-
21st February 2016, 01:07 PM
#1
Junior Member
Devoted Hubber
ஹேராம் பட இசை: கமல் பெருமிதம்!
கமல் இயக்கிய ஹேராம் படம், 2000-ம் ஆண்டு வெளியானது. பிப்ரவரி 18 அன்று அந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூகவலைத்தளத்தில் #16YearsOfHeyRam என்கிற ஹேஸ்டேகில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தார்கள். இதற்கடுத்ததாக கமல், தன் ட்விட்டர் பக்கத்தில் ஹேராம் பற்றி குறிப்பிட்டார். அதில் இளையராஜா இசை குறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ட்விட்டரில் கமல் கூறியதாவது:
ஹேராம் படத்தின் 16-வது ஆண்டை ரசிகர்கள் கொண்டாடுவதைக் கண்டு நெகிழ்ந்துவிட்டேன். இந்தப் படம் உருவாகக் காரணமான ஷாருக் கான், பரத் ஷா ஆகியோரை நினைவுகூர்கிறேன். ஹேராம் படத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி, இளையராஜாவின் இசை. ஹேராமின் இசையை தவறான கைகளிலிருந்து அவர்தான் காப்பாற்றினார். அப்பட இசை, ஒரு ஆராய்ச்சித் தன்மை கொண்டது என்றார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st February 2016 01:07 PM
# ADS
Circuit advertisement
Bookmarks