Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    சாந்தி வெறும் திரை அரங்கம் அல்ல --சிவாஜி ரசிகர்களின் சிந்தனையின் பிறப்பிடம்


    சாந்தி திரைஅரங்கம் சிவாஜி ரசிகர்களின் கோவில் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை நான் அலுவல் விஷயமாக சென்னை வரும்போதெல்லாம் அங்கு வராமல் இருந்ததில்லை - நான் கடந்த 1988ம் வருடம் முதல் சாந்தி திரை அரங்கத்திற்கு வருகை புரிந்திருக்கிறேன் -எனக்கு மாதத்தில் 2 நாட்கள் கண்டிப்பாக சென்னையில் தான் வேலை ஆதலால் அலுவல் முடிந்து மாலை சரியாக 6 -7 மணிக்கு ஆஜராகி விடுவேன் - இதற்காகவே மவுண்ட் ரோடு ஹோடெல்லில் தான் ரூம் போடுவேன் - சாந்தி திரைஅரங்க நண்பர்கள் எழில்(தற்போது இவர் இல்லை), பாபு , மோகன் ,துவரகேஷ், ராமஜெயம், நாகராஜ், இதயவேந்தன் நாராயண், எஸ்கே விஜயன் முதலானோர் என்னுடைய நீண்ட நாள் நண்பர்கள் - நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு கல்யாண விசேஷத்திற்கு சென்னை வந்தபோது 1983ம் வருடம் சந்திப்பு வெளிவந்த நேரம் அசந்து விட்டேன் அலங்காரத்தை பார்த்து - தயவுசெய்து யாரிடமாவது அந்த போட்டோ இருந்தால் பதிவிடவும்

    அதற்கு பிறகு நான் அசந்து போனது ராஜகுமாரன் படத்திற்கு வைக்கப்பட்ட ஸ்டார் அலங்காரம் என்னை மிகவும் கவர்ந்தது - இதுவும் யாரிடமாவது போட்டோ இருந்தால் பதிவிடவும் -

    சாந்தி அரங்கத்திற்கு 6 மணிக்கு வந்து பேசிவிட்டு சரியாக 8.30 மணி அளவில் அனைவரும் அருகில் அண்ணா திரைஅரங்க வாசலில் உள்ள டீ கடையில் காபி குடித்து விட்டு கிளம்பிவிடுவோம் - போன மாதம் வரை இது கடை பிடிக்க பட்டது

    நான் மிகவும் ஆசையாக இருந்தது அரங்கம் மூடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாவது தலைவரின் முக்கியமான 4 படங்களை வாரம் ஒன்றாக திரையிட்டு ஆசைதீர அனுபவித்து பார்க்க வேண்டும் என்றிருந்தேன் -அது நிறைவேறாமல் போனதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது - கடைசி ஒரு வாரமாவது தலைவர் படத்தை போட்டு விட்டு பின்பு மூடியிருக்கலாம்

    ஆல்பர்ட் தியேட்டரில் ராஜா படம் ஓடியபோது நாள் முழுதும் சாந்தியில் பொழுதை கழித்து பின்பு மாலையில் படம் பார்க்க சென்றது - தேவி பாரடைசில் தங்கபதக்கம் படம் பார்ப்பதற்காக ஞாயிறு சென்னை வந்து பகல் முழுதும் சாந்தியில் இருந்து விட்டு மாலை படம் பார்க்க போனது -சின்னத்தம்பி 105 வது நாளன்று கண்ட மக்கள் கூட்டம் --பிள்ளைக்காக படம் ஓடிக்கொண்டிருந்தபோது நம் ரசிகர்கள் பொது மக்களிடம் படம் எப்படி என்று கேட்டது --வாழ்க்கை படம் அலங்காரில் பொசுக்கென்று எடுக்கப்பட்டதை எதிர்த்து நம் ரசிகர்கள் ஒட்டிய கண்டன போஸ்டரை சாந்தியில் பார்த்தது - வெற்றிவிழா படத்திற்கு பிரபு கடவுட்டிற்கு ரசிகர்கள் மாலையிட்டதை பார்த்தது --டூயெட் படத்திற்கு லேசர் லைட்டில் போர்டு வைத்தது -அறுவடை நாள் படத்திற்கு அப்போதைய பிரபு மன்ற தென்சென்னை தலைவர் திரு.காதர் அவர்கள் சாந்தியிலிருந்து ரசிகர்களுடன் அண்ணாசாலை சந்திப்பில் வைக்கப்பட்ட கட்டவுட்டிற்கு மாலை அணிவித்தது

    இப்படி என் மனதை விட்டு நீங்காத சாந்தி திரைஅரங்க அனுபவங்கள் நிறைய உள்ளது - கண்டிப்பாக சாந்தி அரங்கம் என்னதான் புதுபிக்கபட்டாலும் பழமையின் பெருமையை யாராலும் திருப்பி கொடுக்க முடியாது

    பல ஆயிரம் சிவாஜி ரசிகர்களின் உணர்ச்சிக்குமுறல் அடங்க நாளாகும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •