-
13th January 2016, 01:23 PM
#2561
Senior Member
Devoted Hubber
Dear senthilvel sir,
congrats for your 2500 valuable and rare posts,hope you will post your 25,000th post also with the same enthusiasm
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th January 2016 01:23 PM
# ADS
Circuit advertisement
-
13th January 2016, 01:45 PM
#2562
Junior Member
Regular Hubber
Dear all.there is always a confusion among people (even in our people) regarding the birthday celebrations and the number of the birthday.
To have clarity if we refer the dictionary for ANNIVERSARY and BIRTHDAY,its given
Anniversary : the day on which an event took place in the previous year.
Birthday : the anniversary of the person"s birth.
To be simple, for a person born on 01.01.2000,01.01.2016 will be his 16th birthday.(2016-2000=16).I think this is just an effort to make our selves to be clear.
Last October 2nd,for Gandhiji"s birth anniversary,the central government was given one number and the state govt was giving another in newspapers.
Peoplwe generally confuse with independence and Republic days which is different from our bitrthdays.Because we 15.08.1947 itself will be first Independence and 26.01.1950 itself first republic day.
thank You all.
-
13th January 2016, 02:32 PM
#2563
Senior Member
Seasoned Hubber

From Bommai 1969 issue
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
13th January 2016, 05:46 PM
#2564
Junior Member
Diamond Hubber
Courtesy. Facebook
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
13th January 2016, 06:07 PM
#2565
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
13th January 2016, 06:25 PM
#2566
Junior Member
Senior Hubber
2500 முத்தான பதிவுகளை வழங்கி நடிகர்திலகத்தின் புகழ் பாடிக்கொண்டிருக்கும் திரு. செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th January 2016, 08:29 PM
#2567
செந்தில்வேல்,
பல நாட்களுக்கு முன்பே இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் அமையவில்லை. உங்களின் அன்றைய தின பத்திரிக்கை பதிவுகள் அனைவரையும் போல் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. எனது மகிழ்ச்சிக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது நான் எழுதி வரும் அந்த நாள் ஞாபகம் தொடரில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கு நீங்கள் ஆதாரத்தை பதிவு செய்திருந்தீர்கள்.
1 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா ராமாநாயுடு குழுவினரால் படமாக்கப்பட்டதை குறிப்பிட்டு அது வசந்த மாளிகை ஓடிக் கொண்டிருந்த அரங்குகளில் காண்பிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன் அது காண்பிக்கப்பட்டது என்பதற்கு பத்திரிக்கை விளம்பரங்களை பதிவிட்டதற்கு முதல் நன்றி.
2. அதே 1972 அக்டோபரில் 14-ந் தேதியன்று தவப்புதல்வன் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 50-வது நாளை நிறைவு செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்த 50-வது நாள் விளம்பரத்தை பதிவு செய்ததற்கு இரண்டாவது நன்றி.
3. மதுரையில் 1961-ல் சிந்தாமணி அரங்கில் பாசமலர் வெளியான போது தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்தது பற்றி சொல்லியிருந்தேன். அதை பற்றிய நோட்டிஸ்-ஐயும் பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றி.
உங்கள் சேவை தொடரட்டும்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th January 2016, 08:30 PM
#2568
ஆதவன் ரவி,
நான் முன்பு ஒரு முறை சொன்னது நினைவிருக்கும் என நினைக்கிறேன். என்ன சொல்லி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை.என்று. இப்போதும் உங்களின் இரு மலர்கள் மற்றும் தாவணிக் கனவுகள் பற்றிய விவரணைகளை படித்தபோது அதுவே மீண்டும் மனதில் தோன்றியது.
இங்கே நமது திரி நண்பர்கள் அனைவருக்கும் ஏன் இந்த திரியுடன் தொடர்ந்து பயணிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் இரு மலர்கள் படத்திற்கு நான் ஒரு ஆயுட்கால ரசிகன் என்று. அப்படி ஒரு படத்தை பற்றிய உங்கள் விவரிப்பு என் மனதை எங்கோ கொண்டு போய் விட்டது. ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் அணுகிய விதம், நடிகர் திலகத்தின் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் பதிவு செய்த விதம், அவரை பற்றி மட்டுமல்லாமல் படத்தின் பங்களிப்பாளர்கள் அனைவரையும் பற்றி நீங்கள் எழுதிய விஷயங்கள் படம் பார்த்த அனைவருக்கும் ஒரு புதிய வெளிச்சத்தையும் இதுவரை பார்க்காதவர்களுக்கு இதை இத்தனை நாள் தவற விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த படத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தால் மீண்டும் அது ஒரு நீண்ட கட்டுரையாக போய் விடும் என்பதனால் நிறுத்திக் கொள்கிறேன். சென்னையில் விரைவில் இந்த படத்தை வெளியிட அதன் விநியோகஸ்தர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சென்னைக்கு வாருங்கள். நமது வாசுவும் வருவார். நாம் அனைவரும் சேர்ந்து பார்க்கலாம்.
இரு மலர்கள் பற்றியாவது பலருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவதாக நீங்கள் தாவணிக் கனவுகள் பற்றி எழுதியது பலருக்கும் ஆச்சரியம். எனக்கும் சேர்த்துதான்.
அதைப் பற்றிய உங்கள் பதிவுகளை படிக்க படிக்க ஆச்சரியம் கூடியது. காரணம் அந்த படத்தின் தூணாக நடிகர் திலகம் விளங்கியிருப்பார். ஆனால் அந்த performance அதற்கு உரிய அங்கீகாரத்தை பெறவில்லை. அதாவது முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் பேசப்பட்டது போல் இது சிலாகிக்கப்படவில்லை. அதை உணர்த்தும் வண்ணம் உங்கள் பதிவுகள் அமைந்திருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.
இந்த படத்தை எடுத்துக் கொண்டு அலசியதற்கு உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி! திருவிளையாடல் பற்றி சிறப்பு பதிவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! தொடருங்கள்
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th January 2016, 08:35 PM
#2569
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்த நாளன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக் வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.
நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.
வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.
[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].
சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.
எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது
உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.
நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.
ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்
இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
13th January 2016, 09:16 PM
#2570
Senior Member
Seasoned Hubber

நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks