-
31st October 2015, 11:00 PM
#101
Junior Member
Regular Hubber
வாழ்த்துக்கள் திரு.ராகவேந்திர சார் .8000 பதிவுகள் 80000 ஆக. நேற்று இரவு 11 மணிக்கு தான் தங்கள் ரோஜாவின் ராஜா பதிவை படித்தவுடன் படம் முழுவதையும் பார்த்துவிட்டு தான் தூங்கினேன். எனக்கு மிக பிடித்த படம் . படம் ரீலிசுக்கு முதல் நாள் கொடைக்கானலில் இருந்தேன் .சுற்றுலா ட்ரிப் கேன்சல் செய்துவிட்டு ஒபெனிங் ஷோ பார்த்துவிட்டு மீண்டும் மாலை காட்சி பார்த்தது ,ரசித்தது என்னவென்று சொல்வது .வசந்த காலங்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st October 2015 11:00 PM
# ADS
Circuit advertisement
-
31st October 2015, 11:05 PM
#102
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-43
"நீதி".
தனக்கு இஷ்டமான "இரவு
ராணி"யைப் பங்கு போட
வரும் மைனரை அடித்துக்
கீழே தள்ளி விட்டுக் கிண்டலாகப் பாடும் கஜல் பாட்டு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
31st October 2015, 11:08 PM
#103
Junior Member
Regular Hubber
காதல் தோல்வியில் ஒருவருக்கு எப்படி பித்து பிடிக்கும் என்பதை மெது மெதுவாக மாறுதல் உண்டாவதை மிக அழகாக நேர்த்தியாக நமது கலை தெய்வம் அசதி இருப்பார்.முரளி சார் சொன்னதுபோல் 1972-73 க்களில் வந்திருந்தால் இன்னொரு வசந்த மாளிகையை பார்த்தது போல் உணர்வு இருந்திருக்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 11:16 PM
#104
Senior Member
Seasoned Hubber
நீங்கள் நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட அடுத்த காட்சியையும் எழுதியிருக்கலாம். மகன் நிலை கண்டு வேதனைப்பட்டு மனம் உடைந்து அந்த அதிர்ச்சியில் தாய் இறந்து விட, கீழே விழுந்து கிடக்கும் தாயைப் பார்த்து, அந்த நேரத்தில் மனம் பேதலிக்க தொடங்கி ஒரு சித்தப் பிரமை தொடங்கும் நிலையை நடிகர் திலகம் வசனத்திலும் உடல்மொழியிலும் கொண்டு வரும் அழகு இருக்கிறதே. அடேடே செத்துப் போயிட்டியா என்று பேச ஆரம்பித்து தான் அழாமல் பார்வையாளர்களை கலங்க வைக்கும் அந்த நடிப்பு இருக்கிறதே, அதையெல்லாம் யாரால செய்ய முடியும், இவரை தவிர?
முரளி சார்
தாங்கள் சொன்ன காட்சியை எந்தக் காலத்திலும் நம் யாராலும் மறக்க முடியாது. அது மட்டுமல்ல அன்றைக்கு அந்த செய்தி வெளிவந்த நவசக்தி பத்திரிகை எல்லா இடத்திலேயும் விற்றுத் தீர்ந்து விட்டது. நான் முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டதால் தப்பித்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவற்றையெல்லாம் பராமரிக்க முடியாமல் போய் விட்டது. அப்போதெல்லாம் நவசக்தியும் தினத்தந்தியும் தினமும் வாங்கி விடுவேன். வீட்டில் எனக்காக தினத்தந்தி வரும். நவசக்தி எனக்கு கிடைக்கக் கூடிய சில்லறைக் காசுகளை வைத்து சேர்த்து வைத்து வாங்குவேன். அந்த மாதிரி சேர்த்து வைத்ததில் கொஞ்சம் மிச்சம் மீதி இன்னும் இருக்கிறது. அதிலிருந்து ஓரளவிற்கு சில நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். என்னிடமிருக்கக் கூடிய அந்த கொஞ்ச ஆவணங்களும் ஒரிஜினலாக எப்போது பிரசுரமானதோ அந்த தேதியில் வாங்கியவையாகும். கிட்டத்தட்ட 40 அல்லது 45 ஆண்டுகளாக .. சொல்லப் போனால் ஓரு சில பேப்பர் கட்டிங்குகள் 50 ஆண்டுகளாகவும் இருக்கின்றன. என்றாலும் அதில் வசூல் விவரம் போன்றவை இல்லாமல் வெளியீடு ரிசர்வேஷன் போன்றவையே உள்ளன. அவை எல்லாவற்றையும் சமீபத்தில் தான் சாதனைத் திரியில் மீள் பதிவு செய்துள்ளேன். அப்படி நவசக்தியில் வந்த செய்தி கிட்டத்தட்ட சாந்தி தியேட்டரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி பிளாசாவில் முதல் நாள் மாலைக்காட்சியில் தொடங்கி படம் ஓடும் வரையிலும் அந்தக் காட்சி ஷூட்டிங்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.
பிளாசாவைப் பொறுத்த மட்டில் படம் அமர்க்களமாகப் போனது கடைசி நாள் வரையில் தொய்வு விழவில்லை. ஆனால் விளம்பரம் போதவில்லை.
நீங்கள் குறிப்பிட்ட காட்சியைப் பற்றி எழுத ரொம்ப ரொம்ப ஆசையோடு தான் இப்போதும் இருக்கிறேன். ஆனால் படிப்பதோடு நிறுத்தாமல் அதைப் பார்த்தும் உணர வேண்டும் என்பதற்காக நாம் காணொளியை உடன் தரவேண்டியுள்ளது. பாழாய்ப்போன இந்த டிவிடி கம்பெனி, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் படத்தை முழுங்கி விட்டார்கள். அவர்களாக செய்தார்களா அல்லது அவர்களுக்குக் கிடைத்த ஒரிஜினலே அப்படியா என்பது தெரியாமல் அவர்களையும் குறை சொல்ல முடியாது. அப்படி பாதிக்கப்பட்ட படம் ரோஜாவின் ராஜா.
டிவிடியில் சாம்ராட் அசோகன் நாடகம் இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட அந்தக் காட்சி இல்லை.
ஓட்றா ஓட்றா பாட்டு இல்லை.
டைட்டிலும் தராசு பட டைட்டில்.
இருப்பதை வைத்துத் தான் நான் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய காட்சி முடிந்தவுடன் கடற்கரையில் நடிகர் திலகம் பேசும் காட்சி வருவதை அந்த யூட்யூப் காணொளியில் நீங்கள் காணலாம். இதிலிருந்து எவ்வளவு நேர படக்காட்சி இந்த டிவிடியில் இடம் பெறவில்லை என்பதைப் பார்ப்பவர்களே யூகித்துத்கொள்ளலாம்.
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
Last edited by RAGHAVENDRA; 31st October 2015 at 11:41 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 11:30 PM
#105
Senior Member
Seasoned Hubber
எட்டாயிரம் பதிவுகளுக்கும் ரோஜாவின் ராஜா பதிவிற்கும் வாழ்த்துக் கூறிய நண்பர்கள் கோபால், சந்திரசேகர், ஆதிராம், நெய்வேலி வாசு, பெங்களூர் செந்தில், மதுரை சந்திரசேகர் உங்கள் ஒவ்வொருக்கும் என் உளமார்ந்த நன்றி.
1976ல் தான் உத்தமன் வெளியாகி சக்கைப் போடு போட்டது. ரோஜாவின் ராஜாவைப் பொறுத்த மட்டில் ஆறின கஞ்சியானதாலும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு இல்லாததாலும் போதிய விளம்பரத்தை செய்யாததாலும் தான் படம் மிகப் பெரிய வெற்றியை அடையவில்லை. நாங்கள் இரு தரப்பிலும் அலையாய் அலைந்தது தான் மிச்சம். சென்னை நகர விநியோகஸ்தரைப் பொறுத்தமட்டில் அவருடைய பங்கை நன்றாக செய்தார். தயாரிப்பாளர் தரப்பில் தினத்தந்தியின் அனைத்துப் பதிப்புகளிலும் விளம்பரம் நன்கு வருமாறு பார்த்துக்கொண்டிருந்தால் நிச்சயம் அப்படத்தின் வெற்றி மக்களிடம் சென்றடைந்திருக்கும். வழக்கம் போல தவறான பிரச்சாரங்களினால் வெற்றிப்படம் கூட தோல்விப்படமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டு இன்று வரை தொடர்வது பரிதாபம். நூறு நாட்கள் ஓடவில்லையே தவிர பொருளாதார ரீதியில் கணிசமான வசூலைக் கொடுத்த படமே ரோஜாவின் ராஜா.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 11:54 PM
#106
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-44
"புதிய பறவை."
சரோஜாதேவி, வி.கே.ஆர்
ஆகியோர் தன் வீட்டிற்கு
விருந்தாளிகளாக வந்திருக்கும்
மகிழ்விலிருக்கும் போது,
நடிகவேளிடம் இருந்து வரும்
தொலைபேசி அழைப்பு மணிச்
சத்தம் கேட்டதும்,பயத்திலும்,அதிர்ச்சியிலும் முகம் இறுகி,
வில்லாய் நிமிரும் ஒரு புருவம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
31st October 2015, 11:56 PM
#107
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-45
"பாரத விலாஸ்."
'சக்கைப்போடு போடு ராஜா'
பாடல்.
மனசாட்சியின் முன் அசடு
வழிகிறவராய்.."போராட்டம்"
என்ற வரி வருகிற போது,
கண்கள் உருட்டி, கைகளைச்
சுழற்றிச் செய்யும் வேடிக்கையான குழந்தைச்
செய்கைகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
31st October 2015, 11:59 PM
#108
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-46
"சபாஷ் மீனா."
"காணா இன்பம்" பாடல்.
காதலின் உற்சாகத்தில்,
வானம் பொழியும் மழை
தனக்காகவே பெய்வது போன்ற
ஒரு உணர்வுடன் நனைவதும்,
முடி சிலிர்ப்பதும், மழைச் சகதியில் வீழ்ந்து புரளுவதும்...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st November 2015, 04:53 AM
#109
Senior Member
Devoted Hubber
8000 பதிவுகள் வாழ்த்துக்கள் ராகவேந்திரா சார்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st November 2015, 04:56 AM
#110
Senior Member
Devoted Hubber
டியர் முத்தையன் சார்,
8000
பதிவுகளைக்கடந்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். தங்கள் உடல்நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks