Page 308 of 401 FirstFirst ... 208258298306307308309310318358 ... LastLast
Results 3,071 to 3,080 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #3071
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    NT AND ACT

  2. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3072
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்
    இவர்களில் எவரையேனும் தெரியுமா?

  5. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  6. #3073
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இருமலர்கள் படமாக்கலின்போது

  7. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  8. #3074
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தர்த்தி ஷூட்டிங்


  9. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  10. #3075
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  12. #3076
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் பின்னால் நிற்கும் சிறுமியைப் பாருங்கள்

  13. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  14. #3077
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    அரங்கம் ஆலயமாக..
    அன்றொருநாள் ஒலித்தது இந்த
    ஆன்மிகக் குரல்.

    கலை தெய்வத்தை தரிசிக்கப்
    போன இடத்தில், காது குளிர்வித்தது இந்த தெய்வீக
    கானம்.

    பாடும் திறமையுடைய என்
    நண்பனுடைய பக்திப் பாடல்
    தொகுப்பிற்காக நான் எழுதிக்
    கொடுத்த ஒரு பாடலினூடே
    எழுதியிருந்தேன்.

    "கல்லுக்குள்ள சாமிய வச்சது
    நம்பிக்கைதானம்மா!"-என்று.

    ஆழ்ந்து மனம் ஒன்றி இறை
    வணங்கும்போதெல்லாம்,
    இந்த நம்பிக்கையை நான்
    உணர்ந்தேன்.
    ..கிறேன்.
    ...வேன்.
    ------
    "எங்கும் இனிதாக,
    எல்லாமும் நலமாக,
    பொங்கும் அருட்கடலே..
    புண்ணியனே அருள்புரிவாய்.

    கண்ணுள் ஒளியானாய்.
    கனிவின் வடிவானாய்.
    ஹரிசிவன் மகனே நீ
    கரையேற வரம் தருவாய்."

    -அருளே வடிவான அய்யப்பனில் கரைந்துருகி ஒரே ஒரு முறை நானும் சபரிமலைக்கு விரதமிருந்து சென்றதுண்டு.

    களைக்கக் களைக்கக் கல்லிலும்,முள்ளிலும் நடந்து
    சென்று கடவுள் அய்யப்பனைக்
    கண்ட போது அடைந்த பேரின்பத்தை விட, மாலை அணிந்த நாள்தொட்டு தினமும்
    கோயிலில் மாலை நேரத்தில்
    நடக்கும் பஜனையின் போது
    நானடைந்த பரவசம் அதிகம்.

    இறைவனை அடைய செல்லும்
    வழிகளில் இசையின் வழியே
    சிறப்பென்றுணர்ந்த சிலிர்ப்பான
    தருணங்கள் அவை.

    "வாழ்க்கை" திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்கவும், பார்க்கவும் நேர்ந்த
    தருணங்களிலும் அது மாதிரியான சிலிர்ப்பை உணர்ந்திருக்கிறேன்.

    காவி வேஷ்டியும், கருப்புச் சட்டையும், இடை இறுக்கிய
    சிவப்புத் துண்டுமாய்..

    நம் நடிகர் திலகம்-

    கடவுளை வணங்கும் கடவுள்
    போல் ஒரு கம்பீர அமர்வு.

    முன்னே துணி விரித்து, முடியாத பிள்ளையைக் கிடத்தியிருக்க..
    சேர்த்த கரம் பிரிக்காது சேவித்திருப்போர் கூட்டத்தின்
    இசை உருக்கம்...

    இதயத்துள் இறை நிறுவும்
    இசைஞானி...

    பாட்டு வரிகளால் மனம்
    நிறைகிற அய்யா.பஞ்சு.அருணாசலம்..

    அய்யா நடிகர் திலகத்தின் இசைக் குரலாகவே மாறி நின்ற
    அமரர். மலேஷியா வாசுதேவன்
    ...
    எல்லோரும்..
    மறக்க முடியாதவர்கள்.
    மறக்கக் கூடாதவர்கள்.
    ---------
    "சும்மா ஒரு வாயசைப்புதானே"
    என்கிற அசட்டை கிடையாது.
    கதைச் சூழலைத் தாண்டிய
    சுய திறமை வெளிப்பாடு
    கிடையாது..நம்மவரிடம்.

    நன்றாகக் கவனித்தால் தெரியும்.

    கதைப்படி அத்தனை
    மருத்துவர்களும் கைவிட்டு விட்ட தன் பிஞ்சு மகனின்
    உயிர் பிழைப்பை கடவுளிடம்
    மட்டுமே எதிர்நோக்கியிருக்கிற
    ஒரு அபாய சூழல். அம்மாதிரிச்
    சூழலில் ஒரு அழுத்தமான சோகம் ஒரு தகப்பனைக் கவ்விக் கொள்வது தவிர்க்கவே
    முடியாதது.

    பாடலை முழுமையாக கவனித்துப் பாருங்கள்.

    கண்களில் நிரந்தரமாய்ப்
    படிந்திருக்கும் கவலையும்,
    ஆண்டவனை இறைஞ்சிப்
    பாடும் அவரது முகத்தில்
    சூழலின் இறுக்கமும்..

    அழுது வீறிட்டுக் குழந்தை பிழைக்கும் வரைக்கும் மாறவே
    மாறாது.
    ------
    நமக்குப் பழகிய கலையின்
    தெளிவு விரவிய முகம் பக்கவாட்டில் பிரம்மாண்டமாய்
    காட்டப்பட ..நம் நடிகர் திலகம்
    வாயசைத்துப் பாடிக் கொண்டிருக்கிறார்.

    அவரை வியக்கும் நம் உள்ளமோ..அந்தப் பாடலின்
    வரிகளைக் கொண்டே அவரைப் பாடிக் கொண்டிருக்கிறது.

    "உயிருக்குள் உயிராக
    விளையாடும் ஜோதி.

    உலகத்தின் அசைவுக்கு
    நீதானே ஆதி."

    (நல்ல சமயத்தில் பாடலை நினைவூட்டிய, நட்புமிகு திருச்சி.திரு.பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
    நன்றி.)



    Sent from my GT-S6312 using Tapatalk

  15. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  16. #3078
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    "கலியுக நந்தி
    முத்துராக்கண்ணன்
    ஒரு தவிலு."-என்றதும்
    மேள முழக்கத்துடன்
    காட்டப்படும்
    அமரர் பாலையாவின்
    குலுங்கும் மார்புகள் தவிர
    படத்தில் வேறு
    கவர்ச்சி கிடையாது.

    அர்த்தமற்ற
    மசாலாக்கள் கிடையாது.

    அழகழகாய் பெண்களுண்டு.
    அணுவளவும்
    ஆபாசம் கிடையாது.

    இசையுண்டு.
    காதுகளுக்கு
    ஆபத்து கிடையாது.

    காதல் உண்டு.
    காமம் கிடையாது.

    இதில் வரும்
    நாகேஷ் போல
    சிரிப்பு மூட்டுகிற
    வில்லன்
    எந்தப் படத்திலும்
    கிடையாது.

    நம்பியார் இருக்கிறார்.
    கை பிசைந்து,
    முகம் உருட்டும்
    கெட்டதனம் கிடையாது.

    நாட்டியப் பேரொளியின்
    நடனப் பாதங்கள்
    வேறெவர்க்கும்
    கிடையாது.

    நடிகர் திலகம்-
    நாதஸ்வரம் போல.
    அவரின்றி
    இந்தப் படமே
    கிடையாது.

    நம்
    இதயத் திரையில்
    அடிக்கடி ஓடும்
    "தில்லானா
    மோகனாம்பாள்"
    திரைப்படத்தை,
    இன்று
    இன்னுமொருமுறை
    ஓட விட்ட
    கே. டி.வி.க்கு
    நன்றி சொல்லாவிடில்..
    எனக்கு
    மோட்சமே
    கிடையாது.

    Sent from my GT-S6312 using Tapatalk

  17. #3079
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Sent from my GT-S6312 using Tapatalk

  18. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, Russellbzy, RAGHAVENDRA liked this post
  19. #3080
    Junior Member Junior Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    10
    Post Thanks / Like

    Wonderful Comedy

    Wonderful comedy by three great stars of the Tamil film industry.



    These three legendary actors are irreplaceable.

  20. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, Russellbzy, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •