-
17th October 2015, 02:14 AM
#3291
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th October 2015 02:14 AM
# ADS
Circuit advertisement
-
17th October 2015, 02:15 AM
#3292
Junior Member
Platinum Hubber
-
17th October 2015, 07:31 AM
#3293
Senior Member
Seasoned Hubber
முத்தையன்
எங்க ஊர் ராஜா, ஞான பறவை, ஸ்டில்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th October 2015, 07:31 AM
#3294
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் முக்காலும் உணர்ந்த ஞானி. அவருடைய பார்வையிலிருந்து எதுவுமே தப்ப முடியாது. எந்த ஒரு விஷயத்திற்கும் அதன் விளைவையும் முடிவையும் அவரால் கணிக்க முடியும், தீர்மானிக்க முடியும்.
அது போல அவருடைய படப்பாடல்கள் காலத்தை வென்று நிற்பவை., எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை.
நடிகர் திலகத்தின் பிற்காலப்படங்கள் பல அவை பெற வேண்டிய அங்கீகாரத்தைப் பெறாமலேயே போய் விட்டன. அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஞான பறவை. ஒரு படம் என்றாலும் உச்சம் தொட்டு விட்ட மனோரமா ஜோடியாக நடித்து பெருமை பெற்ற படம்.
இன்றைக்குப் பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் ஞான பறவை நடிகர் திலகத்தின் மேன்மையை சொல்லிக் கொண்டே பறக்கிறது.
இந்தப் பாடல் வரிகளைப் படியுங்கள்..
இதற்கு மேல் என்ன வேண்டும்.
ஆணவம் கொள்ளாதே ஞானப் பெண்ணே
அனைத்தும் அறிஞ்சவன் ஞானப் பெண்ணே
காத்தாடி நூல்கண்டு உன்னிடத்தில்
அந்த காத்து பிறப்பது என்னிடத்தில்
குதிரையின் கடிவாளம் உன்னிடத்தில் - அட
உன்னோட கடிவாளம் என்னிடத்தில்
ஞானப்பெண்ணே...ஏ.... ஞானப்பெண்ணே
ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே
அனைத்தும் அறிஞ்சவன் ஞானப்பெண்ணே
தரைக்குள் இருக்கிற உணவையெல்லாம்
தாய்போல் தருகிற மரங்களைப் பார்
தரைக்குள் இருக்கிற உணவையெல்லாம்
தாய்போல் தருகிற மரங்களைப் பார்
நிக்கிற வரைக்கும் நிழலாகும்
நீண்டு படுத்தால் விறகாகும்
நிக்கிற வரைக்கும் நிழலாகும்
நீண்டு படுத்தால் விறகாகும்
ஞானப்பெண்ணே ஏ..ஞானப்பெண்ணே
புல்லாங்குழல் உன் உடலாகும்
காத்து போனபின்னாலே என்னாகும்
புல்லாங்குழல் உன் உடலாகும்
காத்து போனபின்னாலே என்னாகும்
வானப்பறவைகள் வந்து வணங்கிடும்
ஞானப்பறவையம்மா - நான்
ஞானப்பறவையம்மா
வானப்பறவைகள் வந்து வணங்கிடும்
ஞானப்பறவையம்மா - நான்
ஞானப்பறவையம்மா
ஞானப்பெண்ணே ஏ..ஞானப்பெண்ணே
---- ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே.
குளிக்கப் போகின்ற நதிகளைப் பார்
கூட்டைச் சுமக்கிற பறவைகள் பார்
குளிக்கப் போகின்ற நதிகளைப் பார்
கூட்டைச் சுமக்கிற பறவைகள் பார்
மன்னிப்பு உண்டென்று மயங்காதே - பாவம்
பண்ணினால் தண்டனை தப்பாதே
ஞானப்பெண்ணே ஏ ஞானப்பெண்ணே
விளையாட பொம்மைகள் செய்தாயே
விதையினை செய்ய நீ கற்றாயா
விதியினைப் படம் எடு பார்ப்போமே
பழத்தினைக் காயாக்கிக் காண்போமே
ஞானப்பெண்ணே அடி ஞானப்பெண்ணே
ஞானப்பெண்ணே அடி ஞானப்பெண்ணே
ஆணவம் கொள்ளாதே ஞானப் பெண்ணே
அனைத்தும் அறிஞ்சவன் ஞானப் பெண்ணே
ஞானப்பெண்ணே அடி ஞானப்பெண்ணே
ஞானப்பெண்ணே அடி ஞானப்பெண்ணே
Last edited by RAGHAVENDRA; 17th October 2015 at 07:36 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
17th October 2015, 07:39 AM
#3295
Senior Member
Seasoned Hubber
அணு அணுவாக ரசிக்க வேண்டிய நடிப்பு..
அதே போல அந்தக் காத்து பிறப்பது என்னிடத்தில் வரியின் போது வலது கையை அநாயாசமாக இடமிருந்து வலமாக வீசும் லாவகம்...
குதிரையின் கடிவாளம் உன்னிடத்தில் வரியின் போது கண்கள் போகும் திசை... ஆஹா.. எத்தனையோ சொல்கிறதே..
உன்னோட கடிவாளம் என்னிடத்தில் என்ற வரிகளின் போது அவர் காட்டும் உடல் மொழி...அப்பப்பா... வலது கையை இடது கையோடு தட்டி அலட்சியமாக சிரித்தபடியே பாடும் பாங்கு...
சிங்கம் என்றால் அது எம் சிங்கம் தான்... 63 வயதில் என்ன ஒரு கம்பீரம்...
மீண்டும் பல்லவி பாடும் போது ஆணவம் கொள்ளாதே என்ற வரிக்கு கையை வலதும் இடதுமாய்க் கொண்டு சென்று ஒரு விரலால் சுட்டி அறிவுறுத்தும் பாங்கு உடல் மொழியே வரிகளைக் கூறுகிறதே...
அதே போல பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையே பின்னணி இசையில் தலைவரை விவேகானந்தராக, ராமகிருஷ்ணராக, சங்கராச்சாரியாராக, சாய்பாபாவாக மனோரமா உருவகம் செய்து பார்ப்பதும், ஒரு கட்டத்தில் ஆறு மனமே ஆறு பாடலைப் போன்றே திரைக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நடக்கும் போது தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே நடப்பதும்...
தரைக்குள் இருக்கிற உணவையெல்லாம் வரி முடிந்த உடனே எழுந்து நின்று இடது கையை கழுத்தின் பின்புறம் வைத்து தலையை சிலுப்பிக் கொள்வது ஆஹா.... என்னவொரு கண்கொள்ளாக் காட்சி...
வானப்பறவைகள் வந்து வணங்கிடும் ஞானப்பறவையம்மா வரியின் போது இரு கைகளையும் கன்னத்தில் வைத்து ஒரு புன்னகை தருவார் பாருங்கள்...
இதற்கடுத்து பல்லவி வரும் போது சுட்டு விரலை இடமிருந்து வலமாக வலமிருந்து இடமாக அசைத்து அறிவுறுத்தி முகத்தில் புன்னகைத்தவாறே அறிவுறுத்தும் பாணி...
இப்போது அந்த தனி மேண்டலின் ஒலிக்க, மேலே சொன்னது போல் தலையை மேலும் கீழும் ஆட்டியவாறே நடக்கும் கம்பீரத்தைப் பாருங்கள்.. இத்தனைக்கு திரைக்கு முதுகைத் தான் காட்டுவார்..
மன்னிப்பு உண்டென்று மயங்காதே வரி முடிந்தவுடன் மனோரமா நெற்றியில் சுட்டு விரலை வைத்து அழுத்தி எச்சரிக்கும் உடல் மொழி...
விதியினை படமெடு பார்ப்போமே பழத்தை காயாக்கிக் காண்போமே வரியின் போது விரல்களால் அவர் காட்டும் முத்திரை, தலையை சாய்த்தவாறு நம்மைப் பார்க்கும் பார்வை...அதில் தென்படும் ஓர் அலட்சியப் புன்னகை...
இறுதியாக பாடல் முடியும் போது வயல் வரப்பில் ஒரு குதி குதித்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடக்கும் நடை இருக்கிறதே...
இது வரை மேலே நீங்கள் படித்த விளக்கவுரையினை இப்போது நீங்கள் தலைவருடைய சிலையைப் பார்க்கும் போது அப்படியே உணர்வீர்கள்.
நடிகர் திலகத்தின் சிலையிலும் உயிர் இருக்கிறது.. ஆனால் அது அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புலப்படும்..
இப்படி ஓர் உன்னதமான பாடலை வழங்கிய மெல்லிசை மன்னருக்கும், பாடிய பாடகர் திலகத்திற்கும் வரிகள் வாலிக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
Last edited by RAGHAVENDRA; 17th October 2015 at 08:05 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
17th October 2015, 12:42 PM
#3296
Junior Member
Seasoned Hubber
17.10.1952
parasakthi mainthan thirayil avatharitha naal. Marakka mudiyuma
-
17th October 2015, 12:49 PM
#3297
Junior Member
Seasoned Hubber
From Facebook
இருண்டு கிடந்த தமிழ்த் திரையுலகில்..புதியதோர் விடிவெள்ளி..பராசக்தியின் குணசேகரன் உதயமான வெற்றித் திருநாள்..63ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று...17-10- 52
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th October 2015, 05:19 PM
#3298
Junior Member
Platinum Hubber
எனது அடுத்த பதிவு !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th October 2015, 05:42 PM
#3299
Senior Member
Seasoned Hubber
திரு முத்தையன் அவர்களே வருக
Originally Posted by
Muthaiyan Ammu
எனது அடுத்த பதிவு !
திரு முத்தையன் அவர்களே வருக, தலைவரின் பொன்னான திரு முகத்தை தரிசிக்க காத்து கொண்டு இருக்கிறோம். தலைவரின் பல முக தரிசனத்தை வழங்கும் நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க மற்றும் நன்றிகள் பல....
-
17th October 2015, 08:48 PM
#3300
Junior Member
Diamond Hubber
முத்தையன் அம்முஅவர்களே
நன்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks