Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Hybrid View

  1. #1
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    20.5.1973

    வெற்றி சரித்திரம்
    இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியொரு
    இடைத்தேர்தலை யாரும்
    கண்டிருக்க முடியாது என்று சொல்லத்தக்க
    அளவில் நடைபெற்றதுதான்
    1973 -ம்ஆண்டு தமிழகம் சந்தித்த
    திண்டுக்கல் இடைத்தேர்தல் !




    அண்ணா தி மு க .தொடங்கிய ஆறு மாத காலத்துக்குள் 1973-ம ஆண்டு
    மே மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டியில்
    அண்ணா தி மு க மகாத்தான வெற்றி பெற்றது எம்ஜியாருக்குள்ள
    மக்கள் சக்தியின் மகாத்தான ஆதரவை உலகுக்கு பறை சாற்றியது
    அந்த இடைத்தேர்தல்


    மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி
    தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்
    மாநிலத்தில் ஆளும் கட்சியாக
    இருந்த திராவிடமுன்னேற்றகழகம் தமிழகத்தின் தனிப்பெரும்
    தலைவராக திகழ்ந்து புகழ்பெற்ற
    பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான
    ஸ்தாபன காங்கிரஸ் என்ற மும்முனை தாக்குதலை
    எம் ஜி ஆர் தலைமையிலான
    அண்ணா தி .மு .க .இடது சாரிகளின் துணையோடு வெற்றிகண்டது

    இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தி .மு .க மற்றும் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து
    வீடு வீடாக தெருத்தெருவாக ஒரு சுவரைக்கூட விட்டு வைக்காமல்
    தங்களது சின்னத்தை வரைந்து விட்டனர் .போதாக்குறைக்கு
    மார்க்சிஸ்ட்கமயுனிஸ்ட் கட்சியும் தமது பங்குக்கு
    தோழர் சங்கரையாவை வேட்பாளராக
    அறிவித்து அவர்களின் சின்னத்தையும் வரைய தொடங்கிவிட்டனர் .அதன் பின்னர் தான் ,பி .இராம மூர்த்தியுடன் எம் .ஜி .ஆர் இந்திய கம்யுனிஸ்ட் தலைவராக இருந்த எம் .கல்யாண சுந்தரமும் பேசி
    அ.தி .மு க .வுக்கு ஆதரவு கேட்டனர் .சி .பி. எம் .வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார் .
    தேர்தலுக்கு மூன்று வாரங்கள் இருந்த நிலையில் தான் அண்ணா தி.மு.க.
    வேட்பாளராக கே.மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை எம்.ஜி.ஆர். அறிவித்தார் அதன் பிறகு இரண்டொரு நாள் கழித்துதான்
    வெற்றி சின்னமாம் இரட்டை இல்லை சின்னம் அறிவிக்கப்பட்டது
    .


    கட்சி புதியது ,வேட்பாளர் புதியவர் ,சின்னம் புதிது .இந்த நிலையில்
    முழுக்க முழுக்க மக்களையும் ,தொண்டர்களையும் ,மட்டுமே நம்பி
    எம்.ஜி.ஆர்.களம் இறங்கினார்



    டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்கள் வந்து குவிந்துவிட்டனர்
    மாநிலத்தின் மொத்த அமைச்சரவை யும் திண்டுக்கல் தொகுதியில்
    முகாமிட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் புத்தம் புதிய கார்களும் ஜீப்புகளும்
    பறந்து கொண்டிருந்தன .வீதிக்கு வீதி வண்ண விளக்கு அலங்காரங்கள் ,
    கொடி,தோரணங்கள் ,கட் -அவுட்டுகள் ,போஸ்டர்கள் என்று ஆளும்
    தி.மு.க.பணத்தை வாரியிறைத்தது .திண்டுக்கல் நாடாளுமன்றத
    தொகுதியையே கோலாகலமாக்கிக் கொண்டிருந்தது .

    ஆனால் அண்ணா தி.மு.க. வின் நிலையோ ?அறிவிக்கப்பட்ட இரட்டை
    இலை சின்னத்தை வரைவதற்கு கூட சுவர்கள் கிடைக்கவில்லை
    பிரசாரத்துக்கு பெரிய அளவில் வண்டி வாகனங்கள் இல்லை .ஆனாலும்
    தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும தொண்டர்கள் படையெடுத்து
    வந்திருந்தினர் .அவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர் .வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தனர்

    திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை ,ஆத்தூர் ,சோழவந்தான் ,உசிலம்பட்டி ,திருமங்கலம் ,திண்டுகல்
    ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆங்காங்கே அண்ணா தி.மு.க.
    தொண்டர்கள் மிரட்டப்பட்டார்கள் ,தாக்கப்பட்டார்கள் .அ.தி.மு.க.கோடிக்
    கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன .தொழில் துறை ரவுடிகளும் ,குண்டர்களும்,ஆயுள்கைதிகளும் நேரடியாக களத்தில் இறக்கி
    விடப்பட்டு அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன இதற்க்கு மூல காரணமாக
    இருந்தவர் மதுரை முன்னாள் மேயர் முத்து என குற்றச்சாட்டு அப்போது
    எழுந்தது


    இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு முதல் களப்பலியானவர் தான்
    வத்தலகுண்டு ஆறுமுகம் என்ற அ.தி மு.க.தொண்டர் .திருச்சி சுசிலா ,கோடையிடி முத்துராமன் என்ற அ.தி.மு.க.பேச்சாளர் பங்கேற்ற பிரசரா
    பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு தேர்தல் அலுவலகத்துக்கு வந்த
    அந்த தொண்டனை குத்தி கொலை செய்துவிட்டனர் . அந்த தகவல்
    அறிந்து .ஆறுமுகத்தின் இளம் மனைவி கர்ப்பவதியாக இருந்த சுந்தரியை
    சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த எம்.ஜி.ஆர்.கண்ணீர்விட்டு அழுதார்
    மே மாதம் முதல் வாரத்தில் இந்தச்சம்பவம் வத்தலகுண்டு நகரில் நடை
    பெற்றது மே 11-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி படைப்பான
    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது அன்று திண்டுகல்
    நகரில் வரலாறு காணா வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டது
    பிரசாரத்துக்காக லாரிகளில் வந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரட்டி
    அடிக்கப்பட்டனர் .அன்று தான் விளாத்திகுளம் ஒன்றிய அ.தி.மு.க. அமைப்பாளர் யாக்கோப்பு
    ரெட்டியார் வெட்டப்பட்டார்

    இத்தகைய மிரட்டலும் ,மிரட்சியுமான சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆரின்
    சூறாவளிப் பிரசாரமும் நடைபெற்றது .அவர் சென்ற வ்ழிஎங்கும்
    மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து அவரைக்கண்டு
    அவரதுஉரை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது .எங்கு திரும்பினாலும்
    இரட்டைவிரல் காட்டி அ.தி.மு.க.வெற்றிக்கு கட்டியம் கூறிய அந்த
    மக்கள் கூட்டம் 1973-மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற .வாக்குப்
    பதிவின் பொது தங்கள் அமோக ஆதரவை எம்.ஜி.ஆர். மீது தங்களுக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தியது .

    மே மதம் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிமுக வின் வெற்றி
    தகவல்அறிவிக்கப்பட்டபோது ,தமிழகம் எங்கும் கோலாகலம் ,மக்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி



    ஆறு மாதக் குழந்தையான அண்ணா தி.மு.க..அந்த இடைத்தேர்தலில்
    பெற்ற வாக்குகளின் விபரம்

    மொத்தம் வாக்குகள் ............643704
    பதிவானவை ...........................491553
    அண்ணா தி.மு.க.....................260930
    ஸ்தாபன காங்கிரஸ் ............118032
    தி.மு.க...................................... .... 93496
    இந்திர காங்கிரஸ் ...................11423

    இந்த தேர்தலில் அப்போதைய ஆளும் தி.மு.க மூன்றாம் இடத்துக்கு
    தள்ளப்பட்டது இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் உட்பட மற்ற
    அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •