Page 63 of 401 FirstFirst ... 1353616263646573113163 ... LastLast
Results 621 to 630 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #621
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஆதவன் சார்
    தங்களது தரிசனம் மற்றும் இருமலர்கள் பதிவுகள் மிக அருமை.
    நான் தற்பொழுது தான் மாதவி பொன் மயிலாள் பற்றி எனது சக சிறு வயது ஊழியரிடம் பேசிவிட்டு வந்தால் உங்க பதிவு அப்படியே இருக்கிறது.
    அந்த சக ஊழியர் subordinate debt என்றால் என்ன வென்று கேட்டார் .நான் அதற்க்கு தான் நடிகர் திலகம் படம் பார்க்க வேண்டும் .பார்த்திருந்தால் ஈசி யாக புரிந்திருக்கும் என்று இருமலர்கள் படத்தை உதரணமாக கூறினேன்.
    கூறிவிட்டு மாதவி பொன்மயிலால் பாடலில் பத்மினி அவர்கள் பாடல் தொடங்கும் போது ஆடலில் தூள் கிளப்பி கொண்டிருக்கும் போது எங்களது தலைவர் சீன வரும் பொது முகத்தை திருப்பி தோளில் கிடக்கும் சால்வையை சரி செய்து பாடிகிட்டே ஒரு நடை நடப்பாரே முடிந்தது எல்லாமே என்றேன்.
    subordinate debt is an additional debt to the main debt.

  2. Likes KCSHEKAR, Russellmai, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #622
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-1. இரு மலர்கள்.
    ---------------------------
    ...தொடர்கிறது...
    ----------------

    பத்து நிமிஷ நேரத்தில் முடிந்து
    போகிற ஒரு சினிமாப் பாட்டு
    அரை நூற்றாண்டு காலமாக
    அத்தனை மனங்களிலும்
    வாழ்கின்றதென்றால்...

    "மாதவிப் பொன் மயிலாளில்"
    என்ன வசிய மருந்து பூசினார்கள்..?

    மிகச் சிறந்த இசையமைப்பையும்,
    திறமை மிகுந்த ஒரு பாடலாசிரியரின் தேர்ந்த
    எழுத்தையும்,நம் உயிரோடு நிறைந்து விட்ட ஒரு உன்னதக் குரலையும் மீறி இந்தப்
    பாடலின் சூழலை அற்புதமாய்
    உள்வாங்கிக் கொண்டு, நடிகர் திலகமும்,நாட்டியப் பேரொளியும் திறம்பட வெளிப்படுத்தும் பாவனைகள்...
    மாதவிப் பொன் மயிலாளை
    மகத்தான வெற்றியடையச்
    செய்தன.

    ஓயாமல் சண்டையிட்டுக்
    கொள்ளும் ஒரு ஆணும்,பெண்ணும் மேடையில்
    ஒன்றாக நடிக்க வேண்டிய
    சந்தர்ப்பம் வரும் போது,
    அவர்களுக்குள் நிலவும்
    மென்மையான பூசலையும்
    காட்ட வேண்டும். அதே சமயம்,
    பார்த்துக் கொண்டிருக்கும்
    நூற்றுக்கணக்கானோரை
    பரவசப்படுத்தும் வகையில்
    கோவலன்- மாதவியாக
    நடிக்கவும் வேண்டும்.

    பின்னியிருக்கிறார்கள்...
    நம்மவரும்,நாட்டியப் பேரொளியும்.

    அதுவும், கோவலனாய்,மாதவியின் கையைப் பற்றி
    இழுத்துச் சுழற்றி விட, கட்டிலில் விழுந்த மாதவி
    நொடியில் உமாவாய் மாறி
    கோபம் காட்ட, சிரிப்பு மாறாத
    கோவலன் ஓரிரு விநாடிகள்
    சுந்தராய் மாற..

    வாழ்ந்திருக்கிறார்கள்.



    அனுதினமும் சந்திக்கிற வாய்ப்பிருக்கிறது. அழகு மொத்தமும் உமாவிடம் இருக்கிறது. அவளைச் சீண்டும்
    போதெல்லாம் சுந்தரின் காதல்
    புரிகிறது.

    அவர்களுக்குள் ஏன் காதல்
    இல்லாமல்..மோதல்?

    நமக்கு மனசு கிடந்து அடித்துக்
    கொள்கிறது.

    இருவரும், நாடகம் துவங்கும்
    முன் சண்டை போட்ட போது
    குறுக்கிட்டுத் தடுக்கும் பேராசிரியர் சுந்தரவதனமாக
    வரும் நாகேஷ், "உங்க மிச்ச
    சொச்ச சண்டையெல்லாம்
    நாடகம் முடிஞ்ச பிறகு
    கொடைக்கானல் போறோமே..
    அங்கே வச்சுக்கங்களேன்"
    என்றாரே?

    அவர்களைப் பற்றி நமக்கு
    கொடைக்கானலில்தான்
    விபரமாகத் தெரிய வருமோ?
    ------------
    கொடைக்கானல்.

    "என்னைப் பார்க்காமல் போய்
    விடுவாயா?"- என்று கர்வமாய்ச் சிரிக்கிறது.. அழகான இளம்பெண் போல.

    துடிப்பு மிக்க மாணவர் குழாம்
    அங்கே சந்தோஷமாய்ச் சுற்றி
    வருகிறது.

    தொப்பி தூக்கும் பாறை, தாங்கள் வீசிய தொப்பிகளை
    திருப்பித் தரும் வேகம் பார்த்து
    குதூகலிக்கிறது.

    இயற்கையை ரசித்துக் கொண்டே சுற்றித் திரும்பும்
    உமா மோதுவது, அவளையே
    ரசித்துக் கொண்டு நிற்கும்
    சுந்தரின் மீது.

    நடிகர் திலகத்தின் அந்தப்
    பார்வையில்தான் ( புன்னகை-
    இலவச இணைப்பு.) எத்தனை
    காதல்? எவ்வளவு எதிர்பார்ப்புகள்? எத்தனையெத்தனை கோரிக்கைகள்?

    பட்டென்று நொடியில் கடந்து
    போய் விடும் ஒரு சின்னஞ்சிறு
    காட்சிக்குத் தன்னையும், தன்
    அபாரத் திறமையையும் முழுமையாய் ஒப்படைத்து
    விட்டு நிற்கும் அந்த ஒப்பற்ற
    கலைஞனின் கலையொழுக்கம்
    அங்குள்ள மலைகளைக்
    காட்டிலும் உயரமானது.

    மிக உயர்ந்த மலையின்
    உச்சியிலுள்ள பாறை வரை
    சென்று வரலாம் என்கிறாள்..
    உமா.

    சுந்தர் நடுங்குகிறான்.

    ( இந்தக் காட்சியில், பத்மினி
    அந்தப் பாறையை சுட்டிக் காட்டி பேசப் பேசவே, நடிகர்
    திலகத்தின் முகம், சாதாரண
    நிலையிலிருந்து பயந்த நிலைக்கு மாறுவதை நாம்
    தெளிவாகப் பார்க்கலாம்.)

    நடுங்கி விலகிப் போகும் சுந்தரைப் பற்றி "பய நழுவுறான். விடாதே." என்று
    உமாவை இன்னொரு மாணவன் உசுப்பி விட, உமா
    ஒரு அறிவிப்பு செய்கிறாள்.

    "உங்களுக்கெல்லாம் ஒரு
    போட்டி வைக்கப் போறேன்.
    பரிசு சின்னதுதான். ஆனா
    அதை என் இதயத்தோடு
    தர்றேன்." -என்றபடியே தன்
    கூந்தலிலிருந்து ஒரு மலரை
    எடுத்துக் கையில் வைத்துக்
    கொண்டு.."யாருக்கு வேணும்
    இந்த மலர்?" என்று கேட்கிறாள்.

    ஏற்கெனவே, பயத்தில் அந்த
    இடத்தை விட்டு நழுவி நடந்து
    கொண்டிருக்கும் சுந்தர் தன்
    நடை நிறுத்தித் திரும்பி ஆவலாய்க் கூவுகிறான்.

    "எனக்கு... எனக்கு."

    ஆர்வக் கூவலோடு திரும்பி
    நிற்கும் அந்த உருவத்தில்,
    நடிப்பன்றி வேறொன்றுமறியாத ஒரு
    குழந்தையைப் பார்க்கிறோம்.


    ( ...தொடரும்...)

  5. #623
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பட்டென்று நொடியில் கடந்து
    போய் விடும் ஒரு சின்னஞ்சிறு
    காட்சிக்குத் தன்னையும், தன்
    அபாரத் திறமையையும் முழுமையாய் ஒப்படைத்து
    விட்டு நிற்கும் அந்த ஒப்பற்ற
    கலைஞனின் கலையொழுக்கம்
    அங்குள்ள மலைகளைக்
    காட்டிலும் உயரமானது.
    சரியான Punch.. சூப்பர் ரவி...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Thanks ifohadroziza thanked for this post
    Likes Georgeqlj, ifohadroziza liked this post
  7. #624
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    super aathavan sir

  8. #625
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சவாலே சமாளி கடைசிப்பதிவு


    மாணிக்கம் சகுந்தலாவின்
    திருமணம் முடிந்த அன்றைய நாள் இரவு.
    மாணிக்கம் பேசுவது:
    முன்பின் தெரியாம நாம ஒருத்தரையொருத்தர் சந்திச்சப்போ,அந்த ஒரு நிமிஷத்திலேயேஎன் மனச உங்கிட்ட பறி கொடுத்திட்டேன்.ஆனா அடுத்த நிமிஷமே உன் பணத்திமிராலே என்னை அவமானப்படுத்திட்டே.உன் திமிரை அடக்கனும்கறதுக்காக ஏழைக்கே உரிய ஆத்திரத்தில்,நானும் சரிக்கு சமமா பதிலுக்கு அவமானப்படுத்திட்டேன்.நாம ரெண்டு பேரும் புருஷன் மனைவி ஆவோமான்னு நினைச்சு பார்த்திருப்போமா?உன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை உனக்கு கிடைக்காம இருக்கலாம்.ஆனா கிடைச்ச வாழ்க்கைக்கு தகுந்தாப்போலே உன் மனச மாத்திக்கிறதுதான் உனக்கு நல்லது.இந்தப்புது இடம்,புது உறவு, புது வாழ்க்கை உனக்கு புடிக்காம இருக்கலாம். ஏன் அறுவெறுப்பாக்கூட இருக்கலாம்.என்ன உனக்கு புடிக்கல்லனாக் கூட உன்ன எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.குறிப்பா உன் பிடிவாதகுணம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு.ஏன் தெரியுமா?

    (அவ கிட்ட எனக்கு புடிச்சதே அந்த அகம்பாவம்தான்—
    "இது வசந்தமாளிகை"
    இதுக்கு விழாத கைதட்டா,விசிலா)

    நானும் ஒரு பிடிவாதக்காரன்தான்.நம்ம கல்யாணம் இருக்கே அதுதான்
    "டிபிகல் சோசியலிசம்".நம்ம ரெண்டு பேரும் ரெண்டு வர்க்கம்.இந்த ரெண்டு வர்க்கமும் பக்குவப்பட்டு ஒண்ணா சேர்ந்தா அதுதான் உண்மையான சோசியலிசம்.அதுக்குத்தான் தலைவர்கள் எல்லாம் பாடுபடறாங்க.நான் உன்ன வெறுக்கல.உன் ஆணவம்,பகட்டு,பணக்காரதிமிறு இதத்தான் வெறுக்கிறேன்.என்கிட்ட ஏழ்மை,வறுமைசூழ்நிலை இதெல்லாம் இருக்கலாம்.அது நாயம்.ஆனா அதுக்காக என்னை ஏன் வெறுக்கற.?புரியல இல்ல. உனக்கு, என்ன , உங்க வர்க்கத்துக்கே புரியாது. ஏன் எங்கள வெறுக்கறோம்கறதே தெரியாம பாரம்பர்யமா அது உங்க ரத்தத்துலயேவிஷமா ஊறிப்போச்சு.
    நான் ஒரு முட்டாள் உன்னை நிக்க வச்சே பேசிட்டு இருக்கறம்பாரு.
    நீயும் பேசுவ .ஆனா பேசக்கூடாதுன்னு இருக்கற.இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்கன்னு சொல்வாங்க.நீயும் வெட்கப்படுறே. எப்படின்னா,அய்யோ எனக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுப்போச்சேன்னு.
    பரவாயில்ல.நீ படிச்ச பொண்ணு. நானும் உன் அளவுக்கு படிச்சவன்தான். எப்படின்னு கேட்கறியா?"ஆயிரம் புஸ்தகத்தை படிச்சவன விடஆயிரம் வயலை உழுதவன் அறிவாளி" ன்னு பெரியவங்க சொல்வாங்க.
    (அடடா.என்ன ஒரு வார்த்தை மழை. அவர் பேசறத கேட்க கேட்கத்தான் எத்தனை ஆனந்தம்.)

    பேசிக்கொண்டே போய் மனைவி என்ற உரிமையில் சகுந்தலாவை தொடப்போக,

    "தொடாதீங்ங்ஙக"
    சகுந்தலாவின் ஆவேசக் கத்தத்தலில் மாணிக்கம் அதிர்ச்சியில் நிற்க,
    "நீங்க ரோசமுள்ள ஆம்பளயாயிருந்தா என் உரிமையில்லாம என்னைத் தொடக்கூடாது "-
    இது சகுந்தலா.

    "நான் உன்ன தொட்டு தாலிகட்டின புருஷன்.உன்ன இப்ப நான் என்ன வேணாலும்செய்யலாம்.அதுக்கு எனக்கு உரிமையிருக்கு.என்னைக்கு நீ உண்மையா என்னை கணவனா ஏத்துக்கிறியோ அன்னைக்குத்தான் உன்னை நான் தொடுவேன்.இது என் அம்மா மேல ஆணை"-
    இது மாணிக்கம்.

    நாகரீகம் மனிதனை உயர வைத்தது.அதே நாகரிகம் மனிதர்களை தாழ்த்தவும் வைக்கிறது.நடந்து போனது சாஸ்திர சடங்கல்ல.அது நிர்ப்பந்தத்தால் நடந்த சம்பிரதாயம்.

    ...ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

    பசி பொறுக்க மாட்டாமல் இரவில் யாருக்கும் தெரியாமல்பழைய சாதம் உண்ணும்படியான நிலைமை,அதை மாணிக்கம் பார்த்து கிண்டல் செய்வது,துணிகளை துவைத்து போடுமாறு மாணிக்கம் சொல்வது.,இது போன்ற நடத்தல்கள் சகுந்தலாவை அவள் வீட்டிற்கு ஓட வைக்கிறது. அவளின் அம்மா சொல்லும் சொற்கள் சகுந்தலாவை மாணிக்கத்திடமே திருப்பி அனுப்புகிறது.

    இஷ்டப்படாத திருமணம் ஒரு பக்கம் நடந்திருந்தாலும்,மாணிக்கம் தன் குடும்பத்திற்கேற்றவாறு சகுந்தலாவை மாற்ற செயல்படுத்தும் சில கட்டுப்பாடுகள் சகுந்தலாவை நோக வைக்கின்றன.அது அவளை வேதனைப்படுத்தி ,இறந்துவிடலாம் என்று கிணற்றில் குதிக்க முயற்சிக்கும் போது,மாணிக்கம் வந்து தடுத்து விடுகிறார்.

    என்னை ஏன் சித்ரவதை செய்கிறீர்கள் நான் இறந்து விடுகிறேன் என்று சகுந்தலா கூற,நீ இறந்து விட்டால் பழி என் மீதல்லவா வரும் எனவே கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு நீ நிம்மதியாக இரு என்று கிணற்றின் மேல் நின்று கொள்கிறார்.
    பின்பக்கம் இருந்து தள்ள கைகளை கொண்டு வரும் சகுந்தலா தள்ளிவிட எத்தனிக்கையில்,

    மனமா?
    அது
    மாறுமா?

    யோசிக்கிறது மனம்.
    சிந்தை தடுமாற பின் வாங்குகிறது கரங்கள்.
    சகுந்தலாவின் மனம் தோற்றது.
    தமிழ்ப்பண்பாடு வென்றது.

    இந்த இடத்தில் மாணிக்கம் கூறும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும்.சகுந்தலா என்ன இருந்தாலும் பெண்தானே.சற்றே கரைவது போல் தெரிகிறது.
    மாணிக்கத்தின் சொற்கள் சகுந்தலாவிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது அவள் விழிகள் காட்டுகின்றன.

    இவ்விடத்தில் சகுந்தலாவை தேடி வரும் காவேரியை ராஜவேலு மானபங்கப்படுத்தி விடுகிறான்.ஆவேசமடைந்த காவேரி
    ராஜவேலுவின் வயலுக்கு "தீ"வைத்து விடுகிறாள்.அதை மாணிக்கம் பார்த்துவிடுகிறார்.காவேரியிடம் காரணம் கேட்க நடந்ததை கூறுகிறாள்.தீ பரவுவதை பார்த்து ஊர் மக்களுடன் அய்யாக்கண்ணுவும் சேர்ந்து வருவதைப்பார்த்ததும் மாணிக்கம் காவேரியின் கைகளில் இருந்து தீப்பந்தத்தை வாங்கி காவேரியை தப்பிக்க வைக்கிறார். தீப்பந்தத்துடன் மாணிக்கம் வருவதைப் பார்த்து ஊர்மக்கள் மாணிக்கம்தான் தீ வைத்தது என்று முடிவு செய்து பண்ணையாரின் வீட்டிற்கு பிடித்துச் செல்கின்றனர்.

    அங்கே விசாரணை ஆரம்பிக்கிறது.

    (சவாலே சமாளி முதல்பதிவு)ஆரம்பத்தில் குறிப்பிட்ட காட்சி இங்கேதான் அரங்கேற்றமாகிறது.

    சாட்டையடியால் ரணமாகி,வலிகளுடன் கட்டிலில் படுத்திருக்கும் மாணிக்கத்தை பார்த்து கண்ணீர் விடுவதோடு,அவருடைய காலிலும் விழுந்து அழுகிறாள்.மாணிக்கத்தை தொட்டு தாய் மேல் இட்ட ஆணையை வாபஸ் வாங்க சொல்லுகிறாள்.
    அப்புறம்,"
    கேட்டுக்கோடி உறுமிமேளம்
    போட்டுக்கோடி கோகோ தாளம்.
    வ ண க் க ம்.

    நடிகர்திலகத்தின் நடிப்பை விவரிக்க வேண்டுமென்றால் பிரேம் பை பிரேம் எழுத வேண்டி வரும்.அதற்கு பொருத்தமான வார்த்தைகள் தேடினால் பொழுதும் போதாது.
    ஆரம்பகாட்சியில் பணிவுக்கு பணிவு,பதிலுக்கு பதில் அளிக்கும் அந்தபாந்தமான நடிப்பைச் சொல்வதா?
    விஜயகுமாரியை கண்டிக்கும் போது கூட, காட்டும் கண்ணியத்தை சொல்வதா?
    மரம் வெட்டும் போது ராகவனிடத்தில்
    மறைத்து வைத்த பாசத்தை இயல்பாக வெளிப்படுத்துவதைச் சொல்வதா?
    நாகேஷ் ஆடும் சகுனியாட்டத்தில்
    பகவதியிடம் சவால் போடும் வித்தையைச் சொல்வதா?
    அம்மாவாக வரும் காந்திமதியிடம் அவர் காட்டும் அந்நியோன்யமான அன்பைச் சொல்வதா?
    தேர்தல்களத்தில் மஞ்சள் தாலியை கையில் வைத்து மதர்ப்பானநடை காட்டும் அந்த நடிப்பைச் சொல்வதா?
    நம்பியாரை பொளந்து கட்டும் சண்டையில் அந்த ஆவேச நடிப்பைச் சொல்வதா?
    தொடாதீர்கள் என்று சொல்லும் ஜெயாவிடம் காட்டும் அந்த ஆண்மையின் கம்பீரத்தைச் சொல்வதா?
    தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவிடம் பேசும் அந்த சொற்பொழிவைச் சொல்வதா?

    ...அதனால்தான் கண்ணதாசன் சொன்னார்


    $$$$$$$$$$$$ E N D $$$$$$$$$$$$$$$$$$

  9. #626
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    விரைவில் சென்னையில் நல்ல திரையரங்கில்!

    நமது உள்ளம் கொள்ளை கொண்ட இரு மலர்கள்
    !








    வாசு ரெடியா?

    அன்புடன்

  10. #627
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று குருதட்சிணை பாடல் ஒன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடல் ஒன்றாம் கிரகம் அடி அதில் நான்காம் கிரகமடி என்ற வரியில் ஒரு நடை நடப்பாரே நடையா அது. அழகு நடை .

  11. Likes Russellmai liked this post
  12. #628
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    From Dinamani

    மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபா அடுத்து வெளியானது. சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!

    முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.

    ‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.

    அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

    சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.

    தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.

    சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.

    சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.

    அந்த சில நிமிஷங்களில்

    என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.

    சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.

    சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.

    கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.

    ‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.

    ‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.

    ‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.

    அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.

    திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.



    மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.

    நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.

    1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.

    ‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:

    ‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.

    ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.

    அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.

    முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !

    சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.

    கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.

    கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!

    ‘மலைக்கள்ளன், - கள்வனின் காதலி’ எம்.ஜி.ஆர்.-சிவாஜியோடு முதன் முதலாக பானுமதி சேர்ந்து நடித்த இவ்விரு படங்களும் தமிழின் புகழ் பெற்றப் புதினங்கள்.

    இரு கதைகளிலும் கதாநாயகன் திருடன். ஆனால் மிகவும் நல்லவன். இரண்டிலும் ஒரே நாயகி பானுமதி. பூங்கோதைக்கும், கல்யாணிக்கும் நடிப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் பானுமதி!

  13. #629
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆதவன் ரவி
    தங்களுடைய நினைப்போம் மகிழ்வோம் தொடரில் நம் அனைவருக்குமே பங்கு கொள்ள விருப்பமாக உள்ளது.
    இத்தொடரில் துணைப் பதிவுகளாக அடியேனும் சிலவற்றை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

    இமயம் .. க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் எல்லோரும் தலைவரை ஏளனமாய்ப் பேசி விட்டுப் போவார்கள். கடைசியாக அவருடைய மனைவியும் குழந்தையும் போவார்கள். அப்போது மனைவியை எதிர்பார்த்து ஒரு விஷமப் புன்னகை புரிந்தவாறே அவள் வயிற்றில் அலட்சியமாகத் தட்டி விட்டு போ என கையால் சைகை காட்டுவாரே...

    ஆஹா... என்ன ஒரு அட்டகாசமான உடல் மொழி..



    16.18 நிமிடங்களில் பார்க்கவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Russellmai liked this post
  15. #630
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர்திலகத்தின் 88-வது பிறந்தநாள் விழாவின் பத்திரிக்கை செய்திகள்....



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •