-
28th November 2015, 10:45 PM
#11
Junior Member
Veteran Hubber
நமது மக்கள் திலகம் தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடத்தை, தனது மூன்று படங்களின் சம்பளத்தில் வாங்கினார் என்ற உண்மையை, வி. (விவரம் தெரியாத) கே.( கேனையர்கள் என்று மக்களை நினைத்து கொண்டு) ராமசாமி ஏன் எழுத வில்லை. நிலைமை இப்படி இருக்க, நடிகர் சங்க கடனை அடைக்க நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மொத்தமாக ரூபாய் 1கோடி 80 லட்சம் வசூலானதை மட்டும் குறிப்பிட்ட அந்த வி. கே ராமசாமி, செலவு போக நிகர வசூல் எவ்வளவு என்பதை ஏன் தெரிவிக்க வில்லை. ?
முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்பது பொதுமக்கள் நலனுக்கேயன்றி நடிகர் சங்க கடனை முழுமையாக அடைக்க மட்டுமல்ல ! இதை ஏன் அப்போது நடிகர் சங்க நிர்வாகிகள் உணரவில்லை. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மேலும் தொகை வழங்கப்பட வில்லையென்றால், நட்சத்திர கலை விழாவினை, மேலும் பல நகரங்களில் இவர்களே நடத்தி இருக்கலாமே. வேண்டாம் என்று யார் சொல்ல முடியும். தமிழக அரசினை சார்ந்து ஏன் இருக்க வேண்டும். [பொது மக்களுக்காக செலவிடாமல் நிகர வசூல் முழுவதையும் கொடுத்திருந்தால் நடிகர் எம். ஜி. ஆர். நடிகர் சங்கத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியினை தவறாக பயன் படுத்துகிறார் என்று குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.
ஏதோ தனது வரைமுறைக்குட்பட்டு, ரூபாய் 5 லட்சம் வரை நடிகர் சங்கத்துக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் அவர்கள், பொது நிவராண நிதியிலிருந்து அளித்து உதவினாரே என்று கருதாமல், தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்து பார்ப்பது போல் இருக்கிறது இந்த ராமசாமியின் கூத்து.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இதற்கு அரசியல் சாயம் வேறு பூசி, மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு எழுதி இருக்கிறார் ராமசாமி என்று நினைக்கும் பொழுது, அவரின் காழ்ப்புணர்ச்சி நன்கு புலப்படுகிறது.
கட்டிடம் கட்ட வாங்கப்பட்ட கடனுக்கு கணக்கு வழக்குகள் முறையாக இருந்தன என்று மார் தட்டி கொண்டாலும், தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்குக் கட்டிடம் கட்டியிருக்கலாம்., அகலக் கால் வைத்ததினால்தான் நடிகர் சங்கத்துக்கு இவ்வளவு கடன் சுமை ஏற்பட்டது என்று அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டதை கண்டு, ஏன் இந்த ராமசாமி, வாயிருந்தும் ஊமையானார். இந்த விவகாரத்தில், எதோ விதி முறைகள் மீறப்பட்டிருக்கலாம். எல்லாம் அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கே வெளிச்சம்.
.
எங்களை பொருத்தவரை, எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகத்துக்கு, நடிகர் சிவாஜி கணேசனை எந்த விதத்திலும் ஈடும் இணையுமில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர் சிவாஜி கணேசனை ஒரு போட்டியாளராகவே கருத வில்லை. எவரும் எட்ட முடியாத புகழின் உச்சத்தில் இருக்கிறார், உன்னதமான எங்கள் உத்தமத்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
28th November 2015 10:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks