-
6th March 2016, 10:11 AM
#11
Junior Member
Devoted Hubber
சிவாஜி பேரன் தயாரிக்கும் படத்தில் கமல்
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் தற்போது ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என வித்தியாசமான தலைப்பிட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்து வருகின்றனர். மேலும், நடிகர் பிரபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமார் அவர்களின் மகனுமான துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர்.
இப்படக்குழு சமீபத்தில் மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் திலகத்தின் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே இதில் கமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை அமுதேஷ்வர் என்பவர் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
-
6th March 2016 10:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks