-
27th October 2015, 08:48 AM
#3821
Junior Member
Seasoned Hubber
Mr Muthaiyan Ammu
Thanks a lot for the wonderful photos of NT in En Thambi which is my one of the favourite movie.
-
27th October 2015 08:48 AM
# ADS
Circuit advertisement
-
27th October 2015, 11:41 AM
#3822
Senior Member
Seasoned Hubber


தகவல் மற்றும் அழைப்பிதழ் நிழற்பட உபயம் - புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி மன்றம் மற்றும் திரு அண்ணாதுரை, அகில இந்திய சிவாஜி மன்றம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th October 2015, 01:09 PM
#3823
Junior Member
Seasoned Hubber
It is time to choose the next hubber to start the Part 17 of this glorious thread and there are many stalwarts who
can be given an opportunity like Mr Senthilvel,Mr Adiram,Mr Athavan Ravi to name a few. The decision of the
moderator is final.
-
27th October 2015, 05:28 PM
#3824
அன்பு நண்பர்களே,
நமது திரியின் அடுத்த பாகத்தை துவக்கி வைக்க நமது ஆவணக்களஞ்சியம் திரு. செந்தில்வேல் அவர்களே பொருத்தமானவர் என்பது எனது அபிப்பிராயம்.
எனவே நண்பர்கள் அனைவரும் அவரை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
-
27th October 2015, 07:08 PM
#3825
Junior Member
Senior Hubber
நாளின் பெரும்பகுதி
நடிகர் திலகத்திற்காக...
கற்றறிந்த படிப்பறிவு,
அந்த கலையரசரைப் பற்றி
சொல்லப்பட்டதையெல்லாம்
வாசிப்பதற்காக...
தெளிந்த நினைவாற்றல், அந்த
வாசிப்பையெல்லாம் மனனம்
செய்வதற்காக...
"அ" போட்டுத் துவங்கி, பழகி, சிறந்த எழுத்தறிவெல்லாம் அந்த அன்பு தெய்வத்தின் கீர்த்தி
எழுதுவதற்காக...
-என்றே வாழ்ந்து வரும்
இனிய நண்பர் திரு. செந்தில்வேல் அவர்களையே
திரி-17 ஐ துவக்கிடச் செய்ய வேண்டுமென்று நானும்
அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.
எந்தச் சுனாமிக்கும் அழியா
வண்ணம் அவர் சேகரம் செய்து
தந்திருக்கும் ஆவணப் பதிவுகளுக்கெல்லாம், நாம்
அவருக்குச் செலுத்த வேண்டிய
பதில் மரியாதைக்கு ஒரு துவக்கமாகவும் அது அமையும்
என்பது இந்த எளியவனின்
கருத்து.
நிற்க.
மதிப்புக்குரிய திரு.s.வாசுதேவன் அவர்கள்,
திரி-17 ஐ துவக்கி வைக்க,
திரியின் ஜாம்பவான்கள் இருவரின் பெயர்களையடுத்து
இந்தச் சிறுவனின் பெயரையும்
மூன்றாவதாய் சிபாரிசு செய்திருந்ததைப் பார்த்து
அதிர்ந்தாலும், மிகக் குறுகிய
காலத்தில் அவரைப் போன்ற
நல்லிதயங் கொண்டோரின்
அன்பில் நிறைந்திருக்கிற
பாக்யம் எனக்குக் கிட்டியிருப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். நன்றிகள் அவருக்கு.
அன்பு நண்பர் திரு.செந்தில்வேல் அவர்களை
முதலில் சிபாரிசு செய்த
திரு.s.வாசுதேவன் அவர்களுக்கும்,
அதனை உரக்க வழிமொழிந்த மதிப்புக்குரிய திரு.ஆதிராம் அவர்களுக்கும்..
எனது நன்றிகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th October 2015, 07:47 PM
#3826
Junior Member
Devoted Hubber
From writter Mr. Sudhangan's face book,

செலுலாய்ட் சோழன் – 96
` சரஸ்வதி சபதம்’ படத்தின் ஆரம்ப காட்சியிலேயே படம் சூடு பிடிக்கும்!
நாரதரான சிவாஜி சரஸ்வதியான சாவித்திரியை பாராட்டிக்கொண்டு வருவார்!
தன்னுடைய கோமாதா பூஜையில் வந்து கலந்து கொண்டதற்காக, நீயும் வந்து அழைப்பில்லாமேலே கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்பார் சரஸ்வதி!
அழைப்பில்லாவிட்டாலும், வரவேண்டும் வாய்ப்பு என்றிருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என்பார் நாரதர்!
`உன்னை அழைப்பதில் தவறில்லை! ஆனால் உன்னை அழைத்தால் ஏதாவது பிரச்னையை உருவாக்கிவிடுவாயே!
உடனே நாரதர் சிவாஜி இந்த இடம் இன்று `லட்சுமி கடாட்சம்’ ஆக இருக்கிறது’ என்பார்
உடனே சரஸ்வதி நாரதரை அருகில் அழைத்து,` என்ன நாரதரே இந்த இடத்தை லட்சுமி கடாட்சம் என்கீறீர்கள்!. சரஸ்வதி கடாட்சம் என்று சொல்லும்! இப்படியாக விவாதம் ஆரம்பித்து! சரஸ்வதியின் கணவர் பிரம்ம தேவனும், நாரதனும் கல்வியை விட செல்வம்தான் சிறந்தது என்பார்கள்!
உடனே வீறுகொண்ட சரஸ்வதி, செல்வம் இருக்கும் போகும், ஆனால் கல்வியே நிரந்தரம். அதனால் நான் உடனே பூலோகம் சென்று வாய் பேச வராத ஒரு ஊமையை பேசவைத்து அவனை ஒரு பெரும் புலவனாக்கி, நாடாளும் அரசர்கள் கூட அவன் காலடியில் விழ வைக்கிறேன்! என்று கிளம்பிவிடுவார்.
கதை அங்கேயே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்!
அடுத்த நாரதன் அங்கேயிருந்து அலைமகளான லட்சுமியிடம் போய் இந்த விவகாரத்தை பற்ற வைப்பார்!
அங்கே போனதும், லட்சுமி கேட்கும் போது செல்வத்தை விட கல்விதான் சிறந்தது என்பான்!
சீற்றமடைவாள் லட்சுமி!
நாரதன் சொன்னதை திருமாலும் ஆமோதிப்பார்!
உடனே லட்சுமி, ` அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்கும் ஒருவரை ராஜ்ஜியத்திற்கே ராஜாவாக்கி, படித்தவர்கள் அனைவரையும் அவர் காலில் விழ வைத்துக்காட்டுகிறேன் ‘ என்று கிளம்புவார்.
அடுத்த நாரதன் மலைமகளான பார்வதியை பார்க்க கைலாயம் போவார்!
இங்கே சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் நடக்கும் சண்டையை பற்றி அங்கே பத்த வைப்பார்!
உடனே சீறுவார் பார்வதி!
`நான் ஒருத்தி இருப்பதை அந்த இருவருமே மறந்துவிட்டார்கள். இந்த இரண்டையும் விட வீரமே சிறந்தது! வீரமில்லையேல், ஒரு நாட்டில் கல்வியும், செல்வமும் ஏது? இப்போதே பூலோகம் சென்று ஒரு கோழையை வீரனாக்கி அவன் முன்பு கல்வியையும் செல்வத்தையும் மண்டியிடச் செய்கிறேன் என்று கிளம்புவார்!!
எது சிறந்தது?
என்கிற கேள்விகள் இப்போது எழும்!
அந்த கேள்விகள் சரஸ்வதி சபதம் படத்தின் கதை!
புராண பின்னனியில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை!
எப்படியெல்லாம் கதை யோசித்திருக்கிறார்கள் அன்றைய இயக்குனர்கள்!
கல்வியா? செல்வமா ? வீரமா? எது சிறந்தது இதுதான் இன்றைய காலகட்டத்திலும் நம் சமூகத்தின் முன் நிற்கும் கேள்விகள்!
இன்றைக்கு நாம் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியிருக்கிறோம்!
தகவல் தொடர்பு மிகவும் எளிதாகிவிட்டது!
உலகமே ஒரு கணினியின் முன் ஒரு கிராமமாகிவிட்டது!
ஏராளமான படித்தவர்கள் இருக்கிறார்கள்!
புலம் பெயர்கிறார்கள்!
அந்நிய நாட்டுக்காக நாம் வேலை செய்கிறோம்!
இந்த இந்திய சூழலில் நாம் நமக்கே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான் கல்வியா / செல்வமா? வீரமா ?
நம் நிலையென்ன?
கல்வி என்பது ஞானத்திற்கு என்பது மறைந்துவிட்டது.
கல்வி என்பது செல்வம் சேர்ப்பதற்கான ஒரே வழியென்றாகிவிட்டது!
கல்விக் கூடங்கள் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மனிதர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது!
செல்வம் இருப்பவனிடம் தாழ்பணிந்து, காரியத்தை சாதித்துக்கொள்வதுதான் வீரமென்றாகிவிட்டது!
அப்ப்படியானா இந்த கேள்விகளுக்கு விடை தான் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு ஒரு பாடல் வாயிலாக இந்த படத்தில் பதில் சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.!
இதைவிட இந்த கேள்விகளுக்கு சிறந்த பதிலை கொடுத்துவிடமுடியுமா என்பது சந்தேகம்தான்!
இந்தப் பாடலை பெரும்பாலான் ஊடகங்கள் ஒலி, ஒளிபரப்புவதேயில்லை!
பாடல் இதுதான்!
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா ?
ஒன்றில்லாம மற்றொன்று உருவாகுமா ? – இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?
கற்றோர்க்குப் பொருளின்றிப் பசிதீருமா – பொருள்
பெற்றார்க்கூ அறிவின்றி புகழ் சேருமா?
கற்றாலும் பெற்றாலும் பலமாகுமா ? வீரம்
காணாத வாழ்வென்றும் வாழ்வாகுமா ?
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா – பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் படைத்தவன் யாராயினும் – பலம்
படைத்திருந்தால் அவனுக் கிணையாகுமா ?
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது – அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றையொன்று பகைத்தால் உயர்வேது – மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?
மூன்று தலைமுறைக்கும் நிதிவேண்டுமா – காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
தோன்று பகை நடுங்கும் பலம் வேண்டுமா – இவை
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா ?
படத்தின் கதைக்கான அடிப்படை 3 கேள்விகளையும், அதன் ஆழத்தையும், அதற்கான பதிலையும் பாடலிலேயே சொல்லியிருப்பார்!
கண்ணதாசன் ஒரு படத்திற்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தின் கதையை பாடலிலேயே எளிமையாக விளக்கிவிடுவார்!
இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம்!
`சரஸ்வதி சபதம்’ படத்தின் இன்னொரு சிறப்பே அதன் பாத்திர தேர்ந்தெடுப்பு!
அந்த பாத்திர தேர்வைக் கண்டே மக்கள் மிரண்டு போனார்கள்!
சிவாஜிக்க்கு நாரதர், புலவன் வளையாபதி வேடம்
கலைமகளாக சாவித்திரி!
அலைமகளாக தேவிகா !
மலைமகளாக பத்மினி!
பிச்சையெடுக்கும் பெண்ணாக இருந்து மகாராணியாக மாறும் வேடத்தில் கே.ஆர். விஜயா!
கோழையாக இருந்து வீரனாக மாறும் வேடத்தில் ஜெமினி கணேசன்!
அடுத்துதான் திரைக்கதையின் சிறப்பே விளையாடும்!
சிவாஜி படங்களின் மூலமாக தமிழை கற்றுக்கொண்டேன் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு!
அதற்கு உதாரணமாக இந்தப் படத்தையே சொல்லலாம்!
மேலோகத்தில் நாரதன் கிளப்பிய புயல் இப்போது பூலோகத்திற்கு வரும்!
முதலில் அப்பாவி ஊமை ஒருவன் நந்தவனத்தில் பூ பறிக்க போகும்போது காவலர்கள் ரத்தம் வரும் வரையில் அடித்துவிடுவார்கள்!
தலைமை காவலாளி நாகேஷ் வந்து காப்பாற்றுவார்!
அந்த ஊமை ஒரு புலவரின் மகன்!
தன் புலமை தன்னோடு போய்விட்டதே என்று நொந்து கொண்டிருக்கும் புலவர்!
காயம்பட்ட பிள்ளையைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்!
அந்த பிள்ளையோ ரத்தக் காயத்தோடு அழுதபடி, சரஸ்வதியின் படத்திற்கு மாலை போட்டுக்கொண்டேயிருப்பார்!
அப்போது கலைமகள் வந்து ஆசீர்வதிப்பாள்!
அந்த ஊமையின் உருவம் மாறும்!
உச்சரிப்புகள் வரு!
அவன் இப்போது பாட ஆரம்பிப்பான்!
அங்கே தான் கண்ணதாசனும், நாகராஜனும் புகுந்து விளையாடியிருப்பார்கள்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2015, 10:11 PM
#3827
Junior Member
Senior Hubber
திரு.பரணி சார்...
செலூலாய்ட் சோழன்-96
கட்டுரையில், " சரஸ்வதி சபதம்" படத்தில் நடிகர் திலகம்
ஏற்ற புலவன் கதாபாத்திரத்தின்
பெயர் "வளையாபதி" என்றிருக்கிறது.
அது, "வித்யாபதி" அல்லவா?
-
27th October 2015, 10:52 PM
#3828
Junior Member
Veteran Hubber
I second the proposal by Mr.S.Vasudevan to name out Mr.S.Senthilvel to inaugurate
the elite and prestigious part 17 of our beloved NT's thread soon!!
senthil
-
28th October 2015, 06:31 AM
#3829
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2015, 06:32 AM
#3830
Senior Member
Seasoned Hubber
முத்தையன்
என் தம்பி என்று அனைவரும் அழைக்கும் அன்பைப் பெற்ற தங்களின் என் தம்பி நிழற்படங்கள் ஒவ்வொன்றும் அருமை.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks