Results 1 to 10 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

Threaded View

  1. #11
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இதிலும் புதிய சாதனை!

    மக்கள் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள். ஒரு நடிகருக்கு ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள் தொலைக்காட்சிகளில் காட்டியதில்லை. இதிலும் சாதனை படைத்து விட்டார் புரட்சித் தலைவர்.

    ஒரே நேரத்தில் பல படங்கள் பல சேனல்களில் ஓடியதால் எந்த படத்தை பார்ப்பது, எந்த படத்தை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஒன்றை பார்க்கும்போது அங்கே எந்த சீன் வரும் என்று நினைத்து சேனலை திருப்புவது, இப்படியே மாற்றி, மாற்றி பார்த்தேன்.

    பல வகையான இனிப்புகள் இலையில் பரிமாறினால் ஒன்றையே தின்று தீர்த்தால் மற்ற இனிப்புகளை சாப்பிட முடியாது என்பதால், எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதை போல ரசித்தேன்.

    தொலைக்காட்சிகளில் திரையிட்ட படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள்.

    1. ஊருக்கு உழைப்பவன்: மக்கள் திலகம் மிக அழகாக தோன்றுவார். அழகெனும் ஓவியம் இங்கே... பாடலில் அழகு ஓவியமாகவே இருப்பார். குழந்தை இறந்ததை அறிந்ததும் வெறும் தூளியை அணைத்துக் கொண்டு அழும் சீன் (பின்னணியில் இரவுப் பாடகன்.. பாடல்) உள்ளத்தை உருக்கும். வாணி ஸ்ரீ பொருத்தமான ஜோடி. இதுதான் முதல் ராத்திரி பாடல் சூப்பர். வாணி ஸ்ரீ நல்ல அழகுதான். கூர்மையான மூக்கும் அகன்ற விழிகளும் கவரும். என்றாலும் வழக்கமாக அவர் மண்டைக்கு மேல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கொண்டை கொஞ்சம் பயமுறுத்தும். அந்த மண்டையும் கொண்டையும் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

    2. நவரத்தினம்: தமிழ் படத்தில் முழு நீள இந்திப் பாடல் இடம் பெற்ற புதுமை. தான் திருடன் இல்லை என்பதை லதாவிடம் நிரூபிக்க எரியும் கொள்ளிக்கட்டையை சிரித்த முகத்தோடு பிடிக்கும் ஸ்டைல். குருவிக்கார மச்சானே... டான்ஸ். இயல்பாக வீணை வாசிக்கும் அழகு.

    3:குமரிக்கோட்டம்: அசோகனை சிரிக்க வைப்பதற்காக பல வகையான மாறு வேடம் போடும் பாடல். அசோகன் சிரிக்காமல் இருந்ததால் போட்டி நிபந்தனைப்படி பணம் கிடைக்காதே என்று அழும் உருக்கம். எங்கே அவள்? பாடலில் ஒயிட் சூட்டில் அசத்தும் ஸ்டைல்.

    4.நல்லநேரம்: குழந்தையை யானை ராமு கொல்ல முயன்றதாக கே.ஆர்.விஜயா சொன்னதைக் கேட்டு சங்கிலியால் யானையை அடித்து விட்டு பின்னர் பாசத்தால் ‘ராமு...’ என்று யானையை கட்டிப்பிடித்து அழும் காட்சி. ஓடி ஓடி உழைக்கணும்.. பாடலில் டூப் இல்லாமல் மூன்று முறை அடுத்தடுத்து அடிக்கும் பல்டி. பெண் பார்க்கப் போகும் முன் கண்ணாடியில் பார்த்தபடி நெற்றியில் சுருளும் முடியை தட்டி விட்டு அழகு பார்க்கும் ஸ்டைல். கம்பீரமாக சென்று அசோகனிடம் பெண் கேட்பதற்குள் திக்குமுக்காடும் அழகு.

    5. குடியிருந்த கோயில்: அறிமுக காட்சியில் மின்னல் வேக சண்டை. தாயின் படத்தை மிதித்த நம்பியாரை கோபத்தால் அடித்து விட்டு, அவர் தன்னை சரிகட்ட முயல்வதை புரிந்து கொண்டு, கோபத்தை அடக்கி, லேசாக சிரித்து உனக்கும் நான் அப்பன்டா என்பது போல, ‘பா......ஸ்’ என்று இழுத்து நக்கலாக கூப்பிடும் அட்டகாசம்.

    6.அடிமைப்பெண்: ஒக்கேனக்கலில் பண்டரிபாயை தன் தாய் என்று அறிந்து மலைச்சரிவில் பாய்ந்து சென்று அவரிடம் பேசியும், முகத்தை பார்க்க முடியாமல் காரணம் தெரிந்ததும் குமுறும் பரிதாபம். தாயிடம் விடைபெறும்போது ‘என்னை மறந்துடாதீங்கம்மா..’ என்று கும்பிடும்போது நாம் உருகுவோம். தாயில்லாமல் நானில்லை.... பாடலில் பறவை தன் குஞ்சுக்கு இரை ஊட்டும் பொருத்தமான இயல்பான அசத்தும் ஷாட். ஈட்டி முனை மீது கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் மோதும் வாள் சண்டை. கிளைமாக்ஸ் சிங்க சண்டையும் அதை மக்கள் திலகம் சிறு சிறு ஷாட்களாக பிரித்து வேகமாக படமாக்கியிருக்கும் விதம் பிரமிப்பு.

    7. இதயவீணை: விவேகானந்தர் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்து தந்தையாக வரும் தன் அண்ணன் சக்ரபாணி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது. காஷ்மீர்... பாடலின் நடனம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, படம் வெளிவருவதற்குள் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ‘ஒரு வாலும் இல்லே..நாலு காலும் இல்லே...’ பாடலை பொருத்தமாக படத்தில் புகுத்திய சாமர்த்தியம்.

    8.விவசாயி: வயல்காட்டில் பேசிக்கொண்டே கடலையை இயல்பாக தின்னும் அழகு. உள்ளங்கையில் உள்ள கடலையின் தோலை ஊதும் ஸ்டைலே தனி. என்னம்மா..சிங்காரக்கண்ணம்மா பாடலில் சிறிய டேபிளில் ஆடும் புதுமை.

    9.உலகம் சுற்றும் வாலிபன்: கேட்கவே வேண்டாம். எதை சொல்வது. புத்தர் கோயில் சண்டை, ஜஸ்டினுடன் சண்டை, தன்னை திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏமாந்த மேட்டா ரூங்ரட்டாவிடம் காட்டும் அனுதாபம் கலந்த பரிவும் எல்லாருக்கும் பொருத்தமான அறிவுரையும். பாடல்கள், எக்ஸ்போ 70யை கேமராவில் அடக்கி மக்கள் கண்முன் காட்டிய திறமை.

    10. அரசகட்டளை: சரோஜா தேவியின் இருப்பிடமான குகைக்கு வந்து நம்பியாரிடம் ‘என் நினைவா வெச்சுக்கங்க.‘ என்று கண் கட்டிய நிலையில், கத்தியை வீசிவிட்டு செல்லும் அபார ஸ்டைல். வாள் சண்டைகள். ஆடிவா... பாடலில் பாடிக் கொண்டே சண்டைக் காட்சி புதுமை. வேகமோ அருமை.

    11.பறக்கும் பாவை: கண்ணைக் கவரும் கலரில் எல்லா பாடல் காட்சிகளும். புத்தூர் நடராஜனுடன் மோதும் காட்சி அனல் பறக்கும். வீட்டை விட்டு போன சரோஜாதேவியை சர்க்கஸில் பார்த்தவுடன் மக்கள் திலகம் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த முகபாவம். முத்தமோ... பாடலில் காஞ்சனாவுடன் நடனம் சூப்பர். டிரஸ் அமர்க்களம்.

    12.நாளை நமதே: சங்கர் பாத்திரத்தின் சோகத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டும் ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பு. ‘நான் ஒரு மேடைப்பாடகன்...’ பாடலில் மக்கள் திலகத்தின் டிஸ்கோ நடனம். ‘நாளை நமதே..’ பாடலில் இரண்டு தம்பிகளும் சேர்ந்து ஆரத்தழுவிக் கொள்ளும்போது அவர்களை நாமும் அவர்களை தழுவிக் கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக பார்க்கும் பார்வை. இருந்த இடத்தில் இருந்தே அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வில்லன் ஆட்கள் கவனிக்கிறார்களா? என்று சட்டென திரும்பி சுதாரிக்கும் வேகம். லவிங் ஈஸ் தி கேம்... பாடலில் மியூசியத்தில் நடராஜர் சிலையை திருடச் செல்லும்போது காட்டும் சுறுசுறுப்பு. ‘என்வழி தனி வழி’ என்று அப்போதே முன்னோடியாக பேசிய பஞ்ச் டயலாக். முதன் முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார்.

    13:ரகசிய போலீஸ்: எல்லாப் படத்திலும் மக்கள் திலகம் ஜேம்ஸ்பாண்ட் போல டிப் டாப்பாக இருப்பார். இதில் ஜேம்ஸ்பாண்டாகவே நடிக்கிறார் என்றபோது ஸ்டைலுக்கும் டிரஸ்சுக்கும் கேட்க வேண்டுமா? கண்ணில் தெரிகின்ற வானம்... பாடலுக்கு ஸ்டைல் சக்ரவர்த்தியின் நடனமும் ஸ்டெப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அசோகனுடன் அறிமுகத்தின்போது பேசிவிட்டு திரும்பும் அசோகனின் கையை பிடித்து இழுத்து அவரது முகத்தை பார்த்து சிரிக்கும் அற்புதம். அசோகன் கொடுத்து வைத்தவர்.

    14:பணக்கார குடும்பம்: பறக்கும் பந்து பறக்கும்... பாடியபடியே டென்னிஸ் பந்தை அடிக்கும் லாவகம். காலை உயரே தூக்கி அந்த இடைவெளியில் பந்தை அடிக்கும் ஸ்டைலை எல்லாம் அப்போதே செய்து விட்டார் மக்கள் திலகம். கிளைமாக்சில் மனோகருடன் ஜீப் ஒட்டியபடியே போடும் சண்டை. காலாலேயே ஸ்டீரிங்கை திருப்பி ஓட்டும் கலக்கல். ‘ஒன்று எங்கள் ஜாதியே...’ கருத்துள்ள பாடலில் ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே..’ என்ற முத்தாய்ப்பான தீர்க்க தரிசனம்.
    வினோத்

    இப்போதான் முழுதாக படித்தேன். நன்றாக உள்ளது. நல்ல அலசல். நன்றி.

    எனக்கு உள்நோக்கம், என் தரம் உயராது என்று நீங்கள் சொன்னதற்குதான் நேற்று விளக்கம் சொன்னேன். மற்றபடி உங்கள் மீது எனக்கு கோவம்,வருத்தம் இல்லை. ரத்தத்தின் ரத்தங்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு? நாம் எல்லாம்

    மக்கள்திலகம் மதம்
    புரட்சிதலைவர் ஜாதி
    பொன்மனச்செம்மல் குலம்
    கொடைவள்ளல் கோத்திரம்

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •