-
7th December 2015, 04:06 PM
#11
Member
Devoted Hubber
சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல் வெளியிட்டதாக சொல்லப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் o.பன்னீர்செல்வம் நடிகர் கமலுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் கமல் தற்போது தனது விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில் தான் ஈமெயில் மூலமாக ஆங்கிலத்தில் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு கொடுத்த பேட்டி தவறாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழக மக்களுக்கு நேர்ந்த துயரதைப்பற்றிய புலம்பலே இடம்பெற்றிருந்ததாகவும், தமிழக அரசைப் பற்றியோ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்றோ தான் கேட்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
இது அமைச்சர் o.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அளிக்கும் பதில் அறிக்கையல்ல என்றும், மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் தனது இயக்கத்தினருக்கு தெளிவு படுத்தவே இந்த அறிக்கை என்றும், களமிறங்கி மக்களுக்கு உதவிக்கொண்டு இருக்கும் யார் மனமாவது நான் சொன்னதாக சொன்ன அறிக்கையால் புண்பட்டிருந்தால் மன்னிப்புகூட கேட்டுக்கொள்வதாகவும், தனிமனித கோபதாபங்களை தவிர்த்து கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த பெரிடர்காலத்தில் அனைவரும் பணிபுரியவேண்டுமேன்றும் நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th December 2015 04:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks