-
21st May 2016, 12:12 PM
#1171
Senior Member
Veteran Hubber
நான் தவழ்ந்த என் தாய் வீடு
=====================
“சாந்தி” நினைக்கும்போதும் சொல்லும்போதும் சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு மந்திர சொல். நான் வாலிபனாக பதினைந்து ஆண்டுகள் தவழ்ந்து திரிந்த என் தாய் வீடு. அது ஒரு அரங்கம் மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இதயத்துடிப்பு. ஒவ்வொரு நாள் மாலையின் சந்தோஷம். மறக்க முடியுமா அதன் மணியான நாட்களை. பள்ளி, கல்லூரி, அலுவலகம் இவற்றுக்கு கூட வாரம் ஆறு நாள், ஐந்து நாள் என்று போனது உண்டு. ஆனால் வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தின் முப்பது நாட்களும் தவறாமல் ஓடிசசென்ற, தேடிசசென்ற, நாடிசசென்ற ஒரே இடம் அது “சாந்தி” மட்டுமே. பெயர் வைத்தவர் தீர்க்கதரிசி. அங்கே சென்றால் மட்டுமே எங்களுக்கு சாந்தி என்று உணர்ந்து வைத்திருக்கிறார்.
அங்கு பார்த்து மகிழ்ந்த திரைக் காவியங்கள்தான் எத்தனை, எத்தனை. அதை விட பல மடங்கு அதிகமாக சாந்தி வளாகத்தில் நின்று, அமர்ந்து பேசிய, பகிர்ந்துகொண்ட, சுகமாக உரையாடிய, சூடாக விவாதித்த விஷயங்கள்தான் எவ்வளவு. அங்கு எத்தனை மணி மணியான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களுடன் பேசித் தீர்த்த விஷயங்கள் எவ்வளவு, தகவல் பரிமாற்றங்கள், ஆவண பரிமாற்றங்கள், வரப்போகும் படங்களுக்கு எந்த எந்த மன்றங்கள் சார்பில் என்ன என்ன அலங்காரங்கள் செய்வது என்று எங்களுக்குள் பணிகளை பிரித்துக்கொண்ட பாங்கு. (பெரும்பாலும் மெயின் கட் அவுட்டுக்கு ராட்சத மாலை போடும் உரிமை எங்கள் மன்றத்துக்கே கிடைக்கும்).
வேறு அரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்கள் ரிலீஸாகி இருந்தாலும் அவற்றைப்பற்றி கருத்து பகிர்வுகள், விவாதங்கள், வெளியூர் நிலவரங்கள் குறித்த அலசல்கள் அனைத்தும் நடைபெறும் இடமாக விளங்கியது சாந்தி வளாகம். அந்த அளவுக்கு ரசிகர்களின் சந்திப்பு கேந்திரமாக, சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக இருந்து வந்தது. தற்போது மூடப்பட்ட வண்ணமுகப்பு கொண்ட சாந்தியைவிட, உடலெங்கும் “சந்தனவண்ணம்” பூசிக்கொண்டு கம்பீரமாக நின்ற அன்றைய சாந்திதான் எங்கள் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த வளாகத்தில் எங்கள் கால்கள் படாத இடமே இல்லையெனலாம். அங்கு ‘இருந்த’ தண்ணீர் பவுண்டன் தொட்டியின் ஓரம் அமர்ந்து கலந்துரையாடிய அந்த பதினைந்து வருடங்களும் பசுமையானவை. கல்வெட்டாக மனதில் பதிந்து விட்டவை.
அங்கு கிடைத்த அற்புதமான நண்பர்களை மறக்க முடியுமா?. கோவை சேது, தி.நகர் வீரராகவன், மந்தைவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், நமது ராகவேந்திரன் சார், வடசென்னை வாத்தியார் ராமன், பாம்குரோவ் சந்திரசேகர், மாரீஸ் சந்திரசேகர், குருஜி, சிவா, பல்லவன் விஜயகுமார், கும்பகோணம் ஸ்ரீதர், கவிஞர் கா மு ஷெரீப் அவர்களின் மகன் சீதக்காதி, புரசைவாக்கம் ஆனந்த் என்று இன்னும் எத்தனை எத்தனை நண்பர்கள் (1971 முதல் 1984 வரை) தினமும் மாலை 5 மணிக்கு உற்சாகத்துடன் ஒன்று கூடுவதும் 9 மணிக்கு மேல் பிரிய மனமில்லாமல் பிரிவதும், இடைப்பட்ட நேரத்தில் நடிகர்திலகத்தின் சாதனைகளை அலசோ அலசென்று அலசுவதும் மறக்க முடியுமா அந்த நாட்களை.
இதோ நாங்கள் கூடிக்குலாவிய எங்கள் தாய் வீடு மூடப்பட்டு விட்டது. இன்னும் சிறிது நாட்களில் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அழியாத சுவடுகளாக நினைவுகள் மட்டுமே இதயங்களில் தங்கியிருக்கும் மண்ணறைக்கு செல்லும் வரை.
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
21st May 2016 12:12 PM
# ADS
Circuit advertisement
-
21st May 2016, 01:14 PM
#1172
Senior Member
Devoted Hubber
Dear senthilvel sir,
many many happy returns of the day
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
21st May 2016, 03:30 PM
#1173
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
mr_karthik
நான் தவழ்ந்த என் தாய் வீடு
=====================
“சாந்தி” நினைக்கும்போதும் சொல்லும்போதும் சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு மந்திர சொல்.
டியர் கார்த்திக் சார்,
நீண்ட நாள் கழித்து தங்களுடைய பதிவைக் காண்பது மகிழ்ச்சி.
தங்களின் சாந்தி தியேட்டர் அனுபவங்கள், எல்லா ரசிகர்களுக்கும் உள்ள ஏக்கங்கள் ஆகியவற்றை அழகாகக் கூறியிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, சிறுவயதில் விடுமுறையில் சென்னைக்கு, என்னுடைய சகோதரர் வீட்டிற்கு வரும்போது, சாந்தி திரையரங்கை வந்து பார்த்துவிட்டுச் செல்வதையே ஒரு பாக்கியமாகக் கருதினேன். அப்போது அங்குள்ள யாரும் எனக்குத் தெரியாது. அப்போதெல்லாம், திரையரங்கிற்குள் சென்று திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அங்கு சுவற்றில் எழுதப்பட்டிருந்த, நடிகர்திலகத்தைப் பற்றிய சாதனைத் தகவல்களையெல்லாம் ஆச்சர்யத்தோடு பார்த்துச் சென்றிருக்கிறேன்.
தாங்கள் மற்றும் திரு.ராகவேந்திரன் சார் போன்ற ஜாம்பவான்களின் சாந்தி தியேட்டர் அனுபவங்களை பார்க்கும்போது நான் மிகவும் குழந்தை. ஆனால், உங்களின் அனுபவங்களைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பே, என்னையும் உங்கள் அனுபவங்களோடு பயணிக்க வைக்கிறது. தாங்கள் சாந்தியில் பயணித்த நாட்களாக 1971 முதல் 1984 வரை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் முதன் முதலில் சென்னை வந்தபின், 1985-ல் முதல் மரியாதை படத்தைத்தான் முதன் முதலாக பார்த்து மகிழ்ந்தேன். அதன் பிறகுதான் எனக்கும் சாந்தி திரையரங்கத்திற்கும் நெருக்கம் அதிகமானது. தியேட்டரோடு மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளரான எனது கனவுலக நாயகனாகத் திகழ்ந்த நடிகர்திலகத்தொடு நெருங்கிப் பழகி, பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும் என்று கனவில்கூட நினைக்காத நிலையில், கடவுள் அருளால் அந்த பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
அதன் உரிமையாளர்களாக இருந்த சண்முகராஜா பெயரின் முன்பாதியையும் (san), உமாபதி பெயரின் பின்பாதியையும் (thi) இணைத்து இப்பெயர் வைக்கப்பட்டதாகவும், பின்னாளில் இத்திரையரங்கை வாங்கிய நடிகர்திலகம், தன் மகளுடைய பெயராக இருப்பதால் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. (சாந்தி திரையரங்கின் முந்தைய உரிமையாளர்களில் ஒருவரான சிவகங்கையைச் சேர்ந்த திரு.சண்முகராஜாவிற்கு நெருக்கமான திரு.மாரி சேர்வை என்பவர் என்னிடம் தெரிவித்த தகவல் இது) இந்தத் தகவல் உண்மையா என்பதுகுறித்து தெரிந்த நண்பர்கள் பதிவிடவும்.
காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுபோல இப்போதுள்ள சூழ்நிலையில், mallகளோடு கூடிய சிறிய திரையரங்கங்கள்தான் தாக்குப்பிடிக்கமுடிகிறது. இத்திரையரங்கத்தை இடித்து கட்டப்படும் mallல் வரும் தியேட்டருக்கு சாந்தி பெயர் சூட்டப்படும் என்று இளையதிலகம் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். அதோடு, மற்றொரு திரையரங்கிற்கு நடிகர்திலகத்தின் பெயர் சூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. எதிர்பார்ப்போம்.
நன்றி.
Last edited by KCSHEKAR; 21st May 2016 at 04:01 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st May 2016, 07:49 PM
#1174
Junior Member
Diamond Hubber
வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
-
21st May 2016, 11:09 PM
#1175
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
21st May 2016, 11:19 PM
#1176
Senior Member
Seasoned Hubber
கார்த்திக்
தங்களை வரவழைத்த நமது சாந்திக்கு என் உளமார்ந்த நன்றி.
சென்ற ஞாயிறன்று மாலை இறுதி நாளாக சாந்திக்கு சென்றபோது முரளி சாருக்கு இந்த இடத்தையெல்லாம் காண்பித்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் வரும் வழியையும் காட்டினேன். அப்போது அவர் மன்னன் படத்தை நினைவூட்டி, அதில் நீங்கள் பெயிண்டிங் வரைந்த சுவரைக் காட்டுவார்கள் என்று கூறினார். அன்று முழுதும் நினைவுகள் சாந்தியையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. இன்னமும் அதிலிருந்து மீள முடியவில்லை. இருந்த போதிலும் சுற்றிலும் மிகச் சிறந்த வடிவமைப்புடன் பல்வேறு புதிய வளாகங்கள் வரும் போது நம்முடைய அரங்கம் இன்னும் பழைய அமைப்பிலிருந்து மீளாமல் இருப்பது ஒருவகையில் வருத்தமாகத் தான் உள்ளது. அதிலும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் மாற்றப்பட்டே ஆக வேண்டிய நிலையில் தான் அரங்கமும் உள்ளது.
புதிய வளாகத்தில் மூன்று அல்லது நான்கு திரையரங்குகள் வர இருப்பதாகவும் அவற்றுக்கு பெயர்கள் கூட தீர்மானிக்கப்பட்டு செயல் வடிவம் பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும் கேள்விப்பட்டோம். அதில் நிச்சயமாக ஒரு திரையரங்கம் பழைய தமிழ்த்திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்கிற என் விருப்பத்தினை என்னிடம் பேட்டி கண்ட நிருபர்களிடம் நான் கூறியுள்ளேன்.
எது எப்படியோ, நம்மால் சாந்தியின் நினைவுகளிலிருந்து மீள்வது என்பது இயலாத காரியம்.
தங்களுடைய பதிவுகள் எத்தனையோ கடந்த கால நிகழ்வுகளை மனதில் அசை போட வைக்கின்றன.
என்றும் மலரும் சாந்தியின் நினைவுகளுடன் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...
புதிய பறவையில் தலைவர் சொல்லுவார். நான் உன்னை மனம் ஒப்பியா போகச் சொல்கிறேன். நீ இல்லாத அந்த நாட்களில் உன் நினைவோடு வாழ்ந்து அதில் ஒரு சந்தோஷம் கிடைக்குமே அது போதும் என்கிற எண்ணத்தினால் தான் போகச் சொல்கிறேன் என்பார்.
அது போல் இந்தக் கட்டிடத்திற்கு பிரியா விடை கொடுத்து மனதில் பழைய நினைவுகளை அசை போட்டு வாழ்ந்திருப்போம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
22nd May 2016, 01:42 PM
#1177
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
22nd May 2016, 07:46 PM
#1178
Junior Member
Devoted Hubber
Written by Mr. Sudhangan,
சிவாஜி எப்படி ஒரு நாதஸ்வர கலைஞனாகவே ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மாறினார்? படம் வந்தபோது பலர் மனதிலும் எழுந்த கேள்வி இதுதான்! அதற்கு சிவாஜி என்ன சொன்னார்? ‘ஒரு நடிகன் எத்தனையோ வேடங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அவன் ஏற்றுக்கொண்டது ஒரு வாத்தியக்காரன் வேடனாக இருக்கலாம்.
வீணை வாசிக்க வேண்டியிருக்கும். மிருதங்கம் வாசிக்க வேண்டியிருக்கும். சிதார் வாசிக்க வேண்டியிருக்கும். நாதஸ்வரம் வாசிக்க வேண்டியிருக்கும். அதற்காக அவன் ஒவ்வொரு வாத்தியமாக எடுத்துக்கொண்டு பயிற்சி செய்ய ஆரம்பித்தால் அவன் நடிப்புத் தொழில் என்னாவது? அவன் வாத்தியக்காரனும் ஆகமுடியாது. நடிகனாகவும் இருக்க முடியாது!
நான் செய்ததெல்லாம் நடிப்புத்தான். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நான் நாதஸ்வரம் வாசிப்பது போல நடித்தேன். உண்மையில் நான் நாதஸ்வரம் வாசிக்கவில்லை. என்னுடைய முகபாவத்தால் நாதஸ்வரத்தை நானே வாசிப்பது போல், ரசிகர்களுக்குத் தோன்றச் செய்தேன்.
நாதஸ்வரத்தின் மீது விரல்களை வைத்து அசைத்தேன். இடையிடையே மூச்சுப் பிடித்து ஊதுவதுபோல் முகபாவத்தைச் சேர்த்தேன். அங்கே நீங்கள் சிக்கல் சண்முகசுந்தரத்தைப் பார்த்தீர்கள். என்னை ஒரு நாதஸ்வர வித்வானாகவே பாராட்டினீர்கள்.
அதில் நிஜமாக நாதஸ்வரம் வாசித்த மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்கள் என் பக்கத்திலேயே உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்தால் கூட, நான் வாசிப்பதுதான் சரி, அவர்கள் வாசிப்பது தப்போ என்று தோன்றும். இது நடிப்பால் உருவாக்கும் ஓர் இம்பாக்ட் அல்லது மாயத்தோற்றம்.
இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் அருமையாக இசையமைத்திருந்தார். பத்மினி, பாலையா, மனோரமா, ஏவி.எம்.ராஜன், நாகேஷ், என் நண்பன் பாலாஜி போன்றவர்களும் என்னோடு நடித்திருந்தார்கள். இதையேதான் நான் பல படங்களிலும் செய்தேன். ‘திருவிளையாடல்’ படத்தில் ஒரு காட்சியில் ‘ பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலுக்கு பல்வேறு வாத்தியங்களை வாசிப்பது போல் நடித்தேன். ‘மிருதங்க சக்ரவர்த்தி’ படத்தில் சுப்பையா பிள்ளை பாத்திரத்தில் நடித்தபோதும் என்னுடைய முகபாவத்தில் மிருதங்கம் வாசித்தேன். கைவிரல்கள் மிருதங்கத்தை நிரடியது என்னவோ உண்மை. ஆனால், அதுதான் சரியான தாளங்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் நடிப்பினாலும், என் முகத்திலுள்ள ஒவ்வொரு தசை அசைவினாலும், கண்களின் அசைவினாலும் அங்கே மிருதங்க நாதத்தை நான் உருவாக்கினேன்.
இதே போல்தான் ‘தெய்வ மகன்’ படத்தில் ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’ பாடலுக்கு நான் சிதார் வாசித்தேன். அதே போல் ‘தவப்புதல்வன்’ படத்தில் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ பாடலுக்கு சிதார் வாசித்துக்கொண்டே பாடுவேன்.
‘பாசமலர்,’ ‘புதிய பறவை,’ ‘தங்கப்பதக்கம்,’ ‘எங்க மாமா’ போன்ற படங்களில் நான் பியானோ வாசித்திருப்பேன். எந்த வாத்தியம் வாசிப்பது போல் நடித்தாலும் அந்த வாத்தியத்தின் நியதிக்கேற்ப, என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகக் கேட்டுக்கொண்டு அதன்படி செய்ததனால், நானே மிகத்திறமையாக வாத்தியங்களை வாசிப்பது போல் உங்களுக்கு தோன்றியது. அதுதான் நடிப்பு!’ இப்படித்தான் சிவாஜி, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாகவே மாறினார். அந்த வருடம் வந்த இன்னொரு முக்கியமான படம் ‘திருமால் பெருமை’. ஏ.பி. நாகராஜன் எடுத்த மற்ற புராணப்படங்களை விட இந்தப் படம் அதிகம் பேசப்படாத படம். காரணம், வைணவர்களுக்கு சினிமா ரசனை குறைவோ என்று கூட யோசிக்க வைத்த படம்! அல்லது ‘திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர்’ போன்ற சைவ படங்களைப் போல் இந்த படத்தில் ஜனரஞ்சகம் அதிகமில்லை என்று ரசிகர்கள் நினைத்தார்களோ என்பது தெரியவில்லை. ‘திருவருட்செல்வர்’ எப்படி நாயன்மார்கள் வரலாறோ, அதே போல்தான் இது ஆழ்வார்களின் வரலாற்றை தொகுத்த படம்!
வழக்கமாக தன் எல்லாப் படங்களையும் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்கிற பெயரில்தான் எடுப்பார் ஏ.பி. நாகராஜன். ஆனால் இந்தப் படத்தை வெங்கடாசலம் செட்டியார் என்பவருக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவீஸ் சார்பில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன்! படத்தின் ஆரம்பமே திருப்பதி பெருமாளிடமிருந்துதான் ஆரம்பிக்கும். திருப்பள்ளியெழுச்சி பாடலாக பின்னால் சீர்காழியின் குரலில் ‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்!’ என்று துவங்கி, ‘பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்’ என்றுதான் படம் துவங்கும்! அப்படியே அந்தப் பாடல் கதாகாலட்சேப பாகவதரான நாகேஷின் மேல் முடிந்து அவர் பாடுவதாக முடித்து படம் ஆரம்பிக்கும். படத்தை பெரியாழ்வாரிடமிருந்து துவக்குவார்! ஆழ்வார்களிலேயே நம்மாழ்வாருக்கு மிகப்பெரிய பெயர் உண்டு. ஆனால், திருமகளை பெரியாழ்வாரின் மகளாக பூமியில் கண்டெடுத்து வளர்க்க வைத்தார் திருமால்! ஜனகனுக்கு பூமியில் கிடைத்த பெண், ராமாயண சீதை! அதே போல் பெரியாழ்வாருக்கு அவர் தோட்டத்தில் கிடைத்த பெண்தான் கோதை என்கிற ஆண்டாள்! பாண்டியன் சபையிலே பெருமாளின் புகழ் பாடி பெரும் பரிசுகளை பெற்று திரும்பிய பெரியாழ்வார் என்கிற விஷ்ணுசித்தர், தினமும் பெருமாளுக்கு தன் தோட்டத்தில் வளர்த்த பூக்களையே தினமும் சூட்டிவிட்டுத்தான் அடுத்த வேலையை கவனிப்பார்! அந்த நந்தவன கைங்கர்யத்திலேயேதான் படத்தின் காட்சிகள்! சிவாஜி அந்த தோட்டத்து பூக்களுக்கு குடத்தினால் தண்ணீர் ஊற்றுவார்! அப்படியே ஒரு வைணவராகவே காட்சி தருவார்! கொட்டகையில் விசில் பறக்கும்!
பிரபந்தம் படித்துக்கொண்டே சிவாஜி படத்தையும் பார்த்தவர்கள் இருந்தால், இனி பெரியாழ்வார் என்றால் சிவாஜி நினைவுதான் வரும்! அப்போது அந்த தோட்டத்து துளசிச்செடி அருகே திருமகள் வந்து நின்று அப்படியே குழந்தையாக மாறி அங்கே படுப்பாள்! திடீரென்று தோட்டத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார் அழுகுரல் வரும் திசை நோக்கிப் போவார். அங்கே துளசிமாடத்திற்கு அருகே அழுது கொண்டிருந்த குழந்தை இவரைக் கண்டதும் அப்படியே சிரிக்கும்! குழந்தையை கையிலெடுப்பார்! யார் குழந்தை என்று சில விநாடிகள் திகைப்பார்!
பிறகு, இதுவும் நாராயணன் விளையாட்டு என்று முடிவு செய்து குழந்தையை தானே வளர்க்க முடிவு செய்து, அந்தக் குழந்தைக்கு உடனே கோதை என்று பெயர் சூட்டுவார்! அடுத்த காட்சி காமெடிக்கு போகும்! எஸ். ராமராவும், மனோரமாவும் வைணவ தம்பதிகளாக ஒரு காட்சியைக் காட்டிவிட்டு, கதை அப்படியே பெரியாழ்வாரிடம் வரும்! இங்கே மறுபடியும் பாடலில் கண்ணதாசனின் மிகுந்த கற்பனை வளம் மிகுந்த பாடல் துவங்கும்! அந்தப் பாடலும் நந்தவனத்திலேயே ஆரம்பிக்கும்!
‘மலர்களிலே பல நிறம் கண்டேன்! திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்’ என்ன அருமையான பாடல் அது!
(தொடரும்)
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
22nd May 2016, 09:03 PM
#1179
Junior Member
Senior Hubber
Mr senthilvel sir
please see my pm in the mailbox
-
23rd May 2016, 06:24 PM
#1180
Senior Member
Seasoned Hubber
"சிவகாமியின் செல்வன்" - 52-வது நாள் விழா
இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும், நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறு மற்றும் மறு வெளியீட்டிலும் சாதனை புரியும், நம் ரசிகனின் ரசனை என்றும் மாறாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் "சிவகாமியின் செல்வன்" மறு வெளியீட்டில் 50-வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பது.
22-05-2016, ஞாயிறன்று சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற 52-வது நாள் விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர், திரு.சி.வி.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடிகர்திலகத்தோடு தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டார்.
இயக்குனர் திரு.சி.வி.ராஜேந்திரன், திரு.முரளி சீனிவாஸ், திரையரங்கப் பொறுப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் திரு.P .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவும் சிறப்புற நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும், இதுபோல நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளிவந்து, வெற்றிவிழாக்கள் காணவேண்டும் என்ற நம் ரசிகர்கள் எல்லோருடைய ஆவல், விருப்பத்துடனும்.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
Bookmarks