-
18th February 2016, 12:00 AM
#11
Senior Member
Senior Hubber
அலுவலகத்தில் அவனுக்கு ஒரு பிரச்னை.. எந்த வண்ணம் சென்றால் அதைத் தீர்க்கலாம் என கணிணியின் முன்னமர்ந்து யோசித்திருக்கையில் அறைக்கதவு தட்டப்பட்டு “உள்ளே வரலாமா “ என மெல்லிசையாய் ஆங்கிலத்தில் குரலெழும்ப “ஆம்” எனப் பதிலிறுத்த வினாடியில் அவள் உள் நுழைந்தாள்.. கரு நீல வண்ண மேலாடையில் மஞ்சள் வண்ணத்தில் குட்டிக்குட்டியாய்ச் சூரிய காந்திப் பூக்கள்..அதேவண்ணத்தில் காலிறுக்க ஆடையில் ப்பளீர் குட்டித்தேவதைதான்...அதையே தமிழில் அவளிடம் சொன்னான் அவன்..உன் வண்ணம் தான் தேவதைகள் இருப்பார்களாமே – வண்ணமாய் அவன் சொல்ல அவள் கண்ணாடிக்கோப்பையில் களுங்கென விழும் பனிக்கட்டிகளைப் போல் ச்சிலீரெனச் சிரித்து “இவ்வண்ணம் நீங்கள் சொல்வதில் உங்களுக்கு வண்ணமாய்க் கவி எழுத வரும் எனத் தெரிகிறது” எனச் சொல்லி மெல்ல அவன் கை தொட அவனுக்குச் சிலிர்த்தது..!
ம்ம்..வெய்ட் வெய்ட்..பயந்துட்டீங்களா..ச்சும்மா வண்ணம் வைத்து எழுதிப்பார்த்தேன்..
இந்த வண்ணம்ங்கற வார்த்தையின் அர்த்தம் பல - வழி, நிறம், விதம், என்று.ஆற்றல்..
கம்பன் என்னவாக்கும் சொல்றார்..
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே
உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்..
ஆக இந்த விஸ்வாமித்ரர் இருக்காரே அவர்..லார்ட் ராமாவைப்பார்த்துச் சொல்றா மாதிரி வருது..அகலிகையோட சாப விமோசத்துல..
ஹே ராம்..உன் கால் பாதம் பட்டு இந்தக் கல் பெண்ணாக மாறி இவ்வண்ணமாக ஆனதே இது,இந்த உலகமெல்லாம் உய்கின்ற வழியல்லவா..இதைவிடுத்து வேறு வழிகளில் அடைய முடியுமா கரிய நிறத்து அரக்கியுடன் கருமேகம் போன்ற நிறமுடைய ராமா போரிட்டு நீ ஜெயித்த போது உன் கைகளுடைய ஆற்றலைக் கண்டேன்..இதோ உன் கால்களுடைய ஆற்றலைக் காண்கிறேன்..
ஆக சொல்ல வந்தது என்னன்னாக்க..சரி சரி.. வண்ணமாய்ச் சொல்லட்டா..வண்ணம்..
வண்ணம் நு பெயர்ல என்னெல்லாம் பாட்டு இருக்கு..
வண்ணவண்ணப் பூஞ்சோலையில் பூப்போலவே
வண்ணங்கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
பொன் வண்ணம் போல மின்னும்…
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்
வண்ணத்தையே வண்ணமாய்ச் சொன்ன பாடல்..
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா?
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு பூ வண்ணப் பாடம்
சொல்ல எண்ணம் இல்லையா ம்ம் கண்ணதாசன் சமர்த்தா நிமிண்டிட்டார்..
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே லேசா லேசாவில் வரும் வரிகள்..
\ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழைத்துளி ஆவேனோ.. சாமுராயில் ..இங்கு வண்ணம் போல என்ற தொனியில் வருகிறது..
நிறைய வண்ணப்பாட்டு இருக்கு..ஆனால் வண்ணத்துக்கு நிறம் பூசப்பட்டிருக்கு.. நிறம் என்ற அர்த்தத்தில் தான் இருக்கு..சொல்லத் தானே போறீங்க.. சரி..இப்ப இதுக்கு என்ன பாட் போடலாம்
லேசா லேசா.. நீயில்லாமல் வாழ்வது லேசா.. கொஞ்சம் வித்தியாசமான பாடல்..முகம்மறைத்த நங்கை..ம்ம்.. (படத்தில் கடைசி வரை யாரெனத் தெரியாமலிருப்பது சுவாரஸ்யம்)
ம்ம் வண்ணங்களின் அணீவகுப்பு ஆரம்பமாகட்டும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2016 12:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks