பார்த்திபன் மீது கொலைவெறியில் கெளதம்மேனன் - ட்விட் அதிர

விக்னேஷ் சிவன் இயகத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, ஆர்,ஜே,பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டாகியுள்ள படம் நானும் ரவுடிதான். படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் பலரும் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரின் நடிப்பையும் மேலும் பார்த்திபனின் வித்யாச முயற்சியையும் பாராட்டி வருகிறார்கள். தற்போது படத்திற்கு மேலும் ஒரு சிறப்பாக இயக்குநர் கௌதம் மேனன் பாராட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்து நான்கு ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில் ”நானும் ரவுடிதான் படம் நியூ ஏஜ் சினிமாவின் நல்ல துவக்கம். எதார்த்தமான நகைச்சுவை, விக்னேஷ் சிவன் கலக்கலான சினிமாவை கொடுத்துள்ளார். போடா போடி படம் தற்போது பலராலும் கவனிக்கப்படும். கவனிக்கப்படாமலேயே இருப்பதற்கு தாமதமாக கவனிக்கப்படுவது சிறப்பு எனலாம்”.
”நயன்தாரா ஒரு ஸ்டார் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பவர் ஹவுஸ் நயன் தான். விஜய் சேதுபதி பெரிய ஹீரோக்களின் லீக்கில் இதன் மூலம் அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்துள்ளார். பார்த்திபன் சார் உங்கள போடணும் சார்.
இதே மாதிரி வித்யாசமான வில்லன் கேரக்டரில் உங்களை எல்லாரும் போடணும் . கலக்கிட்டீங்க சார்”என கௌதம் மேனன் படம் குறித்து ட்விட்டர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் இன்னும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவில்லை. எனவே அடுத்த படத்தில் இது சாத்தியமாகலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.