ஆரம்ப காலங்களில் தி மு க வின் வளர்ச்சி
நிதி சேகரிப்பில் முக்கிய பங்களிப்பு எல்லாம்
நடிகர் திலகத்தை வைத்தே நடந்தேறியிருக்கிறது
ஆனால் பலனை அனுபவிதத்வர்கள் யார் யாரோ
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
திரைப்படம் என்பது வெறும் மேம்போக்கான பொழுதுபோக்கு மட்டுமன்றி வாழ்வியல் உணர்ச்சிக் குவியல்களின் பிரதிபலிப்பும்தான் என்பதை நடிகர்திலகம் தனது வாழ்நாள் புரிதலாகவும் ரசிகர்களின் கலை ஆர்வத்திற்கு தனது பலபரிமாண நடிப்பின் சமர்ப்பணமாகவும் கொண்டிருந்தார்!
நாடக மேடை அனுபவம் மட்டுமே அடிப்படை ஆதாரமாகக் கொண்டு சுயம்புலிங்கமாக மனித மன உணர்வுகளை உன்னதமாக உள் வாங்கி மகோன்னதமான நடிப்பால் உலகையே கட்டிப் போட்டார் ! உலகின் வேறு எந்தவொரு நடிகருக்கும் அமைந்திராத பாத்திரப் படைப்புகள், குணாதிசய வேறுபாடுகள் மற்றும் நடிப்புப் பின்பற்றுதலுக்கான இலக்கண வரையறுப்பு எல்லாமே நிகழ்ந்தது நடிகர் திலகத்தின் பொற்கால திரை வரலாற்றிலேயே !
அவரது திரைக்காவியங்களில் அமைந்த உச்சகட்ட உணர்வுக் கலவைகளின் சங்கமத்தை இத்தலைமுரையும் இனிவரும் சந்ததியினரும் போற்றிப் பாதுகாத்திட வேண்டும் என்ற உந்துதலில் இக்குறுந்தொடர் அமையும் என்று நம்புகிறேன் !
உச்சகட்டம் 1 / உணர்ச்சிக் குவியல் 1 புதிய பறவை!
இந்த ஒரு படத்தின் நடிப்பு நடிகர்திலகத்தின் மற்ற எல்லாப் படங்களின் உணர்வு வெளிப்பாடுகளையும் கூட்டினாலும் சமமாகாது என்பதே என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட கருத்தாகும். கதைக்களம் அப்படி!.....அவரது நுண்ணிய நடிப்பம்சங்களின் திண்ணிய வெளிப்பாடுகளோ.... அப்பாடி!
ஒரு தவற்றின் குற்ற உணர்ச்சியில் கட்டுண்டு மனம் குமைந்து நிம்மதி தேடி ஓடி அலையும் செல்வந்தனின் கட்டுப்பாடான கண்ணியம் மீறாத மன உளைச்சல்களை நடிகர்திலகம் வெளிப்படுத்திய விதம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்பதே காலம் சொல்லும் உண்மை !
தன்னைச் சுற்றி வளைத்தவர்களின் முகமூடிகளை ஊடுருவி உணரும் சக்தியற்ற காதல் என்னும் அம்படிபட்ட சிறகிழந்த பறவையே நடிகர்திலகம் !
காதல் சிறகு மீண்டும் முளைத்து புதிய பறவையாக பறக்க எத்தனிக்கும் போதா பழைய பறவையொன்று சீறிப் பறந்து வந்து தான் விரித்த வலையிலேயே இந்தக் காதல் வேடனை வீழ்த்தி விடும் சிறகொடிந்த பரிதாப நிலையை வேறு எந்த நடிகக் கோமகனும் நினைத்துக் கூட பார்க்க இயலாத உச்ச கட்டமும் உணர்ச்சிக் குவியல்களும் உலகின் சிந்தனைக்காக!
உச்சகட்டம்
உணர்ச்சிக் குவியல்
Last edited by sivajisenthil; 9th February 2016 at 05:21 AM.
Bookmarks