-
20th October 2015, 10:17 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Govindraj Kpr
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களேபரங்கள் 18-10-2015 அன்று மிகவும் விசித்திரமானவையாக இருந்தன. ஒருவர் மீது ஒருவர் தனி நபர் விமர்சனங்கள் அதிகமாக இருந்ததேயன்றி சங்கத்தின் முன்னோடிகள் சங்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு செயலாற்றிய நிகழ்வுகள் போன்ற விவரங்களை அந்த தருணத்தில் மக்களுக்கு எடுத்துக் கூற யாரும் இல்லாத நிலை மிகவும் வருந்த தக்கது. குறிப்பாக புரட்சித் தலைவர் அவர்கள் நடிகர் சங்க வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் சிறப்பாக செயல்பட்டவர். இது குறித்து முன்பே நாம் பத்திரிக்கை இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளோம். தேர்தல் நடந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றிய வளர்ச்சிப் பணிகள்- கொண்டிருந்த ஈடுபாடு- செய்துள்ள புதுமைகள் என பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் ஏராளம் இருக்க ஊடங்களுக்கு முன்னால் பேசிய அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தனிநபர் விமர்சனங்கள் வைத்தார்களேயன்றி எவரும் சங்க முன்னோடிகள் குறித்த பெருமைகளை பேசவில்லை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு செய்துள்ள உதவிகள் செயல்பாடுகள் போன்றவை இனி எவரும் அங்கு செய்ய முடியாத அளவிற்கு செயலாற்றியுள்ளார். இன்று நடிகர் சங்கத்தின் அடையாளசின்னமான ஒரு தாய் நான்கு குழந்தைகளை அரவணைத்து செல்வதாக உள்ள அந்த அடையாள சின்னத்திற்கு ஆலோசனை சொல்லி அதை செயல்படுத்தியதே புரட்சித் தலைவர் தான் என்பதை யாருமே நினைவு கொள்ளவில்லை --ஆம் நமது தாய் சங்கமான தமிழ் பேசும் நடிகர் சங்கம் மற்ற மொழி பேசும் கலைஞர்ளை அரவணைத்து செல்வதாக இருக்க வேண்டும் கலை தாய்க்கு இன மொழி வேற்றுமைகள் இல்லை. எனவே மற்ற மொழி பேசும் கலைஞர்களும் கலைத்தாயின் பிள்ளைகள்தான் என பழம்பெரும் இயக்குனரும் நடிகர் சங்க ஆரம்பகால முன்னோடியுமான கே.சுப்பிரமணியம் அவர்களிடம் எடுத்து கூறி அதற்கான சின்னத்தை புரட்சித் தலைவர் செயல்படுத்திய வரலாற்று நிகழ்வை ஊடகத்தின் முன் பேசிய எவரும் நினைவு கொள்ளவில்லை. நடிகர் சங்கத்திற்கென்று ஒரு பத்திரிகை வேண்டும் அப்போது தான் சங்க விவரங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்ற நல் எண்ணத்தில் நடிகன் குரல் என்ற பத்திரிக்கை ஒன்றை தொடக்கி அதற்கு தானே பதிப்பாசிரியராக இருந்து மிகச் சிறப்பாக அதை செயல் படுத்தினார். புரட்சித் தலைவர். முன்பெல்லாம் ஒரு சில காட்சிகளில் நடிப்பவர்களை எக்ஸ்ட்ரா நடிகர்கள் என கூறுவர். இம் முறையை மாற்றியமைத்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் அவர்களை துணை நடிகர்கள் { junior artist } {அ} சகநடிகர்கள் என அழைக்க வேண்டும் என்ற முறையை உருவாக்கியவர் புரட்சித் தலைவர் என்பதை எத்தனை சங்க உறுப்பினர்கள் அறிவார்கள்.? இன்றைய சூழலில் வாக்குகளுக்காக மட்டுமே நாடக நடிகர்களை தேடி சென்று அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை காண முடிகிறது. ஆனால் அன்று எவ்வித பிரதி பலனுமின்றி அவர்களை அரவணைத்தவர் புரட்சித் தலைவர். குறிப்பாக வறுமையின் காரணமாக சில நடிகர்கள் மாத சந்தாவான 5 ரூபாய் கூட கொடுக்க முடியாமல் இருந்தார்கள். அவர்களின் நிலையை நன்குணர்ந்து அவர்கள் சார்பில் அந்த சந்தாவை புரட்சித் தலைவரே கட்டினார். பெண்களும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர், அவர்களும் நிர்வாகம் செய்ய இயலும் என நடிகை அஞ்சலி தேவி அவர்களை நடிகர் சங்க தலைவர் ஆக்கி பெண்களை பெருமை படுத்தியதும் புரட்சித் தலைவர் அவர்களே. சங்க உறுப்பினர்கள் மகிழும் வண்ணம் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை நடிகர் சங்க வளாகத்தில் தனது சொந்த செலவில் நடத்தி அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். சங்கத்தில் தனக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும் வண்ணம் நடிகர் சங்க முத்திரையை தனது கை விரல் மோதிரத்தில் அணிந்து கொண்டார்.- இப்படியாக புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றியுள்ள பணிகள் கணக்கிலடங்காதவை. நடிகர்களுக்கு மற்ற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ பட்டங்கள் அல்லது கௌவரங்கள் கிடைக்கப் பட்டால் உடனே ஓடிச்சென்று அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பு செய்வார். இப்படி நடிகர் சங்கத்தில் புரட்சித் தலைவரின் செயற்கரிய நல்ல செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலக அரங்கில் இந்திய நடிகர்களுக்கு குறிப்பாக -தமிழ் நடிகர்களுக்கு உயர் அந்தஸ்தை ஏற்படுத்தியவர் புரட்சித் தலைவர். ஆம் தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி வாயிலாக மக்களிடம் செல்வாக்கு பெற்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு நடிகர் உலக அரங்கில் முதல் முறையாக பொறுப் பேற்றுக் கொண்டு நடிகர் சமுதாயத்தை உயர்த்தினார். ஆயிரக்கணக்கான நலிந்த நடிகர்களுக்கு ஏராளமான உதவிகளை பல்வேறு வழிகளில் செய்துள்ளவர்.- தான் முதல்வராக அந்த காலங்களிலும் மறைந்த ஏராளமான நடிகர்களின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டவர். இப்படி நடிகர் சங்கத்திற்கான புரட்சித் தலைவரது நற்பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே புதிதாக பதவிஏற்றுள்ள பாண்டவர் அணி புரட்சித் தலைவர் சங்கத்திற்கு செய்துள்ள எண்ணிலங்கா பணிகளை நன்குணர்ந்து புதிதாக அமையவிருக்கும்---
நடிகர் சங்க கட்டடத்திற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டுவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதோடு உலக தமிழர்கள் அனைவரும் இதனால் மெத்த மகிழ்வு கொள்வார்கள் என்பதையும் நினைவு கூற விரும்புகிறோம். அப்படி ஒரு வேளை வேறு சில காரணங்களால் அப்படி செய்ய இயலாமல் போனால் புரட்சித் தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலையை குறைந்த பட்சம் கட்டிட வளாகத்தில் அமைக்க முன் வரலாம். அப்படி செய்யும் பட்சத்தில் எதிர்கால நடிகர் சங்க வரலாற்று ஆவணத்தில் உங்களது பெயர் நீக்கமற நிலைபெற ஒரு அற்புத வாய்ப்பாகவும் அது உங்களுக்கு அமையும் என்ற உண்மையையும் இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். .தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று இருந்தாலும் சரி கூடுதலாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் அமையப் பெறுவது கூடுதல் சிறப்பாக அமையும் என்பதே நமது கருத்து. அதுதான் அந்த மாமனிதர் சங்க வளர்ச்சிக்கு செய்துள்ள பணிகளுக்கு கைம்மாறு செய்வதாக அமையும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பாண்டவர் அணிக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வாழ்த்துக்கள்--
அன்பன் --ஆர்.கோவிந்தராஜ்
THANK YOU MY DEAR BROTHER K.P.R. GOVINDARAJ FOR THE EXCELLENT POSTING WITH NICE SUGGESTION.
YOU CHERISHED THE OLD AND SWEET MEMORIES OF OUR BELOVED GOD M.G.R.'s DEDICATED AND COMMENDABLE WORK FOR THE NADIGAR SANGAM.
THE ACHIEVEMENTS OF OUR BELOVED GOD M.G.R. MADE WHEN HE WAS HOLDING THE KEY POSITION IN NADIGAR SANGAM, IS EVER MEMORABLE ONE.
HE (OUR BELOVED GOD M.G.R.) ALSO GAVE WAY FOR OTHERS TO HOLD POSITIONS IN THE NADIGAR SANGAM, SUBSEQUENTLY. THIS SHOWS HIS GENEROSITY & NOBILITY.
WE ARE ALL PROUD TO BE THE FANS AND DEVOTEES OF SUCH A GREAT PERSONALITY
Last edited by makkal thilagam mgr; 20th October 2015 at 10:19 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th October 2015 10:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks