்னாலான அத்தனை பலன்களையும் மக்களுக்கு அளித்து விட்டு தனக்கு அடுத்து சிறிய வாழைக்கு வழி கொடுத்து விடும். சிவாஜி என்கிற பெரிய வாழை கமல் என்கிற சிறிய வாழை நன்கு வளர்வதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தன் ஆயுளை முடித்துக் கொண்டது.

    ஆனால் இந்த கமல் என்கிற சிறிய வாழைக்கு அந்த வாய்ப்பே கிடையாது. அது எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் வளரும் என்கிற அளவிற்கு பெரிய வாழை அதற்கு உரமளித்துப் போயுள்ளது. கமல் என்கிற வாழை எவ்வளவு பெரியதாக ஆனாலும் அதற்கருகில் ஒரு சிறிய குருத்துக் கூட துளிரவில்லை. இன்னும் பல தலைமுறைகளுக்கு வேண்டிய பலன்களை அளிக்கக் கூடிய சக்தி இந்த வாழைக்கு இருப்பதால் இதற்கு பெரிய வாழையின் ஆசி முழுமையாக இருப்பதால், இன்னொரு வாழைக்கு நாம் காத்திருக்கவோ ஆசைப்படவோ தேவையில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #1600
    Junior Member Senior Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    22
    Post Thanks / Like
    Last edited by kumarsr; 10th October 2015 at 12:58 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •