Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    எதிர் பாராமல் சின்னக்கண்ணன் புதுப்புது தலைப்புகளில் பாடல் பட்டியல் இடுகிறாரே நாமும் அதுபோல செய்தால் என்ன என்று (அசட்டுத்தனமாக) தோன்றியதால் எழுதிப் பார்த்தேன். முரளி சாருக்கும், சீனா கானாவுக்கும் பிடிக்கும் தலைப்பு (நம்ம திரியின் தலைப்பிலேயே சின்ன உல்டா)

    மனதைக்கவரும் 'மதுரை' கானங்கள்

    மதுரையில் பறந்த மீன் கொடியில் (பூவா தலையா)
    மதுரை மரிக்கொழுந்து வாசம் (ராமராஜனின் எதோ ஒரு படம்)
    தேரோடும் எங்க சீரான மதுரையிலே (பாகப்பிரிவினை)
    தென் மதுரை வைகை நதி பாடும் தமிழ் பாட்டு (தர்மத்தின் தலைவன்?)
    மச்சான் பேரு மதுரே (மதுர)
    வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை (மாநகர காவல்)
    மானாமதுரை குண்டு மல்லிகை (மேட்டுக்குடி) ஓ..அது வேறு ஊரோ?.

    மதுரை நல்ல ஊர்தானே, அப்புறம் ஏன் இப்படி ஒரு பாட்டு
    'மதுரைக்கு போகாதடீ' (அழகிய தமிழ் மகன்)

  2. Likes chinnakkannan, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //எதிர் பாராமல் சின்னக்கண்ணன் புதுப்புது தலைப்புகளில் பாடல் பட்டியல் இடுகிறாரே நாமும் அதுபோல செய்தால் என்ன என்று (அசட்டுத்தனமாக) தோன்றியதால் எழுதிப் பார்த்தேன். முரளி சாருக்கும், சீனா கானாவுக்கும் பிடிக்கும் தலைப்பு (நம்ம திரியின் தலைப்பிலேயே சின்ன உல்டா)// ஆதிராம் சார் நன்றி

    மதுரைப் பாடல் தொகுப்புகள் ஜோர்.. பட் இன்னும் தேடிப் பாக்கலாமா என்று ஸ்ட்ரெய்ட்டாக ச் சொல்லவெல்லாம் சின்னக்கண்ணனால் முடியாதாக்கும்.. ( அப்படிச் சொன்னா அது சீனா கானா இல்லை..

    ஆதிராம் குரு.. என்னைக் கிளறிவிட்டீர்கள்..அதாவது என் நினைவுகளை..பதினொரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சந்தவசந்தம் புலவர் மின் குழுவில் நானும் ஒரு சிறு துகளாய் இருந்தேன்.. அப்போது ஒரு கவியரங்கத்தில் கலந்து கொண்டேன்.எனது முதல் கவியரங்கம்...தலைப்பு என்ன தெரியுமா..எங்கள் ஊர்..


    அதற்கு நான் படித்தது என்னவென்று சொல்லட்டுமா ( சொல்லித்தொலை..வேணாம்னா விடவா போற.. யார்ப்பா அங்க குரல் விடறது ) பின் தேடி டிஎஸ்ஸியிலிருந்து யூனிகோட்டிற்கு மாற்றி இதோ..உங்களுக்காக..

    (எழுதும் போது பட்ட நடுக்கம்..எல்லாரும் சிறந்த பாவலர்கள்.. வெகு அருமையாகக்கவிதை நெய்பவர்கள் மரபிலே.. நானோ சிறியேன்..கொஞ்சம் புதிதாய்க் கல்யாணமான இளம்பெண் பதட்டத்துடன் பாற்கரம் நடுங்க உள் நுழைவது போல் நுழைந்தேனாக்கும்.. )

    **

    *

    *******************
    இறை வணக்கம்..
    *******************
    முந்தி வணங்கிடுவேன் முக்கண்ணன் மைந்தனாம்
    தொந்திக் கணபதியின் தாள்

    *************
    தலைவர் வணக்கம்..

    ***********

    மணிமணியாய்ச் சொல்வளத்தில் பேசுகின்ற தன்மை
    மனதினிலே தொட்டிலிட்டு மயங்கவைக்கும் மென்மை
    அணிஅணியாய் வார்த்தைகளில் தோரணங்கள் கட்டி
    அழகுறவே நடத்துகிறார் சுவைபலவே கூட்டி

    **

    பனித்திரையில் இவரெடுத்த ஒளிப்படங்கள் எல்லாம்
    பளிச்சென்றே இவர்திறமை தெளிவாகக் காட்டும்
    மணித்தலைவர் இவரென்றே சொல்லிநானும் இன்று
    வணங்குகிறேன் அவைத்தலைமை அழகுக்காய் நன்கு..

    **
    அவை வணக்கம்
    ***************

    பவித்திரமாய்ப் பைந்தமிழைப் போற்றிவரும் பாவலர்காள்
    கவித்திறனில் அடியேனோ கைக்குழந்தைக் கீடாவேன்
    குவிந்திருக்கும் கற்பனையில் கொஞ்சமென இங்கெடுத்து
    நவில்வதற்கு முன்னும்மை வணங்குகிறேன் வாழ்த்துவிரே..

    **
    எங்கள் ஊர்:
    ***********

    கற்பனை என்றுவிட்டேன் இல்லையிலை கண்களுக்குள்
    பற்பல ஆண்டுகளாய்ப் புதைந்திருக்கும் பேரழகு
    கற்றவர் பலவிதமாய்க் கவிபாடிச் சென்றதது
    மற்றவூர் முன்னாலே மலர்ந்திருக்கும் மதுரையதே...

    **

    மனமெல்லாம் முதிராத பாலகனாய் இருந்தமுதல்
    கனவுகளில் பூப்பறிக்கும் காளையிளம் பருவம்வரை
    கணப்பொழுதில் மறைந்துவிட்ட காலத்தைக் கழித்தவிடம்
    தனமென்றே என்மனதில் தங்கிவிட்ட மதுரையதே..

    **

    துயிலாத நகரமெனத் தென்னாட்டில் போற்றுவர்தான்
    கயிலாய மலையீசன் கண்ணான மீனாட்சி
    உயிராக நின்றங்கே உணர்வில்நல் ஆட்சிதன்னை
    குயிலதனின் குரலினிமை போலங்கே வழங்குகிறாள்..

    **

    சதுரச் சதுர வீதிகளாம் சற்றும் குறையா அழகுகளாம்
    புதுமை சற்றும் ஏறாமல் பழமை தன்னைக் கொண்டதுவாம்
    பதுமை உயிராய் வந்ததுபோல் பாங்காய் நங்கையர் நடந்திடுவர்
    மதுரை அழகை நினைக்கையிலே மலரும் நவரச நினைவுகளே..

    ***

    அன்னை மீனாள் கோவிலிலே ஆடி வீதி வெளியிலுண்டு
    பின்னர் உள்ள தெருக்களுக்கும் பாங்காய் மாதப் பெயருமுண்டு
    வண்ணச் சித்திரை வீதியின்பின் ஆவணி வீதி வந்துவிடும்
    இன்னும் மாசி, வெளியென்றே வீதி எல்லாம் உண்டங்கே..

    ***

    8* சற்றே நீளம் ஆகிடுமோ சிந்தை மயங்க வைத்திடுமோ
    கற்ற இடமும் அங்கேதான் காதல் வந்ததும் அங்கேதான்
    மற்ற கவிஞர் சுவையுடனே தம்மூர் வளத்தைச் சொல்கின்றார்
    சுற்றி வளைத்துப் போகாமல் சுருங்கச் சொல்லப் பார்க்கின்றேன்.

    **

    சுருங்கச் சொல்வதால் எங்கள் ஊரின்
    அழகெதுவும் சுருங்கிடாது கேளும்நீவிர்.

    **

    பாரதியார் சிலகாலம் பணிபுரிந்த பள்ளி1
    படித்தேன்நான் சிலவாண்டு பாங்குடனே அங்கு
    ஆரத்தைக் கழுத்தினிலே சூட்டியது போலே
    அறிவூற்றின் கண்களையே திறந்துவிட்டார் நன்கு...

    **

    மாற்றங்கள் வாழ்வினிலே வேண்டுமென அன்று
    மரியன்னைப் பள்ளியிலே சேர்த்துவிட்டார் அண்ணா..
    ஆற்றலையும் அழகினையும் ஒருங்கிணைத்த மஹலும்2
    அப்பள்ளி அருகினிலே அமைந்திருந்த தன்றோ..

    *

    எத்திசையில் இருந்து நோக்கின் மக்கள்வெள்ளம்
    சித்திரைத் திருவிழாவில் பொங்கி மோதும்..
    பத்திரமாய் நிற்கின்ற ஆல்பர்ட் விக்டர்3
    பாலத்தில் பேருந்தும் அணியாய் நிற்கும்..

    **

    தங்கக் குதிரை வாகனத்தில் தரமாய் அழகர் பெருமாளும்
    சிங்கம் போலே இறங்கிடுவார் சிறப்பாய்த் தரிசனம் தந்திடுவார்
    பங்கம் ஏதும் விளைக்காமல் பாங்காய் மக்கள் கூட்டமதும்
    தங்கத் தோற்றம் பரவசமாய் தங்கள் மனதில் நிறுத்திவிடும்.

    **

    நறுமணத்தை வீசுகின்ற மல்லிகையும்
    நன்றாக மதுரையதன் புகழ்பரப்பும்
    அறுசுவையாம் உணவுகளும் எங்களூரில்
    அழகாக உமிழ்நீரைப் பெருக்கிவிடும்..

    **

    3aசுறுசுறுப்பாய் இரவினிலே போடப்படும்
    சூடான, மனங்கொத்தும் பரோட்டாவும்
    விறுவிறுப்பாய்த் தாளலயம் கொண்டுவந்து
    வீதியதன் அமைதியையும் கலைத்துவிடும்..

    **

    ஆவி பறக்கும் நள்ளிரவில் ஆவிபறக்கும் இட்டலிகள்
    தாவிமனமும் செல்கிறதே தாக்கம் நெஞ்சில் இனிக்கிறதே..
    நாவில் இட்டால் வழுக்கித்தான் நயமாய் ஓடும் அல்வாவும்
    காவி அணிந்த முனிவரையும் கருத்தை மயக்கிக் கிறங்கவைக்கும்..

    **

    கோபியெனும் அய்யங்கார் ஹோட்டல் சட்னி
    கூப்பிட்டு வரவழைக்கும் கண்ணில் நீரை..
    3baகாபியென்றால் நாகரீக உணவக முண்டு..
    3c கரும்பதன் சாற்றுக்கும் நல்ல கடையுமுண்டு...

    **

    பலபுலவர் பலஇசைஞர் உருவான மதுரை
    பார்த்ததிலே நானறிந்த பொன்னுச்சாமி4, சோமு..
    கலகலப்பாய்க் கேட்டிடுமே முன்னவரின் நாதம்
    காதுகளில் ரீங்கரிக்கும் மற்றவரின் கீதம்..

    **

    உற்றார் உறவினர் கூட நன்றாய்
    சுற்றுலா செல்லுமிடம் அழகர் கோவில்
    வற்றாத அருவியாய்க் கொட்டி நிற்கும்
    நூபுர கங்கையுண்டு சோலை5 மேலே..

    *

    குடையைப் பிடித்த கரத்துடனே6 குமரி பூரணி விழுந்திருந்த
    குன்றம் இங்கே அருகில்தான் குமரன் அருள்வான் அங்கேதான்..
    தடைகள் வாழ்வில் வந்தாலே தகர்த்தே எறியும் மாகாளி
    6aமடப்புரம் தன்னில் இருக்கின்றாள் மாறா அருளும் செய்கின்றாள்..

    **

    இன்னும் இன்னும் எங்கள்ஊர் எழிலைச் சொல்லி மாளாது
    இன்னும் அரங்கில் பெருங்கவிஞர் இனிதாய்ச் சொல்ல இருப்பதனால்
    வண்ண நினைவில் சற்றேதான் வாழ்ந்து பார்த்த அடியேனும்
    சின்னக் கவிதை ஒன்றினையே சொல்லி இங்கே முடிக்கின்றேன்..

    **

    வானுறையும் தேவமயன் வையகத்தில் கட்டியதாம்
    நான்மாடக் கூடல் நகர்..7

    ************************************************** **********

    1. சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் சிலகாலம் ஆசிரியப்பணி ஆற்றினார். அங்கே
    படித்தது 6.7ம் வகுப்பு.

    2. திருமலை நாயக்கர் மஹால்.. அதன் அருகில் இருந்தது தூயமரியன்னைப் பள்ளி..

    3.ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்..பல வெள்ளங்கள் பார்த்தும் பலவருடங்கள் (200 என நினைக்கிறேன்)
    ஆகியும் அசையாமல் கம்பீரமாய் நிற்கின்றது..

    3a:மதுரையில் இரவு நேர சாலையோர அசைவ உணவகங்கள் அதிகம்.. அதுவும்இரவு சுமார் பதினொரு
    மணி வாக்கில் அங்கு போடப் படும் கொத்துப் பரோட்டாக்களின் சப்தம் 'டக டக டக டக்' ஒருவித
    இசைத்தன்மை கலந்து இருக்கும்..

    3b:நாகரீக உணவகம் - மாடர்ன் ரெஸ்டாரண்ட் - டவுன்ஹால் ரோட்டில் உள்ளது 3c: தலைமைத் தபால்
    நிலையத்தின் அருகில் கரும்புச் சாறு கடை ஒன்று உண்டு.. பள்ளி கல்லூரி நாட்களில் பலதடவை அதை
    ருசித்து மகிழ்ந்திருக்கிறேன்..

    4. கல்லூரி நாட்களில் நடராஜ சுந்தரம் என நண்பன் ஒருவன்.. அவன் அப்பா வாசிக்கும் நாதஸ்வரத்தைப்
    போலவே வெடவெடவென ஒல்லியாக இருப்பான்..அவனது தந்தை எம்.பி.என்.பொன்னுச்சாமி..நடிகர்
    திலகம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வாயசைப்பதற்காக- பொன்னுச்சாமியையும் சேதுராமனையும்
    வாசிக்கச் சொல்லி- முடித்ததும் அதேபோல் செய்து காட்டினாராம்..அப்படியே தி.படத்திலும் இடம்
    பெற்றிருக்கிறது..ந.சு. கல்லூரி முடித்ததும்உடனே அவனுக்குத் திருமணமும் செய்துவிட்டார்கள்..அந்தத்
    திருமணத்தில் வாசித்தவர் யார் தெரியுமா.. நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்.

    4a மதுரை சோமு நல்ல பாடகர்..கணீர்க் குரலுக்குச் சொந்தக் காரர்.. ஆடிவீதியில் இவரது
    கச்சேரி கேட்டதாக நினைவு.

    5.பழமுதிர்ச் சோலை..முன்பெல்லாம் அழகர் கோவில் மலை மீது ஏறிச்செல்வதே இனிய
    அனுபவம்..அந்தக் காடுகள் இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை..

    6. நா.பாவின் குறிஞ்சி மலரில் அவரது கதாநாயகி பூரணி திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு
    தெருவில் மயங்கி விழுவாள்.. ஒரு அழகிய கவிதை வரும்.."குடையைப் பிடித்த கரம்-மனக்
    கொதிப்பைச் சுமந்த முகம்; பெரும்பசியில் தளர்ந்த நடை..' என..முழுதும் நினைவில்லை..

    6a: மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள்..எதிரிகள் அழியவேண்டும் என்று காசு வெட்டிப்
    போடுபவர்கள் இன்றும் உண்டு..ஒரு தடவை சென்றிருக்கிறேன். ஒரு ஒன்றரை மணி நேரப் பேருந்துப் பயணம்
    என நினைவு..

    7.பரிபாடலில் வரும் ஒரு வெண்பாவின் ஈற்றடி மட்டும் நிமிண்டினேன்..பரிபாடலில் இன்னொரு பாட்டும்
    நினைவில் நிற்கிறது..

    **
    'ஈந்தாரைக் கொண்டாடி ஏற்போரைப் பார்த்துவக்கும்
    சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்
    வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார்
    போவாரார் புத்தே ளுலகு'

    **

    7a. மதுரை மேலமாசி வீதியில் இருக்கும் பிள்ளையாரின் பெயர் ஸ்ரீ நேரு ஆலால சுந்தர விநாயகர்.
    (நேருவிற்கு அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு இன்னும் தெரியாத புதிர்). அங்கு தான் வைகுண்ட
    ஏகாதசி அன்று பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நடக்கும்.

    8. முன்பின் கவியரங்கில் கலந்துகொண்டதில்லையாதலின் முதலில் நீளமாகச் சில
    எழுதியிருந்தேன்.பின் மாற்றி எழுதியது தான் மேற்கண்டது..சுவைக் குறைவின் மன்னிக்க..

    ***********
    அன்புடன்
    சி.க.

    **

    நம் நண்பர்களுக்கும் தான்.. நாஸ்டால்ஜியாவில் படுத்தி விட்டேனென்றால் பொறுக்க வேண்டுகிறேன்

    மதுரை வீரன் தானே அவனை உசுப்பி விட்டேன் நானே (உங்களைச் சொல்லலீங்க்ணா பாட்டு..)

    மதுரை அரசாளும் மீனாட்சி.. மா நகர்க் காஞ்சியிலே காமாட்சி..

    ஆடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ பாடல் மதுரையில் ராஜ செளந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ.. (உடுமலை நாராயண கவியாக்கும்)

    பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த கலை அன்னமே ந்னு நெய்வேலி ஓடி வருமாக்கும்..

    சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி..
    Last edited by chinnakkannan; 23rd April 2016 at 09:55 PM.

  5. Thanks adiram thanked for this post
    Likes Russellmai, adiram liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •