Results 1 to 10 of 67

Thread: கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    திரை உலகில் நுழைந்த புதிதிலேயே உதவி செய்திருக்கிறார் என்றால்
    வள்ளல்தனம் அவருடைய பிறவிக்குணமாக இருந்திருக்கிறது.





    வாழ்க வள்ளல் சிவாஜி!
    தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை என்றார். அதென்ன செய்திங்க? என்றேன். சிவாஜிகணேசன் நடித்து பராசக்தி என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில்இ அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்! என்றார். தொடர்ந்துஇ விகடன் பொக்கிஷம் பகுதியில்இ பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும்இ அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பேஇ அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்திஇ அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25இ000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்திஇ அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார் என்றார் தருமகுலசிங்கம். உண்மையில்இ 1953-ல் ரூ.25இ000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10இ 7இ 5இ 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் மூளாய். அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துஇ பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்கஇ சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் என் தங்கை என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த என் தங்கை நாடகத்தின் இறுதியில்இ பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்குஇ மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காகஇ கொழும்புஇ ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில்இ பராசக்தி புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண்இ பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் என் தங்கை நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் பராசக்தி படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள் என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜிஇ நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார். சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போதுஇ திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால்இ அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம் என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை. இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன் என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு வீரகேசரி பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடுஇ மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.) நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன். வாழ்க வள்ளல் சிவாஜி! .

    நன்றி விகடன்
    வாழ்க வள்ளல் சிவாஜி! என்ற தலைப்பில் விகடன் எனதுடயறி பகுதியில் .
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •