-
19th October 2015, 05:42 AM
#1
Senior Member
Devoted Hubber
கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்
கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல்
அள்ளிகொடுத்தவர் நமது கலியுக கர்ணன்
வள்ளல் சிவாஜி கணேசன் அவர்கள்
ஆனால் இது எத்தனைபேருக்கு தெரியும்?
தான் செய்யும் நல்லகாரியங்களை தான் ஏன் வெளியே
தெரியப்படுத்தவேண்டும் என அவர் பெருந்தன்மையாக
நடந்துகொண்டிருக்கலாம்.
அண்மையில் சிலை விவகாரம் பத்திரிகைகளில் செய்தியாக
வெளிவந்தபொழுது இவர் நாட்டுக்கு என்ன செய்தார்
என்றெல்லாம் அவரின் கொடைபற்றி தெரியாமல்
அறியாமல் சிலர் எழுதியிருந்தார்கள்
அப்படிப்பட்ட சிலரின் அறியாமையை தெளிவுபடுத்த
அவரின் கொடைகள்பற்றிய திரி இது
நமது வள்ளலின் கொடைகள்பற்றிய தகவல்கள்
ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
அவற்றை இங்கே ஒன்றிணைப்போம்
வாருங்கள் நண்பர்களே
நன்றி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th October 2015 05:42 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2015, 05:48 AM
#2
Senior Member
Devoted Hubber
முகநூலில் இருந்து
தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழ...ுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015, 05:55 AM
#3
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015, 06:16 AM
#4
Senior Member
Devoted Hubber
முகநூலில் இருந்து
1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2015, 08:48 AM
#5
Senior Member
Devoted Hubber
திரை உலகில் நுழைந்த புதிதிலேயே உதவி செய்திருக்கிறார் என்றால்
வள்ளல்தனம் அவருடைய பிறவிக்குணமாக இருந்திருக்கிறது.
வாழ்க வள்ளல் சிவாஜி!
தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை என்றார். அதென்ன செய்திங்க? என்றேன். சிவாஜிகணேசன் நடித்து பராசக்தி என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில்இ அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்! என்றார். தொடர்ந்துஇ விகடன் பொக்கிஷம் பகுதியில்இ பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும்இ அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பேஇ அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்திஇ அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25இ000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்திஇ அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார் என்றார் தருமகுலசிங்கம். உண்மையில்இ 1953-ல் ரூ.25இ000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10இ 7இ 5இ 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் மூளாய். அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துஇ பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்கஇ சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் என் தங்கை என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த என் தங்கை நாடகத்தின் இறுதியில்இ பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்குஇ மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காகஇ கொழும்புஇ ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில்இ பராசக்தி புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண்இ பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் என் தங்கை நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் பராசக்தி படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள் என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜிஇ நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார். சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போதுஇ திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால்இ அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம் என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை. இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன் என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு வீரகேசரி பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடுஇ மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.) நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன். வாழ்க வள்ளல் சிவாஜி! .
நன்றி விகடன்
வாழ்க வள்ளல் சிவாஜி! என்ற தலைப்பில் விகடன் எனதுடயறி பகுதியில் .
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 02:47 AM
#6
Senior Member
Devoted Hubber
வள்ளல் குணம் பிறப்பிலேயே இருந்திருக்கிறது
இவர் சினிமாவுக்கு வருவதற்குமுன் வந்து நடித்து உழைத்த சீனியர் நடிகர்கள் எல்லாம்
100 200 தான் கொடுத்திருக்கிறார்கள் ம் ம் ம்
10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2015, 01:58 AM
#7
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2015, 09:22 PM
#8
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2015, 09:25 PM
#9
Senior Member
Devoted Hubber
ரூபாய் ஒரு லட்சம் உதவி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015, 10:50 PM
#10
Senior Member
Devoted Hubber
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks