-
10th October 2015, 10:31 AM
#571
Junior Member
Seasoned Hubber
எதிர்மறை வார்த்தைகள் ஆனால் உள்ளர்த்தம் ஒன்றே !
( போபோ போபோ ------- வா வாவா )
பதிவு 1
சில திரைப்படப்பாடல்கள் நம்மை என்றுமே சிந்திக்க வைக்கும் திறன் உடையவைகள் . வார்த்தைகளில் தமிழும் விளையாடும் , அழுகும் விளையாடும் - அது மட்டும் அல்ல - வீரமும் காதலும் கலந்து மனம் வீசும் . பின்னணி பாடியவர்களும் சரி , படத்தில் வாயசிப்பவர்களும் சரி , தன் திறமைகளை , வாங்கும் பணத்தைவிட அதிகமாகவே திறன் பட காண்பித்திருப்பார்கள் . இந்த பாடல்களை பாருங்கள் - முதல் பாடல் ஒரு பூனையை கூட புலியாக்கும் ( தவறு தவறு - ஒரு சிங்கமாக்கும் ) அப்படிப்பட்ட அப்படிப்பட்ட வீரத்தை உண்டு பண்ணக்கூடிய பாடல் !! - பாடியவரும் ஒரு சிங்கம் - அதற்க்கு வாயசைத்தவரோ சிங்கங்களின் தலைவர் - கேட்கவா வேண்டும் , உணர்ச்சிகளை கொட்டுவதற்கு - நம் நரம்புகள் புடைப்பதற்கு ??
பதிவு 2
(போபோ போபோ ------- வா வாவா )
இந்த பாடல் மென்மையான காதலை உள்ளடக்கிய பாடல் - ஆடைகள் கலையப்படுவதில்லை ; கைகள் தேவையில்லாமல் யாழ் வாசிக்கவில்லை ; கைகள் கண்களை மறைக்க வேகமாக ஓடவில்லை ; காதுகள் மூடிக்கொள்ளவில்லை - ஐயோ இப்படிப்பட்ட வர்ணனைகளா என்று ..... மென்மையான பாடல் - இளமையான குரல்கள் , இனிய தம்பதிகள் ---- கேட்டுக்கொண்டே இருக்கலாம் ....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2015 10:31 AM
# ADS
Circuit advertisement
-
10th October 2015, 11:07 AM
#572
Junior Member
Seasoned Hubber
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 1
வாழ்க்கையில் மமதை நாம் எந்த நிலைமையில் இருந்தாலும் வரவேக்கூடாது என்பதை சித்தரிக்கும் பதிவு இது - கர்வம் (ஈகோ ) உள்ளவர்கள் கடைசி வரை நன்றாக இருந்தார்கள் என்று வரலாறே இல்லை - ராவணனை எடுத்துக்கொள்ளுங்கள் - அவனிடம் இல்லாத நல்ல குணங்களா ?? - ராமனை ஒரு சாதாரண மனிதன் என்று எடை போடும் அளவிற்கு அவனுக்கு மமதை வந்து விட்டது - பத்து தலைகள் இருந்தும் ஒன்றுமே அவன் சாவை தடுக்க முடியவில்லை - எல்லா தலைகளிலும் தேவைக்கு அதிகமான ஈகோவை சேர்த்து வைத்திருந்தான் - கம்சனும் அப்படியே , சிசுபாலனும் அப்படியே ! கழுகு எவ்வளவு மேலே மேலே பறந்தாலும் அதற்க்கு உணவு பூமியில் தான் - தலையை குனிந்துகொண்டுதான் பறக்க வேண்டும் ...
🌲கண்ணன் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டிருந்தான். உறங்கவில்லை. ஆனால், உறங்குவதுபோல் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தான்.
🌴 அவன் உறங்குவதாக நினைத்து ஒருபக்கம் கருடனும், கண்ணன் கைச் சக்கரமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.
🌲கண்ணன் ஒரு முறுவலுடன் அவற்றின் பேச்சைச் செவிமடுத்தான்.
🌴கருடன் தன் மெல்லிய இறகுகளைக் கூர்மையான அலகால் கோதிக்கொண்டே பெருமை பொங்கச் சொல்லிற்று:
💥 ""சக்கரமே! திருமால் தான் இப்போது கண்ணனாய் இங்கே வந்திருக்கிறார் தெரியுமல்லவா? அதனால் தான் அவருக்கு எப்போது நான் தேவைப்படுவேனோ என்று இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன்.
🌴 கஜேந்திர மோட்சத்தின்போது என் உதவி இல்லாவிட்டால் அவரால் முதலையை வதம் செய்திருக்க முடியுமா என்ன? வாயு வேகம் மனோ வேகம் என்பார்களே, அப்படியல்லவா திருமால் நினைத்த மறுகணம் அவரைச் சுமந்துகொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குப் பறந்துசென்றேன்!''
🌼இதைக் கேட்ட சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டே கடகடவென்று சிரித்தது. ""நீ என்ன வேகமாக அவரைத் தூக்கிக் கொண்டு பறந்தாலும் நான் மட்டும் இல்லாவிட்டால் அவர் எப்படி முதலையை வதம் செய்திருக்க முடியும்? என்னை வீசித்தானே அவர் முதலையைக் கொன்றார்?
🌲நீ திருமாலுக்குச் செய்த உதவியின் பெருமையை விட நான் செய்த உதவியின் பெருமை தான் அதிகம்!''
🌲கண்ணன் உள்ளூர நகைத்துக் கொண்டான். "இவ்விரண்டிற்கும் சக்தியைக் கொடுத்ததே நான் தான். அப்படியிருக்க இவைகளுக்குத் தான் எத்தனை ஆணவம்? எனக்கு இவை உதவி செய்ததாமே?'
🌴அதற்குள் சலசலவெனப் பெண்களின் பேச்சுக் குரல் கேட்கவே, கண்ணனின் கவனம் குரல் வந்த பக்கம் திரும்பியது.
🌴 பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனது ராணிகள் தான்.
( தொடரும் )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2015, 11:09 AM
#573
Junior Member
Seasoned Hubber
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 2
""நம் அழகால் கவரப்பட்டுத்தான் கண்ணன் நம்மைத் திருமணம் செய்துகொண்டான்.
நமக்கு இணையான அழகிகள் உலகில் எங்குமில்லை!'' என்றாள் ஒருத்தி.
""அதென்னவோ உண்மைதான். ஆனாலும், உன்னைவிட நான் சற்றுக் கூடுதல் அழகு என்பதும் கூட உண்மைதானே?'' என்றாள் இன்னொருத்தி!
தங்களின் அழகைப் பற்றிய ராணிகளின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டுக் கண்ணனுக்கு நகைப்பு வந்தது.
"உடல் அழகாக இருந்து என்ன பயன்? உள்ளமல்லவா அழகாக இருக்கவேண்டும்? என் ராதைக்கு வாய்த்த உள்ளம்போல் வேறு யாருக்கு வாய்க்கும்?'
"இவர்கள் இப்படிக் கர்வப்படுகிறார்களே?
ராமாவதாரத்தின் போது என் பக்தனாக மாறிய ஆஞ்சநேயன் எத்தனை ஆற்றல் மிக்கவன். ஆனால் எத்தனை அடக்கம் நிறைந்தவன்! அவன் சிரஞ்சீவி. இன்னும் வாழ்ந்து வருகிறான் அல்லவா? சரி
ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க வேண்டியதுதான்! கருடன், சக்கரம், ராணிகள் அனைவரின் கர்வத்தையும் அடக்க ஒரு
வழிசெய்வோம்''.
கண்ணன் எழுந்தான்.
""கருடா!'' என அன்போடு அழைத்தான். கருடன் பறந்தோடி வந்து பவ்வியமாய் நின்றது.
"கந்தமாதன பர்வதம் என்ற பெயருடைய மலையில், குபேரனது ஏரியில், சவுகந்திக கமலம் என்ற அபூர்வமான தாமரை மலர்கள் பூக்கும் காலம் இது. மிக வசீகரமான வாசனை உடையவை அவை.
நீ போய் என் ராணிகளுக்காகச் சில தாமரை மலர்களைப் பறித்து வருகிறாயா? நீதான் பலசாலி ஆயிற்றே? எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளிப்பாயே. உன்னால் தானே மிக வேகமாகப் பறக்கமுடியும்?'
⚡கண்ணனே தன்னைப் புகழ்வதைக் கேட்டு கருடனுக்குப் பெருமை தாங்கவில்லை.
""இதோ மின்னல் வேகத்தில் மலர்களோடு வருகிறேன்!'' சொல்லிவிட்டு விண்ணில் பறந்தது அது
ஆனால், அந்த இடத்தில்தான் அடக்கமே வடிவான ஆஞ்சநேயர் ராமநாம ஜபம் செய்துகொண்டு வசித்து வருகிறார் என்பதைக் கருடன் அறியவில்லை.
கருடன் பாய்ந்து பாய்ந்து அலகால் மலர்களைக் கொத்திப் பறிப்பதைப் பார்த்த ஆஞ்சநேயர் திடுக்கிட்டார்.
""யாரப்பா நீ? இந்த மலர்கள் குபேரனுக்குச் சொந்தமானவை. அவரிடம் மலர்களைப் பறிக்க அனுமதி பெற்றாயா?''
"ஏ கிழட்டுக் குரங்கே! நான் யார் தெரியுமா? துவாரகை மன்னனான கண்ணனின் கருடன். கண்ணபிரானுக்காகத் தான் இந்த மலர்களைக் கொய்துகொண்டிருக்கிறேன்.
கண்ணனுக்கான சேவைக்கு யார் அனுமதியும் தேவையில்லை!
கருடனின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டு, ஆஞ்சநேயருக்குக் கடும் கோபம் வந்தது.
⚡சடாரெனப் பாய்ந்து, கருடனைப் பிடித்துத் தன் ஒரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட அவர், கருடனோடு ஒரே தாவாகத் தாவி துவாரகை சென்றார்.
ஆஞ்சநேயர் செய்த கர்ஜனையால் துவாரகை அதிர்ந்தது.
""கர்வம் பிடித்த இந்த கருடனை சேவகனாகக் கொண்டவர் யார்?'' என்று அவர் முழங்கிய முழக்கத்தைக் கேட்ட கண்ணன்,
கஜேந்திர மோட்சத்தின் போது எனக்குக் கைகொடுத்த சக்கரமே! வந்திருக்கும் குரங்குடன் போரிட்டு அந்த கருடனைக் காப்பாற்றக் கூடாதா?'' என்று வினவினார்.
""இதோ! உடனே அந்தக் குரங்கை என்ன செய்கிறேன் பாருங்கள்! என்றவாறு சக்கரம் சீறிப் பாய்ந்தது. மறுகணம் தாவிச் சென்று அந்தச் சக்கரத்தைப் பிடித்துத் தன் இன்னொரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட ஆஞ்சநேயர், ""இந்த ஆணவம் பிடித்த சேவகர்களின் எஜமான் யார்?'' என்று உறுமினார்.
அடுத்து, அந்தக் குரங்கு அரண்மனைக்குள் வந்தால் என்ன நேருமோ என ராணிகள் பயந்து நடுங்கி கண்ணனைத் தஞ்சம் புகுந்தார்கள். எப்படியாவது இந்தக் குரங்கை சமாளிக்க வேண்டும் என வேண்டினார்கள். கண்ணன் நகைத்தவாறே சொன்னான்.
""என் அன்பிற்குரியவர்களே! வந்திருக்கும் குரங்கு வேறு யாருமல்ல. ராம பக்தனான ஆஞ்சநேயர் தான். அவரது வலிமைக்கு முன் யார் வலிமையும் செல்லாது. ஆனால், ராமரும் சீதாதேவியும் நேரில் வந்து ஏதும் சொன்னால் அதற்கு அவர் கட்டுப்படுவார். எனவே நான் ராமராக உரு மாறுகிறேன். உங்களில் யார் சிறந்த அழகியோ அவர்கள் சீதையாக உரு மாறுங்கள். சீதை உருவத்தால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் அழகிய பெண்மணி. உங்களில் மன அழகு யாருக்கு வாய்த்திருக்கிறதோ அவர்கள் பிரார்த்தியுங்கள். சீதையின் வடிவம் உங்களுக்குக் கிட்டும்''.
எல்லா ராணிகளும் கண்ணை மூடிப் பிரார்த்தித்துப் பார்த்தார்கள். ஆனால் யாரும் சீதாதேவியாக உருமாற இயலவில்லை. கண்ணன் ராதையை அழைத்துவர உத்தரவிட்டான். ராதை வந்ததும் பிரச்னையைச் சொன்னான். ராதை கண்மூடிக் கைகூப்பி அமர்ந்துகொண்டாள்.
""எல்லாவற்றையும் நிகழ்த்துவது என் கண்ணன் தான். எனக்கென்று தனித்த பெருமை ஏதுமில்லை. அனைத்தையும் புரிவது கண்ணனே என்பது உண்மையானால், அவனது அருள் என்னை சீதாதேவியாக மாற்றட்டும்!'' என்று உரக்கச் சொல்லிப் பிரார்த்தித்தாள்.
அந்த விந்தையான பிரார்த்தனையைக் கேட்ட ராணிகள் திகைத்து தங்களின் ஆணவம் அகன்று நின்றார்கள்.
ஒரு கணத்தில் ராதை சீதையானாள்.
""இந்த ஆணவம் பிடித்த சேவகர்களின் அரசன் யார்?'' என்றவாறே அரண்மனையின் உள்ளே வந்த அனுமன் ராம பிரானையும் சீதாதேவியையும் கண்டு திகைத்தான்.
""பிரபோ! தாங்களா துவாரகையை ஆட்சி செய்கிறீர்கள்?'' என்று பக்திப் பரவசத்துடன் வணங்கினான்.
( தொடரும் )
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th October 2015, 11:11 AM
#574
Junior Member
Seasoned Hubber
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 3
""அன்றைய ராமன்தான் இன்றைய கண்ணன்!'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன கண்ணபிரான், உன் கையிடுக்கில் உள்ள என் சேவகர்களை விட்டுவிடு. அவர்கள் ஆணவம் இன்றோடு ஒழிந்தது!'' என்றான்.
""அப்படியே ஆகட்டும் பிரபோ!'' என்ற அனுமன் தன் பிடியில் இருந்த கருடனையும் சக்கரத்தையும் விடுவித்தார்.
கடவுள் பணி செய்பவர்களுக்கு அகந்தை ஆகாது! என அறிவுறுத்திவிட்டு, "ஜெய்ஸ்ரீராம்'⚡ என்றவாறே விண்ணில் தாவி மறைந்தார்.
ராமனாக மாறிய கண்ணனும். சீதையாக மாறிய ராதையும் பழைய உருவத்தை அடைந்தனர்.
""நாங்கள் அடங்கிவிட்டோம்!'' என்று கருடனும் சக்கரமும் கண்ணனைப் பணிந்தபோது, ""நாங்களும் அடக்கத்தைக் கற்றுக் கொண்டுவிட்டோம்!'' எனக் கண்ணனின் ராணிகளும் ராதையைப் பணிந்து வணங்கினார்கள்.
""நீங்கள் அனைவரும் என் காலில் விழுந்து வணங்கும் இந்தப் பெருமையும் கூடக் கிருஷ்ணார்ப்பணம்!'' என்று ராதை கண்ணனை நோக்கிக் கைகூப்பியபோது அவனது மனம் நிறைவடைந்தது.
( தொடரும் )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2015, 11:14 AM
#575
Junior Member
Seasoned Hubber
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 4
இந்த பாடல் எவ்வளவு அமைதியான , அழகான பாடல் - எவ்வளவு வாய்ப்புக்குள் வாழ்க்கையில் வந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்ளாத , நாணல் , படகு - வளைந்து கொடுத்து வாழ்க்கையை கெட்டியாகப்பிடித்துக்கொள்கின்றன --- தென்னல் இளம் கீற்றை தாலாட்டும் தென்றலை பாருங்கள் - சிறிதே உயர்வு வந்தவுடன் அதற்க்கு கூடவே கர்வமும் வந்து விடுகிறது - தன்னுடன் நண்பானாக பழகிய தென்னம் கீற்றை கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் சாய்த்து வீழ்த்திவிடுகிறது . கடைசியில் அமைதியுடன் வாழ்வது அந்த சீற்றம் மிகுந்த தென்றல் அல்ல - வளைந்து கொடுத்த அந்த படகும் , நாணலும் தான் ---- கர்வம் தலையிலிருந்து இறங்கினால் , அங்கே கருணை மனதில் குடியேறும் என்பதை உணர்த்தும் அழகிய பாடல் - பல அழுகிய பாடல்களின் நடுவே அழியா வரத்தைப்பெற்ற பாடல் - கேட்டுக்கொண்டே இருக்கலாம் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2015, 11:18 AM
#576
Senior Member
Diamond Hubber
ஆஹா.... இரண்டு நாட்களில் நாலைந்து பக்கங்கள்.... அதிலும் சீண்டி விடப்பட்டதால் சேலை கட்டிய கிளி பாடல்களை அள்ளி வழங்கிய ராஜேஷ்... நிமிண்டி விட்டு நிமிடத்தில் கவிதை சொல்லும் சிக்கா... சிம்மக்குரலோனை என்றும் சிந்தையிலும் பதிவிலும் கொண்ட ராகவ்ஜி மற்றும் என் நெய்வேலி வைரம். `படாபட் என்று கண்டுபிடித்த கோபுஜி... ஆளில்லாத் தீவுக்கரையின் நாணல் காட்டில் நடக்க வைத்த வாசுதேவன்ஜி...அந்தக் கால தேனை அள்ளி வழங்கும் வாத்தியாரையா... துவாரகையில் சீதையை வரவழைத்த ரவிஜி... விருந்தை மேலோட்டமாகப் பார்த்தாலே பசி தீருமே... மெல்ல மெல்ல ருசித்து ரசிக்கப் போகிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th October 2015, 03:53 PM
#577
Senior Member
Senior Hubber
அருவிப் பாட்டுல இதைப் போட்டோமா என்ன.. (ஆரம்பத்துல மட்டும் அருவி வரும்..)
பட் ஹீரோயினைப் பார்த்தால் ராஜ ஸ்ரீ மாதிரி இருக்கு..ஆனா பாட்டுல ரஷ்யப் பொண்ணா நினைச்சுப் பாடறா மாதிரி இருக்கே..
அதுலயும் எல்.ஆர்.ஈ.. யாஈ இ ஈன்னு ஹம்மிங்.. நன்னாயிட்டு இருக்கு சீர்காழி கோவிந்தராஜனின் திருத்தமான தமிழ்க்குரல் உள்ளம் கொள்ளை போகிறது..
ஹை.. நெய்வேலி இதுல வருதே..
படம் உயிரா மானமா..
*
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
காவியத்தில் ஒரு மகளே
ஓவியத்தின் திருமகளே…
சோவியத்தின் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்தத்தமிழ் மருமகளே நீராடு
நீங்கள் எமக்களித்த நெய்வேலிப் பெருமை கண்டு
நாங்கள் உமக்களித்த நன்றியே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
தென்கோடித் தூத்துக்குடி நிறுத்தும் துறை முகத்தால்
பொன்கோடிக் குவிக்கும் எங்கள் தாயகமே
இன்ப ப் பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே
தமிழ்மொழிகொண்ட தங்கை
தங்க நிறம் மின்னும் மங்கை
தவழும் கேரளத்து வெள்ளத்திலே நீ
தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே ( ரஷ்யன் ஹீரோயின் கேரளா டிரஸ்போட்டிருக்கதால எப்படி தங்கை ஆவார்..)
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th October 2015, 04:18 PM
#578
Senior Member
Senior Hubber
ஹை.. இந்தப் பாட் நன்னா இருக்கே ..அதாவது லிரிக்ஸ்..
கண்கள் இரண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கலையே வடிவாய்
வருவாளவள் அங்கம் தங்க நிறம்..
விண்ணில் பிறந்தமின்னல் இறங்கி
மண்ணில் நடந்து வந்தது போல்
வண்ண மலர் காலில் கொண்டு
வாழ்வினிலே ஆசை கொண்டு
வந்திடுவாள் நாணம் கொண்டு
மண மகளும் நானே என்று
வாலிபரை அழகில் வென்று
வாழ்ந்திடுவாள் சபையில் நின்று..(வாவ்..எளிமை அழகு வரிகள்)
மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தினோடு சினேகம்
குறியாகத் தோன்றிடும் நாணப் பார்வைகள்
வீரன் கணைவிடும் வேகம்! (அகெய்ன் வாவ்)
நல்ல நடை அன்னம் போலே
வெல்லும் இடை மின்னல் போலே
அன்பு மொழிக் கன்னல் (ஸ்வீட்) போலே
ஆடை மொழிப் பின்னல் போலே
நெஞ்சினிலே நேசத்தாலே நீந்திடுவேன் மீனைப் போலே
அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசையில் உள்ளம் பொங்கும் நிறம்
அழகே வடிவாய் வரும்
மங்கையின் மாமுகம் மஞ்சள் நிறம்
அழகுமிருந்து அடைய நினைந்திடும்
ஆண்மகன் எவரோ
அறிவுமிகுந்தொரு உறவு கலந்திட
அளவு தெரிந்தவரோ..
பகைவரிடம் பல்லைக் காட்டி
கலக்கத்திலே வென்றவர் வேண்டாம்
பாவையரை அருகில் வைத்துப்
பார்த்துருசி கண்டவர் வேண்டாம்
கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திடக்
கண்கள் நிறைந்திடுதே
இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
இதயம் விரும்பிடுதே
(சுயம் வரத்தில இளவரசி செலக்ட் பண்ற இளவரசர் எம்.என்.ராஜம் தானே?!)
யார் லிரிக்ஸ்னு தெரியலை..இதே அமுதவல்லி படத்தில் இன்னொரு வெகு அழகான பாடல் ஆடைகட்டி வந்த நிலவோ டி.ஆர்.எம் சுசீலாம்மா.. அதை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2015, 05:15 PM
#579
Junior Member
Diamond Hubber
கல்தூண்
சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ளே
சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே
வார்த்தைகளும், வார்த்தைகளைஒலியாக்கிய குரலும்,குரலோடு கலந்து இனிமையாக்கிய இசையையும் இதுவரை கண்டிருக்கிறதா தமிழ்திரை?
தாலாட்டானாலும் கம்பீரத்தையும் சேர்த்தே விதைப்பது கொங்கு மண்ணுக்கே உண்டான மரபு.
அன்று"மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி" உழவுக்கும், உழவனுக்கும் பெருமை சேர்த்தது.
சிஙகார சிட்டுத்தான் பாடல் பிறப்புக்கும் அதன் வளர்ப்புக்கும்
பெருமை சேர்க்கிறது.
பாடல் சிறப்பாயிருந்தால் மட்டும் போதுமா?அதன் பழம்பெருமை பேச வைக்க யாரால் முடியும்?
தேவனாய் பிறந்து முதலியாரின் ஆதரவில் வளர்ந்து நாடாருக்கு பெருமை சேர்த்து பரமேஸ்வர கவுண்டராய் வாழ்ந்த நடிகர்திலகத்தால் மட்டுமே முடியும்.
பாடலைப் பார்ப்போம்.
சுற்றங்கள் சூழ்ந்திருக்க காப்பியத்தலைவன்(நடிகர்திலகம்)
தள்ளி நின்றிருக்க நடுக்கூடத்தில் ஊஞ்சல் ஒன்று.சிவப்பு பட்டுடத்தி
நாயகி(கே ஆர் விஜயா)குழந்தையை ஊஞ்சலிலே இட்டு மெல்ல ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே
சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ள
சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடானு கோடியிலெ ஒத்த புள்ளே
என்று பல்லவியில் ஆரம்பிக்கும் பாடல்.
வட்டார பாஷையில் பாட வேண்டுமென்றால் நன்றாக அந்த பாஷையை கேட்டு பழகி பாடும்போது ஒன்று பாடல் வார்த்தைகளின் உச்சரிப்பில் அந்தப்பாடல் தவறில்லாமல் அமைந்திருக்கலாம்.அதே சமயம் வழக்கமான குரல் நளினம்இல்லாமல் போக வாய்ப்புண்டு. ஜீவன் இருந்தால்
வட்டார பாஷை கேலிக்கூத்தாக மாறிவிட வாய்ப்புண்டு.அனுபவமும்,திறமையும் கொண்டவர்களுக்கே இது போன்ற பாடல்கள் பிடி கொடுக்கும்.இங்கே இரண்டும் சிறப்பாக அமைந்திருக்கும்.
முதல் இரண்டு வரிகளுக்குப் பின்னே வரும் பிண்ணனி இசையில்.,வலது தோளை சிறிதாக மெல்ல அசைத்து
சிறு அசைவில் தலையை ஆட்டி வலது கையை இடுப்பில் ஊன்றி நடிகர்திலகம் தன் இருப்பை காட்டும் விதம் அம்சமானது.இமை முடிஇமை திறப்பதற்குள் முடிந்து விடும் ஷாட்டானாலும் சரி,அதிலும் கூட நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்பு மெய் சிலிர்க்கும்.அதற்கு சிறு உதாரணம் இந்த பிரேம்.
"அதுதான்யாநடிகர்திலகம் "
இந்த வார்த்தைகளை திரையரங்கில் உச்சரிக்காத உதடுகள் உண்டா இத் தமிழ்நாட்டில்?
மனதை மயக்கும் மதுரகானம் தொடர்கிறது..
சிங்கார சிட்டுத்தான் என்டபுள்ளே
சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே
கொங்குநாட்டு அய்யாவு தந்த புள்ளே
கோடானு கோடியிலே ஒத்தபுள்ளே
1981 ஆம் வருடம் மே மாதம் 1ஆம் தேதி தமிழில் அதிகமாக ரசிக்கப்பட்ட
வார்த்தை "கொங்கு நாட்டு அய்யாவு"ஆகத்தான் இருக்கும்.
கொங்குநாட்டு அய்யாவு வார்த்தைகளின் போது நடிகர்திலகம் மீசையை முறுக்குவது போல் காட்சி வைத்தால் விசிலும் கைதட்டலும் பறக்குமே என்று அதை காட்சிப்படுத்தியதில் டைரக்டரின் "டச்அப்" அதில் தெரியும்.(டைரக்டர் மேஜர் நடிகர்திலகத்தின் கூடவே நெடுங்காலம் இருந்திருப்பதால் ரசிகர்களின் உணர்ச்சிகள் அவருக்கு நன்றாக தெரிந்திருக்குமே)
மீசையை முறுக்கி ராஜகளையை காட்டும் அந்தக் காட்சியினால்,
எங்க ஊர் ராஜா விஜயரகுநாத சேதுபதி மீசையை முறுக்குவது,
ராஜ ராஜ சோழன் மீசையை முறுக்குவது,
என்மகனில் ராமையாத்தேவன் மீசையை முறுக்குவது,
கட்டபொம்மன் மீசையை முறுக்குவது,
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அவர் செய்தது ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல....
எல்லா உருவங்களும் அவரவர் சிந்தனைகளுக்கு தகுந்தபடி வந்து போகும்.
காட்சிக்கு வருவோம்.
அவங்க பாடிட்டாங்க நீங்க சும்மா நின்னுகிட்டு இருக்கீங்களே? நீங்க போயி உங்க சங்கதிய எடுத்து விடுங்க என்று சொந்தம் உசுப்பி விட,
ஆஜானுபாகுவான அந்த உடம்பை குலுக்கி குலுக்கிஅதையே ஒரு நடனமாக்கி.,
"இதோ வர்றேன் என்பாட்டை வச்சிக்கிறேன் "
என்பது போல நடந்து செல்லும் அந்த நடைக்கு தியேட்டரில் இசை கேட்காது.கை தட்டலில் தான் காது கிழியும்.
'இனி என் முறை' என்பது போல் ஆரம்பிப்பார்.
நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி
நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி
அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
என்னாலே வந்தானடி
மழலை ஒன்று பிறக்கும் வரை மனைவியை தாங்குவான் கணவன்.
மழலை வந்தபின் அதை கொஞ்சி
சீராட்டும்போது தன் குழந்தைஎன்பதிலே சற்று கர்வம் காட்டுவான்.மனைவியிடத்திலே பாசம் கொண்டிருந்தாலும் தன் பேர் சொல்லும் வாரிசு என்று சொல்வதில் மனைவியை விட அதிக உரிமை தனக்குத்தான் என்பதில் சற்று அகந்தை வருவது கிராமத்து(நகரத்திலும்உண்டு) மனிதர்களிடம் இன்றும் காணப்படும்ஆணாதிக்க வழக்கம்.அதைத்தான் அழகாக பாடலில் நடிகர்திலகம் வெளிப்படுத்தியிருப்பார்.
'அட நீ என்ன தாயாரு ' என்பதை
கே ஆர்விஜயாவின் தலையில் முட்டி,
பார்வையை குழந்தை மேல் வீசிக்காட்டி தகப்பனின் பெருமிதத்தை
' நான் தாண்டி அப்பன்'
என்று பாடி ஒரு தகப்பனின்உணர்ச்சிகளைகாட்டும் அந்த நடிப்பில்தன்னிகரற்று விளங்க நடிகர்திலகததால் மட்டுமே முடியும்.
'என்னால வந்தானடி '
என்பது தகப்பனின் உறவையும்உரிமையையும் நிலை நாட்டும் சொல்.அது
ஆண் கொள்ளும் கர்வம்.அதை வெளிப்படுத்தும்
அவர் நடிப்பு "சபாஷ்" போட வைக்கும் ஆண்களை.
இங்கிருந்து அங்கு அம்புஎய்தாகி விட்டது.தாய்க்குலம் விடுமா?யோசிக்கிறது,
தந்தைக்குலம் தொடுத்த தாக்குதலுக்கு எப்படி எதிர்அம்பு விடுவது என்று.ஒன்றும் பிடிபடவில்லை.
அட இதுக்கு என்னத்த ரோசனை? பெத்தெடுக்கிற யோக்யதை இல்லாட்டி ஆம்பளைக்கு எப்படி வரும் வீராப்பு?
தாய்க்குலத்தின் மூத்தகுலம் சங்கதி
எடுத்துக்கொடுக்க,
ஆரம்பமாகிறது வார்த்தை யுத்தம்.
பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
!ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
போட்ட வெதை தப்பாமே தந்தாரு சாமி
கருஉருவாச்சு என்னாலய்யா
அய்யா உருவாச்சு என்னாலய்யா
சத்தியத்தின் அடி வேர் எடுத்துக்காட்டப்படுகின்றன.யாரால் இதை மறுதலிக்க முடியும்?சரியான வார்த்தைகள் தானே இது?சாமியை வேறு துணைக்கு அழைக்கிறதே?
என்ன செய்ய?சவுக்கடி கொடுத்தது தவறோ என்று மூளையை குழப்பச் செய்கிறது?தகப்பன் குலம் மிரண்ட வேளையில்,
மனுஷனுக்கு விலாசம்அவனோட
முகந்தான்.ஜாடையைப் பாரு.யாரப் போலய்யா இருக்கு?இதக் கேளப்பா,
முதிர்ந்த குலம் உசுப்பி விட,
சற்றுமுன் ஓடிப்போன கர்வம் இப்போது வந்து ஒட்டிக்கொள்ள
தலையெடுக்கிறது தகப்பனின் வாய்ஜாலம்.
ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
எம் போல இருக்கானடி
அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
என் வாக்கு தப்பாதடி
அடியே என் வாக்கு தப்பாதடி
மாறி மாறி வீராப்பு பேசிக்கொண்டிருந்தால் குடும்பத்திற்கு ஆகுமா?நல்லகுடும்பம் விட்டுக்கொடுக்கும்.இருவருக்கும் புரிகின்றது.
"என்ட புள்ளே "இப்போது "அம்மபுள்ளே "
சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்
மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம்.கண்ணுக்கெட்டிய தூரம் வரைசெழுமையாகக் காட்சியளிக்கும் வயல்வெளிகள்.எங்கும் பசுமை.நீர்வளங்கள்.இது போன்ற இயற்கைச் சூழலைஅனுபவிக்கும் பாக்கியம் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்களுக்கே கிடைக்கும்.
பாடல் ஆரம்பமாகிறது.
செழித்து வளர்ந்த வயல்வெளிகள் எங்கும்.அதில் ஆகாய நிற த்தில் சட்டையும் வெள்ளை வேட்டியுமாய் நடிகர்திலகம்.வயல் வேலைகளை
செய்து கொண்டு இருக்கிறார்.கஞ்சிப்பானையை தலையிலும்,குழந்தையை இடுப்பிலும் வைத்து கே ஆர் விஜயா நடந்து வருகிறார்.மனைவியை பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
தலைதான் நரைக்கும்.
ஆசையுமா?
எடுத்து விடுகிறார்.
கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
என்று அவர் முடிக்க,
விவசாயிக்கு தெரியும் மண்வாசனை
மனைவிக்கு தெரியாமல் போகுமா புருஷனின் மன்மத வாசனை?
இதற்கு வேண்டுமே எல்லை
அதை மீறினால் தொல்லை
என்ற அர்த்தத்தில்.,
அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
என்று முடிக்க,
உடனே சுதாரித்து, தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்ற
கருத்தில்..
கலங்காத என் தேவ இந்த பூமி
கடசிப்புள்ள தாண்டி நம்ம பழனிச்சாமி
பூமியைப் பெருக்கி
குடும்பத்தை சுருக்கி
வாழ்வைநிறைக்கலாம் எனும் அர்த்தத்தில் முடிப்பார்.
பெண்புத்தி முன்புத்தி.
ஆண்புத்தி அவசரபுத்தி..
ஒரு வீம்புக்கு ஆசைஇல்ல ன்னு ஆம்பளையை தடுத்தா,
சரிதானேன்னு ஆம்பள விலக,
அதையே குத்திக்காட்டுது
பொம்பள மனசு.
இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித்தான் முந்தி கூட பேசுநீங்க
என்று இடிப்பார்.
நிற்க...
தன்னந்தனிக்காட்டு ராஜா
நடிகர்திலகத்தை தாண்டி யாராவது பயணிக்க முடியுமா என்ன?
கையில் வைத்திருக்கும் மண் வெட்டியை கே ஆர் விஜயா வருவதைப் பார்த்ததும்,எத்தனை நேரந்தான் இதையே புடிச்சுட்டிருக்கிறது ன்னு அப்படியே வலது கையால தூக்கி எறிவார் பாருங்கள்.சிரிப்பும்,ரசனையும் வரவழைக்கும் நமக்கு.கவுண்டரா காட்டு வேலை செஞ்சாலும் நடிகர்திலகம் நடிப்புக்கு திலகம்தான்.மண்வெட்டி தூக்கி எறியும் ஸ்டைலே தனி.
வேட்டியை ரெண்டு கையால தூக்கிக்கிட்டு வலது கால் மாத்தி இடதுகாலு,இடதுகால் மாத்தி வலதுகாலு ன்னு வயக்காட்டுல ஆடற அழகே அழகு. அதோட தொடர்ச்சியா தாளத்துக்கு ஏற்றமாதிரி அவர் ஆடிக்கொண்டே கொஞ்சம் லாங்கா டான்ஸ் ஆடிட்டு வர்ற அந்த கிரேன் ஷாட்டுல நடிகர்திலகத்தோட
டான்ஸ் மூவ்மென்ட் படு எதார்த்தம்.
படத்தில் டான்ஸ் ஆட ஸ்கோப் உள்ள ஒரே இடம் அதுதான்.கிடச்ச கேப்புல பூந்து விளையாடிருப்பார். அந்த ரெண்டே ஸ்டெப்ல படம் பார்க்கிற அத்தன பேரையும் ஆட வச்சுருவாரு.
தலைமுடிக் கொண்டையும் கதிர் அரிவாளை ஞாபகப்படுத்தும் அந்த மீசையும்,வெகு பொருத்தம்.மேல் பட்டன் இரண்டும் போடாத நிலையில் சாதாரணசட்டைதான்
அணிந்திருப்பார்.!ஆனாலும் அதில் இருக்கும் கம்பீரம் வியக்க வைக்கும்.
தொடர்கிறது...
பெற்றோரின் பெரும் சந்தோசங்களில் ஒன்று தங்கள் குழந்தை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கும் முதல் வார்த்தைகளுக்குத்தான்.
பழனிச்சாமி என்று பெயர் வைக்கப்பட்ட அந்த குழந்தை சற்று
பெரியவனாகி அம்மா அப்பா என்றழைக்கிறான்.
இவ்விடத்தில ஒருஉண்மையான தகப்பனின் மனநிலையை நடிகர்திலகம் வெளிப்படுத்தும் அழகே அழகு.கிராமத்து பாமரனின் இயல்புத்தன்மை யை அப்படியே பிரதிபலிப்பார்.
குழந்தை அப்பா என்று அழைத்ததைப் பார்த்ததும்
" அட்ரா சக்கன்னானா ஓஹோய்"
சத்தமிட்டு ஒத்தக்கால தூக்கி
உற்சாக ஆட்டம் போடுவது
அட்டகாசம்.
நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
இருவர்அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )
இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா...*ஹா... ஹா...
ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*
சுபம்.
நடிகர்திலகத்தின் நடிப்பு ஒரு கோணம்
பாடலின் சிறப்பு ஒரு கோணம்
கிராமியம் ஒரு கோணம்
இந்த மூன்று கோணங்களும்
கலந்து பயணிக்கும்
மேற்கண்ட எழுத்து நடை.
நன்றி..
செந்தில்வேல்.
கொங்கு நாட்டு அய்யாவு
வயல்காட்டில் கொண்டாட்டம்
அட்ராசச்கைன்னானேன்
பாடல்:
பல்லவி
பெண்சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள
கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள
இசைசரணம் - 1
ஆண்நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி
நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி
அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
என்னாலே வந்தானடி
அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
என்னாலே வந்தானடி
சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள
இசைசரணம் - 2
பெண்பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
போட்ட வெதை தப்பாமே தந்தாரு
கருஉருவாச்சு என்னாலய்யா
அய்யா உருவாச்சு என்னாலய்யா
இசைசரணம் - 3
ஆண்அவ போல பொறந்தானா நீ பெத்த ராசா*
கேள்றா டேய்
ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
எம் போல இருக்கானடி
அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
என் வாக்கு தப்பாதடி
அடியே என் வாக்கு தப்பாதடி ( இசை )
சரணம்4
ஆண்:கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
பெண்:அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
பெண்இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க
இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க
இருவர்:சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்
குழந்தைஅம்மா... அப்பா... அம்மா...
ஆண்அட்ரா சக்கன்னானா ஓஹோய்...
இசைசரணம் - 5
ஆண்நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
இருவர்:அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )
இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*
பெண்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா...*
படப் பதிவு: டி.எம்.சௌந்தரராஜன் Kalthoon (1981) 2:
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
10th October 2015, 05:17 PM
#580
Senior Member
Senior Hubber
நாடகங்கள் கதைகள் நாவல்கள் எல்லாம் நிஜவாழ்வின் நடப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் கீற்றுக்கள் எனலாம்..
திரையில் ஒரு கதைக்குப்பொருத்தமான நாடகம் என வருவது என யோசித்ததில்…காதலியின் இழப்பில் பைத்தியமாக இருந்த ஒருவர் சுய நினைவு வந்தவுடன் எப்படி எல்லாவற்றையும் மறந்து விடுகிறார் என்பதனை வெகு பொருத்தமாய்ச் செய்திருக்கும் ந.தி.. இன் எங்கிருந்தோ வந்தாள்..
அதேசமயத்தில்..அவருக்கு நினைவு திரும்பப் போகிறது..அவர் குணமடைவதற்காக தன்னையே இழக்கும் பெண்ணுக்கு என்ன ஆகப் போகிறது என்பதை பார்ப்பவர்கள் பதைபதைக்கும் வண்ணம் முன்னோட்டமாக வரும் பாடல்..காவியப் பாடல் காளிதாச சகுந்தலை பாடல்..பொருத்தமான கவிஞர் கண்ணதாசனின் வரிகளுடன் அரங்கேறும் நாடகம்…
கன்னியவள் சகுந்தலையைக் கண்டுணர்ந்த மன்னவனும்
…காதலியை ஏற்பதற்குக் காடுவிட்டுச் சென்றுவிட
எண்ணமதில் தானுறங்கி உளத்தினிலே காதலனை
…ஏந்திழையும் ஏந்திநின்று உருகிநின்ற காலத்திலே
திண்ணமெனப் பசிகொண்டு துர்வாச முனிவனவன்
…தீர்க்கமாய் முனிகுடிலில் தாரகையை நோக்கிவிட
வண்ணமயில் ஆடாமல் சிலையாக நின்றதினால்
…வாழ்வினையே இழந்தகதை காவியமாய் ஆனதன்றோ..
ம்ம்
இனி பாடல்..
தோழிகள் என்னும் மான்கள் நடுவிலே தூய மானெனப் பள்ளி கொண்டவள்
அந்த மானை மறந்து போனவன் இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்….
துடிக்கின்ற சினமே துணையாகக் கொண்ட
துர்வாச முனிவன் தவமுடித்து
கொடிக்கன்று (வாவ்) நின்றிருக்கும் குடில் வந்தான்
குரல் தந்தான் யாரங்கே அங்கே யாரங்கே யாரங்கே
எந்த எண்ணம் உனைக் கொண்டதோ அதனை இன்று தீர்த்துவிடுகின்றேன்
அந்த மன்னவனின் உள்ளம் என்பதனை இன்று மாற்றி விடுகின்றேன்
( எப்போ கேட்டாலும் பார்த்தாலும் அலுக்காத கானம்)
Last edited by chinnakkannan; 10th October 2015 at 05:25 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks