-
28th November 2015, 10:46 PM
#11
Junior Member
Veteran Hubber
சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் அறிவது !
தங்கள் விளக்கத்தை கண்ணுற்றேன். உங்கள் அபிமான நடிகரை மற்றவர்கள் தாக்கி எழுதினால் நீங்கள் எவ்வாறு உடனே தாங்க முடியாமல், விளக்கம் அளிப்பதற்கு உரிமை இருக்கிறதோ அதே போன்ற உரிமை, பொற்கால ஆட்சி தந்த பொன்மனசெம்மலின் பக்தர்களாகிய எங்களுக்கும் உண்டு.
நாங்களாக இந்த விவாதத்தை தொடக்கி வைக்க வில்லை. சகோதரர்,வினோத் அவர்கள் குறிப்பிட்டிருந்தபடி, தேவையில்லாமல் இந்த பிரச்சினை அந்த திரியில் பதிவிட வேண்டிய அவசியம் என்ன ?
எங்கள் பொன்மனசெம்மலை பற்றி தவறாக எவராவது எழுதினால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, உடனே திரியில் பதிவிடுவதன் நோக்கத்திலிருந்தே, எந்த அளவுக்கு அந்த பிற்போக்குவாதிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கின்றனர் என்பது புலப்படுகிறது.
என்னிடம் கூட, நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை விமர்சித்து, எழுதப்பட்ட நிறைய செய்திகள் இருக்கிறது. அவற்றை என்றேனும் நான் வெளியிட்டிருக்கேனா ? அவரவர் அபிமான நடிகரின் புகழை அவரவர்கள் எழுதி கொள்ளட்டுமே ! கிறுக்குத்தனமாக எழுதுவதையெல்லாம், இத்திரி பார்வையாளர்களை நம்பச் செய்ய, பதிவிட வேண்டியது ஏன் ? எங்கள் மக்கள் திலகத்தின் மகத்தான செல்வாக்கினை (மாண்டு 28 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட) பொறுத்து கொள்ள முடியாத, இயலாமை தான் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
மீண்டும் மீண்டும் கூறுகிறோம், மறைதிரு சிவாஜி கணேசன் அவர்களை நாங்கள் ஒரு போட்டியாளராகவே கருதவில்லை. ஏன் என்றால், போட்டிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, உச்சியில் இருக்கிறார் எங்கள் புரட்சித்தலைவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு முகவரி கொடுத்ததே எங்கள் மக்கள் திலகம்தான். அவர், தனது சொந்த பணத்தில், நடிகர் சங்கத்துக்கு இடம் வாங்கி கொடுத்தைதை இந்த வி.(விவரம் தெரியாத) கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி ஏன் முக்கியமாக குறிப்பிட வில்லை என்ற கேள்வி கேட்க எங்களுக்கும் உரிமை உள்ளதே ! தானம் கொடுத்ததை நாங்கள் சுட்டி காட்டி முழு உரிமையுண்டு என்பதனையும் இத்தருணத்தில் கூற விரும்புகிறேன். கட்டிடம் கட்ட முதலில் தேவைப்படுவது இடம் தானே ! முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியமா என்ன ?
மேலும் தாங்கள் கூறியிருப்பதை போல், முதலமைச்சர் தான் வெள்ளை அறிக்கை வெளியிட வில்லை. ஏன், அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் இதனை ஒரு அறிக்கையாக தயாரித்து, குறைந்த பட்சம், பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தி இருக்கலாமே ? ( இத்தனைக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகைகள், புரட்சிச்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களை விமர்சித்து எழுதவது என்றால் அல்வா சாப்பிட்ட மாதிரியாச்சே )
சில நிபந்தனைகள் விதித்து நடிகர் சங்க பொறுப்பினை ஏற்ற சிவாஜிகணேசன் உட்பட ஏனைய நிர்வாகிகள், நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி அதில் கிடைத்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்க்க ஏன் ஒப்புக் கொண்டனர் ? இங்கு ஏன் நிபந்தனை விதிக்க வில்லை. முதலமைச்சர் நிவாரண நிதி என்பது, அவசர காலத்தில் பொது மக்களுக்காக, அளிக்கப்படும் நிதி என்ற அடிப்படை நியதி தெரியாதவர்களா அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் ?
சரி அது போகட்டும், தமிழக முதல்வர் அளித்த தொகை போதுமானது அல்ல என்று கருதியிருந்தால், தமிழக முதல்வரின் தலையீடு இல்லாமல்,
இதர நகரங்களில், நான் முன்னரே தெரிவித்திருந்தபடி, தாங்களே நட்சத்திர கலை விழாக்களை நடத்தி வசூலை பார்த்திருக்கலாமே ! இஷ்டம் போல் செலவுகளும் செய்திருக்கலாமே ! எவர் தடுக்க முடியும். ?
"நடிகர் சங்க கடனை அடைக்காத எம். ஜி. ஆர். என்று தலைப்பிட்டு எழுதியதை வன்மையாக கண்டிக்கிறோம். என்னவோ, மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்த காலத்தில் தான் கடன் ஏற்பட்டது போல், ஒரு மாயையை உருவாக்கும் விதத்தில் அல்லவா இருக்கிறது அந்த தலைப்பு.
லட்சக்கனக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் வாங்கும் நடிக-நடிகையர், இந்த தென்னிந்திய நடிகர் சங்க கடனை அடைக்க, எங்கள் கொடை வள்ளல் போல், தாராளமாக நிதியுதவி செய்திருக்கலாமே !
மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்,மறைந்த பின்பு, 15 ஆண்டுகள் கழித்து, 2002ல் இந்த புத்தகத்தை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன ? அவர் உயிருடன் இருந்த காலத்தில் வெளியிடப்பட்டால், அதற்கு மறுப்பு தெரிவித்து, கேள்விப்படாத எதிர் மறை தகவல்கள் வெளிவரும் என்ற அச்சமா ?
இப்படிப்பட்ட ஆட்களை வைத்து கட்சி நடத்தியதால்தான் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலில் சோபிக்க முடியாமல் போனது. ரசிகர்களை நம்பி கட்சி நடத்தி இரூந்தால், நிச்சயமாக அவர் அரசியலில் பிரகாசித்திருக்க முடியும்.
சமீப காலமாக ஒரு group, புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன், வரிந்து கட்டிக்கொண்டு, எவரையோ திருப்தி படுத்த, திரிகிறது என்றுதான் கருத நேருகிறது.
எவ்வளவு தான் புழுதி வாரி தூற்றினாலும் சேற்றை வாரி இறைத்தாலும், மங்காப் புகழுடன் திகழும் எங்கள் மக்கள் திலகத்தை எவரும் நெருங்ககூட தகுதியில்லை. இன்றும், தெய்வமாக கருதி, தங்கள் இதய சிம்மாசனத்தில் வைத்து பூஜிக்கின்றனர் மக்கள்
பின் குறிப்பு : மக்களின் உண்மை தலைவராகிய எங்கள் புரட்சித்தலைவர் அவர்கள், இறுதி வரை கதாநாயகனாகவே திரைப்படங்களில் தோன்றினார். பணத்துக்காக, துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க வில்லை. பணமே பிரதானம் என்று இல்லாமல், கொள்கைக்காக, ராணி லலிதாங்கி, காத்தவராயன், அன்று சிந்திய ரத்தம் உட்பட பல படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்பினை துறந்தவர் தான் எங்கள் மக்கள் திலகம்.. அந்த கால கட்டத்தில், சுமாராக ஓடிய ஒரு சில படங்கள் கூட இன்று, தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வசூல் சாதனைகளை அள்ளிக்குவித்து , தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி அவர்தான் என்று நிரூபித்து கொண்டே இருக்கின்றன
அவர் இறுதி வரை, தமிழ் திரையுலகில், முதல் நிலையில் இருந்தார் என்பதற்கு சான்றாக, நான் முன்னர் பட்டியலிட்டு காண்பித்த படி, 1977ல் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்கும் பொழுது, சுமார் 20க்கும் குறையாமல் ஒப்பந்தம் செய்யப்பட திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருந்தார்.
இதிலிருந்தே தெரியும் டம்மி நடிகர் அவர் அல்ல என்று !
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
28th November 2015 10:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks