Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Hybrid View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கமல் இல்லையென்றால் நான் இல்லை: இயக்குனர் மகேந்திரன் புகழாரம்



    கமல் இல்லையென்றால் தான் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கமாட்டேன் என்று ‘வாஹா’ ஆடியோ வெளியீட்டில் இயக்குனர் மகேந்திரன் கமலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். விக்ரம் பிரபு-ஷாமிலி நடிப்பில் உருவாகியுள்ள ‘வாஹா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் கமல், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பி.எல்.தேனப்பன், தனஞ்செயன், விஜய் ஆண்டனி, கணேஷ் வெங்கட் ராமன், இயக்குனர் சசி, சீனு ராமசாமி, இசையமைப்பாளர் டி.இமான், நடிகை ரன்யா ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவில் இயக்குனர் மகேந்திரன் பேசும்போது, நான் மற்றவர்கள் மாதிரி சினிமாவுக்கு விரும்பி வந்தவன் இல்லை. அழைத்து வரப்பட்டவன். ஆரம்பத்தில் எனக்கு படம் இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால் என்னுடைய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை கட்டாயப்படுத்தி இயக்க வைத்தவர் கமல்.

    அந்த படத்தை நான் ஆசைப்பட்ட மாதிரி எடுக்க நினைத்தேன். ஆனால், எனக்கு சரியான கேமராமேன் அமையவில்லை. நல்ல டேஸ்ட் உள்ளவர்கள் கிடைக்கவில்லை. உடனே, கமல் சார்தான் பாலுமகேந்திராவை எனக்கு அறிமுகப்படுத்தி அந்த படத்தை நல்லவிதமாக எடுக்க உதவினார்.

    அந்த படத்தோட படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து ‘செந்தாழம் பூவில்’ பாடலும், ஒரு காட்சியும் மட்டும் படமாக்கப்பட விருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்த படத்துக்கு இனிமேல் செலவு செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். அந்த காட்சியையும், பாடலையும் படமாக்கமலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்தார்கள். ஆனால், எனக்கு அதில் திருப்தியில்லை.

    இதை கமல் சாரிடம் சென்று நான் கூற, அவர் தயாரிப்பாளரிடம் பேசினார். அவருடைய பேச்சுக்கும் தயாரிப்பாளர் செவிசாய்க்கவில்லை. இறுதியில், கமல் தனது சொந்த செலவிலேயே அந்த பாடலையும், காட்சியையும் படமாக்குகிறேன் என்று சொன்னார். அவர் சொன்னதுபோல் அந்த காட்சியையும், பாடலையும் எடுக்க பண உதவி செய்தார். அந்த காட்சியும், பாடலும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது என்று சொல்லலாம். நான் இன்று ஒரு இயக்குனராக இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அது கமல் என்ற மாபெரும் கலைஞனால்தான் என்று பேசினார்.

  2. Thanks avavh3 thanked for this post
    Likes Cinemarasigan, oyivukac, vidyasakaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Regular Hubber vidyasakaran's Avatar
    Join Date
    Aug 2006
    Posts
    12
    Post Thanks / Like
    To think Kamal was not even 24 when this happened!!!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •