எப்படியாவது படத்தை ஓடவைக்கணும் என்ற ஒரே முடிவோடு பலவித சமரசங்களை செய்துகொண்டு கடைந்தெடுத்த மசாலா படைப்பிற்கும், பெரும்பாலான விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் முடிந்தவரை புதிய முயற்சிகளை முயற்சி செய்து செதுக்கப்படும் படைப்பிற்கும் உள்ள வசூல் வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் அதெப்படி பாக்ஸ் ஆபிஸ் என வருகையில் இரண்டையும் ஒரே தராசில் எடை போடவேண்டும்? ரீமேக் செய்யும்போதுகூட மூலப் படைப்பிற்கு எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்தாத வண்ணம், மூலம் பெரிதா, ரீமேக் பெரிதா என்ற விவாதங்களை உருவாக்கும் வண்ணம் படைக்கப்படும் படங்களுக்கும், ரீமேக் என்ற பெயரில் மூலப் படைப்பிற்கு முடிந்தவரை களங்கத்தை ஏற்படுத்தி, திரைக்கதையை முடிந்தவரை நீர்த்துப்போகச் செய்து பணம் பார்க்கும் வியாபாரப் படைப்புகளுக்கும் வித்யாசம் இருக்கு. அதனால கமல் படங்களை பாக்ஸ் ஆபிஸ் தளத்தில் என்றைக்குமே மற்ற சராசரி படங்களோடு ஒப்பிடக் கூடாது. அப்படியே ஒப்பிட்டாலும் இதுபோன்ற காரணிகளை மனதில் கொள்ளனும்.