-
15th January 2016, 12:27 PM
#461
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மைவிட்டு பிரிந்து இன்று 10,250 நாட்கள் நிறைவு பெறுகிறது,
மக்கள் திலகத்தின் கோடானுகோடி ரசிகர்களும் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் அவரை 10,250 நாட்களும் நினைக்காத நாட்களே இல்லை . அவருடைய திருமுகத்தை மறக்காத நாளே இல்லை . 28 ஆண்டுகளாக அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலக சாதனையாகும் . தற்போது மதுரை - கோவை நகரங்களில் அலிபாபாவும் 40 திருடர்களும் எங்க வீட்டு பிள்ளை படங்கள் ஓடுவது மகிழ்ச்சியான செய்தி .
சன் லைப் - முரசு - ராஜ் டிவி - வசந்த் டிவி - மெகா டிவி -ஜெயா டிவி - மற்றும் பல உள்ளூர் ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல் காட்சிகள் தொடர்ந்து ஒளி பரப்பி வருகிறார்கள் .இணய தளத்திலும் , முகநூலிலும் , டுவிட்டரிலும் , பல தினசரி , வார , மாத இதழ்களிலும் மக்கள் திலகத்தின் கட்டுரைகள் வந்து கொண்டு இருக்கின்றன .
மக்கள் திலகத்தின் சிறப்பு விழாக்கள் பல் வேறுஅமைப்புகள் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக இடை வெளி இல்லாமல் இந்தியாவிலும் , அயல் நாட்டிலும் நடந்து வருகிறது .
இன்னும் இரண்டு நாட்களில் மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நிறைவு பெற்று நூற்றாண்டு துவங்க உள்ளது .மக்கள் திலகத்தின் இனிய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயாராக இருப்போம் நண்பர்களே .
Last edited by esvee; 15th January 2016 at 12:33 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th January 2016 12:27 PM
# ADS
Circuit advertisement
-
15th January 2016, 12:37 PM
#462
Junior Member
Platinum Hubber
SIMPLE AND SUPERB ACTION .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th January 2016, 12:41 PM
#463
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th January 2016, 12:44 PM
#464
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் நெறியாளர், பதிவாளர்கள், பார்வையாளர்கள்
அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th January 2016, 12:46 PM
#465
Junior Member
Platinum Hubber
ஹலோ எப். எம். 106.4ல் (பண்பலை வரிசை ) (15/01/2016) பொங்கல் திருநாளை முன்னிட்டு . நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நாடோடி மன்னன் " திரைப்படம் பிற்பகல் 2 மணி முதல் 3.45 வரை , நிகழ்ச்சி தொகுப்பாளர் டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா வழங்கும் ஒலிச்சித்திரமாக ஒலிக்க உள்ளது . கேட்டு மகிழுங்கள்.
ஒலிசித்திரத்தின் இடையில் மக்கள் திலகம் பற்றிய செய்தி குறிப்புகள் ஒலிபரப்ப
கேட்கலாம் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th January 2016, 12:56 PM
#466
Junior Member
Platinum Hubber
(14/01/2016)வியாழனன்று ஒலிபரப்பான "அன்பே வா " திரைப்படத்தின் இடையே வெளியான செய்திகள்.
1961ல் வெளியான ஒரு அமெரிக்க படத்தின் தழுவல் தான் அன்பே வா.திரைப்படம்.
சங்கே முழங்கு படபிடிப்பின்போது , நடிகை லட்சுமி சோர்ந்து, அயர்ந்து இருக்கையில் அமர்ந்தபடி தூங்கிவிட்டார். அப்போது அங்கு வந்த மக்கள் திலகம்
இருக்கையை நடிகை லட்சுமியுடன் தூக்கி மூன்று சுற்றுகள் சுழற்றிவிட்டு
தரையில் அமர்த்தினார். நிலைகுலைந்த நடிகை லட்சுமி என்ன சார் இப்படி
செய்துவிட்டீர்கள் . என்றபோது , எப்போது, எங்கே உட்கார்ந்தாலும், நெஞ்சை
நிமிர்த்தி , நேரான கோணத்தில் உட்காருவது தான் உடலுக்கு ஆரோக்கியம்.
இல்லாவிடில் வயதான காலத்தில் கூன் விழுந்துவிடும் ஜாக்கிரதை என அறிவுரை சொன்னாராம். அதன்பிறகு , நடிகை லட்சுமி நேராக உட்காருவதை கடைபிடித்து
வருகிறாராம்.
நடிகை கே.ஆர். விஜயாவிடம் ஒரு படப்படிப்பில் காலையில் எழுந்ததும் என்ன
சாப்பிடுவீர்கள் என மக்கள் திலகம் கேட்டுள்ளார். நான் காலையில் எழுந்ததும்
பெட் காபி ,பல் துலக்காமல் சாப்பிடுவது வழக்கம் என்றாராம்.உடனே, மக்கள் திலகம் இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலையில் எழுந்ததும், பல் துலக்கிவிட்டு
எதுவேண்டுமானாலும் பருகலாம். பல் துலக்காமல் பருகுவதால், வாயில் உள்ள
உமிழ்நீர் கெட்டு துர்நாற்றம் வீசும் . அது நம் வயிற்றுக்கு செல்வது நல்லதல்ல .
அதனால்தான் பாரம்பரியமாக , முன்னோர்கள் ஏற்படுத்திய சில நல்ல பழக்க
வழக்கங்களை கடைப்பிடிக்கும் வகையில் பல் துலக்கிவிட்டுதான் பானங்கள்
பருகவேண்டும் என அறிவுரை சொன்னாராம். அதை அப்படியே அன்று முதல்
கடைப்பிடிப்பதாக ஒரு பேட்டியில் நடிகை கே. ஆர். விஜயா குறிப்பிட்டாராம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th January 2016, 12:59 PM
#467
Junior Member
Platinum Hubber
Originally Posted by
Muthaiyan Ammu
வியாழனன்று (14/01/2016) காலை 11 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th January 2016, 01:04 PM
#468
Junior Member
Platinum Hubber
Originally Posted by
Muthaiyan Ammu
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு
தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவரின் படங்கள் ஒளிபரப்பாகின்றன .
15/01/2016 - 7 வது மியூசிக் சானலில் - மாலை 6.30 மணி - விவசாயி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th January 2016, 01:04 PM
#469
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th January 2016, 01:12 PM
#470
Junior Member
Platinum Hubber
16/01/2016 - 7 வது மியூசிக் சானலில் - மாலை
6.30 மணி -தாய்க்கு பின் தாரம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks