Songs are average, not even coming close to the hype this movie is generating with grandeur visuals and trailer.
GVP and Atlee did not had a gr8 album with Raja Rani too, but I am sure they will rock with the BGM.
My take on the Album :
1) Eena Meena Teeka - 4/5 (Uthara super voice, Vijay should have sung this song IMO)
2) Jithu Jilladi - 3/5 (Mixed feelings, good could have been better)
3) En jeevan - 3/5 (Felt too slow, but good)
4) Chellakutty - 3/5 (First time, song sung by Vijay is not topping the chart, GVP )
5) Rangu Rangu - 2.5/5 (TR wasted)
எல்லா விசயங்களிலும் அப்டேட்டாக இருக்கிறார் விஜய் சார் - தெறி டிசைனர் பேட்டி - VIKATAN
விஜய் நடிக்கும் தெறி படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தோடு வெல்கம் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களைப் போலவே தெறி படத்தின் போஸ்டர்களும் விஜய் ரசிகர்களை விசில் போட வைத்துவிட்டன. வழக்கமாக விஜய் படத்தின் போஸ்டர்கள் ஆக்*ஷனை மையப்படுத்தி இருக்கும். ஆனால் 'தெறி'யில், விஜய், நைனிகாவை (மீனாவின் மகள்) தோளில் வைத்துக்கொண்டு இருவரும் உதட்டில் ஒரு விரலை வைத்து உஷ்..., சொல்வது, பறவை போல நைனிகா கைகளை விரித்திருக்க, அவரைத் தூக்கியபடியே இருக்கும் போஸ்டர் எனச் சொல்வதுபோல உருவாக்கப்பட்டிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
''வித்தியாசமான போஸ்டர்களை டிஸைன் செய்த கோபி பிரசன்னா இதற்கு முன் ஆரண்ய காண்டம், துரோகி, வாயை மூடி பேசவும், பரதேசி, ராஜா ராணி, கத்தி, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களின் போஸ்டர்களை உருவாக்கியவர். அவரிடம் பேசியபோது, '' இயக்குநர் குமாரராஜா என் நண்பர். அவர் தந்த வாய்ப்பினால் ஆரண்ய காண்டத்திற்காக, மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களைப் பயன்படுத்தி நான் செய்த புது வகையான் டிஸைனுக்கு நல்ல பாராட்டு கிடைத்தது." என்றார்.
இன்றைய இளைஞர்களின் பல்ஸ் பிடித்து எடுத்த படமான ஓ காதல் கண்மணி பட அனுபவம் எப்படி?
மணி சாரின் படத்தில் வொர்க் பண்ணியது மறக்க முடியாத அனுபவம். அவரின் படத்திற்கு வழக்கமாக மும்பையிலிருந்துதான் போஸ்டர் டிஸைன் செய்வார்கள். இந்தப் பட வாய்ப்பு எனக்குக் கிடைத்து, அவரைப் பார்க்கப்போனபோது, சின்னப் பையனாக இருக்கிறானே என்று தயக்கத்தோடு பேசினார். குறைந்த வார்த்தைகளைக் கொண்டு அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை ஈஸியாக புரியவைத்தார். மார்டனும் கிளாசிக்கும் இணைந்து கலக்க இருப்பதை போஸ்டர் வழியே உணர்த்த, டிராயிங்கும் போட்டோவும் இணைந்து வருவதுபோல டிஸைன் செய்தேன். இதற்காக எம்.எஃப். உசேன் ஓவியங்களுடனே சில நாட்கள் கழித்தேன். எந்த இடத்தில் டிராயிங் முடிந்து, போட்டோ தொடங்குகிறது என்று தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். வேலை முடிந்து, மணி சார் என்ன சொல்வாரோ எனப் பயந்துகொண்டே காட்ட, டிஸைன்களைப் பார்த்தவுடனே அவருக்குப் பிடித்துவிட்டது. மனம் திறந்து பாராட்டினார். அப்பறம் ரிலாக்ஸ் ஆனேன். ராஜா ராணியில், தமிழ் சினிமா போஸ்டர்களில் அதிகம் பயன்படுத்தாத பிங்க் கலரை அதிகம் பயன்படுத்தியிருந்தேன். அதுவே அந்த போஸ்டரைத் தனித்துக்காட்டியது" எல்லாம் சரி, விஜய் படங்களில் பணியாற்றியது பற்றி?
" விஜய் சாரின் சூப்பர் ஹிட்டான 'கத்தி' படத்து பெயரின் எழுத்துகள் ஒன்றின் கீழ் ஒன்றாக அமைத்தேன். ஏன் என்று இயக்குநர் கேட்டபோது, கத்தி என்று தலைப்பைக் கேட்டதுமே, கத்தியை வைத்துதான் டிஸைன் செய்யப்படும் என்று எல்லோரும் நினைப்பார்கள். அதற்கு மாறாக, கத்தியை நிறுத்தி வைத்திருப்பதுபோல ஒன்றன் கீழ் ஒன்றாக டிஸைன் செய்தால் புதிதாக இருக்கும் என்று நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். அடுத்து தெறி படத்தின் வாய்ப்பு கிடைத்ததுமே, மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன். இதற்கான போட்டோ சூட்டில் விஜய் சார் பார்த்தபோது, சரியாக நினைவு வைத்திருந்து கைகளைப் பற்றிக்கொண்டார். எவ்வளவு நேரம் போஸ் கொடுக்கச் சொன்னாலும், தயக்கமே இல்லாமல் செய்தார். போஸ்டரில் போட்டோ நன்றாக தெரிய, போதுமான ஸ்பேஸ் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஃபைனலாக டிஸைனை, விஜய் சாரிடம் காட்டியபோது, 'வாவ்" என்று அசந்துபோனார். 'செமையாக இருக்கிறது.. சூப்பர்' என்று பாராட்டியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. விஜய் சார் குறைவாகப் பேசுவார், ஆனால் நம்மை கவனித்து புரிந்துகொண்டு பழகுவதில் அருமையான மனிதர். முன்பு, ஆடியோ வெளியீட்டு விழாவுக்குக் கிடைத்த வரவேற்பு இப்போது ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு கிடைக்கிறது, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கம்ப்ளீட்டாக பூர்த்தி செய்கிறது உங்களுடைய வொர்க் என்று விஜய் சார் சொன்னபோது சினிமாவின் எல்லா விஷயங்களிலும் அப்டேட்டாக இருப்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டேன்"
அட்டகாசமான டிஸைன்களால் தெறிக்க விட்டுடீங்க பாஸ்!
Bookmarks