-
9th November 2015, 11:54 PM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
இப்போதெல்லாம் படம் எப்படியாவது ஓடி வசூல் செய்யணும், அதுவும் முதல் நாளில் இத்தனை கோடி, அடுத்தடுத்த நாட்களில் இவ்வளவு, முதல் வாரக்கடைசியில் இவ்வளவு.. அப்பப்பா! கமல் படத்தை முதன் முதலில் பார்த்துவிட்டு வருகையில் எதை பேசணும், பகிரணும் என்பதிலேயே நடப்புகால போக்கு ஆரோக்யமற்றதாக போய்விட்டது. அதுவும் ஒரு படி மேலே சென்று 'UlagaNayagan Is Back' என்றெல்லாம் எழுதிகிறார்கள். கமல் என்ன திரைத்துறையே விட்டு சென்று 5/10 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி வருகிறாரா? இல்லை மற்ற நடிகர்களைப் போல தொடர்ந்து ஐந்தாறு படங்கள் கதையில் சொதப்பியும், வசூல் ரீதியாக மண்ணைக் கவ்வியும், இந்த ஒரு படத்திலாவது வசூல் செய்யணும் என்ற கட்டாயத்தில் இருந்திருக்கிறாரா? மற்ற நடிகர்களைப் போல, வசூலை மட்டுமே பிரதானமாக நம்பி செயல்படுபவர் கமல் அல்ல. வசூல் என்றைக்குமே ஒரு by-product தான். Content தான் முதன்மையானது.
அட நீங்க வேற இதெல்லாம் சொல்லிக்கிட்டு - இப்ப நீங்க சொன்ன விஷயத்துக்காகவே இங்க அடிதடி நடக்க வாய்ப்புகள் உண்டு..
கமல் - 2015ல இல்ல, 20 வருஷமாவே இப்படித்தான் அவரோட படங்கள் வரும்போது - இல்லாத, பொல்லாத 'நொள்ளு நொசுக்கு' எல்லாம் சொல்லுவாங்க - அதுவும் படத்தை பார்க்காமவே!
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th November 2015 11:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks