Page 117 of 128 FirstFirst ... 1767107115116117118119127 ... LastLast
Results 1,161 to 1,170 of 1276

Thread: SIMBHU - Little Super Star

  1. #1161
    Senior Member Seasoned Hubber interz's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Denmark
    Posts
    1,157
    Post Thanks / Like
    http://www.tamilstar.com/news-id-sim...-05-134927.htm

    My bad it was 2 and half years ago. The article explains it all.

    Furthermore I havent read it is a song Anirudh and Simbu made while chennai suffered from flood. The guy who leaked it is enjoying his deed now. Every one blame Simbu and Anirudh but him.
    God bless all

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1162
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    TR writes to Commissioner of Police mentioning that music was composed by Anirudh in his letter

    Sent from my SM-G531F using Tapatalk
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  4. #1163
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Antha maavu pisairavanga ellaam eppidi escape aavuranga.
    Etho movie la dressing code paththi kuuda advice pannuvaar. that was even worse

  5. #1164
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by interz View Post
    Are you sure its Simbu who leaked the song? I really doubt Simbu would do it after he choose the "spiritual " pattern last year. I think if any one should be blamed for its the guy who leaked it.

    To me its more offensive people are getting upset about what people do in privacy. Furthermore I thought people had more to cleaning the places after the flood than complaining and demonstrating about cinema. These people never change..
    he has all right to do in his bedroom/bathroom but in public that too this cheap... not at all ... but current generation is like that, doesnt care about lyrics but only likes/views. if everyone would have banned why this kola veri and danush's atrocious lyrics from then now this wouldnt have happned.. Simbu just added icing on the cake

  6. #1165
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பீப் பாடலுக்காக சிம்புவுக்கு சம்மன். காவல்நிலையத்தில் ஆஜராவாரா? - VIKATAN

    பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, வரும் 19 ம் தேதி கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சிம்பு இல்லாததால் அவரின் தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாகச் சொல்லப்படும் ஆபாச வரிகளைக் கொண்ட பாடல் ஒன்று, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவை,தூத்துக்குடி,கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாதர் சங்கத்தினர் போரட்டங்களும் நடத்தினர்.

    இந்நிலையில் நடிகர் சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கொடுக்க, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார் காவல் ஆணையர் அமல்ராஜ். இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
    வரும் 19-ம் தேதி காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மனை விநியோகிக்க கோவை போலீசார், சென்னையில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு இன்று காலை சென்றனர். சிம்பு வீட்டில் இல்லாததையடுத்து, அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மனை போலீசார் அளித்தனர். அதன்படி வரும் 19-ம் தேதி சிம்பு நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறுகையில், "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடலை இணையத்தில் வெளியிட்டது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளோம். இது தொடர்பாக சிம்புவிடம் விசாரிக்க வரும் 19-ம் தேதி அவரை நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளோம். விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை கோரி புகார்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  7. #1166
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பீப் பாடலில் சம்மந்தப்பட்டவர்களை தூக்கில் போடுங்கள்- ஒய்.ஜி.மகேந்திரன் ஆவேசம்

    சமீபத்தில் இணையத்தில் லீக்காகி பெரும் சர்ச்சைக்குள்ளானது சிம்பு பாடிய பாடலான ‘பீப் பாடல்’. இது பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது. வைரமுத்து, கங்கை அமரன் உட்பட பலரும் இந்தப் பாடலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பழம்பெரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தனது முகநூல் பக்கத்தில் மிகவும் ஆவேசமாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல். பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கு சம்மந்தம் இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் இந்தப் பாடல் கண்டனத்துக்குரியது. இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை.
    வெறும் குழந்தைகளை அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்கச் செய்து பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடலே.
    இந்தப் பாடல் அவசியமான ஒன்றா. லீக்கானதோ, ஆகாததோ எனினும் மூளை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க இயலும். கண்ணதாசன் தனது கல்லறையில் கண்டிப்பாக நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன் உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டுமென தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்..

  8. #1167
    Senior Member Seasoned Hubber interz's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Denmark
    Posts
    1,157
    Post Thanks / Like
    Bullocks. I think people are hyping up the song to be more controversial than it is. I condemn every one condemning this song. It is a song, it is not the bible or quran or bhagavadh geeta. For ever silly protest I in india, it makes me wonder has India really been freed, or is it yet to happen...
    God bless all

  9. Likes Russellvzp liked this post
  10. #1168
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பீப் சாங் எதிரொலி: சிம்பு வீட்டை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

    சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிம்பு-அனிருத் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சிம்பு வீட்டை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடிகர் சிம்புவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத் தளங்களில் நடிகர் சிம்பு குரலில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியானதாகக் கூறப்படும் 'பீப்' பாடல் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் உள்ளது என்று சிம்புவுக்கும்,அனிருத்துக்கும் கண்டனம் தெரிவித்து,கோவை,தூத்துக்குடி,சேலம்,கோவில்பட்ட ி என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாதர் சங்கத்தினரும், மகளிர் அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டமும், உருவப்பட எரிப்பும் நடத்தி வருகின்றனர். மேலும் கோவை போலீசாரிடம் மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிம்புவிற்கும், அனிருத்திற்கும் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டு முன்பு இன்று (செவ்வாய்) காலை மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கையில், சிம்புவை கைது செய்ய வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள், சிம்புவின் படத்தை கிழித்தும், கொளுத்தியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிம்புவையும், அனிருத்தையும் விரைவில் கைது செய்ய, தமிழக அரசை வலியுறுத்தியும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உருவாகும் பாடல்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியும் கோஷங்களை எழுப்பினர்.
    இதுகுறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் மரியாள் கூறுகையில், "நடிகர் சிம்பு, பெண்களை ஆபாசப்படுத்தி ஒரு பாடலை எழுதி, இணையத்தில் வெளியிட்டுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல், பெண்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை தடை செய்து, சிம்பு மற்றும் அனிருத் எங்கிருந்தாலும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளோம். சிம்பு தலைமறைவாக உள்ளதாக கேள்விப்பட்டோம்.
    அவர் எங்கு இருந்தாலும் உடனடியாக தமிழக காவல் துறையினர், அவரை கைது செய்ய வேண்டும். அதுவரை, பல்வேறு வடிவங்களில் எங்களுடைய போராட்டம் தொடரும். சில தினங்களுக்கு முன், சிம்பு தன் பெட்ரூமை யாரும் எட்டிப்பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால், அவர் பெட்ரூமில் படுக்கவில்லை. நடுரோட்டில் படுத்துக் கொண்டிருக்கிறார். நடுரோட்டில் இருந்து அவர் எழுந்து கொள்ள வேண்டும். நாங்கள் எழுந்து கொள்ள வைப்போம். மேலும் கானா பாடல்கள் சிலவும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற பாடல்களுக்கு, சென்சார் போர்டு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்." என்றார்.
    சிம்பு குற்றவாளியா? நிரபராதியா?
    சிம்பு உருவாக்கியுள்ள பீப் பாடல் அவருக்குப் பலத்த எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. சிம்புவைக் கைது செய்யவேண்டும், அவரை திரையுலகில் செயல்பட சில ஆண்டுகளுக்குத் தடைவிதிக்கவேண்டும், கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று பலரும் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய ஒட்டுமொத்த உணர்வும், இந்தப்பாடலை உருவாக்கியதற்காக சிம்பு ஏதோவொருவகையில் தண்டிக்கப்படவேண்டுமென்பதே.
    இந்தப்பாடல் வெளியானபோது, அனிருத் இசையில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அனிருத், இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், டி.ராஜேந்தர் இது தொடர்பாக காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில், அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்கட்டும்.

    அந்தப்புகாரில், டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் இந்தப்பாடல் டம்மியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்கியது சிம்பும் அனிருத்தும்தான். சிம்புவின் புகழைக் கெடுப்பதற்காக யாரோ அதைத் திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய கூற்றின்படியே அந்தப்பாடலை உருவாக்கியது சிம்புதான் என்று உறுதியாகியிருக்கிறது. திரைத்துறையில் முதலில் டம்மியாகச் சில சொற்களைப் போட்டு பாடலை உருவாக்குவார்கள். அதன்பின் அதற்காக வரிகளை எழுதிச் சேர்ப்பார்கள். அந்தவகையில் இது டம்மியாக உருவாக்கப்பட்டது. தேவைப்படுகிறபோது நல்ல சொற்களைப் போட்டு பாடலை உருவாக்கி பயன்படுத்திக்கொள்வார்கள். டி.ராஜேந்தரின் புகாரின்படி பார்த்தால் அப்படி டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்று தெரிகிறது. இதனால் உருவாக்கத்தில் குற்றமில்லை என்பது அவருடைய தரப்பாக இருக்கிறது. இதனால், பாடலை உருவாக்கியவர் குற்றவாளியா? அதை வெளியிட்டவர் குற்றவாளியா? என்கிற கேள்வி எழுகிறது.

    சில நல்ல சொற்கள்கூட காலப்போக்கில் வசைச்சொல்லாக மாறிவிடுகின்றன. அந்தவகையில் வசைச்சொல்லாகவே அறியப்படுகிற அந்தச்சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் சிம்புவுக்கு வந்ததும், ஒரு பாடல் தயாராகிறநேரத்தில் (அது டம்மி என்றாலும் கூட) குறைந்தது நான்கைந்து பேராவது இருப்பார்கள். கழிவறையில் தனியாக இருப்பதுபோல் தனியாக ஒரு பாடலைப் பதிவு செய்யவியலாது. பாடல் உருவாக்கத்தின்போது ஒவ்வொரு சொல்லும் மட்டுமல்ல ஒவ்வொரு எழுத்து பற்றியும் கவனமாக இருப்பார்கள் என்பது பாடல்கள் உருவாக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். இப்பாடல் பதிவுசெய்யப்படும்போது அந்தக்கூடத்தில் என்னென்னவெல்லாம் பேசிச்சிரித்திருபபார்கள் என்று நினைக்கும்போதே கோபம் கொப்பளிக்கிறது.

    வெகுமக்களுக்குத் தெரிந்த ஒரு கலைஞன், நிறைய இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டவனுக்கு இம்மாதிரி ஒரு எண்ணம் வந்ததே முதல்குற்றம் என்கிறார்கள். தான் யார்? தன் குடும்பம் எத்தகையது? தான் செய்யும் செயல்கள் சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்? என்பதெல்லாம் நன்கு தெரிந்த ஒரு நபர், இப்படிச் செய்யத் துணிகிறாரென்றால் அவருடைய மனநிலையை என்னவென்று சொல்வது? உண்மையிலேயே நல்லமனநிலையுடன்தான் இருக்கிறாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் வந்திருக்கிறது. அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்திருக்கு என்பார்கள் இங்கோ நிலைமை தலைகீழ், புள்ளைக்கு அப்பன் தப்பாமப் பேசறார் என்று சொல்கிற மாதிரி, பாடல்வரி அது உச்சரிக்கப்பட்டவிதம் அதில் சொல்லப்படும் கருத்து ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மகனின் புகழைக் கெடுக்கப்புறப்பட்டுவிட்டார்கள் என்று புகார் கொடுக்கக்கிளம்பிவிட்டார் டி.ராஜேந்தர். இதுவரை பெண்களைத் தொட்டுக்கூட நடிக்காத பெருமைக்குச் சொந்தக்காரரான டி.ஆர் இந்த விசயத்தில் விமர்சனம் எதுவுமில்லாமல் மகனுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் இதுவரை சேர்த்த பெருமைகளை இழந்துவிட்டார் என்று பேசிகிறார்கள்.

    இந்தப்பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார் என்று கேள்விக்குப் பெரும்பான்மையானோரின் பதில் சிம்பு என்றுதானிருக்கிறது. காவல்துறை உண்மையாகவே துப்றியத் தொடங்கினால் அவர்தான் மாட்டிக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அல்லது அவரே டம்மியாக ஏதாவதொருவரை சரணயடைய வைக்கலாம். அப்படி சரணடைகிறவர், வெளியிட்டதற்கு என்ன காரணம் சொல்வார்? இந்த ஆழ்ந்த கருத்து புதியசிந்தனையை இந்த வையகம் கொண்டாடவேண்டும் என்று நினைத்தே வெளியிட்டதாகச் சொல்வாரா? நீங்கள் ரசிக்கும் சிம்புவின் இன்னொரு முகத்தை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக வெளியிட்டேன் என்று சொல்வாரா? அப்படிச் சொல்வாரானால் அவர் குற்றவாளியா? எது எப்படியானாலும் இப்படி ஒரு பாடலை மொபைலில் வைத்துகொண்டு திரிபவர்களை ஆங்கிலத்தில் "பெர்வெர்ட்" என்று சொல்வார்கள்.

  11. #1169
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Well, a spiritual person would not sing such a song and enjoy hearing it in his bathroom or bedroom. Only a sick spiritual person would do!

    BTW, what does "spiritual" mean?
    good one


    Sent from my iPhone using Tapatalk
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  12. Likes rajeshkrv liked this post
  13. #1170
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    He is not understanding that people are condemning him for the song itself and his thought process and don't care whether it is leaked or not. He should re think and go for personal counseling


    Sent from my iPhone using Tapatalk
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  14. Likes Russellvzp liked this post

Similar Threads

  1. Replies: 1359
    Last Post: 25th July 2014, 03:40 AM
  2. Thalaivar ^ Super Star ^ Rajini's Best Pair
    By Sarna in forum Tamil Films - Classics
    Replies: 57
    Last Post: 4th December 2009, 10:06 PM
  3. Little super star : simbu's kaalai
    By anantha krish in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 11th July 2007, 03:50 PM
  4. Super Star Next movie with Shankar
    By alias in forum Current Topics
    Replies: 0
    Last Post: 19th August 2005, 08:59 PM
  5. YSR, the new super star of TFM
    By Sanjeevi in forum Current Topics
    Replies: 19
    Last Post: 1st April 2005, 07:09 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •