உயர்திரு செல்வகுமார் சார்
முதற்கண் இதுபோல SENSITIVITY உள்ள செய்திகளை அதுவும் உயிருடன் இல்லாதவர்கள் பற்றிய செய்திகளை... செய்தி கூட அல்ல...தனி நபர் எண்ணங்களை......பதிவிடுவது அவசியம் அற்றது. காரணம் எந்த ஒரு தகவலும் அதற்க்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் அவர் சொன்னார்...இவர் சொன்னார் ...அந்த புத்தகத்தில் உள்ளது...இந்த புத்தகத்தில் உள்ளது என்று அதை பதிவு செய்வது ஏற்புடைய விஷயம் அல்லவே அல்ல !
காரணம் நடிகர் சங்க இடம் இந்த விலை கொடுத்து இத்தனை சென்ட் வாங்கியது என்பது அதன் பத்திரமோ அல்லது கட்டப்பட்ட ரசீதோ பார்க்காமல் எதுவும் சொல்லமுடியாது. அதுதான் உண்மையான ஆதாரம். அந்த ஆதாரத்தை பதிவிடவேண்டிய அவசியம் நடிகர் சங்கத்திற்கு கிடையாது ஏனெனில் இது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களுக்கே அதில் குழப்பம் இல்லாதபோது நமக்கு ஏன் ?
2.
நீங்கள் பதிவு செய்த அந்த நடிகர் சங்க இணைபிலயே ஏகப்பட்ட முன்னுக்கு பின் முரணான தகவல்கள் உள்ளது நன்றாக நிதானமாக படித்து பார்பவர்களுக்கு நன்கு விளங்கும். முதல் PAGE மொத்த இடம் 22 சென்ட் என்றும் கட்டிடம் கட்ட வாங்கிய கடன் ருபாய் 22,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்.
ஆனால் அதே நடிகர் சங்க இணையதளத்தில் http://nadigarsangam.org/index.php/sifa/நிகழ்வுகள்
இந்த இணைப்பில் பணம் பற்றாகுறையால் 20 சென்ட் நிலம் வாங்கியது என்றும் கட்டிடம் கட்ட கடனாக ருபாய் 18,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்....நீங்கள் அதை பகிர்வும் செய்துள்ளீர்கள்....
20 சென்ட் நிலமா அல்லது 22 சென்ட் நிலமா மற்றும் 22 லட்சம் கடனா அல்லது 18 லட்சம் கடனா என்ற கேள்வி எழுகிறது இதை படிக்கும்போது...
அப்படி உள்ளபோது இதில் எது உண்மை ...எது பொய் என்பது எதை வைத்து முடிவு செய்வது ?
நடிகர் சங்க இனைய தளத்திலயே முன்னுக்கு பின் முரணான தகவல்.
அதை AUDIT செய்வது நம்முடைய வேலையும் அல்ல...நமக்கு சமந்தமும் அதில் துளி கூட இல்லை.
நம்மை பொருத்தவரை ..இந்த நடிகரை நமக்கு பிடிக்கும்...இந்த படம் பிடிக்கும்....அபிமான நடிகர் படம் வரும்போது..பார்க்கலாம்..பாராட்டலாம்...அதன் அடுத்த நிலையாக பரவசம் அடையலாம் ...சற்று வசதி இருந்தால் போஸ்டர் அடிக்கலாம் ...இவ்வளவே !
கொடுப்பதற்கென்று பிறந்த மக்கள் திலகம் கொடுத்து உதவியதை பற்றி நான் இங்கு கேட்கவில்லை !
மக்கள் திலகம் ருபாய் 40,000 கொடுத்தது பற்றி மட்டும் எழுதியுள்ள பக்கங்கள் ஞ்யாப்படி எந்த நடிகர் எவ்வளவு கொடுத்தார் என்பதையும் இதில் எழுதியிருக்கவேண்டும் !
அநேகம் பேர் கொடுத்த தொகை சிறிது ...என்பதை போல பதிவு செய்தது ஏற்புடயதாகுமா பொதுவானவர்களுக்கும், நடுநிலை வகிப்பவர்க்கும் ?
எப்படி எழுதுவார்கள் உள்ளதை உள்ளபடி ...தமக்கு எது வேண்டுமோ, தமக்கு எது பிடித்த விஷயமோ அது மட்டும் எழுதுவது, அதனை மட்டும் சிறப்பித்து தூக்கி வைப்பதுதானே நம் தமிழகத்தின் தொன்றுதொட்டு விளங்கி வரும் பண்பாடு !
இதில் எழுதப்பட்ட விதம் அனைவருக்குமே சந்தேகத்தை வரவழைக்கும்...காரணம் இந்த வரிகள் -
திரு சரத்குமார் அவர்களும், பொது செயலாளர் திரு ராதாரவி அவர்களும் எடுத்த
இமாலய முயற்சியால் மலேசியாவில் 21.12.2007 அன்றும், சிங்கப்பூரில் 23.12.2007 அன்றும் மிகச் சிறப்பாக கலை விழாக்கள் நடத்த பட்டன . இந்த விழாக்களை சன் டி வி நிறுவனத்தின் மூலமாக ராடான் மீடியா ஒர்க்ஸ் இணைந்து நடத்துவதற்கு சங்கத்தின் உறுப்பினர் திருமதி ராதிகா சரத்குமார் வடிவமைத்து நடத்தி கொடுத்தார்.
பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது நடிகர் திலகம் ஸ்ரீதர் குழு அனைத்து நடிகர்களை கொண்டு ஜவான்களை மகிழ்வித்து அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கோடிக்கும் அதிகமான பொன்னும் பொருளும் அனைவரும் கொடுத்தார்களே அதை குறிப்பிட்டு எழுதவேண்டியதுதானே ?
பல நிவாரண நிதிகள் நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நட்சத்திர கிரிகட், ஆக்கி ஆகிய பல நடத்தி அதில் தென்னிந்திய நடிகர்கள் NTR ANR PREMNAZIR RAJKUMAR இப்படி பலர் கலந்துகொண்டு சிறப்பித்து நன்கொடை வழங்கியதை எழுதியிருக்கலாமே ?
ஏன் அதனை எழுதவில்லை ? அதெல்லாம் என்ன ஒரு ருபாய் ..ரெண்டு ருபாய் நன்கொடையா ?
ஆக தமக்கு எது சாதகமோ....எது வேண்டுமோ அதை மட்டும் தூக்கி வைப்பது...மற்ற சிறப்பான விஷயங்களை மறைப்பது இருட்டடிப்பு செய்து நடிகர் சங்க இனைய தளத்தில் வந்துள்ள செய்தி மட்டும் எப்படி என்ன விதத்தில் எந்த கௌரவத்தில் உண்மை என்று பொதுமக்களால் ஏற்றுகொள்ள முடியும் என்று நினைக்க முடியும் ?
சமீப நடிகர் சங்க தேர்தல் மீடிங்கில் பலவற்றில் SV சேகர் அவர்கள் நடிகர் திலகம் கட்டிடம் கொண்டுவந்த சூழல் அவர்களுடைய கஷ்டங்கள், தியாகம் உழைப்பு பற்றி எடுத்து சொன்ன நாள் வரை , அதன் கண்ணொளி YOUTUBE தரவேரிய வரை நடிகர் சங்கம் இனைய தளத்தில் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தாங்கி நடிகர் சங்க இனைய தள பக்கங்கள் இல்லவே இல்லை.
அதற்க்கு பின்னர்தான் அவசரம் அவசரமாக சங்கத்தின் இணையதளத்தில் இப்போதுள்ள CONTENT வந்துள்ளது என்பது உங்களுக்கு கூடுதல் தகவல் !
நான் ஏன் கூறுகிறேன் என்றால் காரணம் நடிகர் சங்க தேர்தல் விஷயங்கள் அதில் பதிவு செய்கிறார்களா என்று நான் தொடர்ந்து பார்த்தவன் ...அப்போதெல்லாம் இது இல்லவே இல்லை !
3. 1971 முதல் 1981 வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சங்க தலைவராக இருந்துள்ளார்.
14 வருடங்கள் பலர் தலைவர்களாக நடிகர் சங்கத்தில் கோலோச்சினார்கள் !
அவர்கள் சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராக வரும்வரை என்ன செய்தார்கள் நடிகர் சங்க கட்டிடம் கொண்டுவருவதற்கு ?
நான் நம்புவதெல்லாம் ...சிவாஜி கணேசன் வந்தால் எப்படி எல்லாம் அவரை சிக்க வைக்கலாம் என்று 14 அம்ச திட்டம் மட்டுமே தீட்டியிருப்பார்கள் என்று !
அந்த நாடகம் தானே சிவாஜி கணேசன் அவர்களை பொருத்தவரை அரங்கேறி உள்ளது ! அரங்கேறிகொண்டிருக்கிறது !
ஸ்டேட் பேங்க் மூலம் கட்டிடம் கட்ட கடன் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும்.
ஆனால் ஸ்டேட் பேங்க் மூலம் கடன் பெறப்பட்டதாக கூறப்படுவது எந்த வருடம்?
எத்துனை பகுதிகளாக பெற பட்டது என்று எந்த தகவலும் நடிகர் சங்க இணையதளத்தில் இல்லை.
இப்படி அரை குறை சம்பவங்களை தொகுத்து பதிவு செய்துள்ளதை பொதுவாக படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?
கடன் 1971 இல் பெறப்பட்டதாகதானே நினைப்பார்கள் ?
கட்டிடத்தை 1979 வரை ஏன் கட்டாமல் சிவாஜி இருந்தார் என்று சிவாஜி கணேசன் அவர்களை அல்லவா தவறாக நினைப்பார்கள் ?
என்னமோ சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு வாங்கிய பணத்தை சும்மா வைத்துகொண்டு கட்டாமல் வட்டி மேல் வட்டி ஏறியது என்று தான் தவறாக நினைப்பார்கள் !
நீங்களே என்ன எழுதினீர்கள் சிவாஜி அகலக்கால் வைத்தார் என்று தானே ?
இந்த அரைகுறை மற்றும் முக்கிய விழுங்கப்பட்ட, மறைக்கப்பட்ட தகவல் பதிவு செய்யாதவரை , சங்க இனைய தளத்தில் அவசர கதியில் வெளிவந்துள்ள அரை குறை தகவல் படிப்பவர்கள் அப்படி நினைக்க மட்டுமே வாய்ப்புண்டு !
அப்போது சிவாஜி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கதிலயே இந்த பதிவு அரை குறையாக, சம்பவத்தை மட்டும் கோர்த்து ஜோடிக்கப்பட்டு நடிகர் சங்க இனைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது..என்பது தெளிவாக தெரிகிறது....
கடன் பெறப்பட்ட ஆண்டை ஏன் இவர்கள் பதிவு செய்யவில்லை ? அரை குறை தகவலை இணையதளத்தில் ஏன் சங்கம் பதிவிடவேண்டும் ? -
தாங்கள் உட்பட இந்த திரி நண்பர்கள் என்ன உரைப்பீர்கள் ? அதை நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்கவேண்டும் என்று ! இதுதான் பதிலாக வரும் அதுவும் எனக்கு புரிகிறது.
நீங்கள் உட்பட அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் இனி வருவன !
ஸ்டேட் பேங்க் நுங்கம்பாக்கம் கிளையில் கடன் பெற விண்ணப்பமும் அதனை எப்படி செலுத்துவோம் என்ற கடிதமும் சங்கம் சார்பாக கை எழுத்திட்டு கொடுக்கப்பட்ட வருடம் 1976 ஏப்ரல் மாதம் (NEW FINANCIAL இயர்).
இந்த முயற்சி 1974 வருடம் தீபாவளி சமயத்தில் நடந்த சங்க பொதுக்குழு கூடத்தில் ஆலோசிக்கப்பட்டு, பேசப்பட்டு, 1975 இல் முடிவெடுத்து சங்க நிலத்தை அடமானம் வைக்காமல் இதனை செய்யவேண்டும்என்ற முக்கியமான விஷயத்தை நடிகர் திலகம் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த LEADING TRIBUNAL ADVOCATE திரு RAMAN , கேரளா மாநிலத்தை சேர்ந்த திரு HARISH SALVE, TTK மற்றும் INDIA CEMENTS குழும உயர் வக்கீல் குழுக்களின் அறிவுரையின் பேரில் ஸ்டேட் பேங்க் நிர்வாகத்திடம் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு அணுகினார்.
அதுவும் பொதுக்குழு தீர்மானம் கலந்தாலோசனை பெற்ற பிறகு ...இதுபோல கடிதம் கொடுக்கலாம் என்று அனைவரும் ஒருமனதாக ஒத்துகொண்டபிறகு மட்டுமே கொடுக்கமுடியும்...காரணம் இது நடிகர் சங்க கட்டிட விவகாரம்...தனிச்சை முடிவு அல்ல ! ஆகவே இன்னது கொடுக்கபோகிறோம் வங்கிக்கு....இப்படி கொடுக்கப்போகிறோம் வங்கிக்கு என்று அனைவரும் ஒத்துகொண்ட பிறகே இது நடந்திருக்க முடியும்....அவருக்கு தெரியாது...இவருக்கு தெரியாது...என்பதெல்லாம் ஒத்துகொள்ளவே முடியாத விஷயம் வங்கி விஷயத்தை பொருத்தவரை !!!
நடிகர் திலகம் நினைத்திருந்தால் நடிகர் சங்க இடத்தினை COLLATERAL ஆக ஸ்டேட் பேங்க் இடம் வைத்து நிலத்தின் பெயரில் கடன் வாங்கி இருக்கலாம்...! 1950உகல் மத்தியில் வாங்கிய நிலம் 1976 கால கட்டங்களில் நல்ல ஒரு தொகை கொண்ட சொத்தாக மாறி இருந்தது ! இந்த சுலபமான முறையை நடிகர் திலகம் கையாளவில்லை...
காரணம் ....
அனைவரும் கஷ்டப்பட்டு வாங்கிய இடம்...அதற்க்கு இம்மி அளவு கூட எந்த வகையிலும் பிரச்சனை வரக்கூடாது என்ற மிக உயர்ந்த நல்ல எண்ணம் மட்டுமே ஆகும்...!
அவருடைய அந்த நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பால் தான்...ஸ்டேட் பேங்க் CASE போட்டபோது ...ராதாரவி அவர்களால் " நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கவில்லை...கட்டிடம் கட்ட மட்டும் தான் கடன் வாங்கப்பட்டது " என்று கேஸ் ஜெயிக்க முடிந்தது !
முதலில் அதனை உணர்ந்து கொள்ளவேண்டும் !
ஸ்டேட் பேங்க் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்பது உலகறிந்த விஷயம். அவ்வளவு எளிதில் பணம் பட்டுவாடா பண்ண மாட்டார்கள் ! அன்றும் இன்றும் !
போதிய RECOMMENDATIONS இருந்தும் COLLATERAL SECURITY இல்லாத காரணத்தால், மேலும் 1976 LOAN DISBURSEMENT பட்ஜெட்இல் கேட்கப்பட்ட தொகை இல்லாத காரணத்தால் அந்த வருடம் தர இயலாது...1977 புதிய FINANCIAL YEAR வரும்போது நிச்சயம் ஏதாவது செய்வதாக கூறினார்கள் STATE BANK OF INDIA அதிகாரிகள்.
அதன்படி APRIL மாதம் பேச்சு வார்த்தை தொடங்கி கேட்கப்பட்ட தொகை கடனாக வழங்க முறையீடு தலைமை அலுவலகத்தில் அனுப்ப (WRITTEN CONSENT ) வங்கியின் கிளை மேலாளரால் பரிந்துரைக்கப்பட்டது !
அதன் பிறகு நடிகர் திலகம் அவர்களுடைய தனிப்பெரும் செல்வாக்கினை பயன்படுத்தி கோரிக்கை எழுப்பி ....காட்டமான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டு கடன் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆக சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக வந்தவுடன் (1971 இல்) பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா அல்லது கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பது இதில் இருந்தே நன்கு விளங்கும். பணம் கடனாக 1971 பெறவில்லை என்பது இதில் இருந்து அனைவருக்கும் வெளிச்சமாகிறது !
VKR புத்தக பதிவு ஒருபக்கம் இருந்தாலும் ... கட்டிடம் குறித்த நேரத்தில் கட்டிமுடிக்க மிக மிக முக்கிய காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் மற்றும் திரு VKR அவர்கள். இவர்கள் மூவரும் மாறி மாறி கட்டிடம் கட்டும்போது கூடவே பெருமளவு இருந்ததால் தான் நடிகர் சங்கம் பெருமை பட இன்று பேசும் நடிகர் சங்க கட்டிடம் துரிதமாக கட்டிமுடிக்கப்பட்டது ....அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு மக்கள் திலகம் அவர்களால் 1979 இல் திறந்து வைக்கப்பட்டது !
இதை எவராலும் மறுக்க முடியாது எப்போதும் போல மறைக்க வேண்டுமானால் முயற்சித்தால் முடியும் சில காலங்கள் வரை !
இந்த உண்மை வரலாற்றை எல்லாம் நடிகர் சங்க இனைய தளத்தில் மிக சௌகர்யமான முறையில் மறந்து என்னமோ 1971 இல் நடிகர் சங்க தலைவராக சிவாஜி கணேசன் பதவி ஏற்றவுடன் ஸ்டேட் பேங்க் போய் கேட்டவுடன் பல லட்ச ருபாய் கொடுத்ததுபோல...பத்திகளை சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இவர்கள் நடத்திய நட்சத்திர இரவு நடத்த மட்டும் என்னமோ இவர்கள் மட்டுமே படாத பாடு பட்டு வியர்வை சிந்தி உழைத்து வந்தது போல எழுதியுள்ள பத்தியை பார்த்தாலே தெரிகிறது.
சிங்கபூர் மலேசியா நகரங்களில் நடந்த அந்த நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் விளம்பரம் மூலம் மட்டுமே பல நூறு கோடி ருபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு போனது யாருக்கு ?
தனியார் தொலைகாட்சிக்கு !!
இதனை, மிகவும்.????..கஷ்டப்பட்டு நடத்திகொடுத்த நிறுவனம் எந்த நிறுவனம் என்று சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளது ? -
RADAN TV NETWORKS!!!
இது யாருடைய நிறுவனம் ?
உலகிற்கே தெரியும் !
ஆனால் அதனை, ரஜினி, கமல் உட்பட அனைத்து கலைஞர்களும் பங்குகொண்ட மிக மிக பிரபலமான ஒரு நட்சத்திர நிகழ்ச்சிக்காக வெறும் 2.5 கோடி ருபாய் மட்டுமே தான் இவர்கள் வாங்கியிருக்கிறார்கள் ..அதாவது கணக்கில் காட்டி இருக்கிறார்கள் ....! இதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும் !
நேரிடையாக டிக்கெட் விநியோகம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து இருந்தால் நடிகர் சங்கத்தில் இன்று வந்து சேர்ந்திருக்க வேண்டிய தொகை பல கோடி !
கடன் கேட்கும்போது எந்த வங்கியும் நீங்கள் எப்படி கடனை திரும்ப செலுத்துவீர்கள்...உங்களால் மாதம் எவ்வளவு செலுத்த முடியும்...எவ்வளவு வருடம் TENURE வேண்டும் என்ற கேள்வி நிச்சயம் உண்டு... !
அது Thiru. சிவாஜி கணேசன் என்றாலும் சரி ...Thiru. MGR அவர்கள் என்றாலும் சரி..! மத்திய அரசு செயல்பாட்டில் உள்ள வங்கி சட்டதிட்டங்கள் அந்த பதிலில் திருப்தி அடைந்தால்ஒழிய ஐந்து பைசா கூட கிடைக்காது !
ஆகவே நடிகர் சங்கத்திடம் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு பதிலாக தான் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை EMI ஆக வும் , வருடத்தில் ஒரு முறை நட்சத்திர இரவு நடத்தி அதில் இருந்து 1 லட்சம் ருபாய் PRINCIPLE ADJUSTMENT கொடுக்கிறோம் என்றும் ஸ்டேட் பேங்க் சட்ட திட்டம் எழுத்து மூலம் கடனை எப்படி அடைப்பீர்கள் என்று கேட்ட விளக்கத்தை எழுத்து மூலம் நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக இருக்கும் பட்சத்தில் கொடுத்தார்...
NOT AT AN INDIVIDUAL CAPACITY AS V.C. GANESAN என்பதை அனைவரும் உணரவேண்டும் !
பணம், கட்டிடம் கட்ட, கட்ட STAGE WISE ஸ்டேட் பேங்க் பட்டுவாடா செய்தது. அனைத்து வங்கிகளும் பட்டுவாடா இப்படிதான் செய்யும் ! இதையும் புரிந்துகொள்ளவேண்டும் !
ஆகவே செல்வகுமார் சார் .....நடிகர் திலகம் 1977-78 இல் வாங்கிய நடிகர் சங்க கடன் அகலக்கால் வைக்கும் அளவிற்கு ஒரு COMPLEX கட்டுவதற்கு அல்ல !
1952 இல் தொடங்கப்பட்ட துணை நடிகர்கள் சங்கம்...தென் இந்தியா நடிக சங்கமாக மாறி....நடிகர் திலகம் அவர்கள் பதவி ஏற்ற 1971 ஆம் ஆண்டு வரை கட்டிடத்தை சாரி...கூரை கொட்டகையாக தான் வைத்திருந்தார்கள் அதாவது சுமார் 18 ஆண்டு காலம் !
நடிகர்களுக்கு அமர உருப்படியான ஒரு இடம் வேண்டும் என்ற சிந்தனை நடிகர் திலகம் அவர்களுக்கு வர காரணம் அதனை செயல்படுத்தி காட்டிய வேகம் ..இதற்க்கு காரணம் ...கலையை , கலைஞர்களை அவர் தம் உயிரை விட அதிகம் நேசித்ததால் மட்டும்தான் !
அதற்க்கு தமிழகத்தில், சங்கத்தில் இருந்தவர்களாலும், அவருக்கு பிறகு சங்கத்தில் வந்தவர் மூலம் கிடைத்த பரிசு ?
வெட்க்கி தலை குனியவேண்டும் சார் ...துரோகம் இழைத்தவர்கள்..இவர் மூலம் பயன் அடைந்தவர்கள், இவரையும் தவறாக எழுதுபவர்கள், எள்ளி நகயாடுபவர்கள் !
திரு அக்பர் அவர்கள் பகிர்ந்த பதிவில் ஒரு பெயரற்ற மனிதன் மனம் குழம்பி மதிகெட்டு எழுதி இருந்தாரே ...ஒரு நடிகன் நடிக்காமல் வேறு என்னதான் செய்யவேண்டுமாம் என்பது கூட தெரியாமல் ...தனி மனித ட்வேஷத்துடன்....அவர் இப்படி நடித்தார்...அப்படி நடித்தார்..நடிப்பில் இப்படி ஓடினார்...அப்படி ஆடினார்...ஐயோ என்று அழுதார்...உய்யோ என்று விழுந்தார் என்றெல்லாம்...காழ்புணர்ச்சி மட்டுமே பொருமி விம்மி வெதும்பி அவர் இருக்கும் இடமே பொசுங்கி போகும் அளவுக்கு வயிதெரிச்சல் கொண்டு பதிவு செய்தாரே...அவரைப்போல உள்ளவரும் தான் !
சிவாஜி கணேசன் என்கிற நடிப்புக்கலைதெய்வம் இல்லை என்றால் எந்த நடிகருக்கும் ஒரு உந்துதல் ஒரு MOTIVATION , ஒரு DEDICATION , சாதிக்கவேண்டும் என்கிற வெறி ...நிச்சயம் தோன்றி இருக்காது ! இது தான் உண்மை !
RKS
Bookmarks