-
15th December 2015, 12:20 PM
#11
Senior Member
Veteran Hubber
பீப் பாடலில் சம்மந்தப்பட்டவர்களை தூக்கில் போடுங்கள்- ஒய்.ஜி.மகேந்திரன் ஆவேசம்
சமீபத்தில் இணையத்தில் லீக்காகி பெரும் சர்ச்சைக்குள்ளானது சிம்பு பாடிய பாடலான ‘பீப் பாடல்’. இது பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது. வைரமுத்து, கங்கை அமரன் உட்பட பலரும் இந்தப் பாடலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பழம்பெரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தனது முகநூல் பக்கத்தில் மிகவும் ஆவேசமாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல். பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கு சம்மந்தம் இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் இந்தப் பாடல் கண்டனத்துக்குரியது. இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை.
வெறும் குழந்தைகளை அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்கச் செய்து பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடலே.
இந்தப் பாடல் அவசியமான ஒன்றா. லீக்கானதோ, ஆகாததோ எனினும் மூளை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க இயலும். கண்ணதாசன் தனது கல்லறையில் கண்டிப்பாக நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன் உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டுமென தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்..
-
15th December 2015 12:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks