Page 116 of 401 FirstFirst ... 1666106114115116117118126166216 ... LastLast
Results 1,151 to 1,160 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1151
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1152
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. Likes KCSHEKAR, Harrietlgy, RAGHAVENDRA liked this post
  5. #1153
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1154
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1155
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1156
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Article on Nadigar Thilagam in the magazine "Pudhiya Vazhviyal", November 2015.
    Image courtesy: Mr. Trichy Annadurai, Special Invitee, All India Sivaji Fans Association.







    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks J.Radhakrishnan thanked for this post
  10. #1157
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    கழுத்திலும்,காதிலும்
    மின்னுகின்ற பொன் நகை.
    அதன் ஜொலிப்பை
    மிஞ்சுதய்யா...
    உன் ஆனந்தப் புன்னகை.

  11. #1158
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு அக்பர்.

    தயவு செய்து பொறுமை காக்க வேண்டுகிறேன். காரணம் திரியின் moderator திரு முரளி ஸ்ரீநிவாஸ் ஊரில் இருக்கிறாரா இல்லையா என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. Moderator உக்கு நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். காரணம் அவர் பார்த்திருந்தால் நிச்சயம் அதனை எடுத்திருப்பார் என்று தான் நான் நிச்சயாமாக நம்புகிறேன்.

    தேவையில்லாத பதிவு vkr பதிவு என்பது எந்த சந்தேகமும் இல்லை. இந்த கருத்தை நாமும் வலியுறுத்தி உள்ளோம். நிச்சயம் அது எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் தயவு செய்து வேண்டாம்.

    ஒரு நடிப்பின் கதை என்று இணையதளத்தில் வந்திருக்கும் ( எதில் வந்தது என்ற தகவல் இல்லாமல் ) பதிவு நல்ல சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது...

    கடவுள் இருக்கின்றார் என்று எண்ணும் பெரும்பான்மையானவர்கள் உள்ள நாட்டில் கடவுளே இல்லை என்று கூறும் ஒரு சாரரும் இருக்கின்றனர் . அவர்களுக்கும் நன்றாக தெரியும் கடவுள் என்றொரு சக்தி உண்டு என்று...அது தெரிந்தும் அவர்கள் இல்லை என்று கூறுவது கடவுள் இல்லை என்று அவர்கள் விஞ்ஞான மெய்ஞான பூர்வம் உணர்ந்து அல்ல !
    இல்லை என்று சொல்வதால் கிடைக்கும் ஒரு மிகபெரிய விளம்பரம் ..அந்த பிராண்டிங் தான் அவர்களுக்கு வேண்டியது .

    அதுபோல தான் நீங்கள் பகிர்ந்த அந்த கட்டுரை ..அதன் பொருள் !

    அதை எழுதியவர் பெயர் கூட பதிவு செய்யாமல் இருப்பது (புனைபெயர் கூட ) அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறது.

    சரி...அவர் எழுதிய கட்டுரை தீர்க்கம் உள்ளதாக இருக்கும் என்று பார்த்தால் ...சல்லடையில் கூட இருக்கும் ஓட்டையை எண்ணிவிடலாம்...ஆனால் ஓட்டையில் உள்ள சல்லடையாக கட்டுரை இருப்பதை பார்த்தால் அவர் மீது பாவம் பரிதாபத்தை தான் ஏற்படுத்துகிறது...

    அவர் உபயோக படுத்தியுள்ள வார்த்தைகள் - உயர்குடி ...பார்பனன் ....வாழ்ந்து கேட்டவர்....இவை அனைத்து வார்த்தைகளும் inferiority complex மட்டுமே உள்ள , எந்த உழைப்பையும், உழைப்பவரையும் திறமைகளை பாராட்டவோ, உணரவோ இயலாதா...காசு குடுத்தா அவன் நல்லவன்...இன்னும் சொல்லப்போனால் தனக்கு காசுகுடுக்கிரவன் மட்டுமே நல்லவன் என்று கூறும் ஒரு சாற்றில் ஒருவனின் தோல்வி, வயிதெரிச்சல், பொறாமை, இயலாமை போன்ற negative thoughts மட்டுமே கொண்ட தனிமனித புலம்பலாக தான் பார்க்க நடுநிலையாளர்களால் முடியும்...!

    வரிக்கு வரி இதற்க்கு பதில் சொல்லகூடிய நிலையில் என் எண்ணங்கள் இருந்தாலும்...அதற்க்கான நேரத்தை செலவிடுவது மடமை என்பதால் அதே சமயம் அவர் கூறிய ஒரு சில point ...அதில் அவர் கோட்டை விட்ட விஷயங்கள் மட்டும் இங்கு பதில் பதிவு செய்கிறேன்...

    பராசக்தி பற்றிய பத்தியில் அவருடைய பார்வைக்கு எனது பதில் பார்வை

    பராசக்தி வெளியான ஆண்டு 1952 தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் -

    பெயரிலாத நண்பர் கூறியிருப்பது பராசக்தி வெற்றிக்கு அந்த காலம் துணையாக இருந்தது என்று - சிவாஜியால் அது வெற்றிபெறவில்லை என்று மறைமுகமாக கூறுகிறார்.

    இவர் குறிப்பிடும் அந்த காலமும் நேரமும் அந்த 1952 தீபாவளியில் தோன்றியதா ? இல்லையே ...எப்படியும் ஒரு 3 அல்லது நாலு வருடமாவது கால நேர அளவு இருந்திருக்கும்...அல்லவா ? பராசக்திக்கு முன் அதாவது சிவாஜி அறிமுகமாவதற்கு முன் கூட நல்ல சமுதாய சிந்தனை கதைகள் வந்ததுண்டு - அவை ஏன் பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை ? பிரபலமான, மிகப்ரபலமான வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள், இயக்கிய படைப்புகள் தான் அவை ! அப்படி இருந்தும்.....ஏன்....நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த வழக்குகளை கண்டிருக்கிறது என்ற வசனம் போல...ஓடினாள்...ஓடினாள் ...வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்....என்ற இந்த ஒரு வரி பெற்ற முக்கியத்துவத்தை அந்த படங்கள் பெறவில்லை....?

    காரணம் பராசக்த்திக்கு முன்னர் வந்த படங்களில் சிவாஜி கணேசன் என்ற நடிகர், அதுவும் தமிழின் தரம் அறிந்து , அதனை அதற்குரிய முறையில் உச்சரிக்க , முகபாவங்களுடன், உடல் மொழியுடன் தமிழை தமிழாக பேச கூடிய நடிகர் எவரும் அந்த சமுதாய சிந்தனை கொண்ட படங்களில் இல்லை என்பதே இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது !

    பராசக்திக்கு பிறகும் ....இன்றுவரை தமிழ் திரை உலகில் அதே நிலை என்பதுதான் இன்றைய உண்மை !

    நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !

    இந்த பத்தியில் பெயரில்லாத நண்பர் என்ன கூற வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் ! குழப்ப மனநிலையில் உள்ள ஒருவர் எழுதும் எழுத்துக்கு அவர் எழுதிய இந்த பத்தி மிக சரியான உதாரணம், காரணம் " ஒரு நடிகன் என்பவன் குறுகிய வட்டத்தை சேர்ந்தவன் அல்ல ! அந்த பெயரற்ற நண்பர் அதை புரிந்துகொள்ளவேண்டும் !

    கதாபாத்திரம் இல்லாத கதை ஏது ? முயல் ஆமை கதையில் கூட முயல் ஆமை என்ற இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன ! வாழ்கை வரலாறு என்பது என்ன ? ஒருவருடைய வாழ்கை தொடங்கி முடியும் வரை உள்ள விஷயங்களை முழுதும் அதாவது 80 வயதில் இரப்பவர் வாழ்வை ஒரு திரைப்படமாக எடுத்தால் ஒரு திரைப்படம் முடிய பல வருன்டங்கள் ஆகும்..ஆகவே அதனை தொகுத்து ஒரு கதாபாத்திரமாக திரையில் காண்பிக்காமல் வேறு என்ன காண்பிக்கமுடியும்.
    நடிகர் திலகதிர்க்காக படம் என்று கூறியுள்ளார்....அவரால் அனைத்து கதாபாத்திரத்தில் மற்ற எவரை காட்டிலும் சோபிக்க முடிந்ததால் நடிகர் திலகத்திற்கு கதாபாத்திர வடிவம் கொடுத்தனர் ! இதில் என்ன தவறு ?
    பெயர் இல்லாத நண்பர் ....accounts இல் தேர்ச்சி பெற்றவர் என்று வைத்துகொள்வோம்...அவருக்கு accounts department இல் வேலை ...ஆனால் அந்த company முதலாளி எல்லா department எப்படி கொண்டு செல்வது என்பது நன்கு தெரிந்ததால்தான் ஒரு company யை வைத்து நடத்துகிறார். அதே போல தான் நடிகர் திலகமும்...எல்லா கதாபாத்திரமும் அதன் தன்மை அறிந்து அவர் அந்த கதாபாத்திரமாக மாறுவதால் தான் நடிகர் திலகம் அவர்களை வைத்து பல கதாபாத்திரங்கள் ஸ்ருஷ்டிக்கபடுங்கின்றன...! அப்படி திறமை உள்ளதால்தான்...ஒரு கட்டபொம்மன் நமக்கு என்றும் நினைவில் நிற்கிறான் , ஒரு கப்பல் ஓட்டிய தமிழன் என்றும் நினைவில் நிற்கிறான், ஒரு ப்ஹகத்சிங்க்ஹ் நமது நினைவில் நிற்கிறான் , ஒரு கர்ணன் நம் நினைவில் நிற்கிரார்ன் ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !

    உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !

    முகம் தெரியாத அந்த நண்பரின் மற்றுமொரு குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் இந்த பத்தி. இவர் கூறுகிறார் " முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.
    பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்."

    முதற்க்கண் முகமில்லாத நண்பர் ஒரு விஷயத்தை மிக comfortable ஆக மறந்துவிட்டார் - சிவாஜி கணேசன் ஒரு நடிகர் - அவரை வைத்து திரைப்படம் எடுப்பவர், இயக்குனர், கதை வசனகர்த்தா என்ன எதிர்பார்கிராரோ அதை சிறப்பாக செய்து கொடுப்பது தான் அவர் வேலையே ! நடிகனின் வேலையே அதுதானே ? சம்பளம் பிறகு எதற்கு கொடுக்கிறார்கள் ? வந்து எல்லோர்ரிடம் ஒரு shakehand கொடுத்து bye சொல்வதற்க்கா ? இது கூட புரியாத இந்த முகம் தெரியாத நபர் சிவாஜியின் நடிப்பை மறுபரிசீலனை செய்வது விந்தை அல்ல....வேடிக்கை க்கும் ஒரு படி கீழ் !

    கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !

    திரு சங்கராச்சாரியார் அவர்களின் பாவங்கள் திரையில் அப்பராக பிரதிபலித்தேன் என்று சிவாஜி கூறினார் ..மற்ற கதாபாத்திரங்கள் பற்றி கூறவில்லை என்றொரு முட்டாள்தனமான ஒரு வாதத்தை வைக்கும் இந்த முகமற்ற மனிதர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும் - முதலில் ஒரு விஷயத்தை ஒருவர வெளிபடையாக கூறுகிறார் என்றால் அதற்க்கு முதற்க்கண் தைரியம் வேண்டும்...பரந்த மனப்பான்மை வேண்டும் அதுவும் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் கூறுவதற்கு துணிவு வேண்டும்....சிவாஜி செய்ததை எல்லாம் விளக்கவுரை போட்டு கோனார் புத்தகமா வெளியிடவேண்டும் ? இந்த எதிர்பார்ப்பே எவ்வளவு அபத்தமானது ! சரி....சிவாஜி சொன்னார்...தான் இப்படி தான் செய்தேன் என்று...ஒரு பானை சோட்ட்ருக்கு ஒரு சோறு பதம்....அவர் சொல்லி கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆயிற்று....அந்த format ஐ ஒரு முறையாவது யாராலும் பின்பற்ற முடிந்ததா ? வியாபார வெற்றியின் ரகசியத்தை எந்த முதலாளியும் கூறமாட்டார் ! முதலில் இந்த முகம் தெரியாத இந்த மனிதர் இதை உணரவேண்டும்....அந்த ரகசியத்தை நடிகர் திலகம் அவர்கள் உச்சத்தில் இருக்கும்போதே போட்டு உடைத்துவிட்டார்...அதற்க்கு பிறகு கூட யாராவது ஒருவர்...ஒரே ஒருவர்...அதை செய்ய முடிந்ததா ? பிறகு என்னய்யா உமக்கு சிவாஜியை பற்றி மறு பரிசீலனை வேண்டிக்கிடக்கிறது !

    வீழ்ந்த நட்சத்திரம் !

    தனி மனித துவேஷம்...சிவாஜி பற்றி ஜீரணிக்கமுடியாத வயிதெரிச்சல் கொண்ட இந்த முகம் தெரியாத மனிதனின் புலம்பலின் உச்சம் இந்த பத்தி - இந்த மாமனிதர் கூறுவது இதோ " 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்".

    சிவாஜி அவர்கள் 1980 முதல் 1987 ( அதாவது உடல்நலம் ஒத்துழைத்த வரை ) நடித்த படங்களின் எண்ணிக்கை 63. அதுவும் 7 வருடத்தில். சராசரி ஆண்டிற்கு 9 படங்கள் ! நட்சத்திரம் வீழ்ந்ததா ? வேறு எந்த நட்சத்திரம், எத்துனை நட்சத்திரம் இதுபோல மின்னி பிரகாசித்துக்கொண்டு இருந்தன ? என்பதை பெயர் இல்லாத நண்பர் கூற முடியுமா ?

    இந்த நண்பர் பேரன் பேத்தி பெற்ற சிவாஜி ஸ்ரீதேவியுடன், ஜெயமாளிநியுடன் நடித்ததை கூறுகிறார்..! யார் நடிக்கவில்லை இல்லம் நடிகைகளுடன் ...எல்லா நடிகர்களும் இளம் நடிகைகளுடன் நடித்துதான் உள்ளனர்...எம் ஜி யார் , ரஜினி, கமல், பிரேம் நசிர், என் டி ஆர், எ என் ஆர் , ராஜ்குமார், ஹிந்தி ராஜ்குமார், திலிப்குமார், அமிதாப்..உலக அளவில் சீன கொனோரி, ரோஜெர் மூர், மார்லோன் பிராண்டோ , கிரிகோரி பேக், டாஸ்டன் ஹோப்ப்மன் இப்படி உலகில் அனைத்து நட்சத்திரங்களும் இளம் நடிகைகளுடன் நடித்திருக்கின்றனர்...

    ஆனால் இந்த பெயர் திரியாத நண்பர் சிவாஜி கணேசன் நடித்ததை ஒரு காழ்புணர்ச்சியுடன் மட்டுமே எழுதுகிறார். இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இவர் கூட தான் நடிப்பார் ! இல்லை என்று கூரசொல்லுங்கள் பார்க்கலாம் !

    பெரியார் பிழைத்தார் என்று பெருமிதம் சிருமிதமாக கொள்ளும் இந்த பெயர் இல்லா பண்பாளர்..மற்றொரு விஷயத்தை மறந்துவிட்டிருப்பதும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.....அது - கலை, சினிமா , சினிமா கலைஞர்களை அறவே வெறுத்த வாய்க்கு வாய்...கூத்தாடி பயலுவ ...கூத்தாடி பயலுவ என்று வசைபாடிய தந்தை பெரியார்...விழுப்புரம் சின்னையா கணேசனின் சிவாஜி என்ற கதாபாத்திரத்தில் ஆற்றிய நடிப்பில் மயங்கிபோய் நீ வெறும் கணேசன் அல்ல ...இன்று முதல் நீ சிவாஜி கணேசன் என்று அறிந்ஞர் அண்ணா மற்றும் பல பெரிய மனிதர்களின் முன்னிலையில் பட்டம் கொடுத்தார். களம் கண்ட கவிஞன் நாடகம் பார்த்து ...சிவாஜி அவர்களை சிவாஜி கணேசன் ஒரு கலை களஞ்சியம் என்று பல ஆயிரம் பேர் முன்னிலையில் பாராட்டியது வரலாறு.....

    இந்த வரலாறு தெரியாத பெயர் தெரியாத இந்த புரவலர் எழுதியது மறுபரிசீலனையா அல்லது வெத்து புலம்பலா ?

    சிவாஜியும் அரசியலும் !
    இதில் இந்த முகம் தெரியாத மனிதர் கூறியிருப்பது எந்தளவிற்கு தவறான ஒரு செய்தி என்பது நான் விளக்காமலே தெரியும். சிவாஜி கட்சி தொடங்கியபோது mgr போட்டியாம் ? இதெல்லாம் ஒரு பச்சை பொய் என்பது மக்கள் திலகம் ரசிகர்களுக்கே தெரியும்...mgr அவர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர் சிவாஜி கணேசன். அவர் மறைந்த பின்னர் mgr அவர்களின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி கொண்டவர் நடிகர் திலகம்...
    இந்த பெயர் தெரியாத பண்பாளர் புதுக்கதை விடுகிறார்...புது வரலாறு தீட்டுகிறார் ! இதை கூட படிக்காமல் இதை இங்கு திரு அக்பர் அவர்களும் பதிவு செய்துள்ளார்.!

    காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !
    ———————————————–
    திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. - இது பெயரற்ற புரவலர் புளுகியது ! கூத்தாடி என்று காங்கிரஸ் கட்சியா நடிகர்களை கூறியது ? இந்த தனிமனித காழ்புணர்ச்சி கொண்ட பெயரற்ற புரவலன் நாக்கிற்கு நரம்பில்லை என்பதால் தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் வைத்து பறைசாற்றும் திராவிட கட்சிகளின் தனிப்பெரும் குணத்தை அல்லவா இங்கு வெளிபடுத்துகிறார் !

    தேர்தல் தோல்வி - வாழ்கை தோல்வி அல்ல !
    தேர்தலில் தோற்றதற்கு காரணம் சந்தர்ப்பவாத அரசியல் சிவாஜி செய்யவில்லை ! திராவிட கட்சிகளின் கூட்டணியில் சென்றிருந்தால் தோல்வி ஏற்பட்டிருக்காது...அப்போதும் சுயநலம் இல்லாமல்...mgr அவர்களுக்கு கொடுத்த வாக்கின் மாண்பை காப்பாற்ற கூட்டணி கண்டார் ...செஞ்சோற்று கடன் தீர்க்க அங்கும் ஒரு கர்ணன் நிலையே நடிகர் திலகம் அவர்களுக்கு என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளவேண்டும்....நாட்டுக்கு நல்லது மட்டுமே செய்த கர்ம வீரர் காமராஜர் கூட மக்கள் மடமையால், தவறான ஒரு முடிவால் தான் தோற்றார்.....அதன் விளைவு.....இன்றும் தமிழகத்திற்கு விடியவில்லை !

    கருணாநிதி சிவாஜி கணேசன் கட்டிபிடித்து அழுத காட்சியை கொச்சையாக விமர்சனம் செய்த இந்த பெயர் தெரியாத பண்பாளர்...mgr அவர்கள் கூட எனது மனைவி மறைந்தபோது நான் அழவில்லை..யார் யாரோ தேற்றிய பொது அழாத நான் ...தம்பி கணேசன் வந்த்தபோது கதறி..கதறி அழுதேன்..எங்கிருந்துதான் எனக்கு அழுகை வந்ததோ என்று தெரியவில்லை...என்று அவர்கள் நட்பை பற்றி அதன் ஆழத்தை உணரும்படி கூறியுள்ளார். அதனை கொச்சைபடுத்தி எழுத துணிவு உண்டா இந்த கணவானிடம்....

    சிவாஜி கலைஞர் அழுத நொடி எது ? சிவாஜி அப்போதிருந்த உடல்நிலையில் ..இனி அதிகம் நாம் இருக்கமாட்டோம் என்பதை நன்கு உணர்து ..இது போல ஒரு விழ எப்போது வருமோ அதுவரை நாம் இருப்பது கடினம் என்பதை புரிந்துகொண்டு ..நல்ல நண்பர்களாக இருந்ததன் அடையாளமாக எனது ஆயுளில் இரண்டு வயதை தருகிறேன் என்று கூறிய தருணத்தில் விளைந்த emotion . அதை கூட நட்பு பற்றி சிறிதும் அறியாத , புரியாத....காழ்புணர்ச்சி மட்டுமே கொண்ட ..வாழ்கையில் தோற்ற ...மற்றவர்கள் வாழ்வதை கூட பொறுக்கமுடியாத ...பொருமுகிற ஒரு கேவலமான மனித பிறவி கொச்சை படுத்துகிறான் ....அதனை பெருமை பட என்னமோ சாதித்ததை போல இங்கு திரு அக்பர் அவர்கள் பதிவும் செய்துள்ளார்.....

    திரு அக்பர் அவர்களே...உங்களுக்கு நட்பு வட்டம் என்று உள்ளதா ? அவர்களுக்கு ஒரு நல்லது அல்லது கேட்டதோ நடந்தால் நீங்கள் செள்ளமாடீர்களா..சந்தோஷத்தையோ துக்கத்தையோ பங்குகொள்ளமாடீர்கள ?

    Ar rahman ஆஸ்கார் விருது பெற்றபோது தாங்கள் பெருமைபடவில்லையா ?

    தமிழனின் புகழ் உலகறிய செய்த முதல் நடிகன் யார் ? சிவாஜி கணேசன்
    அமெரிக்க போன்ற வல்லரசு தமிழத்தை தேடி ஒரு நடிகனை காலாச்சார தூதுவராக வரவைத்தது எந்த நடிகனை ? சிவாஜி கணேசன் என்ற தமிழனை !
    பிரதமர்களும் ..உயர் கனவான்களுக்கு மட்டுமே உரித்தான அமெரிக்க கௌரவ மேயர் பதவி கொடுத்தது எந்த நடிகனுக்கு ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் நடிகனுக்கு - ஒரு முறை அல்ல...3 முறை இந்த கெளரவம் !
    நபோலியன் என்ற மாவீரன் அறிமுகபடுத்திய விருது எந்த நடிகனுக்கு முதலில் பிரெஞ்ச் அரசாங்கம் கொடுத்தது ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் கலைஞனுக்கு !

    கற்பூர வாசனை தெரியாதவைகளுக்கு பரவாயில்லை...தமிழன் தமிழன் என்று பேச்சளவில் தமிழனை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு ....தமிழன் பெருமை படும்போதும்...அவனுக்கு பெருமைகள் வந்துசேரும்போது....இதுபோல வயிர் எரிந்து காழ்புணர்ச்சியால் புலம்பி பொறாமையால் புழுங்குவதன் பெயர் தமிழ் மாண்பா ? தமிழன் மாண்பா ? தமிழ் பண்பா ?

    Rks

  12. Thanks Harrietlgy thanked for this post
  13. #1159
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    சுமார் 35லிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு திரையரங்குகளி்ல் வைப்பதற்காக கார்ட்போர்டில் டிசைன்கள் வரையத் துவங்கிய பழக்கம் நெஞ்சில் மிகவும் லயித்துப்போன ஒன்று. பின்னாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோலம் போடுவது போல வரைந்து பழக, நினைத்தாலே இனிக்கும் நாட்கள்..
    அப்படி வரைந்து வைத்த டிசைன்களில் ஒன்று...
    வெள்ளை கார்ட்போர்டில் பென்சிலால் முதலில் மேற்கோடுகள் வரைந்து, அதன் மேல் ஸ்கெட்ச் பேனாவால் மீண்டும் வரைந்ததனால் அந்த பென்சில் கோடுகள் அப்படியே உள்ளன.

    அதில் நடுவில் நடிகர் திலகத்தின் படம் கத்தரித்து ஒட்டப்பட்டிருக்கும்.

    அதன் தோற்றம்..

    நடிகர் திலகத்தின் நிழற்படம் மட்டும் மாதிரிக்காக இப்போது இணைக்கப்பட்டுள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Harrietlgy, sankara1970, Russellmai liked this post
  15. #1160
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-110.

    "பழநி."

    "ஆறோடும் மண்ணில்" பாடல்.

    "ஏர் கொண்ட உழவன் இன்றி
    போர் செய்யும் வீரன் ஏது?"
    என்கிற வரி பாடும் போது
    ஓர் உழவனாகவே மாறிக்
    காட்டும் பெருமிதம்.

  16. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •