Page 129 of 400 FirstFirst ... 2979119127128129130131139179229 ... LastLast
Results 1,281 to 1,290 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1281
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you Gopal, Adiram and Ramachandran for the Birth Day Greetings.
    God Bless You.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #1282
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1283
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Facebook, Whatsapp, Twitter என உடனடித் தகவல் தொடர்பு ஊடகங்கள் பல்கிப் பெருகினாலும் கூட அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக நமது மய்யம் இணைய தளம் திகழ்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயம். இங்கு நாம் நம்முடைய நாயகனைப் பற்றியும் மற்றும் சினிமாவைப் பற்றியும் பகிர்ந்து கொண்ட பல்வேறு விஷயங்கள், நினைவலைகள், தகவல்கள், நிழற்படங்கள் என யாவையுமே இன்று வெவ்வேறு விதங்களில் பத்திரிகைகள் உள்பட பல்வேறு ஊடகங்களுக்குப் பயன்பட்டு வருகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். அதிலும் நமது நடிகர் திலகத்தின் மேன்மையைக் கூறும் நம் நண்பர்களின் கருத்தானாலும் சரி, ஆவணத்திலகம் பம்மலாரின் ஆவணங்களானாலும் சரி, நிழற்படங்களானாலும் சரி, இன்று பரவலாக எங்கும் பயன்படுகின்றன. அந்த வகையில் நமது மய்யம் இணையதளத்தின் பங்கு இன்றியமையாததாய் விளங்குகிறது. நாளுக்கு நாள் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து கொண்டே போகும் தகவல் தொடர்பு ஊடகங்களின் நடுவே மய்யம் இன்றும் வெற்றியுடன் தொடர்கிறது என்றால் அதற்கு நம்முடைய பங்களிப்பாளர்களே முக்கிய காரணம். அனைவருக்கும் அதே போல் மய்யம் இணைய தளம் ஸ்தாபனத்தாருக்கும் நமது உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1284
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1285
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்

    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

    கடந்த பதிவின் இறுதி பகுதி

    இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது

    பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

    பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது

    நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்

    இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .

    மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..

    நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.

    (தொடரும்)

    அன்புடன்

  7. Thanks Russellmai thanked for this post
  8. #1286
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Written by Mr. Sudhangan,

    திருமால் பெருமை’ படத்தைப் பற்றிச் சொல்லும்போது அதில் புதைந்துள்ள ஓர் அந்தரத்ம ரசனைகளைத் துாண்டும் பாடல்களையும் அதன் சுவைகளையும் சொல்லாமல் இருக்க முடியாது!
    12 ஆழ்வார்களில் ஏ.பி. நாகராஜன் சில ஆழ்வார்களை மட்டுமே எடுத்துக் கையாண்டிருப்பார்! அதில் அவர் துவக்கியிருப்பது. பெரியாழ்வார்! காரணம், அதில்தான் ஒரு பெண் கதாபாத்திரமான ஆண்டாள் வருகிறாள்! ஆழ்வார்களில் ஒருத்தி ஆண்டாள் என்கிற கோதை நாச்சியார்!
    பெரியாழ்வார் தோட்டத்தில் கண்டெடுத்த பெண்! ஜனகனுக்கு ராமாயணத்தில் பூமியில் கிடைத்த சீதையைப் போல! பெரியாழ்வார் வேடத்தில் சிவாஜி! பெரியாழ்வார் யார்?
    அவர்தான் சிவாஜி என்று சொல்லுகிற மாதிரியாகவே, அந்த பாத்திரமாகவே மாறியிருப்பார் நடிகர் திலகம்! அவர் பாடிக்கொண்டே வருவார்! பாசுரங்கள் இயற்றிய 12 ஆழ்வார்களில் மூத்தவர் நம்மாழ்வார் என்றால் அதில் முக்கியத்துவம் பெற்றவர் பெரியாழ்வார்!
    அவருக்காக கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார்! பெரியாழ்வார் பூப்பறிக்க வருவார்! அப்போது பாடல் துவங்கும்
    ‘மலர்களிலே பல நிறம் கண்டேன் – திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்! மலர்களிலே பல மணம் கண்டேன் – அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்! பச்சை நிறம் அவன் திருமேனி-பவள நிறம் அவன் செவ்விதழே! மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்! வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்! நானில நாரணம் விளையாட்டு! தாயெனும் பெயரில் திருப்பாட்டு! ஆயர்குலப் பிள்ளை விளையாட்டு! இந்த அடியர்வர்க்கென்றும் அருள் கூட்டு!’
    இப்படி பாடியபடி பெரியாழ்வார் தன் நந்தவனத்திலிருந்து பூக்களை கொய்து வந்து ஆண்டவனுக்கு சமர்ப்பிப்பதாக காட்சி!
    அவர் பாடிக் கொண்டு வந்து கண்ணனுக்கு பூக்களை சொறியும்போது அவருடைய சின்ன மகள்– மண்ணில் கண்டெடுத்த மகள் கோதை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பாள்!
    இந்த படத்திற்கும், வழக்கமாக ஏ.பி. நாகராஜன் படத்திற்கு இசையமைக்கும் கே.வி மகாதேவன் இசையமைத்திருப்பார். இசையும், படத்தின் கதையும் இசைந்து இணைந்திருக்கும்! இந்தப் பாடலை படத்தில் பெரியாழ்வார் பாடி முடித்ததும், அவருடைய சிறு மகள் கோதை வருவாள்! பெரியாழ்வார் கேட்பார், ‘எங்கேயம்மா போயிருந்தாய்?’ ‘அப்பா மணல் வீடு கட்டிக்கொண்டிருந்தேன்! அப்போது ஒருவர் நாராயணா நாராயணா என்று சொல்லிக்கொண்டே வந்து என் மணல் வீட்டை கலைத்துவிட்டார்! அவரிடம் சண்டைக்குப் போனேன்!’ ‘நாராயணன் நினைவில் தவறு நடந்து விட்டது!’ என்றார். ‘யாரப்பா அந்த நாராயணன்?’ என்று மகள் கோதை தந்தை பெரியாழ்வாரிடம் கேட்பாள்!
    ‘உன்னையும் என்னையும் படைத்தவன்! உலகத்திற்கே படியளப்பவன்! மூவலகத்தையும் அளந்தவன்!’ ‘அடேயப்பா! அவ்வளவு பெரியவனா?’ என்று கேட்பாள் கோதை!
    ‘முதலும் முடிவுமில்லாதவன்! கமலக்கண்ணன்!’ ‘அவருக்கு ஏன் கண்ணன் என்று பெயர் வந்தது?’ என கேட்பாள் கோதை.
    ‘அழகான கண்களை உடையவன்!’ ‘அப்பா, அந்த கண்ணனின் கதையை கூறுங்கள்’ என்பாள் கோதை!
    சொல்லத் துவங்குவார் பெரியாழ்வார்! கண்ணனின் லீலைகளை காட்டுவார்கள்! அந்தக் காட்சியில் கண்ணன் மண்ணைத் தின்பான்!
    தாயார் வாயை திறக்கச் சொல்வாள்! அதில் உலகம் தெரியும்! இப்போது பெரியாழ்வார் மீண்டும் மகளிடம் கண்ணனின் மகிமையைச் சொல்வார்!
    அந்தக் கதையைக் கேட்ட கோதை ‘அப்பா! நான் அந்தக் கண்ணனை காண முடியுமா?’ என்று கேட்பாள்!
    அந்தக் கண்ணனையே நினைத்திருந்தால் என்றாவது அவனைப் பார்க்க முடியும்!’ என்பார் பெரியாழ்வார்.
    ‘அப்படியானால் இன்று முதல் அந்த கண்ணனையே நினைத்திருப்பேன்’ என்பாள் கோதை!
    அடுத்து கோதை தந்தையிடம் ஒரு கேள்வி கேட்பாள்! ‘தினமும் ஒரு மாலையை தொடுத்து க்கொண்டிருக்கிறீர்களே! அது யாருக்கு?’ ‘என்று கேட்பாள் கோதை.
    ‘அது அந்த கண்ணனுக்குத்தானம்மா’ என்பார் பெரியாழ்வார்! ‘கண்ணனுக்கு மாலை என்றால் மிகவும் ஆசையாப்பா?’ ‘ மிகவும் ஆசை!’ அப்படியே கிளம்புவார் பெரியாழ்வார்!
    ‘எங்கே போகிறீர்கள் அப்பா?’ என கேட்பாள் கோதை!
    ‘பழங்கள் பறித்து வருகிறேன் அம்மா.’ கிளம்புவார் பெரியாழ்வார் இப்போது கோதை கண்ணன் சிலையிடம் போவாள்! அவனை விளையாட அழைப்பாள். அவன் வரமாட்டான்!
    உடனே,‘அது சரி! அப்பா சொன்னதைப்போல் மாலை போட்டால்தானே உனக்கு பிடிக்கும்!’ என்று சொல்லிவிட்டு மாலையை எடுக்க போவாள் கோதை! பிறகு தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்
    ‘இந்த மாலையை உனக்கு சூடமாட்டேன்! நானே சூடிக்கொள்வேன்! அப்போதுதான் இந்த மாலைக்காக நீ என்னுடன் விளையாட வருவாய்’ என்று சொல்லியபடி அந்த மாலையை தானே சூடிக்கொள்வாள்!
    அப்போது பெரியாழ்வார் அங்கே வந்து அலறுவார்! ‘கோதை! யார் கொடுத்த தைரியம் இது? அனுதினமும் நான் ஆண்டவனுக்கு செய்து வரும் தொண்டினை அரை நொடியில் கெடுத்து விட்டாயே? பாடுபட்டு உன்னை வளர்த்ததற்கு பலனா இது?
    அப்படியே இதுவரையிலும் கண்டித்திராத மகளை ஒங்கி கன்னத்தில் அறைவார் பெரியாழ்வார்! பெண்ணை ‘ என் முன் நிற்காதே! போ வெளியே’ என்று துரத்துவார்!
    பிறகு மனம் இரங்கி பெண்ணிடம் கொஞ்சுவார்! வேறொரு மாலையை தொடுத்து பெருமாளுக்கு கோயிலில் போய் சாத்துவார்! ஆனால், அந்த மாலை சூட்டியவுடன் கீழே விழுந்து விடும்! பெரியாழ்வார் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்!
    ‘குழந்தை செய்த தவறுக்கு இத்தனை பெரிய கோபமா? மன்னிப்பு கேட்ட பிறகும் உன் மனம் நிம்மதி அடையவில்லையா? என் தொண்டின் பலனை இப்போது நான் இழந்து விட்டேனா? இறைவா, இந்த பூவுலகில் உன் அடியவன் என்ற சொல்லுக்கே நான் அருகதையற்றவனாகி விட்டேனா? வேண்டாம்! வேண்டாம்! அந்த அறியாச் சிறுமி தெரியாமல் தவறு செய்துவிட்டாள்! ஆத்திரப்படாமல் எங்களுக்கு அருள் செய்!’ என்று கதறுவார் பெரியாழ்வார்.
    அப்போது சிறுமி கோதை தான் சூடிக்கொண்ட மாலையை எடுத்து வருவாள்! ‘அப்பா! நான் சொல்வதைக் கேட்டு ஆத்திரமடைய வேண்டாம்! ஆண்டவன் குழந்தைகளிடம்தான் அதிக அன்பு காட்டுவான் என்று நீங்கள் தானே சொல்வீர்கள்! அப்படியானால் நான் சூட்டிக்கொண்ட மாலையை பெருமாள் ஏற்றுக்கொள்ளாமலா போவார்! கண்ணன் மேல் கொண்ட ஆசையினால்தானே நான் சிறிது நேரம் அதை கழுத்திலே போட்டுக்கொண்டேன்! அதையா தவறாக கருதுவார்? ஒருக்காலும் இல்லை!
    அப்பா, நான் சூட்டிக்கொண்ட மாலையை ஒரே ஒரு முறை அந்த ஆண்டவனுக்கு சூட்டித்தான் பாருங்களேன்’ என கெஞ்சுவாள் கோதை!
    பெரியாழ்வார் அதை சூட்டுவார்.
    அங்கே ஓர் அற்புதம் நடக்கும்!
    (தொடரும்)

  9. Thanks RAGHAVENDRA thanked for this post
  10. #1287
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கல் 50 ஆண்டுகளுக்கு பிறகும் திரையரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் அதிசயம்,
    சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கம்
    சிவகாமியின் செல்வன், கர்ணன் இரண்டும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு 60, 50 நாட்கள் என கடந்து வெற்றி மகுடமாய்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Thanks Russellmai thanked for this post
  12. #1288
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    அந்த நாள் ஞாபகம்

    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

    கடந்த பதிவின் இறுதி பகுதி

    இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது

    பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

    பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது

    நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்

    இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .

    மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..

    நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.

    (தொடரும்)

    அன்புடன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Thanks Harrietlgy, Russellmai, RAGHAVENDRA thanked for this post
  14. #1289
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. Thanks Georgeqlj, Russellmai, RAGHAVENDRA thanked for this post
  16. #1290
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  17. Thanks Russellmai, RAGHAVENDRA thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •