-
23rd December 2015, 01:02 PM
#1981
Senior Member
Veteran Hubber
சந்தானம் இல்லாமல் உருவாகும் ராஜேஷின் புதிய படம்- tamil hindu
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'சிவா மனசுல சக்தி' படத்தில் இருந்து 'வாசுவும் சரவணும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை தொடர்ச்சியாக சந்தானத்துக்கு பிரதான பாத்திரம் அளித்து வந்தவர் இயக்குநர் ராஜேஷ். சந்தானத்தின் ஒருவரி வசனங்கள் எல்லாம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவையாக அமைந்திருக்கிறது.
தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக வைத்து புதிய படமொன்றை அடுத்தாண்டு முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சந்தானம் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக பால சரவணன் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'கடவுள் இருக்கான் குமாரு' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவிருக்கிறார். தற்போது நாயகி மற்றும் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிப்பவர்களுக்கான தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
23rd December 2015 01:02 PM
# ADS
Circuit advertisement
-
31st December 2015, 12:41 PM
#1982
Senior Member
Veteran Hubber
கத்தரிக்கு பாலா மறுப்பு: 'தாரை தப்பட்டை'க்கு 'ஏ' சான்றிதழ்
'தாரை தப்பட்டை' படத்தில் சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்பதை ஏற்க பாலா மறுத்து விட்டார்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கிறது.
'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினார்கள்.
படத்தின் சண்டைக் காட்சிகளில் வன்முறை அதிகமாக இருந்ததாலும், சில வசனங்களை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்று சென்சார் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் பாலா ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தனது கதையமைப்பில் உறுதியாக இருந்ததால், பாலாவின் முடிவுக்கு தமிழ் திரையுலக இயக்குநர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருக்கிறது.
-
31st December 2015, 12:42 PM
#1983
Senior Member
Veteran Hubber
பெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்!
ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யாமேனன், கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காஞ்சனா – 2 மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்கவிருந்த படங்கள் “மொட்ட சிவா கெட்ட சிவா” மற்றும் “நாகா”.
ஆனால் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு கொடுத்துவிட்டார் லாரன்ஸ். அதனால் அவர் இயக்கி நடிக்கும் அந்தப் படத்திற்கு பைரவா என்ற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
எனவே, ராகவாலாரன்ஸ் நடித்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் அன்று வெளியிடவிருக்கிறார்கள். இவ்விரு படங்களைத் தொடர்ந்து தான் நாகா படம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
5th January 2016, 02:27 PM
#1984
Senior Member
Veteran Hubber
சந்தானம், ஜி.வி.பிரகாஷ், ஹாரீஸ் ஜெயராஜுக்கு கோடிகளில் நஷ்டம்! ஏன்..?
மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது; அதேநேரம் ஏழை-பணக்காரர்; வி.ஐ.பி-காமன்மேன் என்ற பாகுபாடும் வெள்ளத்துக்குக் கிடையாது. கடந்த டிசம்பரில் சென்னையையே புரட்டிப் போட்ட வெள்ளம், சினிமா செலிபிரிட்டிகளையும் விட்டு வைக்கவில்லை. ‘‘எனது டாய்லெட்டில் கழிவுநீர் கலந்துவிட்டது.
எனக்கே இப்படி என்றால், ஏழை மக்களின் நிலை?’’ என்று பரிதாபப்பட்டு களத்தில் இறங்கி, ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார் நடிகர் சித்தார்த். பல நடிகர், நடிகைகளும் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவக் களமிறங்கினார்கள். ஆனால், சினிமா பிரபலங்கள் சிலரும் வெள்ளத்தினால் கோடிக்கணக்கில் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இசையமைப்பார்கள் ஜி.வி.பிரகாஷும் ஹாரீஸ் ஜெயராஜும் அந்தப் பட்டியலில் அடக்கம்.
‘‘வீட்டுக்குள்ள தண்ணி புகுந்தாகூட பரவாயில்லை; காருக்குள்ள தண்ணி புகுந்துடுச்சே!’’ என்று புலம்பி வருகிறார்கள் இருவரும். இருவரிடமும் கோடிகள் மதிப்புள்ள ஹம்மர், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, மினிகூப்பர் மற்றும் லம்போகினி போன்ற கார்கள் இருக்கின்றன. டிசம்பர் வெள்ளம், இவர்களின் காஸ்ட்லி கார்களுக்குள்ளும் புகுந்து, மிதக்க ஆரம்பித்து விட்டன.
வெள்ளம் வடிந்து ஒரு மாதம் ஆனாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இன்னும் பாதிக்கப்பட்ட கார்கள் என்ட்ரி ஆகிக் கொண்டே இருக்கின்றன. இதுவரை சென்னையில் இருந்து மட்டும் ஒரு லட்சம் கார்களுக்கு மேல் இன்ஷூரன்ஸ் க்ளெய்முக்காக, ஸ்டார்ட் ஆகாமல் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே விழி பிதுங்கிய நிலையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், காஸ்ட்லி கார்களைக் கண்டுகொள்ளாமலே இருந்து வருகின்றனவாம். இதனால், இன்ஷூரன்ஸுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் செலிபிரிட்டிகள். இதில் சந்தானமும் ரேஞ்ச்ரோவர் காரும் அடக்கம்!
- VIKATAN
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
6th January 2016, 09:46 AM
#1985
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
6th January 2016, 03:49 PM
#1986
Senior Member
Senior Hubber
santosh narayanan was born in 1983 (according to wikipedia). how can he have such a big daughter?
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th January 2016, 04:54 PM
#1987
Senior Member
Veteran Hubber
'பசங்க - 2 வெற்றி'- பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசளிப்பு - TAMIL HINDU
’பசங்க 2’ படத்தின் வெற்றியைப் பகிர்ந்துகொள்ளும் விதமான
பாண்டிராஜுக்கு சூர்யா கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி,
முனீஸ்காந்த், கார்த்திகுமார் உட்பட குழந்தைகள் நடிப்பில் வெளியான படம் 'பசங்க 2'.
குழந்தைகளை மையமாகக் கொண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும்,
வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றியையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் விதமாக சூர்யா,
இயக்குநர் பாண்டிராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரிக்கும் போது நெகிழ்ச்சியான
சம்பவங்களை அடுக்கினர்.
''சூர்யாவுக்கு இந்தப் படம் நிறைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்
பெற்றுத் தந்திருக்கிறது. அதைவிட அவர் அப்பா சிவகுமார் படம் பார்த்து
கண்கலங்கிவிட்டார். அம்மா படம் முடிந்து எழுந்து நின்று கை தட்டினார்.
பொதுவாக சூர்யா அம்மா இந்த அளவுக்கு வேறு எந்தப் படத்தைப் பார்த்தும்
நெகிழ்ந்ததில்லை. அதனால், அப்பா, அம்மாவை நடிகனாக திருப்திப்படுத்திய மகிழ்ச்சியைப்
பகிர்ந்துகொள்ள இயக்குநர் பாண்டிராஜுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார்.
படம் பார்த்த ஜோதிகாவும் இப்படத்தை மிஸ் செய்ததற்காக
வருத்தப்பட்டார்'' என்று சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th January 2016, 04:32 PM
#1988
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th January 2016, 04:41 PM
#1989
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
11th January 2016, 02:17 PM
#1990
Senior Member
Veteran Hubber
முடிவடைந்தது 'வெற்றிவேல்' படப்பிடிப்பு
வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த 'வெற்றிவேல்' படத்தின்
படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது.
சசிகுமார் நடிப்பில் ஜனவரி 14ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தாரை
தப்பட்டை'. பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சசிகுமார்
தயாரித்திருக்கிறார். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.
'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்ட போது
சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. 'வெற்றிவேல்'
என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், பிரபு, தம்பி ராமையா
உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் வசந்தமணி இயக்கி
இருக்கிறார். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து
வருகிறார்.
தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக
முடித்திருக்கிறார்கள். 'தாரை தப்பட்டை' படத்தின் வெளியீட்டு பணிகள் முடிந்தவுடன்
இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட
இருக்கிறார்கள்.
'சுந்தரபாண்டியன்' பாணியிலான அனைத்து தரப்பினரையும் கவரும் கதை
'வெற்றிவேல்' என்கிறது படக்குழு.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks